jaga flash news

Wednesday, 30 December 2020

ஏழு சிரஞ்சீவிகள்

பூமியில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருபவர்கள் ஏழு பேர். ஆஞ்சநேயர், விபீசணன், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர், மகாபலி சக்ரவர்த்தி, மார்க்கண்டேயர

பரசுராமர் ஜெயந்தி

பரசுராமர் ஜெயந்தி.31-12-2020:-- பரசுராமர் ஜெயந்தி;
- நீதியை நிலைநாட்ட அவதாரம் எடுத்த சிரஞ்சீவி
திருவனந்தபுரம்: தசாவதாரத்தில் மஹாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் மொத்தம் ஒன்பது. அதில் 6ஆவதாக எடுத்த அவதாரம் தான் பரசுராமர் அவதாரம். அதுவரைநிகழ்த்திய 5 அவதாரங்களிலும், எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் அசுரர்களை அழித்த மஹாவிஷ்ணு, பரசுராமர் அவதாரத்தில் தான் முதன் முதலில் ஆயுதத்தை பயன்படுத்தினார். சிரஞ்சீவியான பரசுராமர் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில்இருக்கும் மகேந்திரகிரிஎன்னும் மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். டிசம்பர் 31ஆம் தேதியான இன்றைக்கு பரசுராமர் அவதார நாளானதால், பெருமாள் கோவிலுக்கு சென்று அவரை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.
மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் 6ஆவது அவதாரமாக தோன்றியவர் பரசுராமர். இன்றைக்கும் நம் பூமியில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருபவர்கள் ஏழு பேர். ஆஞ்சநேயர், விபீசணன், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர், மகாபலி சக்ரவர்த்தி, மார்க்கண்டேயர் என ஏழு பேர்கள்.இவர்களில், எங்கெல்லாம் ராமநாமம்கேட்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன் என்பதை உணர்த்துபவர் ஆஞ்சநேயர். அதே போல், எங்கெல்லாம் தர்மம் குறைந்து அநீதியும், அதர்மமும் கட்டுக்கடங்காமல் போகின்றதோ, அப்போது மக்கள் என்னை எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் நான் அவதாரம்எடுப்பேன்.எளியோர்களை காப்பதற்காகவும், பாவிகளை அழிப்பதற்காகவும், தர்மத்தையும் நீதியையும் நிலை நாட்டவும்நான் யுகந்தோறும்அவதாரமெடுப்பேன், என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள்,
பொதுவாக மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 10 என்ற போதிலும், வைணவ நெறியாக இருக்கும் பாஞ்சராத்ர ஆகமத்தில் அஹிர்புதந்யை சம்ஹிதையில், மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 39 என்று தெளிவுபடுத்தியுள்ளது. அதில் முதன்மையான குறிப்பிடத்தக்க அவதாரங்கள் தசாவதாரம் எனக் கூறப்படுகிறது.
முதலில் ஆயுதத்தை பயன்படுத்தியவர்,
தசாவதாரத்தில் மஹாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் மொத்தம் ஒன்பது. அதில் 6ஆவதாக எடுத்த அவதாரம் தான் பரசுராமர் அவதாரம். இதில் மற்றொரு விஷயம், அதுவரை நிகழ்த்திய 5 அவதாரங்களிலும், எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் அசுரர்களை அழித்த மஹாவிஷ்ணு, பரசுராமர் அவதாரத்தில் தான் முதன் முதலில் ஆயுதத்தை பயன்படுத்தினார். சிரஞ்சீவியான பரசுராமர் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் மகேந்திரகிரி என்னும் மலையில் தவம் செய்துகொண்டிருப்பதாக ஐதீகம்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை,
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை,
சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் ரேணுகாதேவி தம்பதிகள் சிவபெருமான நோக்கி கடுந்தவம் இருந்தனர். அந்த தவத்தின் பயனாக அவர்களுக்கு நான்காவதாக மகனாக அவதரித்தவர் தான் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றும் நீதியை நிலைநாட்டிஉலகைகாக்கவும் அவதாரமெடுத்தவர். அதனால் தான் தன்னுடைய தந்தையால், என்றைக்கும் சிரஞ்சீவியாக வாழ ஆசி பெற்றவர்.
சிவன் வழங்கிய கோடாரி,
இவருடைய கதை ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் இடம்பெற்றுள்ளது. இவருடைய இயற்பெயர் ராமபத்ரா என்பதாகும். இவர் சிவனை நோக்கிகடுந்தவம்இருந்ததால், அந்த தவத்தை மெச்சிய சிவன் இவர் முன் தோன்றி தெய்வீக கோடாரியை ராமபத்ராவுக்கு வழங்கினார். கோடாரியை கையில் ஏந்தியவர் என்பதால் அன்று முதல் அவருக்கு பரசுராமர் என்ற பெயர் நிலைத்து நின்றது.
கற்புக்கரசி ரேணுகாதேவி,
பரசுராமரின் தாயார் ரேணுகாதேவி, தன் கணவரைத் தவிர உலகில் வேறுதெய்வம்கிடையாது என்று வாழும்கற்புக்கரசி. அவர் வழக்கம் போல் ஒரு நாள், ஆற்றுக்கு சென்று மண்ணை எடுக்க குனிந்தார். அப்போது ஆற்று நீரில் அழகிய கந்தர்வனின் உருவம் நிழலாடுவதைக் கண்டார். உடனே அவரைப் பார்க்கும் ஆசையில் அன்னாந்து வானத்தை பார்த்தார். அடுத்த விநாடியே அவருடய கற்பு நெறி வழுவியது.ஞானதிருஷ்டியால் அறிந்த ஜமதக்னி, பின்னர், தன்னுடைய கையில் மண்ணை எடுத்து பிசைய மண் குடமாக மாறவில்லை. இதனால் வெறும் கையுடன் ஆசிரமத்திற்கு திரும்பியவரைக் கண்டதும் ஜமதக்னி முனிவருக்கு நடந்த அனைத்தும் ஞானதிருஷ்டியில் தெரிந்துவிட்டது. தன்னுடைய மனைவியானவள் தடம் மாறவில்லை. ஆனால், மனம் தடுமாறியதால், கற்பு நெறி தவறி விட்டாய் பெண்ணே, என்று வருத்தத்துடன்கூறினார்.
தலையை வெட்டிய பரசுராமர்,உடனே, தன்னுடைய நான்கு மகன்களையும் அழைத்து, ரேணுகாதேவியின் தலையை வெட்டச்சொன்னார். ஆனால் மற்ற மூன்று மகன்களும் பெற்ற தாயின் தலையை வெட்ட மாட்டோம். மகாபாவம் என்று தயங்கி ஒதுங்கி நின்றனர். நான்காவது மகனான பரசுராமரை ஜமதக்னி முனிவர் அழைக்க, பரசுராமர், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப சற்றும் தயங்காமல், தன்னுடைய தாயின் தலையை வெட்டி வீசினார்.
பரசுராமர் கேட்ட வரம்,
இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த ஜமதக்னி முனிவர், பரசுராமரைப் பார்த்து வேண்டிய வரம்கேள்என்று சொல்ல, அதை தனக்கான வாய்ப்பாக எண்ணிய பரசுராமர், என்னுடைய தாயை மீண்டும் உயிர் பிழைக்க செய்ய வேண்டும். அதோடு இப்பொழுது நடந்த எதுவும் என் தாயின் நினைவில் இல்லாமல், அவரை குற்றமற்றவராக கற்புநெறி தவறாதவராக விளங்கச் செய்யவேண்டும் என்று வரம் கேட்டார். ஜமதக்னி முனிவரும் அப்படியே தந்தருளினார்.
பாவத்திற்கு பிராயசித்தம்,
இருந்தாலும், தன்னுடைய தாயை கொன்றதால், பரசுராமருக்கு குற்ற உணர்ச்சி மேலிட்டது. உடனே காட்டிற்கு சென்று அங்குள்ள முனிவர்களை சந்தித்து தன்னுடைய தவிப்பை கூறி, பிராயசித்தம் வேண்டு மென சொன்னார். பிராயசித்தம் சொல்லாவிட்டால் இவரதுமனது அமைதி அடையாது என்பதை உணர்ந்த முனிவர்களும், கடுமையான பிராயசித்தத்தை சொன்னார்கள்.
ஒரு ஆண்டு பூஜை,
அதாவது, ஒரு வருடத்திற்கு தினமும் பூஜை செய்ய வேண்டும், அதே சமயத்தில் முந்தைய நாட்களில் பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர். அதாவது முதல் நாள் பூஜைக்கு மல்லைகையையோ, அரளிப்பூவையோ பயன்படுத்தி இருந்தால், மீண்டும் அந்த பூக்களை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூக்களைக் கொண்டு தான் பூஜிக்க வேண்டும்.அதே போல், பூஜைக்கான நிவேதனப் பொருட்களையும், பூஜைக்கான முத்திரைகளையும், மந்திரங்களையும், தினமும் புதிதாக ஹோமம் செய்ய வேண்டும், ஹோமத்திற்கு முன்பு பயன்படுத்திய திரவியத்தை யும் கூடமீண்டும்பயன்படுத்தக்கூடாதுஎன்று நிபந்தனை யோடு பிராயசித்தத்திற்கு வழி சொன்னார்கள்.
ஓர் ஆண்டு பூஜை நிறைவு,
பரசுராமரும், முனிவர்கள் சொன்ன பிராயசித்த முறைகளை கேட்டுக்கொண்டு, பூஜையை செய்ய ஆரம்பித்தார். தொடக்கத்தில் உற்சாகமாக செய்ய ஆரம்பித்தார். ஆனால் நாளடைவில் சிக்கல் எழ ஆரம்பித்தது தினமும் புதிதாக இருக்க வேண்டும் என்பதால், மிகுந்த சிரமப்பட்டு ஒரு வருடம் பூஜையை முடித்துவிட்டு, மீண்டும்முனிவர்களிடம் சென்று பூஜையை முடித்துவிட்டதாக கூறினார்.
உள்வாங்கிய கடல்,
அதைக் கேட்ட முனிவர்களும், தாயைக் கொன்ற பாவம் தீர்ந்ததாக கூற, சந்தோசப்பட்டு கிளம்பினார் பரசுராமர். அங்கிருந்து கிளம்பிய பரசுராமர் மேற்கு கடற்கரை பகுதிக்கு சென்றார். கரையில் நின்று தான் வைத்திருந்த கோடாரியை கடலில் வீசி எறிந்தார். கோடாரியின் தாக்குதலுக்கு பயந்து கடல் பின்வாங்கியது. அப்படி உருவான இடத்தை செம்மைப்படுத்தி தன்னுடையதாக ஆக்கிக் கொண்டார்.
மகேந்திரகிரி மலையில் தவம்,
அப்படி பரசுராமர் உருவாக்கிய புண்ணியபூமியே இன்றை கேரளாவாகும். அதனால் தான் கேராளவை பரசுராமர் பூமி என்று கொண்டாடுகிறோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மகேந்திரகிரியை அடைந்து சிவபெருமானை நினைத்து தவம் இருக்கத் தொடங்கினார். இன்றைக்கும் பரசுராமர் மகேந்திரகிரி மலையில் தவமிருப்பதாக நம்பப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் உள்பட ஐந்துகோவில்களை பரசுராமர் கேரளாவில் உருவாக்கியுள்ளார்.
டிசம்பர் 31 ஆம் தேதியான இன்றைக்கு பரசுராமர் அவதார நாள் என்பதால் பெருமாள் கோவிலுக்கு சென்று அவரை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.

துத்தி...

மூல நோய் நீங்கிட...
----------------------------------
மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு.
எந்த வகை மூலநோயாக இருந்தாலும் ...
எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சைமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட்ட வேண்டும்.

காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு
விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.

துத்திஇலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும்  ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.

காரமான உணவு தவிர்க்கவும்.
வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.

 மேற்கண்டவாறு  தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.

கடலை எண்ணெய் நன்மைகள்

கடலை எண்ணெய்  
நன்மைகள்

1. (Omega-6 Essential Fatty Acid) - ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாகவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

2.மியூஃபா கொழுப்பு-நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் அமைப்பைச் சிதைவுறாமல் நிலை நிறுத்துகிறது.

3.நமது ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது.

4. 'பீட்டா சிட்டோஸ்டிரால்' எனும் துணை ரசாயன பொருள் கடலை எண்ணெயில் உள்ளது. இதுகொலஸ் டிராலை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்டது. எனவே இதனை தினமும் 0.8 கிராம் உடலில் சேர்த்து வந்தால்இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

5.'ரெசவராடால்' எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. இது இதய வியாதிகள், புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது. நோய்த் தொற்றுகளை தடுப்பதிலும் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கு வகிக்கிறது.

6.கடலை எண்ணெயில்'வைட்டமின்-இ'மிகுந்துள்ளது. 100 கிராம் எண்ணெயில் 15.69 மில்லிகிராம் ஆல்பா டோகோபெரல், 15.91 மில்லிகிராம் காமா டோகோபெரல் உள்ளது. வைட்டமின் இ, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். செல் சவ்வுகள் வளர்ச்சி அடையவும்,ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது.

6.நீண்டகாலம் கெட்டுப் போகாத தன்மை கொண்டது என்பதால் பல நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம்.ஆனால் சிலருக்கு வாந்தி போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் பயன்படுத்தலாம்.

7.சாதாரணமாக நல்ல மஞ்சள் நிறம் கொண்ட இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டபின் இளமஞ்சள் நிறமாக காணப்படும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவதை தடுக்கும். மாசுப் பொருட்களும் நீக்கப்பட்டு இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்தலாம்.

8.பித்தப் பை கல்லைக் கரைக்கும்-கடலை எண்ணெய்  தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

9.வெப்பத்தை தடுக்க- கடலை எண்ணெய் "King of Oil"  என்று அழைக்கப்படுகிறது.  நம் சருமத்தால் சுலபமாக உள்ளிழுக்கப் படுவது. இந்த எண்ணை சமச்சீரான எண்ணெய் என்பதால் எல்லா தோஷங்களுக்கும் நல்லது என்கிறது ஆயுர்வேதம். 
நிலக்கடலைல் இயற்கையாகவே சூரிய வெப்பத்தை தடுக்கும் பொருட்களான SPF உள்ளது. அதனால் தோலில் ஏற்படும் சின்னச்சின்ன தடிப்புகள், கட்டிகள் இவற்றிற்கு மிகச் சிறந்த மருந்து. விட்டமின் E, தாதுப் பொருட்கள், புரதப் பொருட்கள், லேசிதின் நிறைந்துள்ள எண்ணெய் இது.

10. கடலை எண்ணெய் பிரசவித்த பெண்கள் மார்பில் கட்டிக் கொள்ள தாய்ப்பால் நன்கு சுரக்கும்.


தேங்காய்ப்பூ...

மரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்கும் தேங்காய்ப்பூ... கட்டாயம் சாப்பிடுங்க...

இந்த தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி எப்படி செய்யப்படுகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ.

நாம் பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு. அது பற்றி மிக விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நன்மைகள்

தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதில் உள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. அப்படி என்னென்ன நோய்களுக்கு இது பயன்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

நோய் எதிர்க்கும் ஆற்றல்

இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களினால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்க்ளைத் தவிர்க்க முடியும்.

மன அழுத்தம்

அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்பாழுது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத எனர்ஜி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.

ஜீரணத்தை அதிகமாக்க

அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய் பூ இருக்கும். இந்த தேங்காய் பூவில் உள்ள மினரல்களும் வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது.

நீரிழிவு

இந்த தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்ற அபார சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி இந்த தேங்காய் பூவை சாப்பிடுவதனால் உங்களுடைய ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் இந்த தேங்காய் பூ பயன்படுகிறது.

இதய நோய்கள்

இதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்சினையை சரிசெய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய் பூ செயல்படும்.

தைராய்டு

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் என்னதான் அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், தைராய்டு சுரப்பியின் மூலம் வேறு சில பக்க விளைவுகளையும், குறிப்பாக உடல் பருமன் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா எவ்வளவு ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும்.

புற்றுநோய்

புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை இந்த தேங்காய் பூ கொண்டிருக்கிறது. இது நமக்கு புற்றுநோய் உண்டாகாமல் காக்கிறது.

உடல் எடை

உங்களுடைய உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த தேங்காய் பூ உதவுகிறது. இதில் உள்ள கலோரியின் அளவும் மிக மிகக் குறைவே. இதனால் எடையும் கூடாது. நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுபு்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாகக் குறைக்க உதவுகிறது.

சிறுநீரகம்

தேங்காய் பூ கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. தொற்றுநோய்களைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் உருவாகிற நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் இந்த தேங்காய் பூவுக்கு உண்டு.

இளமைப் பொலிவு

நம்முடைய சருமத்தை மிக இளமையாகவும் பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்கு இந்த தேங்காய் பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உங்களுடைய இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது. படித்ததில் பிடித்தது🙏

Monday, 28 December 2020

சனி வரலாறு...



சூரியனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன், வைவஸ்தமனு, யமுனா என்ற மூன்று குழந்தைகள் உண்டு. சூரியனின் வெப்பம் தாளாமல் சுவர்ச்சலா தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அவளுக்குப் பெயர் சாயாதேவி என்று பெயர் வைத்து தான் தவம் செய்ய போவதாக கூறி தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடைசெய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள்.

சாயாதேவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன அவர்களில் கடைசியாக பிறந்தவன் சனி. அவளுக்கு குழந்தை பிறந்த பின் சாயாதேவியின் செயலில் மாற்றம் தென்பட்டதை கவனித்த சூரியனும் தலை பிள்ளை யமனும் சாயாவை கவனித்து இவள் நம் குலத்தவள் இல்லை என்று அடையாளம் கண்டவுடன் சாயாதேவி தன் குழந்தைகளுடன் தனியே வசிக்கலானாள். மற்ற இரு குழந்தைபோல சனியின் பார்வை மற்றும் உடல் வேகம் சுபமானதாக இல்லை என்று அறிந்த சாயா தேவி அவனை தன் அரவணைப்பில் வைத்து வளர்த்தாள்.

இப்படி மந்த செயல்களுடன் சனி தந்தையான சூரியனின் ஆசிகள் இல்லாமல் வளர்ந்ததால் தந்தைக்கு பகையாகவும் தாய்க்கு செல்ல பிள்ளையாக இருந்தார். இவனின் பார்வை பட்டால் உடல் நிலை பாதிக்க படும் என்று உணர்ந்த அனைத்து தேவர்களும் இவரை காண பயந்தார்கள். இது சனி தேவருக்கு வருத்தத்தை கொடுத்தது. தன் வேதனையை தாயிடம் கூறிய பொழுது சாயாதேவி அவனிடம் சூரியதேவரின் வெப்பம் தாளாமல் நானும் சுவர்ச்சலாவும் சிவபெருமானை நோக்கி தவம் செய்து வரங்களை பெற்று மேன்மை அடைந்தோம் உனக்கும் தவம் ஒன்றே சரியான வழி என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள். அதன் படி காசியில் தவம் செய்து சிவ தரிசனம் கண்ட பொழுது சிவ பெருமான் சனி தேவரிடம் இனி நீ நவகோள்களில் ஒருவனாக இருந்து மனிதர்களின் கர்மத்தினால் ஏற்பட்ட வினைகளின் தன்மை ஏற்ப தண்டனைகளை கொடுத்து அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி பாவம்களை போக்கும் அதீத கோள்களாக விளங்குவாய் என்று ஆசி கொடுத்து ஈஸ்வர பட்டம் அருளினார்.

ஈஸ்வர பட்டம் பெற்றும் சனியின் மனம் நிறைவு பெறவில்லை. தன் பார்வை தன்னை பற்றிய அடுத்தவர் சிந்திப்பது  மற்றவர் இவருடன் யாரும் பழக அஞ்சுவது போன்ற நிலை இவரை சங்கட படுத்தியது. மேலும் இவருடைய கடமையில் நேர்மை அஞ்சாமை தண்டனை நோய்களை தருவது போன்றவைகளினால் இவரை சனி தேவர் என்று சொல்லாமல் தோஷம் என்று மற்றவர்கள் இவரை குறிப்பிடுவது வேதனையை இவருக்கு அளித்தது.

தன்னுடைய வேதனையை வசிட்ட முனியிடம் இவர் முறையிட்டபொழுது சனி தேவரின் கைகளில் இருந்த ஆயுதத்தை பிடுங்கி விட்டு விவசாயத்திற்கு பயன்படும் கலப்பையை கொடுத்து இதை இனி கைகளில் வைத்து கொள். மேலும் உனது தாய் வழிபட்ட அக்னிஸ்வர இறைவனை பூஜித்து நற்கதி அடைவாய் என்றும்  அறிவுறுத்தினார். குருவின் ஆலோசனைப்படி தவமும் பூசைகளும் செய்து சனீஸ்வர பகவான்  நன்மை செய்யும் சனியாக அருள்பெற்றார். 

சனீஸ்வர பகவானை பற்றிய ஆய்வில் எனக்கு கோவிலில் மற்றும் நூல்களில் கிடைத்த தகவல் இங்கே பதியப்பட்டது. சனி தேவரின் குரு காலபைரவர் என்று சோதிட நூல்கள் சொல்கிறது. காலபைரவருக்கும் சனி தேவருக்கும் என்ன தொடர்பு என்று நான் ஆசான் அகத்தியரிடம் கேட்ட பொழுது அவர் தன் சுவடிகளில் 

"அண்டத்துள் அண்டமாய் அணுவில் நிற்கும் 
அண்டவெளி பிரபஞ்சத்தில் சுட்சமாய்  நிற்கும்
அண்டம் பிண்டம் இருநிலை காத்து நிற்கும் 
அண்டர் எல்லாம் தொழுது போற்றும்"
                            
சதாசிவ சாதக்கிய மூர்த்தியின்  அம்சமான ருத்ரர். ருத்தரின் கட்டளைக்கு உட்பட்ட காலநிரந்ஜர். காலநிரந்ஜர் கட்டளைக்கு உட்பட்ட கால பைரவர்.
கால பைரவர் கட்டளைக்கு உட்பட்ட யமதர்மராஜர். யமதர்மராஜனின்  கட்டளைக்கும் உறவுக்கும் உட்பட்ட "சனீஸ்வர பகவான்" என்று பதித்து இருந்தார்.

அதாவது சனியும் தர்மராஜரும் காலபைரவரின் சீடர்கள் என்றும், காலத்தால் உண்டாகும் வினைப்பயன்களை தருவது இவர்கள் என்றும் காலத்தில் உண்டான சாபத்தையும் தோஷத்தையும் தன் ஆசிகளினால் மாற்றி அமைக்கும் வல்லமை உடையவர் காலபைரவர் என்று உணர்த்தி  இருந்தார்.

10 நிற வளையம் கொண்ட 10 கோள்களில் முக்கியமான 9 கோள்களில் நீல வளையும் கொண்ட  சனி கிரகம் ஆகாயத்தில் உள்ள மிக அற்புதமான கோள். இவர் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். நம்முடைய ராசிநாதன்  நின்ற வீடு அடுத்த வீடு முந்தைய வீடு என்ற  12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏழரை  ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை விரைய  சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை வாக்கில்சனி /குடும்பத்தில் சனி  என்றும் கூறுவர்.

ஒருவர் வாழ்வில் இருப்பது இரண்டு அரையாண்டுகள் (22.5) என்பது மூன்று முறை வரலாம். முதல் ஏழரை ஆண்டுகள்  வருவது மங்குசனி என்றும் இரண்டாவது ஏழரை ஆண்டுகள்  வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது ஏழரை ஆண்டுகள்  வருவது மரணச்சனி என்றும்  கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்று சோதிட நூல்கள் சொல்கிறது.

மேலும் 10 ஆம் இடத்து அதிபதியை கர்மகாரகன் என்றும் சனி தேவரை  கர்மாதிபதி என்றும் சோதிட நூல்கள் சொல்கிறது.

கர்மம் என்பது செயல்கள். செயல்கள் இரண்டு வகை படும் ஒன்று நன்மை, செய்வது மற்றது தீய செயல்களை செய்வது. இந்த செயல்களின் பலன் அனைத்தும் நம் உணவில் பதிந்து குருதியில் கலந்து பெண்களுக்கு கருவிலும், ஆண்களுக்கு  விந்துவிலும் பதிந்து முதலில் பிறக்கும் தலைபிள்ளைக்கு அதிபதியாக இருந்து அந்த நபர்களை  வழி நடத்துவார்.

கர்மத்தால் ஏற்பட்ட வினைகளை கொண்டு பலன்களை அளிக்கும் இவரை  கர்மாதிபதி என்றும் கர்ம காரகர் என்று பெயர் வைக்கப்பட்டது. இவருக்கு கரியவன், முடவன், மந்தன் என்ற பெயர்கள் உண்டு. நாம் முன்னோர்களுக்கு கொடுக்கும் எள் நீர் மற்றும் தர்ப்பை காக்கை இவரின் காரத்துவம் பெற்றது.

தர்ப்பை புற்கள் நிறைந்த மனையில் சுயம்பாக உண்டான  சிவலிங்கம் தர்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் தோன்றிய இடம்  திருநள்ளாறு. இங்கே நம் முன்னோர்களுக்காக செய்யப்படும் தரிசனம் பூசைகள் சனி தேவரின் ஆசிகளை நாம்  பெற முடியும் என்று சொல்ல படுகிறது.

1993 வருடம் உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் வளாகத்தில் இருந்த ஒரு குருக்கள் அம்பாள் உபாசகரிடம் குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி துவங்கும் சில நாட்களுக்கு முன் வருவார். உபாசகரிடம் பெயர்ச்சிக்காக பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் ஒரு யாகம் வளர்க்கலாம் என்று இருக்கிறேன். தங்கள் யாகத்திற்கு தேவையான பொருட்களையும் பங்குகொள்பவர்களையும் எனக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று ஒரு பத்திரிக்கையை தருவார். அதில் எந்த ராசியில் இருந்து சனி தேவர் அல்லது குரு தேவர் பெயர்ச்சி ஆகிறார் என்றும், எந்த ராசிக்காரர் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் என்று பதிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு நபருக்கு 100 ரூபாய் பதிவு செய்ய என்றும், பதிந்தவர்களுக்கு அர்ச்சனையும் ஒரு டாலரும் தரப்படும் என்று தகவல் இருக்கும். உபாசகரின் ஆலோசனைப்படி  பலர் சேருவார்கள். பெயர்ச்சி முடிந்தவுடன் உபாசாகருக்கு ஒரு சிறு தொகையை அந்த குருக்கள் கொடுத்து விட்டு மீதியை அவர் எடுத்து கொள்வார்.

நான் உபாசகரிடம் இதை பற்றி கேட்கும் பொழுது அவர் குருக்கள் வறுமையில் உள்ளார். பெயர்ச்சி என்று ஒரு ஹோமத்தை கோவில் செய்வது கோவிலுக்கும் நன்மை அவருக்கும் கொஞ்சம் பொருள் கிடைக்கும் அவருக்கு உதுவுகிறேன் அவ்வுளவுதான் மற்றபடி பெயர்ச்சிக்காக ஹோமம் செய்வது பற்றி எந்த வேத நூல்களிலும் சொல்லப்பட்டது இல்லை என்றார்.

இன்று எல்லாகோவில்களிலும் பெயர்ச்சியை விழாவாக கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து அவர்களுக்குள்  வருமானத்தை பிரித்து கொள்வதை காண்கிறேன். சனி பெயர்ச்சி எனக்கு நன்மையை தருமா?அல்லது தீமையை தருமா என்ற கேள்விக்கு நாம் சில கேள்விகளுக்கு விடையளிக்கவேண்டும்.

சனியின் தன்மையை உங்கள் கட்டத்தில் அறிந்து கொள்ள நீங்க கவனிக்க வேண்டியது என்பது 
(1) நீங்கள் பிறந்தது இரவா பகலா?
(2) உங்களுடைய லக்னம் 
(3) நட்சத்திரம், ராசி
(4) உங்களுக்கு நடக்கும் திசை 
(5) சனியின் 8 வர்க்க பலன்....
   
இவைகளை கணக்கிட்டு தான் பலன்களை அறிந்து கொள்ளவேண்டும். பிறகு தான் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். பரிகாரம் என்பது சில வரமுறைக்கு உட்பட்டது. இதை எப்படி செய்ய வேண்டும் என்றால்  அவரவர் கர்மத்தின் விளைவாக ஏற்படும் பலன்களை உணர்ந்து  முறையாக செய்தால் மட்டும் பலிதம் ஆகும்.

பொதுவான பரிகாரங்கள் செய்வது சிறப்பு பலனை தராது.
சிவன் கோவில் வழிபாடு,
பிதுர்கள் வழிபாடு,
சித்தர்கள் வழிபாடு,
மகான்கள்  வழிபாடு,
              மிக நல்ல பலன்களை தரும்.

சனீஸ்வர பகவானுக்கு பரிகாரங்கள் என்றும் பெயர்ச்சிக்கு பூசைகள் என்றும் இன்று பல சோதிடர்களும் கோவில் குருக்களும் பலவிதமான உபாயங்களை முகநூலில் பதித்தும் பரப்பியும் வருவது வேதனையாக உள்ளது.

ஒரு சோதிடர் சொன்னார் என்று நண்பர் ஒருவர் நல்லான் குளத்தில் குளித்து விட்டு ஆடைகளை அதில் விட்டு வந்ததாக சொன்னார். உண்மையில் திருநள்ளாறில் நளதீர்த்தத்தில் நீராடி  சிவதரிசனம் செய்து விட்டு திருவாரூர் தியாகேசர் தரிசனத்துடன் சப்தவிட தரிசனமாக நிறைவு செய்யவேண்டும் என்பது தான் விதி. 

மேலும் தர்மராஜரும் சனிதேவரும் சகோதரர்கள் என்றாலும்,  சனி தேவர் பலன் வேறு தர்மராஜர் பலன்வேறு கர்மாக்கள் வேறு என்று புரிந்துகொள்வது இல்லை. நாம் பரிகாரத்தை பற்றி யோசிப்பது இல்லை.
இருவரும் வழிபட்ட சிவதலங்கள்  வேறு, வரம் பெற்ற தலங்கள் தண்டனை பெற்ற தலங்கள் வேறு என்று நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு அன்பர் என்னிடம் சொன்னார் எள்ளை கருப்பு துணியில் கட்டி சனிக்கிழமை தோறும் விளக்கு ஏற்றி வந்தால் சனியின் தோஷம் குறையும் என்று ஒரு சோதிடர் சொன்னார் என்றார். ஸ்ரீசக்ரமலைக்கு சென்ற பொழுது அங்கு தவறாக விளக்கு ஏற்றியவர்களை  அங்கு இருந்த ஒரு அடியார் ஏற்றியவரை திட்டியும் சோதிடர்களை ஒட்டுமொத்தமாக எரித்து விட்டால்தான் கோவிலையும் சாமியையும் காக்கமுடியும் என்றும் திட்டினார். அவர் சொன்னது தப்பே இல்லை எள்ளை பற்றி தெரியாமல் அது பற்றி வேதத்தில் குறிப்பிட்டியுள்ளதை பற்றி அறியாமல் பேசும் பொழுது எரிச்சலாக தான் உள்ளது.

ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள் பிணம் எரிக்கும் பொழுது உண்டாகும் வாடை தான் எள்ளு எறியும் பொழுது வெளிப்படும். கோவிலில் எள்விளக்கை ஏற்ற கூடாது எள் எண்ணெய் விளக்கு அல்லது சகல தோஷத்தை தீர்க்கும் நெய்விளக்கு ஏற்றலாம்.

மேலும் நவகிரகங்களுக்கு உண்டான தானியத்தில் உணவுகளை செய்து அதை கோவிலில் படைக்கலாம். சிலருக்கு வெள்ளைஎள்ளை,  கருப்பு எள்ளை எதற்கு பயன்படுத்துவது என்றே தெரியவில்லை.

மகர ராசிக்கு பெயர்ச்சி பெரும் சனீஸ்வர பகவானுக்கு என்ன பரிகாரம் என்பதை பற்றி ஆசான் அகத்தியரிடம் கேட்டபொழுது அவர் சொன்னது பெயர்ச்சிக்கு பரிகாரம் என்பது இல்லை கர்ம வினைகளின் தண்டனைகளுக்கு, பாவத்திற்கு பரிகாரம் உண்டு.

உண்மை தான் சூரியன் மாதம் ஒரு முறை பெயர்ச்சி, சந்திரன் இரண்டரை நாட்களில் பெயர்ச்சி, செவ்வாய் நாற்பது ஐந்து நாட்களில், புதன் சுக்ரன் முப்பது நாட்களில் பெயர்ச்சி, குரு வருடம் ஒரு முறையும், ராகு கேது பதினெட்டு மாதத்திற்கு ஒரு முறை, சனி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை என்று அவைகள் நகர்ந்து கொண்டே இருக்கும். பெயர்ச்சிக்கு பரிகாரம் என்பது எப்படி முடியும் என்பது ஒரு கேள்வி தான்.

கர்மத்தின் விளைவாக ஏற்படும் பலன்களுக்கு பரிகாரம் என்று மகா சிவ நாடியில் சொல்லப்பட்டு உள்ளது. மேலும் சனியின் வர்க்க பரல் நிலையில் மூன்று பரலுக்கு மேல் உள்ள அமைப்பு இருந்தால் ஜென்ம சனியும் ஒன்றும் செய்யாது என்பது சோதிட கணக்கு.

தனுசு ராசியில் ஜென்ம சனி அமருவதால் கும்பகோணம் சிவபுரத்தில் உள்ள காலபைரவரின் தரிசனம் சில பாதுகாப்பை தரும். மேலும் சனீஸ்வர பகவானின் ஆசிகளை தரும் வழுவூர், திருநீலக்குடி மற்றும் திருவேதிகுடி நல்ல  மாற்றங்களை தரும்.

சங்கு போல வடிவம் கொண்ட நீல மலர்களை வைத்து சனிக்கு அர்ச்சனை செய்வதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உடைகள் உணவுகள் அளிப்பதும், சனியின் நேரடி ஆசிகளை தரும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.

சில வைணவ நூல்கள் சொல்வது ஹனுமானின் பாதம் 8 சனிக்கிழமை நம் தலையில் வைத்து ஆசிர்வதிக்க படும் பொழுது சனியின் தாக்கம் குறையும் என்பதும், சனிக்கிழமை ஒரு மிளகை தூளாக்கி தின்று நீர் விட்டு அருந்தி பெருமாள் கோவில் செல்லும் பொழுது சனியின் தாக்கம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

சனீஸ்வர பகவான் சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர். சத்தியமும் தர்மமும் நம்மில் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் இவரால் நமக்கு நன்மையே மேலும் காகபுஜண்டர், நீளங்கிசர் சனீஸ்வர பகவானின் நேரடி தொடர்பு உடையவர்கள். இவர்களின் ஆசிகள் வழிபாடுகள் நமக்கு நன்மை செய்யும் மேலும் சனீஸ்வர பகவானின் ஆசிகளை தரும்....
(1)திருகாரவாசல்
(2)திருக்குவளை
(3)திருவாய்மூர்
(4)திருமறைக்காடு
(5)திருநாகை
(6)திருநள்ளாறு
(7)திருவாரூர்.
             இவைகள் ஒரே நாளில் தரிசனம் (சப்த விட தலங்கள்) செய்ய தர்மராஜனின் ஆசிகள் கிடைக்கும்.

முக்கியமாக எக்காரணம் கொண்டும் எங்கும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும். எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம். அரிசியை எரிப்போமா? எள்ளை எண்ணையாக்கி அந்த எண்ணையைக் கொண்டு தீபமேற்றச் சொல்லித்தான் நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல. எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும். மனித உருவத்தில் நமது காலத்தில் வாழ்ந்து நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சித்தெய்வம் ஸ்ரீமகாபெரியவர் ஒருமுறை இந்த எள்தீபம் கூடாது என்று தெளிவுபடுத்தியும், நமது கோவில்களில் இந்த முறையைத் தொடருவது துரதிர்ஷ்டம்தான்.

சனீஸ்வர பகவானின் தாக்கத்தை குறைக்க சித்த நூல்களில் பின்வரும் 20 எளிய பரிகார முறைகள் சொல்லப்பட்டு உள்ளன!!!
(1) தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதத்தை வைக்கவும்.
(2) சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.
(3) கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
(4) வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
(5) சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
(6) சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
(7) ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
(8) ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
(9) தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
(10) அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யவும்.
(11) கோ பூஜை, 
பசுவுக்கு வழிபாடுகளை செய்யவும்
(12) ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவிகளை செய்யவும்.
(13) சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
(14) அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
(15) சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபாடுகளை செய்யவும்.
(16) உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யவும்.
(17) வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
(18) பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்கி வரவும்.
(19) தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
(20) சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைக்க தாக்கங்கள் குறையும்....


Thursday, 24 December 2020

#நோயில்லாமல்வாழ_ஆறுவழிகள்..!!

#நோயில்லாமல்வாழ_ஆறுவழிகள்..!!

முன்னோர்களின் #ஆறுவழிகளை நீங்கள் கடைப்பிடித்தால், உங்களுக்குள் உள்ள பிரச்சனைகள் தீர்வதுடன், வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது...

1 - பசி
2 - தாகம்
3 - உடல் உழைப்பு
4 - தூக்கம்
5 - ஓய்வு
6 - மன அமைதி- 

■ பசி..

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா?? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்?

யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்?

உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.

■ தாகம்..

அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.

தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.

■ உடல்உழைப்பு..
ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.

உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.

■ தூக்கம்..

யாருக்கு தூக்கம் வரும்.? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.

இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.

நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.

இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.

நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.

■ ஓய்வு 
சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

■ #மன_நிம்மதி

ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை  அடைந்துவிட்டீர்கள்.

"உடலில் ஒரு சதைப்பிண்டம் இருக்கிறது அது சீர் பெற்றால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும் அது சீர் கெட்டால் உடல் முழுவதும் சீர் கெட்டு விடும் அது தான் உள்ளம்."

உழைப்பே இதற்கு மூலாதாரம், ஆயினும் உழைக்கும் எண்ணம் இன்று அடியோடு குறைந்துபோனதுதான் நோயின் நுழைவாயில் என்பதை மறுப்பதற்கில்லை..

#வயலோடும்வரப்போடும்..

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன்கள்

#அஸ்வினி நட்சத்திரத்தில் 
பிறந்தவர்கள் பலன்கள்


அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி 
#கேது பகவான். அஸ்வினி நட்சத்திரம் இருக்கும் ராசி மேஷம், அதன் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களுடைய சொந்த ஜாதகத்தில் கேது பகவான் மற்றும் செவ்வாய் பகவான் மற்றும் சார வாரியாக நவாம்ச நாதர்களின் நிலையைப் பொறுத்து பலன்கள் இன்னும் நுட்பமாக மாறுபடும்.

#அஸ்வினியில் பிறந்தவர்கள் தன் கடமைகளை சரியாக, முறையாக சிறப்பாக செய்ய வேண்டும் என்று கருதுவார்கள். அதுவும் காலதாமதம் இல்லாமல் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அஸ்வினியில் இருக்கும் சந்திரனை சுக்கிரன் மற்றும் ராகு ,சனி சம்பந்தப்பட்டால் பெண்கள் மீது அதிக மோகம் கொண்டவர்கள். சூரியன் ,செவ்வாய் ,குரு சம்பந்தப்பட்டால்
 பொது காரியங்களில் சேவை மனப்பான்மையுடன் செயல்படக்கூடியவர்கள் .செவ்வாய் மற்றும் சூரியன் சம்பந்தப்படும் போது
தைரியம் மற்றும் பராக்கிரமம் உடையவர்கள் . கோபமும் வரவேண்டிய நேரத்தில் வரும்.
#சுக்கிரன் சம்பந்தப்படும்போது
நவநாகரீகமான ஆடை அணிகலன்களை அணிவதில் விருப்பம் உடையவர்கள்.
  நற்பெயரை விரும்புவார்கள்.
 #செவ்வாய் பார்வையிடும்போது,
கோபம் வந்தால் கண்கள் சிவக்கும். புத்திசாலித்தனம் உடையவர்கள். 
#குரு பார்வை உள்ளவர்கள், நல்லவர்களிடம் #பரிசுத்தமான அன்பை பகிர்ந்து கொள்வார்கள். தெளிவான வாழ்க்கை பாதையை வாழ்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
 அமைதியை விரும்பக் கூடியவர்கள்.

#அஸ்வினி முதல் பாதத்தில் பிறப்பது மிகவும் விசேஷம் ஏனென்றால் ராசி நவாம்சம் முதல் சோடச வர்க்கம் வரை சந்திரனின் நிலை மிக சிறப்பாக இருக்கும்.அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பிறருடைய குற்றம் குறைகளை கண்டுபிடித்து பரப்ப கூடியவர்கள். இங்கே ஒன்று அங்கே ஒன்று கூறக் கூடியவர்கள்.
 #புதன் சம்பந்தப்படும் போது தூதுவர்களாக, விகடகவியாக இருப்பார்கள் .
சனி ,ராகு ,கேது சம்பந்தப்படும்போது மனநிலை தடுமாற்றம் உண்டு. அலைபாய கூடிய மனம் உண்டு.
 நல்ல உருவத் தோற்றம் இருக்காது. கெட்ட எண்ணம் மேலோங்கும்.

#லக்ன ரீதியாக நான்காம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி பலஹீனமாக இருந்தால் உறவினர்களை விட மற்றவர்கள் மீது பாசம் அதிகம் உண்டு.
அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி கேது பகவான் ராசி அதிபதி செவ்வாய் பகவான் நவாம்சத்தில் செவ்வாய் பகவான் வருவதால் செவ்வாய் மற்றும் கேது இவர்களின் நிலையை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

#அஸ்வினி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறருடைய நன்மை தீமை நல்ல குணம் கெட்ட குணம் எதுவென்று எடைபோட்டு அறியக் கூடியவர்கள் . மீனம்,மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், அழகான தோற்றம் உடையவர்கள் .பிறருக்கு எது மகிழ்ச்சி தரக் கூடியதோ அதை அறிந்து செயல்படக்கூடியவர்கள். 
#சாஸ்திரம், மெய்யறிவு இவற்றில் ஆர்வம் ஈடுபாடு உண்டு. மீனம் மேஷம் கடகம் தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சந்திரன் இருந்தால்குரு பகவான் தனுசு மற்றும் சிம்மத்தில் இருந்து  சம்பந்தப்பட்டால் சாஸ்திர பண்டிதனாக விளங்குவான்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ராசி அதிபதி செவ்வாய் பகவான் நவாம்ச அதிபதி சுக்கிர பகவான் இவர்களின் நிலையை பொருத்து பலன்கள் நுட்பமாக மாறுபடும்.

#அஸ்வினி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் ஜோதிடம் கணிதம் சாஸ்திரத்தில் ஆர்வம் ஈடுபாடு அதிகம் உடையவர்கள் பிறருக்கு நல்ல அறிவுரைகளை கூறக் கூடியவர்கள் கன்னி, விருச்சிகம்,கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள் சந்திரன் அஸ்வினி மூன்றாம் பாதத்தில் இருந்தால் மூலநோய் உடையவர்களாக இருப்பார்கள்.
துலாம் மகரம் லக்னக்காரர்கள் சந்திரன் அஸ்வினி மூன்றாம் பாதத்தில் இருந்தால் புண்ணிய காரியங்களை செய்யும் சிந்தனை உடையவர்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி 
கேது பகவான், ராசி அதிபதி செவ்வாய் பகவான் மற்றும் நவாம்ச நாதர் புதன் பகவான் அவரவர் சொந்த ஜாதகத்தில் இருக்கும் நிலையைப் பொறுத்து பலன்கள் நுட்பமாக மாறுபடும்.

#அஸ்வினி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் நெளிவு சுளிவு மிகுந்த உறுதியானவர்கள். அறிவாளி.
 ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்கள். சுக்கிரன், சனி, ராகு சம்பந்தப்பட்டால் பெண்ணாசை மிகுந்தவர்கள்.
சர லக்னத்தில் பிறந்தவர்கள்
 அஸ்வினி நான்காம் பாதத்தில் 
பிறந்து இருந்தால், அனைத்துவித சுகத்தையும் அனுபவிக்கக் கூடியவர்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ராசி அதிபதி செவ்வாய் பகவான் நவாம்ச அதிபதி சந்திர பகவான் அவரவர் சொந்த ஜாதகத்தில் இருக்கும் நிலையைப் பொறுத்து பலன்கள் நுட்பமாக மாறுபடும்.

சக்கரவர்த்தி கீரையின் அறிய மருத்துவ நன்மைகள்

சக்கரவர்த்தி கீரையின் அறிய மருத்துவ நன்மைகள்

சக்கரவர்த்தி கீரைக்கு பருப்பு கீரை, கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற பல பெயர்கள் உண்டு. இது வயல் வரப்புகளில் தானாக வளரக்கூடியது.

இந்த கீரையில் வைட்டமின் ஏ, சி , நார்சத்து ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம் சத்து நிறைந்த இந்த கீரை எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியது.
 
#மருத்துவ_நன்மைகள் :

◆சக்கரவர்த்தி கீரை புற்றுநோயை உருவாக்கும் செல்களை அளிக்கிறது. மேலும் தளர்ந்த எலும்பை பலமடைய செய்யும் சக்தி வாய்ந்தது.

◆உடலில் ஏற்படும் தோல் சுருக்கங்களை போக்க சக்கரவர்த்தி கீரையின் இலையை நன்கு அரைத்து அதனை மேல்பூச்சாக பூசி வர, வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும்.
 
◆சக்கரவர்த்தி கீரையை தொடர்ந்து உணவோடு எடுத்து கொண்டால் சிறுநீரக கற்களை கரைக்கும், நோய் தொற்றுக்களை போக்கும் மேலும் சிறுநீரை சரியாக வெளியேற்றும் தன்மை கொண்டது.

◆சிறிதளவு சக்கரவர்த்தி கீரை , அதனுடன் ஒரு ஸ்பூன் சுக்குப்பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துவடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு விலகும்.

◆மூட்டுவலி பிரச்சனையை சரி செய்ய ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்து அதனை இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் கட்டி வைத்தால் வலி குறையும். அதுமட்டுமல்லாமல் வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுத்தாலும் வலி மறையும்.

◆இந்த கீரையை சாப்பிடுவதால் ரத்த சோகை நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கிறது.

◆சக்கரவர்த்தி கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை அளித்து விடும்.

◆தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாதவர்கள் சக்கரவர்த்திக் கீரையை வாரத்திற்கு நான்கு நாட்கள் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விருப்பம் அதிகரித்து இல்லற வாழ்வு இன்பமயமாகும்.

கரும்புச்சாறு

கரும்புச்சாறு அடிக்கடி குடிப்பவர்களா???
எனில் உடல்கழிவுகளை வெளியேற்றுவதில் சிறந்தவர் நீங்கள்
 
நாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தும் நீ சாப்பிடு கிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? 

நீங்களே பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

● #கரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. 

● உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

●அதுமட்டுமல்ல கரும்புசாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும். 

● உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையை புதுப்பிக்கும் தன்மை உடையது. 

● அதே போன்று விட்டமின் சி அதிகமாக கரும்புசாறுகளில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது. 

● #கரும்பு_சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும்.

● அதே போன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.

● சிலருக்கு பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும் இவர்கள் கரும்பு சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது. 

● உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மலச்சிக்கலைப் போக்குகிறது.

● பொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும் இதற்கு கரும்பு சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது. 

● நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்பு சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. 

●  கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமான சாருகள் சுரக்கவும் இது உதவுகிறது.
கிராமத்தான் #ஷங்கர் #சுமதி....

● பொதுவாக பெரும்பான்மையான செரிமான சிறப்புகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும். 

● கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமான சிறப்புகள் நன்கு சிறக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.

● சித்த மருத்துவத்தின் படி உடலில் அதிகரித்து பித்தத்தை கரும்பு சமநிலை படுத்தும்.

● சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.

● கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. 

● முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டு சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. 

● இது low glycemic index உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை அளவாக அருந்தாலும் நல்ல பலனை தரும்.

● உடலுக்கு பல நன்மைகள் செய்யக்கூடிய இந்த கருப்பு சாற்றை நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. போகின்ற இடமெல்லாம் கிடைக்கின்றது. 

● கரும்பு சாற்றை இனி அடிக்கடி சாப்பிடுங்கள். ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
.

Migraine எனப்படும் ஓற்றைத் தலைவலி

Migraine எனப்படும் ஓற்றைத் தலைவலி

உலகில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நோய்களில் மூன்றாவது இடமும் ஒருவரை வேலை எதுவும் செய்யமுடியாமல் முடக்கிப்போடும் வியாதிகளில் ஆறாவது இடமும் பிடித்திருக்கிறது.

இந்த ஒற்றைத்தலைவலியால் உலகின் மொத்த மனிதத்தொகையில் பன்னிரண்டு சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு பத்து வினாடிக்கு ஒருவர் ஒற்றைத்தலைவலியால் அவசர சிகிச்சையை நாடுகிறார்கள்.

இதற்கும் மற்ற தலைவலிக்கும் வித்தியாசம் உண்டு. ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் எந்த வேலையும் செய்ய முடியாது. தலையின் ஒரு பக்கம் கடுமையான வலி ஏற்படலாம், தவிர வெளிச்சத்தைக் காண முடியாதது, சத்தத்தைக் கேட்பதற்கு முடியாமை என பாதிப்புகள் நீளும். இதனைத் தொடர்ந்து தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும்.

இது இரண்டு மணி நேரம் முதல் மூன்று நாட்களுக்கு தொடரலாம். சிலருக்கு இது ஒரு வாரத்தில் பலமுறையும் சிலருக்கு வருடத்திற்கு ஒரே ஒரு முறையும் கூட வரலாம். சிலருக்கே இது தாங்கிக்கொள்கிற அளவுக்கு இருக்கும். பெரும்பாலோர்க்கு வலி மண்டையை பிளக்கும். எந்த வேலையும் செய்யமுடியாமல் முடங்கி விடுவர்.

ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் வருகிறது. அதிலும் 15 முதல் 55 வயது வரை உள்ளவர்களை இது அதிகம் தாக்குகிறது.

எதனால் அல்லது எப்படி இந்த ஒற்றைத் தலைவலி வருகிறது?

மூளை இயங்குவதற்கு தேவைப்படும் புரதங்களில் ஒன்று செரோடோனின். இந்தத் திரவத்தின் அளவு குறையும் போது தான் இந்த ஒற்றைத்தலைவலி ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் நடைபெறும்போது விண்விண்ணென்று தெறிப்பது போன்ற வலி ஏற்படுகிறது.

பரம்பரை பரம்பரையாக தொடரும் வியாதிகளில் இதுவும் ஒன்று. ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களில் 90 சதவிகிதம் பேர் பரம்பரையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிக சூரிய வெப்பம், வானிலை மாற்றங்கள், உணவுப்பழக்கங்கள், உறக்கமின்மை, அதிக சத்தம், வெளிச்சம், மனக்கவலை, இறுக்கம், அசதி, பயணங்கள், காபி, டீ, குளிர்பானங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இது தான் காரணம் என்றில்லை. இந்தத் தலைவலி வருவதற்கான காரணம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது

தவிர ஒற்றைத் தலைவலி இதனால் தான் வருகிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடவும் முடியாது; சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் அது வரலாம். ஒரு சமயம் இனிப்பு சாப்பிடும்போது உங்களுக்குத் தலைவலி வரலாம். வேறொரு சமயம் அவ்வாறு வராமல் இருக்கலாம். ஒற்றைத்தலைவலி ஏற்பட்டது இனிப்புடன் நீங்கள் சாப்பிட்ட வேறு ஒரு பொருளாக இருக்கக்கூடும்.

ஒரு வேளை உணவைத் தவிர்த்தல், உறங்கும் போது போர்வையால் முகத்தை மூடி தூங்குதல் போன்றவை கூட காரணம் ஆகலாம். உங்கள் உடல் எடை கூட ஒற்றைத் தலைவலி ஏற்பட ஒரு காரணம் என்று மிகச்சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது.

எப்படித் தவிர்ப்பது?

இந்தத் தலைவலி வருவதற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்கவோ, தவிர்க்கவோ முடியாவிட்டாலும் அடிக்கடி வராதவாறு பார்த்துக்கொள்ள முடியும்.

சரியான திட்டமிடலுடன் உங்கள் நாட்களை அமைத்துக் கொள்ளவும். ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுவது அவற்றில் ஒன்று.
காஃபி, டீ, குளிர்பானங்களை குறைத்துக் கொள்ளவும்.
நேரத்திற்கு சாப்பிடவும். முறையான சமச்சீர் உணவு அவசியம்.
உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
மெல்லிசை கேட்கலாம். மனதை அமைதிப்படுத்தலாம்.
தலைவலியை தூண்டும் காரணிகளை அடையாளம் கண்டு தவிர்க்கலாம்.
இரைச்சல், அதிக வெளிச்சம், வெயிலிலிருந்து ஒதுங்கியே இருக்கவும்.
முக்கியமான ஒன்று, வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள்.
சரி, வந்துவிட்ட தலைவலியை எப்படி சரி செய்வது?

டிரிப்டான் என்ற மருந்து இந்த ஒற்றைத்தலைவலிக்கு காரணமான செரோடோனின் சுரப்பை தூண்டி மட்டுப்படுத்துகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

காசு அதிகம் உள்ளவர்கள் செஃபாலி எனப்படும் மின்சாரத்தால் தூண்டும் கருவியை உபயோகிக்கலாம். இது நெற்றியில் பட்டை போன்று ஓட்டிக்கொள்ளும் ஒரு கருவி. விலை அதிகம்.

இல்லை, நமது நாட்டு வைத்தியம் தான் வேண்டும் என்றால், பூண்டு, மிளகு இரண்டையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெய்யில் காய்ச்சி பின்னர் ஆறிய பிறகு தலையில் தேய்த்துக் குளிக்கவும்.

பசலைக்கீரை இருக்கிறது அல்லவா? அதன் சாறு கால் பங்கு, பீட்ருட் சாறு கால்பங்கு இதன் கூடவே கேரட் சாறு ஒரு பங்கு சேர்த்து குடிக்கலாம். வெள்ளை எள்ளுடன் எருமைப்பால் விட்டு அறைத்து நெற்றியில் பற்று போட்டுக் கொள்ளலாம்.

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். இது உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஒற்றைத் தலைவலியால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. சரியான வாழ்க்கை முறையால் தவிர்க்க முடியும்

தலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..!
தலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..!
****************************

பல்வேறு சந்தர்ப்பங்களில் பல காரணங்கனால் தலைவலி ஏற்படிகின்றது காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது வெகு நெரம் கம்பியூட்டரை உற்றுப் பார்ப்பது, சில மணங்களை நுகர்வது நித்திரை இன்மை மன அழுத்தங்கள் கூடுதலான உடல் சோர்வு, பசி முதலான பிரச்சனைகளினால் தலைவலி ஏற்படுகின்றது. இதற்கு தீர்வு தான் என்ன என்று புலம்புவர்களும் பலர் உண்டு. உங்களுக்காக சில இயற்கை மருத்துவக் குறிப்புகள்:

துளசி இலையுடன் சிறிது சுக்கும் கறுவா பட்டையும் சேர்த்து அரைத்து நெற்றியில் பத்துப் போட்டால் தலைவலி குணமாகும்.

மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
அகத்தி இலைச் சாற்றை எடுத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.

மஞ்சளை விளக்கெண்ணையில் தொட்டு நெருப்பில் சுட்டு அதன் புகைகை நுகர்ந்தால் தலைவலி நீங்கும்.

நெல்லிக்காய் சாற்றுடன் சிறிதளவு உப்புக் கலந்து அதனை மூன்று நாட்கள் வெய்யிலில் காயவைத்து பின்னர் தேங்காய் எண்ணையைக் கொதிக்க வைத்து அதனுடன் காயவைத்த நெல்லிச் சாற்றைக் கலந்து நுகர்ந்தால் தலைவலி குணமாகும்.

பூண்டை நன்கு இடித்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும் அது மட்டும் அல்லாமல் சிறிய துண்டு சுக்கையும் அதனுடன் சிறிய பெருங்காயத் துண்டையும் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் நல்ல நீர்வு கிடைக்கும்.

சூடான பாலில் எலுமிச்சைச் சாறு கலந்து பருகினால் தலைவலி குணமாகும் ஏனென்றால் வைட்டமிங்கள் நிறைந்த பழங்களோ அல்லது காய்கறிகளோ தலைவலியைக் குணமாக்கும் தன்மை கொண்டவை.

தலைவலி குணமாக பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து தூளாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகி விடும்.

கண்களுக்கு நன்கு ஓய்வு கொடுத்தாலே பாதித் தலைவலி தீர்ந்து விடும்

சிறுதானியத்தினை_இழந்தோம்_பெருநோய்களுக்கு_ஆளானோம்..!!!

#சிறுதானியத்தினை_இழந்தோம்_பெருநோய்களுக்கு_ஆளானோம்..!!!

சிறுதானிய உணவு உண்பதால் கிடைக்கும் 30 விதமான நன்மைகளைக் கீழே பார்க்கலாம்.

1) ஊட்டச்சத்து நிறைந்தது:

உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. இந்தத் தாதுக்கள் அனைத்து தாவர ஊட்டச்சத்துடன் சேரும் போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு வல்லமை மிக்கப் பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது. சிறுதானியங்களில் அதிக அளவு இருப்புச்சத்து உள்ளது. எனவே இது இரத்தசோகையைக் (Anemia) குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

2) கரோனரி தமனி கோளாறுகளைத் தடுக்கிறது:

சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க உதவி செய்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாருகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப் படுகிறது.

3) அதிக அளவு வைட்டமின் ‘பி’:

சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’ கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திரமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது. வைட்டமின் ‘பி’ இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவைக் குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்புக் கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது. நியாசின் இரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கிறது. மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயரடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பின் (Low-density lipoprotein) அளவினை இரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. இது இரத்த நாளங்களின் தடிப்பு (Atherosclerosis) மற்றும் இரத்தக் கசிவு (Hemorrhage) ஏற்படுவதிலிருந்தும் இதயத்தைப் பாதுகாக்கிறது.

4) பசையம் (குளுட்டன்) அறவே இல்லை:

காய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்களால் மிகவும் நேசிக்கப்படும் உணவு சிறுதானியங்களாகும். ஏனெனில் சிறுதானியங்களில் நிறைந்திருக்கும் புரதச்சத்து தான் இதற்குக் காரணம். தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளைவிட சிறுதானியங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் போன்ற தேவையற்ற கூடுதல் பொருட்கள் சிறுதானியங்களில் இல்லை. சிறுதானியங்களில் இருக்கும் புரதக் கூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போலவே இருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு என்னவென்றால் அதிகச் சத்துக்கள் அடங்கிய சிறுதானியங்களில் பசையம் (குளுட்டன் ‍ Gluten) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படுவது இல்லை. ஆனால் முழுக் கோதுமையில் அதிக அளவு பசையம் (க்குளுட்டன்) உள்ளது. பசையம் சிறுதானியங்களில் இல்லாத காரணத்தால் செரிமானத் தன்மையை அதிகமாக்குகிறது.

5) விரைவான உடல் எடை இழப்பு:

சிறுதானியங்கள் டிரிப்டோபான் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையைக் குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது. டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவான வேகத்தில் நடத்துகிறது. இதன்மூலம் நீண்ட காலத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அடிக்கடி பசிப்பதைத் தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கிறது. இதனால் உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாகச் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6) க்கோலான் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து மாற்றும் தாவர ஊட்டச்ச சத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்றுநோய் (Colon cancer) வளரும் அபாயத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. லிக்னைன் (Lignan) எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலுருந்தும் 50% சதவீதம் குறைக்கலாம்.

7) உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைத்தல்:

தமனிகளில் உள்ள‌ உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறுதானியங்களில் உள்ள‌ மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகின்றது. மேலும் இது மூச்சுத்தடை நோய் (ஆஸ்த்துமா) மற்றும் ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுவதன் அளவினைக் குறைக்கின்றது.

8) பசையம் ஒவ்வாமை நோயைத் (செலியாக் நோய்) தடுத்தல்:

பசையம் ஒவ்வாமை நோய் (Celiac disease) என்பது சிறுகுடலைச் சேதப்படுத்தும் ஒரு வகையான நோய் ஆகும். இந்நோய் ஏற்படுவதினால் சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் பசையம் (குளூட்டன்) போன்ற பசைத்தன்மைக் கொண்ட பொருளைத் தாங்கிக் கொள்ள முடியாது. இதன் காரணமகத் தான் சிறுதானியங்களை உட்கொள்ள அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. சிறுதானியங்களில் முற்றிலுமாகப் பசையம் (குளுட்டன்) என்ற பசையம் கிடையாது என்பதை நான்காவது நன்மையில் பார்த்தோம். சிறுதானியங்களை முதலிலிருந்தே சாப்பிட்டு வந்தால் இந்நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

9) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:

சிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதனால் செரிமானத்திற்கான செயல்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது. சிறுதானியங்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மேலும் நீரிழிவு அல்லாத சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதிலும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய். மேலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயனளிக்கிறது.

10) நார்ச்சத்து நிறைந்தது:

சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதாலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை (Allergenic) இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் (Laxatives) மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்குத் தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாப் பெண்கள் நார்ச்சத்து மிகுதிஆன உணவினை உட்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாக்வதார்கு சரியான தீர்வாக அமையும். குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உண்பவர்களுடன் ஒப்பிடும் போது, நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாவது குறைக்கப்படுவதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

11) உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளின் ஆதாராம் :

சிறுதானியங்களில் உள்ள அதிக அளவிலான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) உடலில் உள்ள தீவிரமான நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுகின்றன. மேலும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருகள் மிக விரைவில் வயதாதாவற்கான செயல்முறையின் வேகத்தைதையும் குறைக்கின்றன. இதனாலேயே மருத்துவர்கள் சிறுதானியங்களை மிகப்பெரும் மருந்தாகச் சிறியவர்கள் முதல் பெரியோர் அனவருக்கும் பரிவ்துரைக்கின்றனர்.

12) தசைகள் சீரழிவதைக் குறைக்கிறது:

சிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டைக் குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.

13) தூக்கக் குறைபாட்டினைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செரோபோனின் அளவை அதிகப் படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் ஒரு குவளை சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் குடித்து வந்தால் ஒலியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மையால் அல்லல் படுபவர்கள் இரவில் சிறுதானியங்களை உண்ணலாம்.

14) மார்பகப் பால் உற்பத்தி அல்லது தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது:

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் கேழ்வரகு உடலின் மார்பகப் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவுகிறாது. எனவே கேழ்வரகின் சுகாதார நலன்கள் நமக்கு மிகுந்த வியப்பை உண்டு பண்ணுகின்றன.

15) மாதவிடாய் கால‌ முதுகுவலிக்கு நிவாரணம்:
சிறுதானியங்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்குச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் சிறுதானியங்களில் உள்ள உயர்ந்த அளவு மெக்னீசியம் மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் முதுகுவலியினை வராமல் தடுக்கிறது.

16) அதிக அளவு பாஸ்பரஸ்:

சிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் உடலில் உள்ள் செல்களின் வடிவத்தைக் கட்டமைக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் “அடினைன் டிரைபாஸ்ட்” (Adenosine triphosphate – ATP) எனப்படும் கலவைகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலைப் பலமடங்காக அதிகரிக்கின்றது. மேலும் பாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு (Lipid) கூட்டமிப்பினைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவற்றிற்கு பாஸ்பரஸ் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. ஒரு கோப்பை சிறுதானியங்களில் ஏதேனும் ஒன்றை உட்கொண்டால் ஒரு நாளைக்கு தேவைப்படும் பாஸ்பரஸின் அளவில் 17 சதவீதத்தினை பூர்த்தி செய்கிறது.

சிறுதானியங்களை உண்பதால் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள்:

17) தோலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது:

சிறுதானியங்களில் “எல்‍…லைசின்” அல்லது விளம்பரங்களில் “எல்‍…புரோலைன்” என்று அழைக்கப்படும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் கொலாஜெனை (Collagen) (தமிழில்: வெண்புரத இணைப்புத்திசு) உருவாக்க உதவுகின்றன. இத்தகைய கொலாஜென் சருமத்தின் திசுக்களுக்கு ஒரு அமைப்பைக் கொடுக்கிறது. இவ்வாறு சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் கொலாஜென் அளவு அதிகரிக்கிரித்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை (Skin Elasticity) மேம்ப‌டுத்துகிறது. இதனால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

18) விரைவில் முதுமையடைவதைத் தடுக்கிறது:

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளன என்பதை முன்னரே கண்டோம். இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் அதிக அளவில் உள்ள சிறுதானியத்தை  உணவில் எடுத்துக் கொள்ளும் போது மன அழுத்தத்தை எதிர்த்துப் போரடுகின்றன. மேலும் உடலில்  உள்ள தேவையற்ற தீவிரமானவற்றை நடுநிலையாக உதவுகின்றன.

மேற்கூறப்பட செயல்களால் தோலின் மீது தென்படும் வயதாவற்கான அறிகுறிகளைத் தலைகீழாக மாற்ற உதவுகிறது. இவை சரும செல்களுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள யூபிகயிணோன் (Ubiquinone) முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைப்பதற்காக அழுகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

19) வடுக்களைக் குறைக்கிறது:

திசுக்களில் ஏற்படும் வடுக்கள் ஆரோக்கியமான சருமத்தைவிட வித்தியாசமான செல் அமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் வடுக்கள் ஏற்பட்ட சருமம் கடினத்தன்மையுடன் காணப்படுகிறது. சிறுதானியங்களில் காணப்படும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளில் ஒன்றான ஆலியம் (Alium) காணப்படுகிறது. இது வடுக்கள் நிறைந்த திசுக்களில் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. ஆலியம் புதிய தோல்வளர்ச்சியில் கலந்து வடுக்கள் குறைவதற்குப் பயன்படுகிறது. இது தோல் பரமரிப்பு அல்லது தோல் பழுது பார்க்கும் (Skin Repair) அமைப்பின் வேகத்தை அதிகரிக்கிறது. மற்றும் தோலில் அமைப்பினை சேதமடைவதிலிருந்து தடுக்கிறது.

20) சூரியன் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது:

சிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்டமின் ‍சி மற்றும் வைட்டமின்-பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம் மற்றும் தோல் புற்றுநோய்க்கு எதிராகச் சருமத்தைப் பாதுகாக்கிறது. சூரியனால் ஏற்படும் சேதத்தினால் தோலின் நிறம் மந்தமாவதுடன் மேலும் தோலினை உயிரற்றதாக மாற்றி விடுகிறது. ஆனால் சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் புதிய செல்கள் வளர்வதை ஊக்குவிக்கின்றன. மேலும் தோலினை இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகின்றன. மேலும் இந்தச் சத்துக்கள் சூரிய ஒளியுடன் தொடர்புடைய தோலின் நிறமாற்றம் மற்றும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும் பயன்படுகிறது.

21) நிறத்தைனை அதிகரிக்கிறது:

சிறுதானியங்களில் வைட்டமின்-ஈ நிறைந்து காணப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலுக்கு ஒரு வியத்தகு வைட்டமினாகக் கருதப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலின் அடுக்குகளில் ஊடுருவிச் சென்று இயற்கையாகவே காயத்திற்கான சிகிச்சை (Wound healing) தன்மைய அதிகரிக்கிறது. இது தோலிற்கு ஒரு பாதுகாப்பான அடுக்கினை ஏற்பட்த்துகிறது. இதனால் நுண்ணுயிரிகளின் அபாயத்திலிருந்து காயத்தினைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-ஈ யினால் தோலின் நிறத்தை அதிகரிக்க முடியும்.

22) இளமையான சருமம் பெறுதல்:

அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடனும் மிருதுவான தோற்றத்துடனும் விளங்கச் செய்யும் செல்களைப் பாதுகாக்கின்றன. எனவே இவை சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட செல்களை மேலும் பலப்படுத்துகிறது.

23) உடலின் ஈரப்பத்த்தினை அதிரிக்கிறது:

சிறுதானியங்களை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் அவை இயற்கையான ஈரப்பத்தினைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இவை மந்தமான தோற்றம் மற்றும் வறண்ட சருமத்தினை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் விளங்கச் செய்கிறது.

24) முகப்பருவினைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் காணப்படும் ஒரு வகையான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளானக் கொழுப்புத் திசு (Lipoic) உயிரணு வளர்சிதை மாற்றம் சுழற்சியினை அதிகரிப்பதன் மூலம் மதிப்பு மிக்க அழற்சியற்ற விளைவை உருவாக்குகிறது. இத்தகைய அழற்சியற்ற பொருள் உடலின் இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் முகப்படுக்கள் மற்றும் தோலின் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

தினை

சிறுதானியங்களால் கூந்தலுக்குக் கிடைக்கும் பயன்கள்:

25) மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது:

சிறுதானியங்களில் புரத்ச்சத்து நிறைந்துள்ளன. முடி இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் முதன்மையானவை இந்தச் சிறுதானியங்கள். ஆரோக்கியமான மற்றும் வலிமையான முடிகளுக்குப் போதுமான அளவுப் புரதம் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. பெரும்பாலான முடிகள் புரதத்தினாலேயே செய்யப்படுகின்றன. முடி செல்களின் உள்புறம் காணப்படும் ஒருவகைப் புரதம் கெரடின் (Keratin) என்று அழைக்கப்படுகிறது. இந்த கெரடின் என்ற புரதம் தான் ஒவ்வொரு முடியின் கலவைக்கும் நேரடிப் பொருப்பாக உள்ளது. புரதத்தின் பற்றாக்குறை காரணமாக அல்லது புரதம் இல்லாத காரணத்தினாலும் கடுமையான முடி இழப்பு நேரிடலாம். எனவே சிறுதானியங்களைப் போதுமான அளவில் உட்கொள்ளும் போது முடி வேகமாக வளர்ச்சியடைகிறது.

மெலும் சிறுதானியங்கள் முடியினை வலுவானதாகவும் உடைந்து போகும் தன்மையினையும் குறைக்கிறது.

26) உச்சந்தலையில் ஏற்படும் வீக்கம், அரிப்பு மற்றும் வழுக்கை ஏற்படுவதைத் தடுகிறது:

சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உச்சந்தலையின் வீக்கத்தினைக் குறைப்பதன் மூலம் உச்சந்தலையின் நிலைகளான அக்ஸிமா, தடிப்பு தோல் அழற்சி (Psoriasis) மற்றும் பொடுகு (Dandruff) போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. முன்கூட்டியே வழுக்கை ஏற்படுவதிலிருந்தும் விடுபடச் சிறுதானியங்கள் நன்மை அளிக்கின்றன. சிறுதானியங்களை தொடர்ந்து உண்பது வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடவும், உடல்நலக் குறைவின் காரணமாக இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

27) முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது:

சிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது.

28) முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துகிறது:

மன அழுத்தம் உடலில் கார்டிசோல் (Cortisol) அளவினை அதிகரிக்கிறது. இவ்வாறு கார்டிசோல் அதிகரிப்பது முடி அதிக அளவில் உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.

29) இளநரையைத் தடுக்கிறது:

இளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது செம்பட்டையாக மாறுவது சிசுக்களில் ஏற்படும் ஆக்ஸினனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (Antioxidants) திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன்மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன. இதனால் சிறுதானியங்களை இளைஞர்கள் இளஞிகள் அதிகம் பயன்படுத்துவது நல்லது.

30) கீழ்வாதம் எலும்பு முறிவிலிருந்து மீள உதவுகிறது:

சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகினை உணவில் சேர்த்துக் கொண்டால் கீழ்வாதம் (Rheumatism) வருவது தடுக்கப்படுகிறது. மேலும் எலும்பு முறிவிலிருந்து மிக விறைவில் மீள உதவி செய்கிறது.

தற்போதய காலக்கட்டத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட உணவு வகை சிறுதானியமாகும். சிறுதானியங்களில் நிறைதுள்ள ஊட்டச்சத்துக்களை மஅத்ற்ற உணவு வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் உள்ளன என்பதை தெரியாமலே நாம் இருந்துவிட்டோம். ஆனால் இப்போது இந்தக் கட்டுரையின் மூலைம் சிறுதானியங்களின் நம்பமுடியாத நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க முடியும. எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? இப்பொழுதே சிறுதானியங்களை உங்களின் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்து மகிழுங்கள்

அவரைக்காய்

*ஆரோக்கியமாய் வாழ 
#அவரைக்காய் சாப்பிடுங்கள்!!!*
அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளன
*#இதயத்திற்கு
கால் கப் அவரையில் 9 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் நம் இதயத்திற்கும் மிகவும் நல்லது.
*#எடை_குறைய
கால் கப் அவரைக்காயில் 10 கிராம் புரதச்சத்து உள்ளது. இதனால், அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்து, உடல் எடையும் சரசரவென்று குறைந்து விடுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
*அதிக #ஊட்டச்சத்து
அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
*#மன_அழுத்தம்_போக்க
அவரைக்காயின் சுவையே தனி. அதில் அதிகமாக உள்ள எல்-டோப்பா என்ற அமினோ அமிலம்தான் அந்தத் தனிச் சுவையைக் கொடுக்கிறது. அந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து, மன அழுத்தங்களைப் போக்குகிறது.
*#பசியைப்_போக்க*
அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதில் உள்ள புரதச்சத்தும் சேர்வதால், இந்த உணவைச் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்த உணர்வு நமக்குக் கிடைக்கும்.
*#இரத்த_அணுக்களுக்கு
அவரைக்காயில் உள்ள இரும்புச் சத்து, நம் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அவரைக்காயை மெயின் டிஷ்ஷாகவும், சிக்கன் உள்ளிட்ட இறைச்சிகளுடன் ஸைட் டிஷ்ஷாகவும் உண்பது மிகவும் நல்லது.
*#எலும்பு_வளர்ச்சிக்கு
நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியச் சத்தும் அவரைக்காயில் கணிசமான அளவில் உள்ளது.
 #மலச்சிக்கலுக்கு…
அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து, நாம் சாப்பிட்ட உணவுகளைச் சீராக நம் குடல்களின் வழியாகப் பயணிக்கச் செய்து, நன்றாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கலே இல்லாமல் செய்கிறது.
*#நோயெதிர்ப்பு_சக்தி பெருக
அவரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நம்மை அண்டாது. வேறு சில நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
*#நீர்ச்சத்தின் அளவை சீராக்க
அவரைக்காயில் உள்ள பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகளின் உதவியுடன் நம் உடலில் உள்ள நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.
*#நுரையீரலுக்கு
நம் உடலில் உள்ள நுரையீரலிலிருந்து மற்ற செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு இரும்புச் சத்து மிகுந்த ஹீமோகுளோபின் உதவுகிறது. அவரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 22 December 2020

காகம்

#காகம் ;

காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. 

பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.

காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை.  கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இனை சேறும்.

கூச்ச சுபாவம் கொண்டது காகம். 

பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது காகம்.

உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.

சிறந்த தாய்
காக்கைக்கு இது தன் முட்டை இல்லை என்று தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவளித்து பராமரிக்கும்.  "உலகில் மிகச்சிறந்த மாற்றந்தாய் காகம் தான் என்பதை உங்கள் அனுபவத்தில் உணரலாம்.

தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.

மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள் தான், ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காகத்திற்கு தினமும் காலையில் கம்பு சோளம் திணை வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வு பித்ருக்களின் ஆசிர்வாதமாகும்

ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று  நடக்கும் அசம்பாவிதங்கள்,  விபத்துக்கள், வீண்பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.  செய்வினை  கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள்  நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது  உங்கள் முன்னோர் வழிபாடு தான்.

உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற் அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி  காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.  தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள்.

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை  ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கி கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா…கா….கா   என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.  அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.  வாழை இலையில் உள்ள் அன்னங்களை  சுவைக்கும்.  அப்படி சுவைக்கும் போது அந்த காக்கைகள் கா... கா... என்ரு  கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டு சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.  இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.  மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.  இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்....

காக்கை சனி பகவானின் வாகனம்  காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.   காக்கைகளில் நூபூரம்  பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை  என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாது.  எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.  அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். 

எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்...

தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா……………….கா…………. என்று பல முறை குரல் கொடுக்கும். இந்த பழக்கம் இன்றும் உண்டு....

காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை  நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.

எனவே காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான்  எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய  விஷயங்கள்

காலை எழுந்திரு.
மாலையிலும் குளி.
கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண்.

Sunday, 20 December 2020

மஞ்சள்ரோஜா...

மஞ்சள்ரோஜாவுக்கு வசிய சக்தி உண்டு..வியாழக்கிழமையில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் ரோஜாவை மிதக்கவிடுதல் அதிர்ஷ்டம் உண்டாகும் ரோஜாவுக்கு பதில் எலுமிச்சையை மிதக்கவிட்டால் கண் திருஷ்டி நீங்கும்..வியாபாரக்கடைகளில் இவ்வாறு செய்யலாம்...ஒரு பக்கம் மஞ்சள் ரோஜா இன்னொரு பக்கம் எலுமிச்சை இதுவும் நல்லதுதான்..!!!

Friday, 18 December 2020

பிற_தோஷங்கள்_போக்கும்_பிரதோஷம்

#பிற_தோஷங்கள்_போக்கும்_பிரதோஷம்
🌷🌷🌼🌷🌷🌼🌷🌷🌼🌷🌷🌼🌷🌷

சைவ வழிபாட்டு முறைகளில் மிகவும் பிரபலமாகவும், பலனளிக்கக் கூடியதாகவும், பக்தர்களின் வழிபாட்டில் மிக எளிமையாக விளங்குவதும் அமைவதும் பிரதோஷம்.

ஒரு மாதத்தில் இருமுறை பிரதோஷ பூஜையில் ஈடுபட முடியும்.
👉ஒன்று வளர்பிறை திரயோதசி (அமாவாசையிலிருந்து 13ம் நாள்) 
👉மற்றொன்று தேய்பிறை திரயோதசி (பெளர்ணமியிலிருந்து 13ம் நாள்)

🌷🌼ஒரு சமயம் வீதஹவ்யர் எனும் சிவபக்தர், சித்ரவதி எனும் தமது பத்தினியுடன், தமக்கு சிவாம்சமாக விளங்கக் கூடிய வகையில் மகவு வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, வேறு எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல், சிறு சிறு கற்களையே உணவாக உண்டு கடும் தவம் செய்தார்.

கற்களை மட்டுமே உண்டதனால் அவர் சிலாதர் எனப் போற்றப்பட்டார். சிலாதர் பூஜை செய்த திருத்தலம், வட நாட்டுப் பாடல் பெற்றத் தலமாக விளங்குவதும், பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றும் ஆகிய ஸ்ரீ சைலம் எனும் திருத்தலம். (இதுவே நந்தி தேவர் பிறந்த தலமும் ஆகும். நந்தி தேவர் தவம் செய்த தலம் நந்தியால்)

கற்களை மட்டுமே உண்டு தவமியற்றிய சிலாதருக்கு மனமிரங்கிய சிவன், அவர் முன் தோன்றி, தனது அம்சமாக ஒரு குழந்தை உனக்குக் கிடைப்பான் என திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

சிலாதர் யாகம் செய்வதற்காக, நிலத்தை உழுத போது, மாணிக்க வைடூர்யங்கள் இழைத்த ஒரு பொற்பெட்டியில் ஒரு குழந்தை கிடைக்க, அக்குழந்தைக்கு வீரகன் எனப் பெயரிட்டு, பெருமகிழ்வுடன், கல்வி கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகள் கழித்து, மித்ரன், வருணன் எனும் இரு தேவர்களும் வீதஹவ்யர் எனும் சிலாதர் முனிவரை பார்க்க வந்து, வீரகனுக்கு ஆயுள் சில காலம் தான் என்று கூறினர். இதைக் கேட்ட வீதஹவ்யர் மனமொடிந்து போக, வீரகன் தனது தந்தையைப் பார்த்து, நான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று வருகின்றேன் எனக் கிளம்பினார்.

வீரகன், ஏழு கோடி முறை ஸ்ரீ ருத்ரம் மந்திரத்தை நாத்தழும்பேற ஜபிக்க, சிவபெருமான் வீரகனின் பக்திக்கு மனமிரங்கி, தனது கணங்களுக்கெல்லாம் தலைமை தாங்க, நந்தி எனப் பெயரிட்டு, தனக்கு வாகனமாகவும் ஏற்று, சாகாவரமும், என்றும் தன்னுடன் இருக்கவும், தனது வாயில் காப்பாளனாகவும் ஏற்று அருளினார்.

நந்தியையே தனது பிரதம சீடராக ஏற்று கலைகள் அனைத்தையும் கற்றுணர்த்தினார்.

(நந்தி = தலைமை. ஐந்து கரத்தனை ஆனை.... நந்தி மகன் தனை - என்று திருமூலர் விநாயகரைக் குறிப்பிடும்போது - நந்தி மகன் - என்பது, உலகமனைத்திற்கும் தலைமை தாங்கும் சிவபெருமானையே நந்தி எனக் குறிப்பிட்டு - அவர்தம் மகன் விநாயகர் என்கிறார்.)

சிவனிடமே பாடங்கள் கற்றமையால் #சைலாதி எனப் புகழப்படும் நந்தி தேவர் ஞான ஆச்சார்யராக விளங்குபவர். விஷ்ணுவுக்கு சிவஞானம் பெற வழிகாட்டியவர். சிவ வழிபாட்டில் மிக முக்கியத்துவம் பெறுபவர். இன்றைக்கு இருக்கும் தருமபுரம், திருவாவடுதுறை போன்ற ஆதீனங்களுக்கு தலைமை குருவாக விளங்குபவர் நந்தி தேவர்தான்.

🌷🌼ஒரு சமயம், சாகாவரத்திற்கான அமிர்தம் பெறவேண்டி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை, மேரு என்னும் மலையையே மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் பாம்பை கயிறாகக் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமும் கடைய, வேகமும் அழுத்தமும் தாங்காத வாசுகி எனும் பாம்பு தனது விஷத்தன்மை கொண்ட பெருமூச்சினை விட, பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது.

அது, அகிலம் அனைத்தையும் அழிக்கவல்லதாக அச்சுறுத்தலாக இருந்தது. இதைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓட, எங்கெல்லாம் அவர்கள் செல்கின்றார்களோ அங்கெல்லாம் ஆலகால விஷமும் துரத்தியது.
இறுதியில், தேவர்கள் ஸர்வலோக வியாபியான சிவபெருமான் உறையும் கைலாயம் சென்றனர். சிவனை தரிசிக்க வேண்டி கைலாயத்தின் இடப்புறம் வழியாக சென்றால், வலப்புறமாக விஷம் வந்து வாட்டியது. வலப்புறம் வழியாக சென்றால் இடப்புறமாக வந்து இடைமறித்தது.. (#ஸோம_ஸூக்த_பிரதக்ஷிணம் - இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. கீழே விபரம் உள்ளது.)

கைலாய நாதனை தேவர்கள் சரணடைய, சிவன் காட்சி தந்து அஞ்சேல் என்று அருளி, தனது மெய்க்காப்பாளனாகிய நந்தியை அழைத்து, அந்த விஷத்தை எடுத்து வரச் சொல்ல, அதன்படியே நந்தி எடுத்து வர, அந்த ஆலகால விஷத்தை, தனது வாயிலிட்டு விழுங்கும் போது, அந்த ஆலகால விஷத்தினால், தனது கணவருக்கு எந்த விதத்திலும் தீங்கு நேரக்கூடாது என்றெண்ணிய பார்வதி தேவி, அந்த விஷம் சிவனின் தொண்டைப் பகுதிக்கு வரும்போது, சிவனின் கண்டமாகிய கழுத்தைப் பிடிக்க, செம்பொன்னார் மேனியனாக விளங்கும் சிவனின் தொண்டையில் விஷம் கருநிறமாகத் தங்கியது.

அகிலம் ஆலகால விஷத்திலிருந்து தப்பியது. தேவர்கள் பயம் நீங்கினர். சிவபெருமானை நீலகண்டன் என போற்றினர்.

மறுபடியும் பாற்கடல் கடைய, அமிர்தம், லக்ஷ்மி தேவி, காமதேனு, உச்சைஸ்ரவம் எனும் குதிரை முதலான தோன்ற அனைவரும் மகிழ்வுற்றனர்.

அச்சமயம், நந்தி தேவர் நாம் எடுத்து வந்த விஷம் அவ்வளவு வீரியம் வாய்ந்ததா என்று எண்ணி, உலகம் உய்ய ஒரு காரியத்தை, நான் செய்தேனே என்று செருக்குற்றார்.

அப்பொழுதுதான், அந்த விஷத்தின் வீரியம் நந்தி தேவரை வீழ்த்தியது.

🌜மயக்கமுற்ற நந்தி தேவருக்கு, அகிலம் அனனத்திற்கும் படியளக்கும் அன்னபூரணியாக விளங்கும் பார்வதி தேவி, அரிசியும், வெல்லமும் கலந்த கலவையை நந்திக்கு மருந்தாகக் கொடுக்க, நந்தியின் தலைக்கு விஷத்தின் வீரியம் வராமலிருக்க சிவபெருமான் தனது பாதத்தை, நந்தியின் தலையில் இருத்தி, தாண்டத்தை நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நிகழ்த்த பிரதோஷ தாண்டவம் நிகழ்ந்தேறியது.🌛

மயக்கமும் விஷமும் நீங்கிய நந்தி, தனது செருக்கு நீங்கி, சிவபெருமானை வணங்கி வழிபட்டார்.

விண்ணோர்கள் அனனவரும் அந்த அற்புதத் தாண்டவத்தைக் கண்டு களித்தனர்.

பாற்கடல் கடையத் தொடங்கியது தசமி தினம் என்றும், ஏகாதசி தினம் முழுவதும் உறக்கமின்றி கடைந்தது என்றும், திரயோதசி தினத்தின், மாலை வேளையில் (4.30 pm - 6.00 pm) தான் நந்தியின் சிரசில் நடனமாடியதாகவும் சிவபுராணங்கள் பகர்கின்றன. இந்த நேரத்தை #ரஜனி_முக_காலம் என்று போற்றுவார்கள்.

திரயோதசி திதியின் மாலை வேளையைத் தான் பிரதோஷ வேளையாகக் வழிபட்டு மகிழ்கின்றோம்.

🌷🌼அரிசி வெல்லக் கலவை ஒரு அற்புதமான மருந்து. வெல்லத்தில் இருக்கும் க்ளுக்கோஸும் (glucose), அரிசியில் உள்ள அமைலோஸ் (amylase) எனும் ஸ்டார்ச் வகையைச் சேர்ந்த உப்பும் சேர்வது - உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்க வல்லது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு முதலுதவியாக சீனியும், உப்பும் கலந்த தண்ணீரைக் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

அது போல, மாட்டிற்கு ஏதேனும் நோய் தாக்கியதாகத் தெரியவந்தால், முதலில் அரிசியும் வெல்லமும் கலந்த கலவையை உணவாகக் கொடுப்பார்கள்.

பிரதோஷ வேளையில் படைக்கப்படும் #காப்பரிசி எனும் பிரஸாதம் - அரிசி மற்றும் வெல்லத்தினால் செய்யப்படுவது. அந்த பிரஸாதத்தை உட்கொண்டால், அது நம் உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கவல்லது.

சூரியன் அஸ்தமித்து, சந்திரன் உதிக்கும் நேரமான அந்தி மாலை நேரம் விஷத்தன்மை கொண்டது என்றும், அவ்வேளையில் தீபம் ஏற்றி, வழிபாடுகள் செய்ய, புனிதமான நேரம் என்றும் சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

சாயங்கால வேளையில் சாப்பாடு கூடாது என்று பெரியோர்கள் கூறுவதன் காரணம்.

🌷🌼பிரதோஷ வேளையில் சிவபெருமானை வணங்கினால் தலைக்கனம், கர்வம் போன்றவை நீங்கும் என்றும், ஆணவம், கண்மம், மாயை எனும் மும்மலங்களும் நீங்கி, சிவயோகம் கிடைக்கும் என்றும் சிவபுராணங்கள் வலியுறுத்துகின்றன.

நந்தி தேவருக்கு ஏற்பட்ட தலைக்கனத்தை (கர்வம்-செருக்கு) நீக்க அவரின் தலைமேல் தாண்டவமாடினார் சிவபெருமான்.

நல்ல பக்தியும், நன்னெறியும், நல்லெண்ணமும், நன்னடத்தையும் கொண்டிருந்தால் மட்டுமே இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்பதற்கு உதாரண புராணங்களாக மேற்கண்டவை விளங்குகின்றன.

🌷🌼ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்

தேவர்கள் ஆலகால விஷத்திற்கு அஞ்சி, கைலாய மலையை இங்கும் அங்கும் ஓடி, இறைவனைச் சரணடைந்து நற்கதியைப் பெற்ற வழிமுறைதான் - ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் என்று கூறப்படுகின்றது.

நிலையாக இருக்கும் சிவனை, நாம் வழிபடும் வலம் வரும் முறை, செயல் சக்தியாகச் செய்யும் போது, சக்தி தேவிக்குரிய திரிசூல வடிவம் வருவதைக் காணலாம். சிவனையும், சக்தியையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான வழிபாட்டு முறை ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்.

பிரதோஷ வேளையில் ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் அளவற்ற பலனைத் தரும். ஸத்புத்ர சந்தானம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளமாகும்.

ஸோமஸூக்த பிரதக்ஷிணம் என்பதை மிக எளிய வகையில் செய்ய ஒரு உபாயம் உண்டு.

ந ச ந கோ

ந ச கோ

ந ச ந

மேற்கண்ட குறியீடுகளை ஞாபகம் கொண்டு எளிதில் வலம் வரலாம்.

ந - நந்தி

ச - சண்டிகேஸ்வரர்

கோ - கோமுகி எனும் ஆலயக் கருவறையிலிருந்து அபிஷேகத்

தீர்த்தம் விழும் இடம்.

🌷🌼பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.

1. செல்வங்கள் பெருகும்.

2. கடன் தொல்லைகள் நீங்கும்,

3. நோய்கள் அகலும்

4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.

5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.

6. வேண்டிய வரம் கிட்டும்.

7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.

8. நீடித்த ஆயுள் கிட்டும்.

9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

🌷🌼ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் #நித்திய_பிரதோஷம் எனவும்,

ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி #பட்ச_பிரதோஷம் எனவும்,

சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது #சனி_மஹா_பிரதோஷம் எனவும்,

திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது #ஸோம_பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

🌷🌼நந்தியம்பெருமானுக்கேயுரிய சில சிறப்பு தலங்கள்.

🌸நந்தி கொம்பு ஒடிந்த ஸ்தலம் - திருவெண்பாக்கம்

🌸ஈசனோடு நந்தி இணைந்த உருவ ஸ்தலம் - திருக்கூடலையாத்தூர், பவானி

🌸நந்தி விலகிய ஸ்தலம் - திருப்புங்கூர், பட்டீஸ்வரம், திருப்பூவனம், திருப்பூந்துருத்தி

🌸நந்தி நின்ற ஸ்தலம் - திருமால்பேரு

🌸நந்தி திருமண ஸ்தலம் - திருமழபாடி

🌸நந்தி பிரதோஷ ஸ்தலம் - திருஅரிசிலி

🌸நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல், திரும்பியவாறு கோபுரம் நோக்கிய ஸ்தலம் - திருவோத்தூர், திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.

🌷🌼பிரதோஷ காலத்தில், பூஜைகள் நடைபெறும் சமயத்தில், பன்னிரு திருமுறைகளில் உள்ள, அமிர்தம் கடைதல் தொடர்பான, பதிகங்களை படித்தலும் கேட்டலும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது. குறிப்பாக, சிவபுராணத்தினை (நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க ..) வாசிப்பதும், கேட்பதும் நற்பலன்களை அளிக்கக் கூடியது.

பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் மிக அரிய - மிகப் பழமையான நூலாகிய ஸ்காந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட - சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழ்க்கண்ட ஸ்லோகங்கள், பிரதோஷ காலத்தில் படிக்க அல்லது கேட்கப்பெறுவது, மேலே கூறியுள்ள அனைத்து பலன்களையும் வாரி வழங்க வல்லது.

பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்கி நலங்களை நாளும் பெறுவோம் !

******

🌷🌼ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்

ஸ்ரீ கணேசாய நம:

ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத |

ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித ||

ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத |

ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய ||

ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண |

ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர ||

ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய |

ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன ||

ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன |

ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ ||

ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: |

ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர ||

மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச |

மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச ||

ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : |

க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர ||

தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் |

அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் ||

தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : |

மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் ||

சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : |

துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||

ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: |

ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் ||

ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் |

ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி ||

சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா ||

********************************************

🌷🌼ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம்

ஸ்ரீ கணேசாய நம: |

ஸத்யம் ப்3ரவீமி பரலோக ஹிதம் ப்3ரவீமி

ஸாரம் ப்3ரவீம் உபநிஷத் த்4ருத3யம் ப்ரவீமி |

ஸம்ஸார முல்ப3ணம ஸாரமவாப்1ய ஜந்தோ:

ஸாரோSயம் ஈச்வர பதாம் ப்ருஹஸ்ய ஸேவா || 1 ||

யே நார்ச்சயந்தி கிரீசம் ஸமயே ப்ரதோஷே

யே நார்ச்சிதம் சிவமபி1 ப்ரணமந்தி சா1ன்யே |

ஏதத்கதா2ம் ச்ருதிபுடைர்ந பிப3ந்தி மூடா4ஸ்தே1

ஜன்மஜன்மஸ¤ ப4வந்தி நரா தரித்ரா : || 2 ||

யே வை ப்ரதோஷ ஸமயே பரமேஸ்வரஸ்ய

கர்விந்த்ய நந்ய மனஸோSங்கி4ரி ஸரோஜ பூஜாம் |

நித்யம் ப்ரவிருத்த4 தனதான்ய கலத்ரபுத்ர ஸெளபாக்ய

ஸம்பத3தி4 காஸ்த இஹைவ லோகே || 3 ||

கைலாஸசைல புவனே த்ரி ஜகஜ்ஜனித்ரிம் கௌரீம்

நிவேச்ய கனகா சிதரத்ன பீடே |

ந்ருத்யம் விதா4துமபி4 வாஞ்ச2தி சூலபாணௌ

தேவா: ப்ரதோஷ ஸமயே நு பஜந்தி ஸர்வே || 4 ||

வாக்3தேவீ த்4ருத வல்லகீ சதமகோ2 வேணும் த3த4த் பத்மஜ

ஸ்தாலோன்னித்3 கரோ ரமா ப4கவதீ கேய ப்ரயோகாந்விதா |

விஷ்ணு: ஸாந்த்ர ம்ருத3ங்க வாத3நபடுர்தே3வா: ஸமந்தாத்ஸ்தி2தா :

ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடா3நிபதிம் || 5 ||

கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த3 ஸாத்4ய வித்யாதரா ரவராப்ஸரஸாம் க3ணாஞ்ச |

யேsன்யே த்ரிலோக நிலயா ஸஹபூ4தவர்கா: ப்ராப்தே பரதோஷ ஸமயே ஹரபார்ச்வ ஸம்ஸ்தா2 : || 6 ||

அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோsத2 நான்யே ஹரி பத்மஜாத்தா4: |

தஸ்மிந் மஹேசே விதி4நேஜ்யமாநே ஸர்வே பரஸீதந்தி ஸ¤ராதி4நாதா2: || 7 ||

ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: |

ப்ரதி க்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்தை: ஸ¤கர்மபி : || 8 ||

அதோ தாரித்3ரய மாபந்ந: புத்ரஸ்தே த்3விஜபா4மிநி |

தத்தோஷ பரிஹாரார்த்தம் சரணாம் யாது சங்கரம் ||

|| இதி ஸ்ரீ ஸ்காந்தோக்தம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ஸம்பூர்ணம் ||

Thursday, 17 December 2020

புதினாவின் அற்புதங்கள்

புதினாவின் அற்புதங்கள்:

புதினா ( Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

புதினா கஷாயம் தயாரிக்கும் முறை:

25 கிராம் புதினா இலையை 500 மில்லி தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து 60 மில்லி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் குறைவு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.

புதினா ஜூஸ் தயாரிக்கும் முறை:

வெயிலில் நிழலான இடத்தில காயவைத்து புதினா இலையை எடுத்து கொள்ளவேண்டும். தண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் தயாரான பிறகு புதினா இலைகளைச் சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, இதை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அருந்தி வரலாம்.

புதினா பல்பொடி தயாரிக்கும் முறை:

புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பொடியை வைத்து தினசரி பல் தேய்த்து வந்தால் வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த ஒரு நோயினாலும் பாதிக்கப்படமாட்டார். பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.

புதினாக் கீரையை தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம். கடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை தொட்டி மண்ணில் ஊன்றி வைத்தால் போதும், கைக்கெட்டிய தூரத்தில் புதினா மூலிகை கிடைக்கும்.

புதினா அனைத்துக்கும் தீர்வு தரும் காயகல்பம். எனவே அனைவரும் வீடுகளில் புதினாவை வளர்த்து நம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.

தண்ணீர் பாட்டில்



💢உங்களுக்கு தெரியுமா தண்ணீர் பாட்டில் வாங்கும் போது நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்! :💢
 
நாம் வாங்கும், பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் ஒரே வகையிலான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கபடுவதில்லை. நாம் விலையில் மட்டுமே மாற்றங்களை காண்கிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் தரத்திலும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன.

இந்த மாற்றங்கள் தான் நமது உடல் நலத்திற்கு பெரும் அபாயமாக அமைகின்றன. ஆம், ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் நாற்காலி, டிவி போன்றவை தயாரிக்க தான் பயன்படுத்த வேண்டும். ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் தான் தண்ணீர் பாட்டில் தயாரிக்க பயன்படுத்த வேண்டும்.

எந்தெந்த பிளாஸ்டிக் உகந்தது, தீயது என்பதை அதில் இருக்கும் குறியீட்டு எழுத்துக்களை வைத்து கண்டறியலாம்…

💢PET / PETE :

பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக்கில் தான் தயாரிக்கப்படுகின்றன. தண்ணீர் பாட்டில், கூல் ட்ரிங்க்ஸ் சில பேக்கேஜ் போன்றவைகளில் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒருமுறை மட்டும் பயன்படுத்த வேண்டிய பிளாஸ்டிக் பொருளாகும்.

மீண்டும், மீண்டும் இதை பயன்படுத்துவதால் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாகும் அபாயம் இருக்கிறது. இது மிகையான நச்சுத்தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

💢HDP / HDPE :

எச்.டி.பி வகை கடினமான பிளாஸ்டிக் பால் ஜக் (Jug), டிட்டர்ஜன்ட், எண்ணெய் பாட்டில்கள், பொம்மைகள் மற்றும் பிளாஸ்டிக் பேக் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பிளாஸ்டிக்கில் எந்த இரசாயன வெளிபாடுகளும் இருப்பதில்லை.

இந்த வகை பாட்டில்களில் நீர் பிடித்து குடிப்பது தவறில்லை, இவை பாதுகாப்பானவை. எனவே, இந்த சீல் உள்ள பாட்டில்களை தண்ணீர் குடிக்க பார்த்து வாங்குங்கள்.

💢PVS / 3V :

மிருதுவான, வளைந்துக் கொடுக்கும் பிளாஸ்டிக். உணவுப் பொட்டலங்களை கட்டுவதற்கு, சிலவகை குழந்தைகள் பொம்மை, போன்றவை தயாரிக்க இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து இரண்டு வகையான நச்சுத்தன்மை உள்ளது.

இந்த நச்சுக்கள் உடலின் ஹார்மோன்களை பாதிக்கவல்லது. எனவே, இதை தவிர்ப்பது நல்லது என ஆராய்ச்சியாளர்கள் அறிவுரைக்கின்றனர்.

💢LDPE :

தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க இந்த பிளாஸ்டிக் வகை பயன்படுதவே கூடாது. இது எந்த கெமிக்கலும் வெளிப்படுத்துவதில்லை எனிலும் கூட, இந்த பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகள், பானங்கள் அடைத்து பருகுவது உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க பெரும் காரணமாக இருக்கிறது.

💢PP :

வெள்ளை அல்லது பாதி ட்ரான்ஸ்பர் நிறத்தில் இருக்கும் இந்த பிளாஸ்டிக் மருந்துகள் மற்றும் தயிர் போன்றவை அடைக்க பயன்படுத்தப்படுகின்றன. இது எடையில் மிகவும் குறைவானது. இது சூட்டை தாங்கும் தன்மை உடையது. சூடு செய்தால் இவை வேகமாக உருகாது.

💢PS :

பாலீஸ்டிரின் (PS) மிகவும் விலை அதிகமான, எடை குறைவான பிளாஸ்டிக். பானம் குடிக்கும் கப், உணவுகள் அடைப்பதற்கு, முட்டை அடுக்கி வைக்க என பல்வேறு பயன்பாட்டிற்கு இது உபயோகப்படுகிறது. இதை நீண்ட காலம் மீண்டும், மீண்டும் பயன்படுத்த கூடாது.

💢PC / பெயரிடப்படாத பிளாஸ்டிக் :

ஸ்போர்ட்ஸ் தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள் அடைப்பதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. இது ஒருவகையான மிகவும் அபாயாமான பிளாஸ்டிக் ஆகும். இது மறுசுழற்சிக்கு உகந்தது அல்ல.

இது, உணவு பொருட்கள் அடைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் (BPA) கலப்பு கொண்டுள்ளது ஆகும்.