jaga flash news

Wednesday, 4 November 2020

யாருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்?

யாருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்?

லக்னம் ஜாதகரையும், எட்டாம் இடம் வெளிநாட்டு வாழ்வையும், ஓன்பதாம் இடம் தூர தேச பிராயணத்தையும், பன்னிரண்டாம் இடம் பிரிது இடத்தை நாடி செல்வதையும் குறிக்கும். 

சந்திரன் கரைகடப்பதற்கும், சுக்கிரன் வெளிநாட்டு வாழ்க்கைக்கு காரகனுமாவார். ராகு வெளிநாட்டு ஆசை தூண்டவும் செய்யும்.

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நீர் ராசிகள் வெளிநாட்டு பயணத்தை காட்டும்.

லக்னாதிபதியை விட எட்டாம் அதிபதி வலு பெற்றால் வெளிநாட்டு வாழ்க்கை.

லக்னத்திற்கு எட்டாம் ஒன்பதாம் பன்னிரண்டாம் அதிபதி லக்னாதிபதியுடன் கூடியோ, லக்னாதிபதி லக்னத்திற்கு எட்டு ஒன்பது பன்னிரண்டில் நின்றோ,
லக்னத்தில் எட்டாம் ஓன்பதாம் பன்னிரண்டாம் அதிபதிகள் நின்றோ சுக்கிரன் சேர்க்கை பார்வை கிடைக்க பெற்றால், ஜாதகர் வெளிநாட்டு குடியுரிமை பெறுவார்.

லக்னாதிபதியுடன் சந்திரன் கூடியோ லக்னாதிபதி சந்திரன் சாரத்தில் 8,9,12ம் வீட்டில் நின்றாலோ அந்த அதிபதிகளுடன் சேர்ந்தாலோ அவ்வதிபதிகளின் பார்வை பெற்றாலோ வெளிநாட்டு வாழ்க்கை வாழ்வர்.

லக்னாதிபதி நீர் ராசிகளான கடகம் விருச்சிகம் மீனத்தில் நின்று 8,9,12ம் இடத்தின் தொடர்பை பெற்றாலும் சந்திரன் சுக்கிரன் தொடர்பு பெற்றாலும் வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். 

ராகு 8,9,12ம் வீடுகளில் நின்றோ அவ்வதிபதிகளின் தொடர்புடன் லக்ன லக்னாதிபதியையும் சுக்கிரனையோ சந்திரனையோ நீர் ராசிகளையோ தொடர்பு பெற்றால் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார். ஸ்தான அதிபதியின் வலுவை பொருத்து வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்வார். 

லக்ன ராசிக்கு ஐந்தில் கேது நிற்பினும் ஐந்தாம் அதிபதி கேது தொடர்பில் நிற்பினும் சொந்த ஊரில் வசிக்க முடியாது.

லக்ன ராசியதிபதி கேதுவுடன் சேர்ந்தாலோ சாரம் பெற்றாலோ தாய் நாட்டில் வசிக்க மாட்டார்.


No comments:

Post a Comment