jaga flash news

Tuesday, 3 November 2020

கிரக மாலிகா யோகம் என்பது

கிரக மாலிகா யோகம் என்பது 

ராகு, கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அது கிரகமாலிகா யோகம் எனப்படும். இந்த யோகம், லக்னத்திலிருந்து ஆரம்பிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு வீட்டிலிருந்தும் ஆரம்பிக்கலாம்.

லக்னத்திலிருந்து ஆரம்பித்தால், அது லக்னமாலிகா யோகம் எனப்படும்.

இந்த யோகம் இருப்பவர், அரசர் ஆகும் தகுதியுடையவர் அல்லது பலருக்குத் தலைமை தாங்கும் பதவியில் இருப்பார். நல்ல பண வசதி உடையவர்.

தனஸ்தானமான இரண்டாம் இடத்திலிருந்து ஆரம்பித்தால், அது தனமாலிகா யோகமாகும். இது இருந்தால், நல்ல பணவசதியுள்ளவர்; கடமை தவறாதவர் என பல நல்ல பலன்கள் இந்த யோகத்துக்குச் சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாம் இடத்திலிருந்து ஆரம்பமானால், அது விக்கிரமமாலிகா யோகம் எனப்படும். இதற்கும் அரசாளும் யோகம் இருக்கிறதென்றும், நல்ல செல்வம் உள்ளவரென்றும் நல்ல பராக்கிரமசாலிகளின் நட்பு கிடைக்குமென்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

நான்காம் இடத்திலிருந்து ஆரம்பமானால், சுகமாலிகா யோகமாகும்.  நல்ல சுகமான வாழ்வு அமையும். செல்வந்தராக முடியும்.

ஐந்தாம் இடத்திலிருந்து ஆரம்பமானால், அது புத்திரமாலிகா யோகம் என அழைக்கப்படும். இந்த யோகம் இருப்பவர்கள் இறை நம்பிக்கை மிகுந்தவர்கள்.

ஆறாம் இடத்திலிருந்து ஆரம்பமானால், அது சத்ருமாலிகா யோகமாகும். ஆறாம் இடம் ஒரு துஸ்தானமாகக் கருதப்படுவதால், இந்த யோகமும் ஒரு அவயோகமே ஆகும். ஆறாம் இடம், கடனைக் குறிப்பதால் இந்த யோகம் இருப்பவர்கள் பண நெருக்கடி மிக்கவர்கள்.  பேராசை உள்ளவர்கள்.

ஏழாம் இடத்திலிருந்து ஆரம்பமானால், களத்திரமாலிகா யோகம் எனப்படும். இவர்கள் பெண் சபலம் உள்ளவர்கள்.  பிரபலமானவர்களாக இருப்பார்கள்.

எட்டாம் இடத்திலிருந்து ஆரம்பமானால், அவர்கள் ஏழைமை நிலையில் இருப்பார்கள். அத்துடன், அவர்கள் மனைவிக்கு அடங்கி நடப்பவர்களாக இருப்பார்கள்.

ஒன்பதாம் இடத்திலிருந்து ஆரம்பமானால், பாக்கியமாலிகா யோகம் எனப்படும். ஒன்பதாம் இடம் பாக்கியஸ்தானம் அல்லவா? இங்கு இருப்பினும் தன் மதத்தின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருப்பர். நல்ல செல்வாக்கான வாழ்க்கையும் கிடைக்கும்.

பத்தாம் இடத்திலிருந்து ஆரம்பமானால், கர்மமாலிகா யோகம் என அழைக்கப்படும். இதுவும் ஒரு சுப யோகமே. நன்மதிப்புள்ளவராகவும், வெற்றிகரமான வாழ்க்கையை உடையவராகவும் இருப்பர்.

பதினொன்றாம் இடத்திலிருந்து ஆரம்பமானால், அது லாபமாலிகா யோகம் என்று அழைக்கப்படும். இது வெற்றிகரமான வாழ்வினைக் கொடுக்கும்.

பன்னிரண்டாம் இடத்தில் இருந்து ஆரம்பமானால், அது விரையமாலிகா யோகம் என்று அழைக்கப்படும். இது இருப்பினும் நல் வாழ்க்கை அமையும்.

இவ்வாறு ஒவ்வொறு வீட்டிலிருந்து ஆரம்பமாகும் யோகங்களும் நன்மை அல்லது தீமையைக் கொடுக்கின்றன. இந்த கிரகமாலிகா யோகம் அமையப்பெற்ற ஜாதகத்தைக் காண்பது அரிது

No comments:

Post a Comment