♥ தீபாவளி - கங்கா ஸ்னானம் ♥
எச்சரிக்கை - பித்ரு சாபம் :-
இந்துமத சாஸ்திரப்படி எந்த நாளாக இருந்தாலும் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது ; ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் (தலையில் மட்டுமாவது) எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
இறந்தவர்கள் துக்க வீடு, இடுகாடு, சுடுகாட்டுக்கு சென்று வந்த தினத்தில் மற்றும் அமாவாசை தினத்தில் எண்ணெய், சோப்பு, சீயக்காய் தேய்த்து நீராடக்கூடாது. வெந்நீரிலும் நீராடக்கூடாது. மீறி இந்த நேரங்களில் இத்தகைய குளியல் செய்தால் பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம்.
கங்கா ஸ்னானம்:-
ஆனால் கிருஷ்ண பகவான் நரகாசுரனுக்கு கொடுத்த வரம் காரணமாக தீபாவளி தினத்தில் மட்டும் இதற்க்கு விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. கங்காஸ்நானம் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது .
தீபாவளிக்கு முன் தினம் சதுர்த்தி தினத்தில் தீபாவளி கொண்டாடுபவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்ல எண்ணெயை தலையிலும் உடலிலும் தேய்த்து குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு பின்பு சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்; நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் சரஸ்வதியும் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 6 மணிக்கு முன்பு குளிக்க குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது.
6 மணிக்கு பிறகு குளிப்பதாக இருந்தால் வெந்நீர் பயன்படுத்தக்கூடாது; வெந்நீருக்கு பதில் குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அமாவாசை தினத்தில் தீபாவளி கொண்டாடுபவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்ல எண்ணெயை தலையிலும் உடலிலும் தேய்த்து குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு பின்பு சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்; நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் சரஸ்வதியும் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம்.
நண்லெண்ணை தேய்த்து குளிக்க தோஷங்கள் விலகும். சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். துஷ்ட சக்தியை விரட்டும். தீபாவளி திருநாள் அன்று காலையிலும், மாலையிலும் இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் நெய் விளக்கு ஏற்ற வேண்டும்; முடியாத பட்சம் ஒரு நெய் விளக்கு மட்டுமாவது ஏற்ற வேண்டும் இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும். மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த புது உடை, பட்டாசு, இனிப்பு நைவேத்தியங்கள் படைத்து வணங்கி, விருந்து உண்டபின்பு அந்த புத்தாடையை உடுத்தி, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள். புது உடை, பட்டாசு, இனிப்பு, விருந்து ஆகியவற்றை ஆதரவற்றோர், வறுமையில் உள்ளவர்களுக்கும் தந்து கொண்டாடும்போது உங்கள் தோஷங்கள் நீங்கும்.
நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று ஜாதகத்தில் கூறப்படுகிறது...
♥ சூரிய தோஷம் நீங்க:
சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்...
♥ சந்திர தோஷம் நீங்க:
அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
♥ செவ்வாய் தோஷம் நீங்க:
செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடுகிறது, திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சனைகள் வருகிறது என்று பலர் கவலைப்படுவதுண்டு. இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் என்னவென்றால், வில்வ கொட்டையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து அதில் ஒரு நான்கைந்து குவளைகள் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் செவ்வாய் தோஷம் விலகும்...
♥ புதன் தோஷம் நீங்க:
புதன் தோஷம் நீங்க கங்கை நீரோ அல்லது கடல் நீரோ தேவை;
இரண்டும் கிடைக்காதபட்சம் கடல் நீருக்கு பதிலாக நிலத்தடி நீரில் சிறிது கல் உப்பு கரைத்துக்கொள்லலாம்; உப்பு தூள் உபயோகிக்கக்கூடாது. சிறிதளவு மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து பின் அதை சிறிதளவு கடல் நீரிலோ அல்லது கங்கை நீரிலோ கலந்து பின் அனைத்தையும் நாம் குளிக்கும் நீரில் கலக்க வேண்டும். பின் இந்த நீரில் குளிப்பதன் மூலம் புதனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்...
♥ வியாழன் (குரு) தோஷம் நீங்க:
கருப்பு ஏலக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நன்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவருவதன் மூலம் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்...
♥ சுக்கிர தோஷம் நீங்க:
சுக்கிர தோஷம் நீங்க, பச்சை ஏலக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்...
♥ சனி தோஷம் நீங்க:
சனி தோஷம் நீங்க, கருப்பு எள் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்...
♥ ராகு தோஷம் நீங்க:
ராகு தோஷம் நீங்க, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய மகிஷாக்ஷியை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்...
♥ கேது தோஷம் நீங்க:
கேது தோஷம் நீங்க, அருகம்புல்லை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்...
No comments:
Post a Comment