jaga flash news

Friday, 29 November 2024

மேஷம் ராசி குணாதியங்கள்


மேஷம் ராசிக்காரருக்கு மூக்குக்கு மேல கோவம் வருமாமே? அன்புக்கு அடங்கிவிடும் மேஷ ராசியின் பெஸ்ட் குணம்
ரிஸ்க் எடுப்பதையெல்லாம் ரஸ்க் போல சாப்பிடக்கூடியவர்கள் மேஷம் ராசிக்காரர்கள்.. ஆனால், இவர்களுக்கு மூக்குக்கு மேல கோவம் வருமாம்.. அன்பு செலுத்துவதில் இவரை மிஞ்சிட வேறு யாருமே கிடையாது என்று சொல்லக்கூடியவர்கள் மேஷம் ராசியினர்.. அவர்களின் வேறு பொதுப்பண்புகள் என்னென்ன தெரியுமா?

மேஷ ராசிக்காரர்கள், எங்கும் எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள்.. இதற்காக ரிஸ்க் எடுக்கவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சிலசமயம், இந்த ரிஸ்க், இவருக்கே பலவீனமாகிவிடும்.


spirituality
துணிச்சல்: துணிச்சல் நிறைந்தவர்கள் என்பால் எந்த முடிவையும் வேகமாக எடுத்து, செயல்படுவார்கள்.. அதேசமயம் தெளிவான முடிவை எடுக்க தெரியாது.. அப்படியே எடுத்தாலும் அந்த முடிவில் உறுதியாக இருக்க மாட்டார்களாம். எங்கு அநீதி என்றாலும், இவர்களுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்துவிடுவாம். தவறுகளை தட்டிக்கேட்பார்கள்.. இந்த கோபம்தான் மேஷம் ராசியினரின் பலமும் + பலவீனமும்.

தன்னை பற்றியே நினைக்காமல், பொதுநலனிலும் அக்கறை உள்ளவர்கள். அதனால் இவர்களை சுற்றி எப்போதும் நண்பர் கூட்டம் இருக்கும். இவர்களின் முன்கோபத்திலும் நியாயம் உண்டு என்பதை புரிந்து கொள்பவர்கள் மட்டுமே, மேஷ ராசியினரிடம் நெருங்கி பழக முடியும். மேஷ ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் என்பதால், அசுர வளர்ச்சியை விரும்பாமல், நிதானமாக முன்னுக்கு வரவேண்டும் என்று நம்புபவர்கள். எந்நேரமும் சுறுசுறுப்பாகவே இருப்பார்கள்..

துரோகம்: தான் விரும்பும் காரியத்தை முடிப்பதில் அதிக கவனமுடன் இருப்பார்கள். யாராக இருந்தாலும், அவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள்... ஆனால், தனக்கு எதிராக துரோகம் இழைத்துவிட்டால், அவர்களை எந்த காலத்திலும் மன்னிக்கவும் மாட்டார்கள், அவர்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.


மேஷ ராசிகாரர்கள் இயற்கையை ரசிக்கக்கூடியவர்கள்.. மேஷ ராசிகாரர்கள் நகைச்சுவை உணர்வு அதிகம்.. பெண்களை உயர்வாக மதிக்கக்கூடியவர்கள்.. ஆபத்துகளில் பெண்களுக்கு உதவக்கூடியவர்கள்.. மேஷ ராசிக்காரர்களுக்கு மனைவியாக வருபவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.. காரணம், எப்போதுமே மேஷ ராசியினர், தன்னுடைய குடும்பத்தின் நலனில் அக்கறை எடுத்து கொள்வார்கள்.. குடும்பத்தை பற்றியே இவர்களது சிந்தனை இருக்கும்.

சேமிப்பு இருக்காது: கூட்டுக்குடும்பத்தின்மீது அதிக நம்பிக்கை உள்ளவர்கள்.. ஆனால், அதிகமாக சம்பாதித்தாலும் சேமிப்பு பெரிதாக இவர்களிடம் இருக்காது. பூர்வீக சொத்து கிடைத்தாலும் அதை வாங்க மறுத்து விடுவார்களாம்.. வாழ்க்கையில் 28 வயதுக்குமேல் படிப்படியாக முன்னுக்கு வருவார்கள். ஆனால், 45 வயதுக்குமேல்தான் சாதனைகளை செய்வார்கள்.


காவல்துறை, ராணுவம், விளையாட்டு, பொறியியல் துறைகளில் இருப்பார்கள்.. அல்லது இரும்பு தொடர்பான தொழிற்சாலை, செங்கல்சூளை, மண்பாண்டம், சுரங்கத்தொழில், ஆயுதம் தயாரித்து விற்பனை செய்தல், சமையல் கலை, பூமி தொழில், விவசாயம் போன்றவைகளில் ஈடுபடுவார்கள்..

நரம்பு தொந்தரவு: பெரும்பாலும், மேஷ ராசிக்காரர்களை நரம்பு பிரச்சினை பாதிக்கும்.. கீரை வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். தண்ணீரில் கண்டம் உண்டு. வெளிநாடு வெளியூர் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இரக்க சுவாபம் நிறைந்திருப்பதால், மேஷராசிக்காரரை பலரும் ஏமாற்றிவிடக்கூடும்.. அதனால், விழிப்புடன் இருக்க வேண்டுமாம்.

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், சிவப்பு நிறம் தொடர்பான பொருள்களை வைத்து கொள்ளலாம். மலை, மலை சார்ந்த இடங்களில் பணியாற்றக்கூடிய இடங்களாகும்... வணங்க வேண்டிய தெய்வம் முருகன்..

மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்கள் அமைதியானவர்கள்.. ஒழுக்கமானவர்கள்.. மனித நேயம் கொண்டவர்கள்.. இரக்கம், மனித நேயம் உடையவர்கள்.. சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.. தர்மத்திலும் தலை சிறந்தவர்கள்.. மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டுபவர்கள்.. பொறுமையாக முன்னுக்கு வருபவர்கள்.. வாழ்க்கை பற்றிய தனி சித்தாந்தத்தை வகுத்து அதன்படி அறநெறியில் வாழ்பவர்கள்.


No comments:

Post a Comment