jaga flash news

Friday, 29 November 2024

ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன?

 

ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன?


ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன?
ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன? 
 மூலம் அ சூசை பிரகாசம்  2022-06-15 11:02:34
ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன?
பிறந்த விண்மீனை கொண்டு, ஜாதகரின் ராசிபலன் பார்ப்பதையே ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்று மூன்று வகையாக விண்மீன்களை தொகுத்து கூறுகின்றனர்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, வடமொழிச் சொற்களை ஆருடம் கணிப்பதில் பயன்படுத்துவது ஏனெனில், தமிழர்களாகிய நமக்கு அது தெளிவாக புரிந்து விடக் கூடாது அல்லது நாம் கற்று விடக் கூடாது என்பதன் அடிப்படை நோக்கம் கொண்டே.

தமிழர்களாகிய நாம் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் - ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் தமிழில் என்ன பொருள் படுகிறது என பார்க்கலாம்.

பிறப்பு என்கிற தமிழ் சொல்லுக்கான வடமொழிச்சொல் ஜென்மம். இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரை, இங்கே ஜென்மம் என்பது "முதல் நிலை விண்மீன்" என பொருள்படுகிறது.   தாரா - தாரை என்பதற்கு தமிழில் விண்மீன் என பொருள்.

அணு என்கிற வடமொழி சொல்லிற்கு "அடுத்தது" என தமிழில் பொருள்படுகிறது.  பிறந்த விண்மீனுக்கு அடுத்த நிலையில் உள்ள விண்மீன், "அடுத்த விண்மீன்" என பெயர் சூட்டப்படுகிறது - இதை அணு தாரா என அழைக்கிறார்கள்.

மூன்று என்ற தமிழ் சொல்லுக்கு, திரி என்ற வடமொழி சொல் பயன்படுகிறது.  அப்படியானால் திரிஜென்ம தாரா என்பதற்கு, தமிழில் "மூன்றாம் நிலை விண்மீன்" என பொருள்.

முதல் நிலை விண்மீன், அடுத்த விண்மீன், மூன்றாம் நிலை விண்மீன் ஆகிய 3 நிலைகள் குறித்து கீழே உள்ள பட்டியலின் மூலம் எளிதாக கற்கலாம்.

முதல்நிலை விண்மீன்களை கணிப்பதற்கு, பிறந்த விண்மீனை ஒன்றாம் விண்மீனாக கருதி, ஒன்பதாம் விண்மீன் வரை எண்ணி வந்தால், அவை முதல் நிலை விண்மீன்கள் (ஜென்மம்) குழுவில் இடம் பெறுகின்றன.

10வது விண்மீனில் இருந்து, 18வது விண்மீன் வரை எண்ணி வந்தால், அவை இரண்டாம்நிலை - அடுத்த நிலை விண்மீன்கள் (அணு ஜென்மம்) குழுவில் இடம் பெறுகின்றன.

19வது விண்மீனில் இருந்து 27வது விண்மீன் வரை எண்ணி வந்தால் அவை மூன்றாம் நிலை விண்மீன்கள் (திரி ஜென்மம்) குழுவில் இடம்பெறுகின்றன.

இவ்வாறு விண்மீன்களைப் குழுக்களாக பிரித்து பட்டியலிடும் பொழுது, பிறந்த விண்மீன்,  அடுத்த நிலை மற்றும் மூன்றாம் நிலை விண்மீன்களின் விண்மீன்களையும் ஒன்று என்கிற வரிசை எண்ணில் துவங்கி 9 வரை பட்டியலிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் அசுவினி விண்மீனில் பிறந்திருக்கிறார் என்றால், அதை ஒன்று என்றும், தொடர்ந்து வரிசையாக 2. பரணி 3. கிருத்திகை 4. ரோகிணி 5. மிருகசீரிடம் 6. திருவாதிரை 7. புனர்பூசம் 8. பூசம் 9. ஆயில்யம் என முதல் பட்டியலையும்,  அடுத்த விண்மீன் குழுவிற்கு வரிசையில் முதல் எண் மகம்,  2. பூரம் 3. உத்திரம் 4. அஸ்தம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. கேட்டை என்றும், மூன்றாம் நிலை விண்மீன் குழுவிற்கு வரிசையில் முதல் எண் மூலம், 2. பூராடம், 3. உத்திராடம், 4. திருவோணம், 5. அவிட்டம், 6. சதயம், 7.  பூரட்டாதி, 8. உத்திரட்டாதி, 9. ரேவதி என பட்டியலிட்டு கொண்டால், பலன் கணிப்பதற்கு எளிதாக இருக்கும்.

வரிசை எண் ஒன்றொன்றுக்கும் 3 விண்மீன்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.  இப்படி ஒரே வரிசை எண் கொண்ட விண்மீன்கள் மூன்று மூன்றாக குழு சேர்ந்துள்ளது.  

பட்டியலிலுள்ள வரிசை எண்கள் 1 - 9 ஆகிய நிலையில் உள்ள 6 விண்மீன்களும் நடுநிலையில் பலன்களைத் தருபவை.

பட்டியலிலுள்ள வரிசை எண்கள் 2 - 4 - 6 - 8 ஆகிய நிலையில் உள்ள 12 விண்மீன்களும் சிறப்பான பலன்களைத் தருபவை.

பட்டியலிலுள்ள வரிசை எண்கள் 3 - 5 - 7 ஆகிய நிலையில் உள்ள 9 விண்மீன்களும் நற்பயன்களை தராது.

வரிசை எண்ணின் படி ஒவ்வொரு 3 விண்மீன்களுக்கு என்ன பெயர்? அவை தரும் பலன் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்:

ஒன்றாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் ஜென்ம தாரா அதாவது பிறந்த விண்மீன்களின் வரிசை என பொருள் கொள்கிறது. இவை நற்செயல்கள் புரிவதற்கு ஏற்றவை அல்ல. இவை எவ்வித சிறந்த பலன்களையும் தராது.

இரண்டாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் சம்பத் தாரை எனப்படுகிறது.  அதாவது சொத்து - செழிப்பு - செல்வம் ஆகியவற்றை கணிப்பதற்கு பயன்படும் விண்மீன் குழு.

மூன்றாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் விபத்து தாரை என அழைக்கப்படுகிறது.  அதாவது, தீங்கான பலன்களைத் தரும் விண்மீன் குழு.

நான்காம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் ஷேம தாரை - அதாவது நலம் தரும் விண்மீன் குழு என அழைக்கப்படுகிறது.

ஐந்தாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் பிரத்யகு தாரை என அழைக்கப்படுகிறது.  பிரத்யகு என்கிற வடமொழிச்சொல் இருக்கு, தடங்கல் என பொருள்.  அதாவது இந்த விண்மீன்கள் தடங்கலை தரும்.

ஆறாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் சாதக தாரா - அதாவது ஏற்புடையதான, ஒத்து வரக்கூடியதான பலன்களை தரும் விண்மீன்கள் குழு.

ஏழாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் வத தாரை - அதாவது துன்பங்களை தரும் விண்மீன்கள் குழு என அழைக்கப்படுகிறது.

ஒன்பதாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் பரமை திர தாரை, அதாவது அன்பான, பற்றுள்ள, நட்பை ஏற்படுத்தக்கூடிய விண்மீன் குழு என அழைக்கப்படுகிறது.

இவ்வகையில் உள்ள பெயர்ச்சொல்களிலிருந்து, விண்மீன்கள் எத்தகைய பலன்களை தரும் என்பது குறித்து புரிந்து கொள்ளலாம்.

குறிப்பு:  விண்மீன்களை வரிசைப்படுத்தும் பொழுது அவற்றின் பாதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.



No comments:

Post a Comment