அதிர்ஷ்டம் இப்படிகூட அடிக்கும்.. கல் உப்பு, பச்சை கற்பூரம் இருக்கா? அப்ப பணம் கொட்டும்! செம பரிகாரம்
வீட்டிலுள்ள கஷ்டமும், வறுமையும் நீங்கி, பணம் தங்க வேண்டுமா? ஆரோக்கியம் நீடிக்க வேண்டுமா? கல்உப்பு, கற்பூரம் இருந்தாலே போதுமே.. இந்த 2 பொருட்களை வைத்து எளிய பரிகாரங்கள் செய்யும்போது, வீட்டிலுள்ள துன்பத்தை எளிதில் போக்கிடலாம் என்கிறார்கள். எப்படி தெரியுமா?
பெரும்பாலான குடும்பங்களில், தெரிந்தோ, தெரியாமலோ சில செயல்களை செய்துவிடுகிறார்கள். இதில் ஒருசில செயல்கள், நமக்கே எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதாவது அறியாமல் செய்யும் பிழைகளால், இப்படியான கஷ்டங்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது.
spirituality pariharam pachai karpooram
"குளியலறையில் இதை வைக்காதீங்க.. வீட்டில் வறுமை வந்துடுமாம்.. கழிவறை டைல்ஸ் இந்த கலர் இருக்கா பாருங்க "
பரிகாரங்கள்:
இத்தகைய சிக்கல்களை, எளிய பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.. ஏழ்மை, வறுமையை விரட்டி, பணவரவை உண்டுசெய்யும் பரிகாரங்கள் எண்ணற்ற இருந்தாலும், 2 வகையான பரிகாரங்களை இங்கே பார்ப்போம்.
கல் உப்புகள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.. இந்த கல் உப்பு எப்போதுமே நம்முடைய வீட்டில் இருக்க வேண்டும் என்பார்கள்.. காரணம், வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் கொண்டுவர செய்யும் அற்புத சக்தி இந்த உப்புக்கு இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, கல் உப்புக்கள் மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது.. எனவே, நேர்மறை ஆற்றலை அள்ளி தந்து, சகல செல்வங்களையும் வழங்கும் ஐஸ்வர்யமாக பார்க்கப்படுகிறது.
கல் உப்பு தீபம்:
இதற்கு கல் உப்பு தீபம் ஏற்றி வைக்கும்போது, குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும் என்பார்கள்.. எனவே, பௌர்ணமி நாட்களில் கல்உப்பு தீபம் ஏற்றி வரும்போது, தொழில் தடை, வருமான தடைகள் போன்றவை அடுத்த 48 நாட்களுக்குள் விலகிவிடுமாம்.
அதேபோல, ஒரு கண்ணாடி பாத்திரத்தில், கல் உப்பை போட்டு, அதனுள் எலுமிச்சம்பழத்தையும் போட வேண்டும். பிறகு 4 காய்ந்த மிளகாய்களையும், அந்த பாத்திரத்தின் 4 மூலைகளிலும் வைத்து, அதனை தலைவாசல் கதவின் உட்புறம் பகுதியில் வைத்துவிட வேண்டும். இந்த கல்உப்பு, மிளகாயின் கூர்மையான பகுதிகள், இவை இரண்டுமே எதிர்மறை சக்திகளை ஈர்த்துவிடக்கூடியவை...
உப்பு, மிளகாய்: எனவே, வாரம் ஒருமுறை இந்த உப்பு, மிளகாயை மாற்றிவிட புதிதாக வைக்க வேண்டும். பழைய உப்பு, மிளகாயை, ஓடும் நேரில் போட்டுவிட வேண்டும.
அதேபோல கற்பூரங்கள் சுவாச கோளாறுகளை குணப்படுத்தக்கூடியவை. கற்பூரத்தை வீட்டில் வைத்திருந்தாலே, அது காற்றில் பரவி நல்ல நறுமணத்தை தருவதோடு சுவாசத்திற்கும் ஆரோக்கியத்தை தரக்கூடியது.. பச்சைக்கற்பூரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரவல்லவை.. இதன் மணம் நேர்மறை எண்ணங்களை அதிகமாக்கி, நல்ல எண்ணங்கள் உணர்வுகள் மேலோங்கச் செய்யும்.
பச்சை கற்பூரம்:
எனவே, பச்சை கற்பூரத்தை வைத்து எளிய பரிகாரங்கள் செய்யலாம்.. ஒரு கிண்ணத்தில், பச்சை கற்பூரம், 4 கிராம்பு, 2 ஏலக்காய், அரை ஸ்பூன் சோம்பு என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். இந்த தட்டை பூஜை அறையின் தென் மேற்கு மூலையில் வைத்துவிட வேண்டும். இப்படி வைப்பதால், வீட்டிலுள்ள கஷ்டங்கள் குறையும் என்று நம்பப்படுகிறது.. அல்லது பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம்.
கடன் தொல்லை தீர்வதற்காக, நீங்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கும்போது, இப்படியொரு பச்சை கற்பூர பரிகாரத்தையும் செய்வதால், விரைவில் பலன் கிடைக்குமாம்.
Namaskaram Ayya Nandi
ReplyDeleteSwara Chakra Tamil keyboard Vendum
ReplyDeletePalaya Madhuri APK Tamil Swara Chakra
ReplyDelete