jaga flash news

Friday 31 July 2020

வெண்டைக்காயின் மகத்தான மருத்துவ பயன்கள்!


 


வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரை , அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம்.

என்ன இருக்கிறது? (100 கிராமில்)

ஆற்றல் 33 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் 7.45 கிராம்
கொழுப்பு 0.19 கிராம்
புரதம் 2 கிராம்
வைட்டமின் ஏ 36 மியூஜி
வைட்டமின் சி 23 மி.கி.
வைட்டமின் இ 0.27 மி.கி.
வைட்டமின் கே 31.3 மியூஜி
கால்சியம் 82 மி.கி.
இரும்பு 0.62 மி.கி.
ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது வெண்டைக்காய்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும் கூட.

ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தவிர, இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சி யையும் தவிர்க்கக் கூடியவை.

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த ஒரு காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும். 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே.

வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது. வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும். வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடல் சுத்தமாகிறது. அதனால் சருமம் தெளிவாகிறது. பரு வருவது கூட தடுக்கப்படுகிறது. வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.’’

எப்படி வாங்குவது?

வெண்டைக்காயின் நுனிகளை உடைத்தால் பட்டென்று உடைய வேண்டும். அதுதான் ஃப்ரெஷ்ஷானது என்பதற்கான அடையாளம். உடைக்க முடியாமலோ, உள்ளே உள்ள முத்துக்கள் புடைத்துக் கொண்டு வெளியே தெரிந்தாலோ, அதை வாங்க வேண்டாம். முற்றிய வெண்டைக்காய் ருசியாக இருக்காது.

எப்படிச் சமைப்பது?

ஆர்கானிக் வெண்டைக்காய் கிடைத்தால் மிகவும் நல்லது. வெண்டைக்காயில் பூச்சிகள் இருக்கும். ஆப்பிள் சிடர் வினிகரும் உப்பும் கலந்த தண்ணீரில் வெண்டைக்காய்களை முழுசாக அப்படியே சிறிது நேரம் போட்டு வைத்திருந்து விட்டு, பிறகு நன்கு அலசி சமைப்பதே சிறந்தது.

வெண்டைக்காயை அலசிய பிறகே நறுக்க வேண்டும். நறுக்கிவிட்டு அலசினால் கொழகொழப்புத் தன்மையைக் கையாள்வது மிகவும் சிரமமாக இருக்கும். கூடியவரையில் இதை அரைவேக்காடாக சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.


 

No comments:

Post a Comment