jaga flash news

Thursday 3 December 2020

தர்மகர்மாதிபதி யோகம்

தர்மகர்மாதிபதி யோகம் 



சாதகத்தில் கோள்களின் அமைவில் ஏற்படக்கூடிய யோகங்களில் முதன்மையானது தர்மகர்மாதிபதி யோகம்இராசி சக்கரத்தின் வீடுகளில் ஒன்பதாம் இடமும் பத்தாம் இடமும் மிக முக்கியமான இடங்கள்ஒன்பதாம் இடம் என்பது செல்வச் சிறப்பு வீடு அல்லது பாக்கிய ஸ்தானம் எனப்படும்செல்வம் என்றால் பணம்சொத்துஎன்பது மட்டுமல்ல புகழும் பெருமையும் நோய்நொடியற்ற வாழ்க்கையும் என அனைத்தும் கொண்டதுதான் பாக்கியம் எனப்படும்பொதுவாகஒன்பதாம் வீட்டின் அதிபதி எந்த நிலையில் இருந்தாலும் முடிந்தவரை நன்மையையே அளிக்கும் என்பது சோதிட நூல்களின் கருத்துஒருவனுக்கு செல்வமும் புகழும் கிடைக்க வேண்டுமென்றால்ஒன்று அது தனது மூதாதையர் அல்லது தந்தை வழியாகக் கிடைக்க வேண்டும் அல்லது தான் செய்யும் பணியின் காரணமாகக் கிடைக்க வேண்டும்இங்கு ஒன்பதாம் இடம் என்பது தந்தைக்கு உரியது என்பதையும் கவனத்தில் கொண்டால்ஒரு சாதகருக்கு பாக்கியம் என்பது தந்தை வழியிலும் கிடைக்கும்.


அதுபோல்ஒருவரின் வாழ்க்கை என்பது அவர் சார்ந்திருக்கும் தொழிலின் அடிப்படையிலேயே சிறப்புடனோ அல்லது சிறப்பு குன்றியோ அமையக் கூடும்இராசியில் 10-ம் இடம் என்பது தொழிலினைக் குறிக்கும் என்பதை அறிவோம்தொழில் மேன்மை என்பது 10-ம் இடத்தினைச் சார்ந்தே இருக்கும்எனவே ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய செல்வம் அல்லது புகழ் என்பது தொழிலைச் சார்ந்தும் இருக்கும்அதாவது 10-ம் இடம் என்பது 9-ம் இடத்தோடு தொடர்பில் இருப்பது சிறப்பாக இருக்கும்.


இராசியில் 9-ம் இடம் என்பது முக்கோணத்தில் (திரிகோணத்தில்மூன்றாவது கோணம் ஆகும்திரிகோண வீடுகளில் மூன்றாவது கோணமான 9-ம் வீட்டின் தனித்துவத்தினை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம்அதே போலஇராசியின் நாற்கரங்களில் (கேந்திரங்களில்நான்காவது கேந்திரம் அல்லது நான்காவது நாற்கரத்தின் தனித்துவத்தையும் பதிவு செய்துள்ளோம்நான்காவது கேந்திரம் என்பது 10-ம் வீடு என்பது நாம் அறிந்ததேஆக 9-வது வீடும் 10-வது வீடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதுடன் சிறப்பானது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஒன்பது மற்றும் பத்து ஆகிய இந்த இரண்டு வீடுகளின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பு அல்லது பார்வைகள் சோதிடத்தில் சிறப்பான பலன்களைக் கொடுக்கின்றனஇந்த அமைப்பிற்கு தர்மகர்மாதிபதி யோகம்” என்று பெயர்அதாவது ஒன்பது – தர்மம்பத்து – கர்மம் ஆகிய இவற்றின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பு என்பதே தர்ம கர்ம அதிபதிகளின் யோகம் எனப்படுகிறது.


தர்மகர்மாதிபதி யோகம் எவ்வாறு அமையக் கூடும் என்பதைப் பார்ப்போம்

1.இலக்கினத்திற்கு ஒன்பது – பத்து வீடுகளின் அதிபதிகள் இணைந்திருப்பது

2.இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வது

3.ஒன்று மற்றொன்றைப் பார்ப்பது

4.இரண்டும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பது




எடுத்துக்காட்டாக-



இவைகள் எடுத்துக்காட்டு மட்டுமே. ஆனால் இணைவுகள் சேர்க்கைகள் (permutation & combination) அடிப்படையில் எண்ணற்ற சாதகங்கள் அமையக் கூடும்.


இவ்வாறு அமையப் பெற்றிருக்கும் சாதகர்கள்அதாவது தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் சாதக அமைப்பு உடையவர்கள்:-

      செல்வந்தர்களாக இருப்பர்

      தொழில் அதிபராக இருப்பர்

      அறிவாற்றல் மிக்கவராக இருப்பர்

      அறிவுரை வழங்குபவர்களாக இருப்பர்

      வெளிநாடு செல்லும் செல்வந்தராக இருப்பர்


ஆனால் நடைமுறையில் தர்மகர்மாதிபதி யோகம் பெற்றிருந்தும் மேற்சொன்ன பலன்கள் இல்லாத நிலையும் ஏற்படக்கூடும்


அதாவதுதர்மகர்மாதிபதி யோக அமைப்பு உடைய சாதகர்கள் மேற்கூறிய பலன்களை அடைய முடியாமல் போகும். அது ஏன்?

No comments:

Post a Comment