"எந்த நட்சத்திரத்தில் எந்த
சுப காரியம் செய்யலாம்"?
1அசுவினி:அஸ்வினி நட்சத்திரத்தில் சூரிய பகவானை வணங்கி விட்டு தன்னை விடஉயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை, சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும்.
2மிருகசீரிஷம்:இந்த நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனங்கள் வாங்கினால் விருத்தியாகும்.நன்மை உண்டாகும், மாடு, குதிரை, மற்ற கால்நடை வாகனங்கள் வாங்குவதற்கும், இது சிறந்த நட்சத்திரமாகும்.
3அஸ்தம்:அஸ்த நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கிவிட்டு, பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனே நிச்சயமாகும்.தங்கம் வாங்குவதற்க்கும் உகந்த நட்சத்திரம் ஆகும்.கிருஷ்ணர்
அஸ்த நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கிவிட்டு சத்தியபாமாவைபெண் பார்க்கச் சென்றாராம், இதனாலேயே சத்தியபாமாவைத்தடங்களின்றி மணந்தாராம்.
4அனுஷம் :அனுஷ நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள், தளவாட சாமான்கள், அச்சு இயந்திரங்களை வாங்கினால், அவைகள் பலவிதமாகப் பெருகி தொழிலை நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5திருவோணம்:திருவோண நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம், நிலம் வாங்குவதற்கும் இந்த விதி பொருந்தும்.
6அவிட்டம் :அவிட்ட நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துகள் நேராது விபத்துக்கள் ஏற்பட்டாலும் கூட அவைகளிலிருந்து காயமின்றி தப்பலாம்.
7பூசம் :பூச நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதற்கும் இந்த விதி பொருந்தும்.
8புனர்பூசம்:மருத்துவர்கள் புனர்பூசம் நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தாள்( கைராசிக்காரர்)என்ற பெயரை எளிதில் பெற்று விடலாம்.உங்களைத். தேடி வரும் நோயாளிகள் பூரண குணமடைந்து உங்களை வாயாரப் புகழ்வர்.அறுவை சிகிச்சைகள் வெற்றியைத் தரும்
மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி அர்ச்சனை செய்து வந்தால் படிப்பறிவு அதிகமாக வளரும்.
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.வேலைக்கான தேர்வு எழுதுபவர்கள் இவ்வாறு செய்து வந்தால் தேர்வுகளில் எளிதாக வெற்றி கிடைக்கும்.
9மூலம் :மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களுள் மூல நட்சத்திரம் உத்தமமான நட்சத்திரமாகும்.இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கிவிட்டு மேற்கொள்ளும் பயணம் யாவும் வெற்றியை தரும். நன்றி
No comments:
Post a Comment