jaga flash news

Friday, 29 November 2024

20 வருடங்களில் ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவாக இருக்கும்?பணவீக்கம் என்றால் என்ன?

இன்னும் 20 வருடங்களில் ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவாக இருக்கும்? அதிர்ச்சி அளிக்கும் பணவீக்கம்!
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 500 ரூபாயை வைத்து 1 வருடத்திற்கு முன்பு வாங்கிய பொருட்களில் பாதியை கூட தற்போது வாங்க முடியாது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் தொடர்ச்சியான உயர்வு தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பணத்தின் வாங்கும் சக்தி சீராக குறைந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தப் பதிவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று பார்ப்போம். பணவீக்கம் என்றால் என்ன?: பணவீக்கம் என்பது பணத்தின் வாங்கும் சக்தி குறைவதைக் குறிக்கிறது. அதாவது முன்பு நீங்கள் வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டின் விலை இன்றும் அதே விலையில் இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். உற்பத்தி செலவு, பிற செலவுகள் காரணமாக ஒரு பொருளின் விலை அதிகரித்து பணத்தின் மதிப்பு குறைவதே பணவீக்கம். சிலர் ஓய்வு பெறுவதற்காக ரூ.1 கோடி சேமிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இன்றைய ரூ.1 கோடியின் மதிப்பு பிற்காலத்திலும் அதே போல இருக்கும் என்று கூறி விட முடியாது. பணவீக்கம் தொடர்ந்து 6 சதவீத அதிகரிப்பில் உயர்ந்து வருகிறது. எனவே அடுத்த 20, 30 மற்றும் 50 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு இன்றைய மதிப்பை விட குறைவாக தான் இருக்கும்20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு?: இன்றிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து ரூ.1 கோடி ரூபாய் வெறும் ரூ.31.18 லட்சம் ஆகக் குறையும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு?: இன்றிலிருந்து 30 ஆண்டுகள் கழித்து ரூ.1 கோடி ரூபாயின் மதிப்பு இன்னும் அதிகமாகக் குறையும். அப்போது ரூ.1 கோடியின் வாங்கும் திறன் ரூ.17.41 லட்சம் ஆக மட்டுமே இருக்கும். இந்த தியரி உங்களுக்கு..!! " 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கொடியின் மதிப்பு எவ்வளவு?: இன்றிலிருந்து 50 ஆண்டுகள் கழித்து பணவீக்கத்தின் தாக்கம் என்னும் ஆழமாக மாறி இருக்கும். அதாவது ரூ.1 கோடி வெறும் 5.43 லட்சம் ஆக மட்டுமே இருக்கும். பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் வாங்கும் சக்தியை எவ்வாறு குறைக்கிறது என்பதை இதை வைத்து தெரிந்து கொண்டோம். ரூ.1 கோடி ரூபாயை குவிப்பது பார்ப்பதற்கு என்னவோ நல்ல இலக்காக தோன்றலாம். ஆனால் நீண்ட கால நிதி இலக்குகளுக்காக சேமிக்கும் போது பண வீக்கத்தையும் மனதில் கொண்டு திட்டமிட வேண்டும். 

No comments:

Post a Comment