jaga flash news

Thursday, 21 November 2024

கோழியிறைச்சியில் வேண்டிய பாகங்கள் எது தெரியுமா?

 கோழியிறைச்சியில்  வேண்டிய பாகங்கள் எது தெரியுமா? கோழிக்கறி ஆபத்து?
கோழிக்கறியில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், அனைத்து பாகங்களுமே நன்மை தரக்கூடியவை இல்லை என்கிறார்கள்.. சிக்கன் வாங்கும்போது, சில பாகங்களை தவிர்த்துவிட்டு வாங்க சொல்கிறார்கள்.. அந்தவகையில், தவிர்க்க வேண்டிய பாகங்கள் எது தெரியுமா?


சிக்கனை பொறுத்தவரை, நிறைய புரோட்டீன் நிறைந்துள்ளன.. உடலுக்கு தேவையான அதிக ஆற்றலை கோழிக்கறி தருகின்றன.. எளிதில் ஜீரணமாகக்கூடியதாகவும், உடலுக்கு வலு தரக்கூடியதாகவும் சிக்கன் உள்ளன.


உயிரை பறித்த சிக்கன்? மதுரை அருகே அதிக கோழிக்கறி சாப்பிட்ட தந்தை, மகள்.. அடுத்தடுத்து மரணம் 

சத்துக்கள்: வைட்டமின்B, நியாசின் புற்றுநோய், பிற வகை மரபணு (DNA) சேதத்திலிருந்தும் இந்த கோழிக்கறி பாதுகாக்க செய்கிறது. மேலும், பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் இந்த கறியில் அதிகமாக உள்ளன. இதனால் எலும்புகள், பற்கள் உறுதியாக வைத்திருக்க முடியும்.. சிக்கனிலுள்ள அத்தியாவசிய தாதுக்கள், சிறுநீரகம், கல்லீரல், மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை வெகுவாக ஆதரிக்க செய்கிறது..


இத்தனை நன்மைகள் இருந்தாலும்கூட, சிக்கன் முழு ஆரோக்கியமானதா என்பது உறுதியாக தெரியவில்லை.. பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால், உடல் பருமன் வந்துவிடக்கூடிய சூழல் அதிகம் என்கிறார்கள். சிக்கனிலுள்ள அதிகப்படியான புரோட்டீன்கள், கொழுப்பாக மாறி உடலில் தேங்க துவங்கிவிடும். இதுவே உடல் எடை பெருகவும், தமனிகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் ரத்த ஓட்டத்தை இது தடுக்கவும் காரணமாகிவிடுகிறது.

பாக்டீரியாக்கள்: சில வகை கோழிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடுவதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, சிக்கனில் அனைத்து பாகங்களுமே உண்ணக்கூடியவதில்லை என்றும், சில பாகங்களை தவிர்த்துவிடவும் சொல்கிறார்கள்.

குறிப்பாக, சிக்கனின் கழுத்து பகுதியை தவிர்க்க வேண்டுமாம். காரணம், இந்த கோழியின் கழுத்தில், நச்சுக் கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் உள்ளன. எனவே, இந்த கழுத்துப் பகுதியை அடிக்கடி சமைத்து சாப்பிடும்போது, அது புற்றுநோயின் அபாயத்தை பெருக செய்துவிடுமாம். எனவே, கோழி வாங்கும்போது, கழுத்து பகுதியை நீக்கிவிட்டே வாங்கவேண்டும்.


நச்சுப்பொருட்கள்: சிக்கனின் நுரையீரலிலும், சிக்கன் தலை, சிக்கன் குடல் போன்றவற்றிலும், நிறைய பாக்டீரியாக்களும், நச்சுப்பொருட்களும், கிருமிகளும் பொதிந்திருக்கும்.. இவைகளை எவ்வளவுதான் சுடுநீரில் கழுவினாலும், நன்றாக வேகவைத்து சமைத்தாலும்கூட, அவை நீங்குவதில்லை. எனவே, இவைகளை அடிக்கடி சாப்பிடும்போது, உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்துவிடும்..

கோழியின் கால்களில் நிறைய ஹார்மோன்கள் உள்ளன.. இந்த ஹார்மோன்களை நம்முடைய உடலில் அதிகம் சேரவிடக்கூடாது.. அதேசமயம் கொலாஜன் சத்துக்கள் கால்களில் உள்ளதால் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளலாம்..

 கோழிக்கறியில் உள்ள சர்ப்ரைஸ்.. நலன் தரும் சிக்கனை விட்றாதீங்க"
ஒட்டுண்ணிகள்: அதிலும் சிக்கன் தோலில், ஏகப்பட்ட கொழுப்புக்களும், கிருமிகளும், ஒட்டுண்ணிகளும் இருக்கும். எனவே, தோலை நீக்கிவிட்டு சிக்கன் வாங்கினால் ஆரோக்கியம் கூடும் என்கிறார்கள்.


கோழி தோலில் 32 சதவீதம் கொழுப்பு உள்ளதாம்.. அதாவது 100 கிராம் கோழித் தோலில், அதில் 32 கிராம் கொழுப்பு உள்ளதாக அர்ஜென்டினாவில் உள்ள இறைச்சி ஊட்டச்சத்து தகவல் மையத்தின் ஊட்டச்சத்து நிபுணர் மரியா டோலோரஸ் பெர்னாண்டஸ் பசோஸ் தெரிவித்துள்ளார்.. எனவே, கோழியை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால், கலோரிகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துவிடுமாம்.

கலோரிகள்: கோழியின் தோலை உண்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. USDA இன் ஆராய்ச்சியின் படி, தோலை நீக்கி சமைத்த ஒரு கப் கோழியில் 231 கலோரிகள் உள்ளன, அதே சமயம் தோல் நீக்காமல் சமைக்கப்பட்ட கப் கோழியில் 276 கலோரிகள் உள்ளன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கறியை முடிந்தவரை எண்ணெய்யில் போட்டு வறுத்து எடுக்காமல், அவித்து சாப்பிட்டால் தேவையற்ற எல்டிஎல் கொழுப்பு குறைந்துவிடுகிறது.. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. உப்பு போட்டு கோழிக்கறியை அவித்து சாப்பிடுவது உடலுக்கும் இதயத்துக்கும் ஆரோக்கியத்தை தருகின்றன.. அல்லது மிளகு சேர்த்து சூப் போல வைத்து குடிப்பதாலும், கிரில் செய்து சாப்பிட்டாலும் கோழிக்கறியின் சத்துக்கள் வீணாகாது என்கிறார்கள்.

No comments:

Post a Comment