jaga flash news

Monday, 25 November 2024

4 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜபோக வாழ்க்கைக்கு அதிபதியாம்

இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜபோக வாழ்க்கைக்கு அதிபதியாம்... இவங்களுக்கு எதிரியே இருக்கமாட்டாங்க...! ஒருவரின் பிறந்த ராசி போலவே அவர்களின் பிறந்த நட்சத்திரமும் ஜோதிடத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஏனெனில் ஒருவரின் பிறந்த ராசியும் அவர்களைப் பற்றிய குறிப்பிட்ட குணாதிசயங்களை விளக்கக்கூடும். ஜோதிட சாஸ்திரத்தின் படி எந்த நெருக்கடியிலும் தலை நிமிர்ந்து நிற்பது, அதிபுத்திசாலித்தனம் மற்றும் உறுதியான மனம் போன்ற சிறந்த குணங்கள் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். 

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே ஒரு ராஜாவுக்கு உரிய குணங்கள் இருக்கும். எந்த ஒரு பிரச்சனையையும் தங்கள் புத்திசாலித்தனத்தால் தீர்க்கும் இவர்கள் அதிகாரத்தை எளிதில் கைப்பற்றும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

 அவர்கள் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதுக்கு பிறகு ராஜயோகம் வருமாம்...

 உங்க நட்சத்திரம் இதுல இருக்கா? " 

திருவாதிரை 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த பிறந்தவர்கள். அவர்கள் தங்கள் அறிவு மற்றும் திறமையால் யாரை வேண்டுமென்றாலும் வெல்ல முடியும். எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் அவர்கள் இருப்பார்கள். அதனால் அவர்கள் கையில்தான் எப்போதும் அதிகாரம் இருக்கும். ஒருவேளை இவர்கள் அரசியலுக்கு வந்தால் பிரகாசமாக ஜொலிக்கும் யோகம் உள்ளவர்கள். தமக்கு முன்னால் பொய் சொல்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற துளியும் தயங்க மாட்டார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் சொந்த திறமையால் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க முடியும்.

 உத்திரம்

 உத்திர நட்சத்திரக்காரர்கள் தாங்கள் நினைத்ததை சாதிக்கும் திறன் கொண்டவர்கள். புத்திசாலித்தனத்திலும் ஞானத்திலும் இவர்களை வெல்வது மிகவும் கடினம். அவர்கள் பணிபுரியும் அனைத்து துறைகளிலும் பிரகாசிக்க முடியும். இந்த நட்சத்திரங்கள் சொந்த வியாபாரத்தைத் தொடங்கினால் அதிலும் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். உத்திர நட்சத்திரக்காரர்கள் யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாமல் தங்கள் மனது சொல்வதை கேட்கும் பிடிவாதக்கார நட்சத்திரக்காரர்கள். " அவர்களைத் தாக்குபவர்கள் எப்போதும் தோல்வியைத்தான் சந்திப்பார்கள். அவர்கள் தங்கள் சொந்த நலன்களையும் விருப்பங்களையும் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் எப்போதும் அதிகரிக்கும். அவர்களின் அதீத புத்திசாலித்தனம், அவர்களுக்கு தகுந்த வெகுமதிகளை அளிக்கும்.

 மிருகசீரிஷம் 

புத்திசாலி நட்சத்திரங்களில் இவர்களுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இந்த நட்சத்திரக்காரர்கள் பணிவும், சிறப்பான பேச்சுத்திறனும் கொண்டவர்கள். எனவே இந்த நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களின் ஆதரவை முழுமையாக பெற முடியும். படிப்பில் இவர்கள் சிறப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நினைத்ததை சாதிக்கும் மனதைரியமும், திறமையும் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். 

இந்த நட்சத்திரக்காரர்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழும் யோகம் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பிற்கால வாழ்க்கை ராஜபோகமாக இருக்கும. தாங்கள் நுழையும் வீட்டிற்கும் செழிப்பைக் கொண்டுவரக்கூடிய நட்சத்திரங்கள் இவர்கள்.

 அஸ்வினி 

அஸ்வினி நட்சத்திரங்கள் அவர்கள் வேலை செய்யும் துறையில் துல்லியமான அறிவைக் கொண்டவர்கள். அவர்களின் புத்திக்கூர்மையால் எந்த ஒரு நெருக்கடியையும் மிக எளிதாக சமாளிக்கக் கூடியவர்கள் 


நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களை அவமதித்தவர்களை வட்டியோடு பழிவாங்கக் கூடியவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அவர்களின் சக்திவாய்ந்த ஆளுமை அவர்களுக்கு எதிரிகள் இல்லாத வாழ்க்கையைக் கொடுக்கிறது, அவர்கள் எதிரில் குரல் உயர்த்தி பேசவே அனைவரும் அஞ்சுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் மிகவும் அதிகாரம் வாய்ந்தவர்கள், ஆனால் அவர்கள் அனைத்தையும் நேர்மையாக செய்யக்கூடியவர்கள்.

No comments:

Post a Comment