jaga flash news

Thursday 10 December 2020

அறுசுவையை உண்டால் இந்த பிரச்சினை இருக்காது...

துணிச்சல்,தைரியம் அதிகரிக்க கசப்பான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவும்...வேப்பிலையை மெல்ல சொன்னால் மெல்வீர்களா...ஆனா மாதம் ஒருதடவை அதையும் கொஞ்சம்...சாப்பிடுங்க...இருதய நோய் உள்ளவர்கள் கசப்பு சுவையை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்..,

சர்க்கரை நோய் உள்ளவர்கள்.. துவர்ப்பு சுவையை அதிகம் சப்பிடுங்கள்.அதனால்தான் நாவல்பழ கொட்டை,பட்டை எல்லாம் மருந்தாக சொல்கிறார்கள் ..வாழைப்பூ,வாழைக்காய் பொறியல்,கொத்தவரங்காய் சிறப்பான உணவு.

அதிகம் தினசரி பேசுபவர்கள்..காரம் எடுத்துக்கொள்ளுங்கள்..மிளகாய் பொடி அல்ல...மிளகும் காரம்தான், இஞ்சியும் காரம்தான்...இப்போதைய குழந்தைகள் அறுசுவையை உணராமல் வளர்கிறார்கள்..பீட்சா,பர்கர்,பெப்சி என சாப்பிடுகிறார்கள்..இதனால் அவர்கள் சோம்பல்,சலிப்பு,அலட்சியம்,கவனக்குறைவு ,அதிக தூக்கம்,சுசுறுப்பின்மை உண்டாகிறது...அறுசுவையை உண்டால் இந்த பிரச்சினை இருக்காது...

இனிப்பு,உப்பு,கசப்பு,துவர்ப்பு,புளிப்பு,காரம் இவை ஒரு வாரத்தில் சம அளவில் உண்ண வேண்டும்..அறுசுவைகள் நெல்லிக்கனியிலும் இளநீரிலும் இருக்கிறது...இவை அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது நோய்கள் அண்டாது..புத்தி நன்கு வேலை செய்யும்...

No comments:

Post a Comment