jaga flash news

Tuesday, 26 November 2024

நெல்லிக்காயுடன் 1 துண்டு வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

 உடல்நலம் தினமும் 1 நெல்லிக்காயுடன் 1 துண்டு வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? 

தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். இதனால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு பழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பலர் காலையில் வேளையில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள், பானங்கள் போன்றவற்றை எடுத்து வருகின்றனர். தற்போது குளிர்காலம் என்பதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது நல்லது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல உணவுகள் இருந்தாலும், நெல்லிக்காய் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. கூடுதலாக நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியவற்றுடன், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. இப்படிப்பட்ட நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இந்த நெல்லிக்காயை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், அதுவும் வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? அதுவும் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு துண்டு நெல்லிக்காயுடன் 1 துண்டு வெல்லத்தை சேர்த்து உட்கொண்டு வரும் போது, ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். இப்போது ஒரு துண்டு நெல்லிக்காயுடன் 1 துண்டு வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம். நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதற்கு நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி தான் காரணம். அதுவும் இந்த நெல்லிக்காயை வெல்லத்துடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்படும். செரிமானம் மேம்படும் நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து உட்கொண்டால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். ஏனெனில் நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது குடலியக்கத்தை சீராக்குவதோடு, மலச்சிக்கலைத் தடுக்கும். எனவே செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், அதிலிருந்து உடனடி நிவாரணத்தைப் பெற விரும்பினால், நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து உட்கொள்ளுங்கள். சரும ஆரோக்கியம் மேம்படும் தினமும் நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து உட்கொண்டு வந்தால், அது சருமத்தில் பல அதிசயங்களை ஏற்படுத்தும். ஏனெனில் நெல்லிக்காயில் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை சருமம் விரைவில் முதுமை அடைவதையும், சருமம் சேதமடைவதையும் தடுக்கும். அதேப் போல் வெல்லம் சருமத்தின் நீரேற்றம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உதவுகிறது. எனவே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காயுடன், வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். ஆற்றல் மேம்படும் காலையில் எழுந்ததும் நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது உடலின் ஆற்றலை மேம்படுத்தும். நீங்கள் மிகுந்த உடல் சோர்வை சந்தித்து வந்தால், நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடும் போது, உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும். உடல் எடை குறையும் நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், நெல்லிக்காய் மற்றும் வெல்லத்தை உட்கொண்டு வாருங்கள். இதன் மூலம் உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, உடலில் இருந்து அதிகப்படியான கலோரிகளும் கரையும். ஆகவே எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், அது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். 

No comments:

Post a Comment