காய்கறிகளை பாம்பு கடித்தால் அது விஷமாக மாறுமா! அதை தெரியாமல் சாப்பிட்டால் நமக்கு என்னவாகும்?
காய்கறிகள் விவசாய நிலத்தில் இருந்து பலரது கை மாறி நமக்கு வருகிறது. இப்படிப் பல கிமீ தூரம் பயணித்து வரும் போது ஒரு வேளை பாம்பு அந்த காய்கறியைக் கடித்து இருந்தால் என்னவாகும்? அப்போது அந்த காய்கறியும் விஷமாக மாறி இருக்குமா.. அதைச் சாப்பிட்டால் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி சிலருக்கு வரலாம். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
நமது உணவில் எப்போதும் தவிர்க்க முடியாத ஒன்று காய்கறிகள்.. விவசாயிகள் உற்பத்தி செய்யும் இந்த காய்கறிகள், பல கிமீ பயணித்து வியாபாரிகளின் கை மாறி தான் நமக்கு வருகிறது.
காய்கறி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வருகிறது. உடலைச் சத்தாக வைத்துக் கொள்ள விரும்பினால், நாம் சாதத்தைக் குறைத்துக் கொண்டு காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுவே நமது உடலுக்கு நல்லது.
இப்படிப் பல கிமீ பயணித்து வரும் காய்கறியை ஒரு வேளை பாம்பு அந்த காய்கறியைக் கடித்து இருந்தால் என்னவாகும்? அப்போது அந்த காய்கறியும் விஷமாக மாறி இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம்.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
பாம்பு கடித்தால் என்ன செய்யலாம்! என்ன செய்ய கூடாது? சினிமாவை பார்த்து இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க
பாம்பு கடித்தால் என்ன செய்யலாம்! என்ன செய்ய கூடாது? சினிமாவை பார்த்து இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க
பாம்பு: முதல் கேள்வி- பாம்பு காய்கறிகளைச் சாப்பிடுமா.. பாம்பு பொதுவாக எலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை வேட்டையாடியே சாப்பிடும். அவை காய்கறிகளைச் சாப்பிடாது. சில எதிர்பாராத நேரங்களில் காய்கறிகளை அடு கடித்துவிடும் சூழல் ஏற்படலாம். இது தொடர்பான வீடியோவை கூட நம்மில் பலரும் பார்த்து இருப்போம். அப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான விடையை நாம் பார்க்கலாம்.
காய்கறியோ, பழங்களோ அது பாதி தின்றது போல அல்லது கடிக்கப்பட்டு இருந்தால் அதைப் பயன்படுத்தக்கூடாது. பாம்புக் கடிக்காக இதைச் சொல்லவில்லை.. வௌவால்கள் தான் பொதுவாக இதுபோல செய்யும். இப்படி இருக்கும் காய்கறிகளைச் சாப்பிட்டால் கொரோனா, நிபா வைரஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும்.
என்ன நடக்கும்: சரி, பாம்பு மேட்டருக்கு வருவோம்.. நமது காய்கறிகளைப் பாம்பு கடித்து இருந்தால் என்ன ஆகும். ஒன்றுமே ஆகாது என்பதே பதில்.. ஏனென்றால் பாம்பின் விஷம் என்பது நமது ரத்த ஓட்டத்தில் கலந்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும். மேலும், பாம்பின் விஷம் உயிருள்ள ஒரு விலங்கு அல்லது மனதினுக்குள் நுழைந்து ரத்த ஓட்டத்தில் கலந்தால் மட்டுமே ஆபத்து. காய்கறியில் அதன் விஷம் இறங்கினால், கொஞ்ச நேரத்திலேயே டிஆக்டிவேட் ஆகிவிடும் என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வயிறு பெரிசா இருந்தால் அது தொப்பைனு நினைச்சு அசால்ட்டா விடாதீங்க.. 12 ஆண்டுகள் வளர்ந்த கேன்சர் கட்டி
வயிறு பெரிசா இருந்தால் அது தொப்பைனு நினைச்சு அசால்ட்டா விடாதீங்க.. 12 ஆண்டுகள் வளர்ந்த கேன்சர் கட்டி
பாம்பின் விஷம் ரத்த ஓட்டத்தில் கலக்கும் போது மட்டுமே அது நமது இதயம், மூளை உள்ளிட்ட உறுப்புகளை அடையும். நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். அதேநேரம் பாம்பின் விஷத்தைச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் அது நேரடியாகக் குடலுக்குச் செல்லும். அங்கு வழக்கம் போல ஜீரணமாகத் தொடங்கிவிடும். மற்ற உணவுகளில் இருக்கும் புரதத்தைப் போலவே பாம்பின் விஷத்தில் இருக்கும் புரதத்தையும் நமது செரிமான அமைப்பு உடைக்க தொடங்கிவிடும்.
ஆபத்தா: அதாவது பாம்பு விஷத்தைக் குடித்தால் கூட அது ஜீரணமாகிவிடும். ஆனால், நமது வாய், தொண்டையில் புண், வயிற்றில் அல்சர் இருந்தால் அதன் வழியாகப் பாம்பின் விஷம் ரத்தத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது. இதன் காரணமாகவே பாம்பின் விஷத்தை குடிக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். அதேநேரம் காய்கறிகளைப் பாம்பு படித்து இருந்தாலும், அது பிரச்சினை இல்லை. அந்த விஷம் நம்மைத் தாக்காது. எனவே, இந்த அச்சம் உங்களுக்குத் தேவையில்லை.
No comments:
Post a Comment