jaga flash news

Friday, 10 July 2026

முதல் மூன்று விரல்களில் ரேகை பலன்


டைப்-1 உங்கள் விரல்களில் உள்ள கோடுகள் பெரும்பாலும் நேராக இருந்து, மோதிர விரல் ரேகை மட்டும் கீழிறங்கி இருந்தால், நீங்கள் மிகுந்த புத்திசாலி. கைரேகை சாஸ்திரத்தின் படி, நீங்கள் முடிவெடுக்கும் முன் ஆழ்ந்து சிந்திப்பீர்கள். எப்போதும் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டீர்கள். சூழ்நிலைகளை எப்போதும் கவனமாக ஆராய்வீர்கள். நீங்கள் எப்போதும் அமைதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேச ஆரம்பித்தால், அந்த பேச்சு அனைவரையும் யோசிக்க வைக்கும் படியும், மிகுந்த அர்த்தமுள்ளவையாகவும் இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்துகொள்ளும் உங்கள் திறனையும், மற்றவர்கள் காணாதவற்றைக் கவனிக்கும் உங்கள் திறனையும் சுற்றியிருப்பவர்கள் அடிக்கடி போற்றுவார்கள்.


டைப்-2 உங்கள் விரல்களில் உள்ள கோடுகள் நேராக இருந்தால், நீங்கள் நேர்மையானவர். உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பளிப்பவர். தெளிவான தகவல் பரிமாற்றத்தை விரும்புவீர்கள். எதையும் மறைத்து பேசமாட்டீர்கள். உங்களின் நேர்மையான குணத்தால், நண்பர்கள், உடன் வேலை செய்வோர், கூட்டாளி ஆகியோர் உங்களை அதிகமாக நம்புவார்கள். மொத்தத்தில் நீங்கள் நம்பிக்கைக்குரியவராக இருப்பீர்கள்.






டைப்-3 உங்கள் விரல்களில் உள்ள கோடுகள் மேலும் கீழுமாக இருந்தால், நீங்கள் இயல்பாகவே புத்திசாலியாகவும், விரைவில் சிந்தித்து செயல்படக்கூடியவராகவும் இருப்பீர்கள். மேலும் நீங்கள் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளும் திறனைக் கொண்டவர். பிரச்சனைகளைத் தீர்க்க புத்திசாலித்தனமான வழிகளையும் அடிக்கடி கண்டுபிடிப்பீர்கள். அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்யமாட்டீர்கள். உங்களின் மனம் வேகமாக செயல்படும்  




டைப்-4 உங்கள் விரல்களில் உள்ள கோடுகள் கீழ்-மேல்-கீழ் என்று இருந்தால், நீங்கள் மனவுறுதி மற்றும் வலுவான வெற்றி மனப்பான்மையை கொண்டிருப்பவர். எதையும் எளிதில் விட்டுக் கொடுக்காதவர். எவ்வளவு சவால்களை சந்தித்தாலும், தொடர்ந்து முன்னேறி செல்வீர்கள். போட்டி மனப்பான்மை கொண்டவர், உந்துதல் மிக்கவர், மேலும் உங்கள் இலக்குகளை அடைய ஊக்கமும் கொண்டவர்.



பரல்கள் 1 முதல் 10 ஆம் வீடுவரை

லக்னம் (1-ஆம் வீடு):

லக்னத்தில் அதிக பரல்கள் இருந்தால் ஜாதகர் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் ஈர்க்கும் தோற்றம் கொண்டிருப்பார்.

2-ஆம் வீடு:

இதில் அதிக பரல்கள் இருந்தால் தனவரவு, நல்ல குடும்பம், மற்றும் இனிய வாக்கு வன்மை உண்டாகும்.

4-ஆம் வீடு:

அதிக பரல்கள் தாய், பூமி, வீடு, வாகனம், மற்றும் மன அமைதி ஆகியவற்றின் சேர்க்கையைத் தரும்.

5-ஆம் வீடு:

புத்தி கூர்மை, குழந்தைகள் மூலம் பெருமை மற்றும் சிறந்த கல்வியைக் குறிக்கும்.

7-ஆம் வீடு:

லக்னத்தை விட 7-ல் பரல்கள் அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், சிறப்பான மண வாழ்க்கை மற்றும் மனைவி வழி ஆதாயம் கிடைக்கும்.

9 & 10-ஆம் வீடு:

இதில் அதிக பரல்கள் இருந்தால் தொழில், வியாபாரம், மற்றும் தந்தை வழி செல்வங்கள் சிறக்கும்

ஆயுள் பலம்: லக்னத்தில் உள்ள பரல்களை விட 8-ஆம் வீட்டில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் தீர்க்க ஆயுள்.போட்டி, பொறாமை:

லக்னத்து பரல்களை விட 6-ஆம் வீட்டில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் எதிரிகள் தொல்லை இருக்காது.

வாழ்க்கை முறை:

ஒருவர் தன் வாழ்நாளில் எந்தக் காலகட்டத்தில் அதிக ஏற்றம் பெறுவார் என்பதை சர்வ அஷ்டவர்க்க பலன்கள் துல்லியமாக உணர்த்துகின்றன.


Monday, 6 July 2026

ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி?



ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை ஜூலை 4-ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடியது. உலகின் பெரும்பகுதி நாடுகளால் ஏற்கப்பட்ட கரன்சியாக அமெரிக்க டாலர் மாறியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு கிடைத்திருக்கும், இந்த அங்கீகாரம், அந்நாட்டின் அரசியல் பரிணாம வளர்ச்சியை மட்டுமல்லாமல் அசாதாரண பொருளாதார ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

அமெரிக்க டாலர் என்பது அந்நாட்டின் தேசிய நாணயம் என்பதை விட வேறு பல முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளால், இருப்பு வைக்கப்படும் கரன்சியாக டாலர் மாறிவிட்டது. ஒரு நாட்டுக்கும், மற்றொரு நாட்டுக்கும் இடையே எல்லை கடந்த வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடத்தப்படுகிறது, உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்துக்கும் டாலர் ஆதாரமாக இருக்கிறது.

அமெரிக்காவில் காலணி ஆதிக்கம் முடிந்து சுதந்திரம் அடைந்தபின் 1792-ம் ஆண்டு நாணயச் சட்டம் இயற்றப்பட்டு, அமெரிக்க டாலர் அதிகாரபூர்வ கரன்சியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் இயற்றப்பட்டு சில பத்தாண்டுகள் வரை அமெரிக்க டாலர் என்பது அதன் எல்லைக்கு அப்பால் செல்லாமல், செல்வாக்கு பெறாமல்தான் இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் இப்போது டாலர் இருப்பதைப் போல உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்சியாக பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் இருந்தது. இது பிரிட்டனின் ஏகாதிபத்தியத்தையும், வர்த்தகத்தின் சக்தியையும் வெளிப்படுத்தியது.

திருப்புமுனை மாற்றம்

முதலாம் உலகப் போரின்போது 1914 மற்றும் 1918-ம் ஆண்டுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகள் உணவு, தொழிற் துறை பொருட்கள், ராணுவத் தளவாடங்கள், மூலப்பொருட்களை அமெரிக்காவிடம் வாங்கத் தொடங்கின. இதுதான் அமெரிக்கா வளர்வதற்கு முதல் காரணமாக அமைந்தது.


பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் அதிகமாக கொள்முதல் செய்ததால் மெதுவாக ஐரோப்பாவின் தங்கம் கையிருப்பு குறைந்தது. உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் லேவாதேவியாக இருந்த பிரிட்டனின் ஆதிக்கம் பலவீனமடைந்தது. உலகளாவிய நிதி மையத்தின் சமநிலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக அட்லாண்டிக் வரை பரவியது.

பிரிட்டன் தொடர்ந்து உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் தேசமாக இருந்தாலும், முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்து, உலக நாடுகளுக்கு தேவையான அளவு கடன் கொடுக்கும் நாடாக வளர்ந்தது. இந்த மாற்றம் 2-ம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய நிதி கட்டமைப்பின் மறுசீரமைப்புக்கு அடித்தளமிட்டது.

பிரெட்டன் உட்ஸ் மாநாடு ஏன் நடந்தது?

அமெரிக்காவின் நியூ ஹெமிஸ்பயர் மாகாணத்தில் உள்ள பிரெட்டன் உட்ஸ் நகரில் உள்ள மவுன்ட் வாஷிங்டன் ஹோட்டலில் 1944-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்த பிரெட்டன் உட்ஸ் (Bretton Woods Conference) மாநாடு நடந்தது. இதற்கு அமெரிக்க நிதி மற்றும் பணவியல் மாநாடு என்ற பெயரும் உண்டு. இந்த மாநாட்டில் 44 சார்பு நாடுகளும், அதன் 700 பிரிதிநிதிகளும் பங்கேற்றனர்.

2-ம் உலகப் போர் முடிந்திருந்த நிலையில், சர்வதேச நிதிச் சூழலை வலுவாகக் கட்டமைக்கவும், புதிய நிதிக் கட்டமைப்பை உருவாக்கவும் இந்த மாநாடு நடந்தது. உலக தங்க இருப்பில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வைத்திருந்ததால், இந்த மாநாட்டில் அமெரிக்காவின் கை ஓங்கி, வலுவான முடிவுகளை எடுத்தது. 2-ம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் பெரும் சேதத்தை எதிர்கொண்டிருந்ததால், அமெரிக்காவின் வார்த்தைகளும், முடிவுகளும்தான் மேலோங்கி இருந்தது.

மாநாட்டில் பங்கேற்ற ஒவ்வொரு நாடும் தங்கள் தேசத்துக்கு கரன்சியை தங்கத்துடன் நேரடித் தொடர்பு வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்கி, தங்கள் கரன்சியை அமெரிக்க டாலருடன் இணைக்க ஒப்புக்கொண்டன. அந்த நாடுகள் வைத்திருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 35 டாலர் நிலையான விலையில் தருவதாக அமெரிக்கா உறுதியளித்தது.


இந்த வசதி சர்வதேச நிதிச் சூழலை மறுக்கட்டமைப்பு செய்து, உலக பணவியல் முறையில் ‘டாலர்’ என்பது மையமாக மாறத் தொடங்கியது, சர்வதேச அளவில் தங்கத்துக்கு மாற்றாக டாலர் என்பது ‘லிக்விட் கரன்சி’யாக ஏற்கப்பட்டது.

சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்துக்கு அடித்தளமிட்டது இந்த பிரெட்டன் உட்ஸ் மாநாடுதான். இந்த மாநாடு நடந்து முடிந்து 80 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

நிக்ஸன் முடிவால் என்ன நடந்தது?

1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்காவின் அதிபராக இருந்த ரிச்சார்ட் நிக்ஸன் தொடர்ந்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுதான் ‘நிக்ஸன் ஷாக்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

டாலரை நேரடியாக தங்கமாக மாற்றும் திட்டத்தை அதிபர் நிக்ஸன் திடீரென தடை செய்து இன்று வரை நடைமுறையில் இருக்கும் ரிசர்வ் வங்கி கரன்சி வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

‘பெட்ரோடாலர்’ முறை

1974-ம் ஆண்டு சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்யவும் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஏற்பாடுதான் ‘பெட்ரோடாலர்’ முறை என அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தங்கத்தை சார்ந்திருப்பதற்கும், அதில் வர்த்தகம் நடப்பதற்குப் பதிலாக, டாலரில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதன்மூலம் டாலர் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தை வளர்த்துக் கொண்டது.



அமெரிக்க டாலரை முன்னிலையில் வைத்திருப்பது எது?

பிரெட்டன் உட்ஸ் மாநாடு, நிக்ஸன் ஷாக் முடிவுகளுக்குப் பின் அமெரிக்க டாலரை பல தசாப்தங்களாக வலுவாக வைத்திருக்க பல கட்டமைப்பு சார்ந்த விஷயங்கள் உதவுகின்றன. அவை:

முதலாவதாக, முதல் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட பணவியல் கட்டமைப்பு முக்கியக் காரணமாகும். 1971-ம் ஆண்டு பிரெட்டன் உட்ஸ் மாநாட்டுக்குப் பின், நிலையான நாணய மாற்று விகிதம் மறைந்துவிட்டது. ஆனால் , அதில் எடுக்கப்பட்ட பல முடிவுகள், உலக நாடுகள் தங்கள் பரிவர்த்தனைக்கு டாலரை சார்ந்திருக்குமாறு செய்ய ஊக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாவதாக, ‘பெட்ரோடாலர்’ சிஸ்டம் ஆகும். இது டாலருக்கான தேவையை செயற்கையாக அதிகரிக்கச் செய்தது. கச்சா எண்ணெய் வியாபாரம் டாலரில் நடந்ததால், எரிபொருள் சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது.

மூன்றாவதாக இன்றுள்ள நிதி அமைப்பாகும். அமெரிக்க முதலீட்டுச் சந்தை பரந்த, ஆழ்ந்ததாக இருப்பதால், ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கியும், முதலீட்டாளர்களும் எந்த சொத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பணப்புழக்கம் (லிக்குடிட்டி) முக்கியக் காரணமாகும். தங்கள் முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய அமெரிக்க சந்தை சரியான தேர்வாக இருக்கிறது.

நான்காவதாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் கையிருப்பில் அந்நியச் செலாவணியாக 60 சதவீதம் டாலரைத்தான் இருப்பாக வைத்துள்ளன. இது டாலருக்கான முக்கியத்துவத்தை அதிகரித்து வலுப்பெறச் செய்துள்ளது.

by TaboolaSponsored Links

அமெரிக்க சட்டங்கள் மீதான நம்பகத்தன்மை, வலுவான அரசியல் அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக திருத்திக்கொள்ளும் வசதி காரணமாகவே உலகளாவிய நிதி அமைப்புகள் சீராகச் செயல்படுகின்றன.

மகுடத்தை இனி தக்க வைக்குமா டாலர்?

அமெரிக்க டாலர் ஆதிக்கத்தைக் குறைக்க ‘வரும் ஆண்டுகளில் டாலர் பயன்பாட்டைக் குறைத்தல்’ என்ற குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் தங்கள் நாட்டு கரன்சியால் வர்த்தகம் செய்வது குறித்து ஆலோசிக்கின்றன.

பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட, அமெரிக்க டாலரின் வலிமை முன்பு இருந்ததைவிட சற்று குறைந்துள்ளது. 2000-ம் ஆண்டில் உலக நாடுகள் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் டாலரின் பங்கு 70% இருந்த நிலையில், தற்போது, 58 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அதற்காக உலகளவில் டாலரின் தாக்கம் குறைந்துவிட்டது என்று கருத முடியாது.

உலக நாடுகள் கையிருப்பில் டாலர் வைத்திருப்பது, டாலரில் கடன் பெறுவது, டாலரில் வர்த்தகம் நடைபெறுவது போன்ற முறைகள் இருக்கும் வரை டாலரின் தாக்கம் இருக்கும்.

அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட கரன்சியாக டாலர் மாறியிருப்பதும், நம்பகத்தன்மையான, வலிமையான கரன்சியாக டாலர் இருப்பதாலும், கச்சா எண்ணெய் வர்த்தகம் முழுமையாக டாலரில் நடப்பதாலும் டாலரின் மகுடம் இன்னும் பல தசாப்தங்களுக்கு இறங்க வாய்ப்பில்லை.


Thursday, 2 July 2026

பரல்கள் மூலம் இளமை, நடு முதுமை பருவம் பற்றி அறிந்து கொள்ள உதவும்



ஒரு ராசியில் 25 முதல் 30 பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோச்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலனையே கொடுக்கும்.

ஒரு ராசியில் 25க்கு குறைவாக பரல்கள் இருந்து, அந்த ராசியில் எந்த கிரகம் கோட்சார ரீதியாக சஞ்சரித்தாலும் தீயபலனையே கொடுக்கும்.

அதனால் லக்கினத்தில் இருந்து அடுத்தடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளுக்கும் பரல்களின் குறைந்த அளவு எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்று நமது முனிவர்கள் குறித்து வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

1. லக்கினம் 25

2ஆம் வீடு - 22

3ஆம் வீடு 29

4ஆம் வீடு 24

5ஆம் வீடு 25

6ஆம் வீடு 34

7ஆம் வீடு 19

8ஆம் வீடு 24

9ஆம் வீடு 29

10ஆம் வீடு 36

11ஆம் வீடு 54

12ஆம் வீடு 16

விளக்கம்: லக்கினத்தில் 25 பரல்கள் இருந்தால் போதும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் 2ஆம் வீட்டில் 22 பரல்கள் இருந்தாலே குடும்ப வாழ்க்கை அமையும்.

4ஆம் வீட்டில் 24 இருந்தாலே போதும் கல்வி கிடைக்கும். 28 பரல்கள் இல்லாமல் போய்விட்டதே என்று மனம் நொடிந்து போகாமல் இருப்பதற்காக, ஆராய்ந்து இதை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

10ஆம் வீட்டில் 36 பால்கள் என்பது

10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் சாத்தியமில்லை!

அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.

எல்லோருக்கும் எப்படியிருக்கும்? ஆகவே அதை வைத்து ஸீரியசாகி விடாதீர்கள் அங்கே 30 பரல்கள் இருந்தாலே போதும்.

அதே கதைதான் 11ஆம் வீட்டிற்கும்.

அங்கேயும் 30 பரல்கள் இருந்தாலே போதும்

உங்களுக்கு இந்தக் குறைந்த அளவு பரல்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.

இருந்தால் போதும் சந்தோஷமாக இருங்கள்!

வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்

இளமை, நடு வயது, முதுமை

இந்த மூன்று பிரிவில் எந்தப் பகுதி நமக்கு நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியுமா?
முடியும்!

உதாரணமாக மீன லக்கினம் எனில்

1. மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் -இந்த நான்கு ராசிகளின் கூட்டல் தொகை இளமைப் பருவம்

2.கடகம், சிம்மம், கன்னி, துலாம் -ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை நடு வயதுக் காலம்.

3.விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் -ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை

இதில் எந்தப் பருவத்தில் கூட்டல்தொகை அதிகமாக உள்ளதோ அந்தப் பருவம் தான் உங்கள் வாழ்வில் சிறப்பானதாக இருக்கும்

மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்

பதவி, பணம், புகழ், மகிழ்ச்சி எல்லாம் உண்டா என்பதற்கு 10ம் வீட்டைவிட 11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருக்க வேண்டும். ஆனால் 11ஆம் வீட்டை விட 12ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் இருக்க வேண்டும்.

ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால் கிடைத்தும் பயனில்லை -ஊற்றிக்கொண்டுவிடும்

10th house >11th house <12th house! = நல்லது!

10th house > 11th house >12th house = நல்லதல்ல

லக்கினத்தில் 30 பரல்கள் இருந்து, លក់ 4th or 10th or 11th அதிபதி உடன் சேர்ந்து இருந்தால் ஜாதகன் கலங்கரை விளக்கு போல (Light House) அனைவருக்கும் உதவியாக இருப்பான்.

கேந்திர ஸ்தானங்களில் தீய கிரகங்கள் இருந்து 9,10, 11ஆம் வீடுகளில் 21 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் நன்மையல்ல! விதி அந்த ஜாதகனைத் திருவோட்டோடு தெருவில் நிறுத்திவிடும்.

லக்கினம், 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அந்த ஜாதகனுக்கு உயர்ந்த சௌகரியமான வாழ்க்கை அமையும். (Luxurious life) அது அவன் காலம் முடியும்வரை தொடர்ந்து இருக்கும்!

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள். லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் சரிசமாக இருந்தால் ஜாதகருக்கு மத்திம ஆயுள். லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு அற்ப ஆயுள்.

அதிகபட்ச பரல்கள் பதினோன்றாம் வீட்டில் அல்லது பதினோன்றாம் வீட்டு அதிபதி வ இருக்கும் வீட்டில்
இருந்தால் ஜாதகன் விருப்பங்கள் நிறைவேறும்






Wednesday, 1 July 2026

சுப /அசுப விரயங்களா என்பதையும் அறிய பரல்கள்

மேலும் ராசிச் சக்கரத்தில் சர்வாஷ்டக பரல்கள் மொத்தமாக 12 ராசிகளுக்கும் 337 என்று கொடுக்கப்பட்டுள்ளது.


லக்னத்திலிருந்து கேந்திர மற்றும் திரிகோண வீடுகளின் ( 1, 5, 9, 4, 7, 10) மொத்தப் பரல்கள் குறைந்தது 168 என்று இருக்க வேண்டும்; அதாவது 12 ராசிகளின் கூட்டுத் தொகையான 337 ஐ , 2 ஆல் வகுப்பதால் கிடைப்பது.

அதேபோல் மறைவு ஸ்தானங்களின்( 3,6,8,12) மொத்த மதிப்பு 112 - ஐ தாண்டக்கூடாது. அதாவது 12 ராசிகளின் கூட்டுத் தொகையான 337 ஐ,மூன்றால் வகுத்தால் கிடைப்பது.


மேற்கூறிய சுப, அசுப வீடுகளின் பரல்களைக் கருத்திற்கொண்டு,பூர்வீக இடத்தில் வசிப்பதா,மாற்றுவதா, விற்பனை செய்வதா என்பதையும்;செய்தொழிலில் ஏற்பட்டுள்ள முடக்கம் தீருமா?தீராதா ?வேறு தொழில் செய்யலாமா ?

மேலும் வேலைக்கு செல்லலாமா என்பதையும், வாழ்க்கையில் ஏற்படும் விரயங்கள் சுப /அசுப விரயங்களா என்பதையும் அறிய முடியும்.

பரல்கள் #######



சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும்.

அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாக கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும்

அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.

பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
தொழிலதிபர் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
அழகான பெண்ணான அதே 337தான். உங்களுக்கும் 337தான்
கைவண்டி இழுத்துப் பிழைப்பை நடத்தும் அதே 337தான். மூர்த்திக்கும் அதே
337தான்



சரவாஷ்டக வர்க்கப் பலன்கள்

மொத்தப் பலன்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்ற பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்கு குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய விலை
30% அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செயல்படாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் எதிரி நீசமடைந்திருந்தாலும் அல்லது வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்படும் ஜாதகனுக்கு நன்மைகள் செய்வார்கள்!.

6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கைப் போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். சற்று தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பத்தைவிட,
தகுதியைவிட (நிலை) குறைவான அமைப்பை உடைய பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.

11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கிராமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. House of finance இரண்டாம் வீட்டில் 25 குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தாங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் நிறைய வசதிகள், ஆடம்பரங்கள் எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலிமையைப் பொறுத்து,
அவர்களுடைய தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கும்.
(சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)

16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

.19. ஆறாம் வீட்டில் 32      பரல்கள்    அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது .

பரல்கள்

ஜோதிடத்தில் 'பரல்கள்' (Points) என்பது ஒரு ஜாதகரின் அஷ்டவர்க்க (Ashtavarga) கணிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் அல்லது கிரகமும் பெறும் நற்பலன்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதன் மூலம் ஒருவரின் ஆயுள், செல்வம், தொழில் மற்றும் ஆரோக்கியம் போன்ற பலன்களைத் துல்லியமாக அறியலாம்.பரல்களின் பொதுவான பலன்கள்:சராசரி பரல்கள்: ஒரு ஜாதகத்தில் 12 ராசிகளுக்கு மொத்தமாக 337 பரல்கள் உள்ளன. ஒரு ராசிக்கு சராசரியாக 28 பரல்கள் இருக்க வேண்டும்.குறைந்த பரல்கள்: ஒரு வீட்டில் 25 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அந்த வீட்டால் ஜாதகருக்கு பெரிய அளவில் நல்ல பலன்கள் கிடைக்காது.அதிக பரல்கள்: ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேல் பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் உள்ள காரகத்துவங்களால் ஜாதகருக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.முக்கியமான சில பரல்களின் பலன்கள்:லக்னம் (1-ஆம் வீடு): லக்னத்தில் அதிக பரல்கள் இருந்தால், ஜாதகர் மிகுந்த ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருப்பார்.தனம் மற்றும் குடும்பம் (2-ஆம் வீடு): இங்கு அதிக பரல்கள் இருப்பது நிலையான செல்வம், நல்ல வருமானம் மற்றும் நன்மதிப்பைக் கொடுக்கும்.திருமண வாழ்க்கை (7-ஆம் வீடு): 7-ஆம் வீட்டில் பரல்கள் சீராக இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மனைவி வழியில் ஆதாயமும் கிடைக்கும்.வரவு - செலவு: லக்னத்திற்கு 1, 2, 4, 9, 10, 11 ஆகிய இடங்களில் உள்ள பரல்களின் கூட்டுத்தொகை 164-க்கு மேல் இருந்தால், செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

#. பரல்கள் பலன் #


1 ல் பரல்
லக்ன பாவகத்தில் பரல்கள் 1,5,9 க்கு இணையாக இருக்க வேண்டும்.6,8,12 க்கு குறையக்கூடாது.மேற்படி இருந்தால்தான் லக்னம் பலம் பெற்றுள்ளதாக அர்த்தம்.

2 ல் பரல் குறைந்தால் தனவிருத்தி இல்லை.குடும்ப நிர்வாகம் சுமூகமாக இருக்காது.2 ம் பாவக காரகத்தை ஜாதகர் தடையின்றி அனுபவிக்க இயலாது. 4,7 பாவகத்துக்கு இணையாக இருக்க வேண்டும்.20க்கு குறைந்தால் குடும்பம் அமைய தடை ஏற்படும்.20 முதல் 25க்குள் இருந்தால் தாமதமாகி குடும்பம் அமையும். அதிலும் பிரச்சனைகளை கொடுக்கும்.25க்கு மேல் இருப்பது சிறப்பு

3 ல் பரல் அதிகமானால் இளைய சகோதர ஆதரவு இருக்கும்.
விடாமுயற்சி இருக்கும்.எந்தச் செயலையும் வீரியத்துடன் செய்வார்.அவ்வப்போது மூர்க்கத்தனமான எண்ணங்களையும் கொடுக்கும். பரல் 20 க்கும் குறைந்தால் சோம்பேறித்தனத்தை உண்டாக்கும். தைரியம் குறையும்.எதையும் முடிவெடுக்கும் ஆற்றல் குறையும். எந்த ஊரு காரியத்தையும் முழுமையாக செய்து முடிக்க சிரமப்படுவார்

4 ல் பரல் லக்கினத்திற்கு இணையாக இருக்க வேண்டும்.2,7 பாவகத்திற்க்கு குறையக்கூடாது.20 க்கும் குறைந்தால் வீடு மனை அமைய தடையை ஏற்படுத்தும்.உயர் கல்வியில் தடையை ஏற்படுத்தும். தாய் வழி ஆதாயம் அனுபவிப்பதில் தடையை ஏற்படுத்தும்.மனதில் தேவையற்ற பயம் கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். மேன்மையான வாழ்க்கை வாழ முடியாது .

5 ல் பரல்கள் 20 க்கும் குறைந்தால் புத்திர மேன்மையை குறைக்கும்.6 ம் பாவகத்தை விட குறைந்தால் கடன் நோய் போன்ற துன்பங்களை கொடுக்கும். 6 க்கு இணையாகவும் இருக்கக் கூடாது.5 ல் பரல்கள் குறைந்தால் போராட்டமான வாழ்க்கையை கொடுக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை குறைக்கும். குலதெய்வ அனுக்கிரகத்தை குறைக்கும். லக்னத்திற்கு இணையாக இருப்பது நல்லது நண்பர்களே.

6 ல் பரல்கள் லக்னத்திற்கு அதிகமானால் கடன் நோய் பிரச்சனைகளை கொடுக்கும். 4க்கு அதிகமானால் உடல் ஆரோக்கியத்தில் சுகமின்மையை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் பிறவியிலேயே ஏதோ ஒரு நோய் இருக்கும். 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் நன்று.40 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடன் நோய் வழக்குகள் ஏதேனும் ஒன்று இறுதி வரை கூடவே இருக்கும்


7 ல் பரல்கள் 2,4 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 8 ல் பரல்கள் அதிகமானால் மணவாழ்க்கையில் பிரச்சனைகளைக் கொடுக்கும்.7 ல் பரல்கள் லக்னத்திற்கு இணையாகவோ அதிகமாகவோ இருந்தால் மனைவி வழி ஆதாயம் உண்டு.திருமணத்திற்கு பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.7 ல் பரல்கள் அதிகமாகும் போது காம வேட்கையை கொடுக்கும்.
மனைவியின் ஜாதகத்தில் இணையாக இருந்தால் சமன்படும். 20 க்கு குறைந்தால் திருமணம் அமைய தடையை ஏற்படுத்தும்.

20க்கு குறையாமல் 30 க்கு அதிகமாகாமல் இருப்பது நல்லது.

கணவனின் பரலை விட மனைவியின் பரல் அதிகமானால் மனைவிக்கு அடங்கிப் போக நேரிடும்

8 ல் பரல்கள் 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் சிறப்பு.லக்ன பரலை விட அதிகமாக கூடாது. 25 க்கும் அதிகமானால் ஆயுள் தீர்க்கம். ஆனால் பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும். 30 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடும் விபத்துக்கள் தற்கொலை எண்ணத்தை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் அற்ப ஆயுளை கொடுக்கும்

9 ல் பரல்கள் 5 க்கு இணையாக இருக்க வேண்டும். 9 ல் பரல்கள் கூடினால் ஆன்மீக ஈடுபாடு மகான்களின் தரிசனம் வெளிநாடு செல்லும் யோகம் பிறரால் மதிக்கப்படும் நிலை மற்றும் நிலையான புகழை கொடுக்கும்.35 க்கு மேல் இருப்பது நல்லது. குருவின் தனி பரலில் 5,9 ல் 5 க்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஆன்மீக வழியில் உயர்வை கொடுக்கும். 12 பாவகங்களில் 1,9 பாவகங்களில் பரல்கள் அதிகம் இருந்தால் அல்லது இணையா
இருந்தால் சிறப்பு

10 ல்பரல்கள் 25 முதல் 30 க்குள் இருந்தால் தொழில் நல்ல நிலையில் இருக்கும்.லக்ன பரலுக்கு இணையாக இருக்க வேண்டும்.2,11 க்கு இணையாக இருந்தால் தொழிலில் நல்ல பொருளாதாரத்தை கொடுக்கும்.10 ஐ விட 6 ல் பரல்கள் அதிகமாகவோ இணையாகவோ இருந்தால் தொழிலில் கடனை ஏற்படுத்தும். அடிமைத் தொழிலை செய்ய வைக்கும்.7 ம் பாவக பரலுக்கு இணையாக இருந்தால் கூட்டுத்தொழில் சிறப்பு.20 க்கும் குறைந்தால் சொந்தத்தொழில் சிறப்பாக இருக்காது.

11 ல் பரல்கள் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். 2,10 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 11 ல் பரல்கள் கூடினால் இருதார தோஷத்தை கொடுக்கும். 6,8,12 க்கு இணையாக இருந்தால் நீடித்த பொருளாதாரத்தை கொடுக்காது.
4 க்கு இணையாக இருந்தால் வீடு வண்டி வாகன யோகம் அமையும்.7 க்கு இணையாக இருந்தால் மனைவி வழி ஆதாயத்தை கொடுக்கும்.10 க்கு இணையாக இருந்தால் தொழில் வழி ஆதாயத்தை கொடுக்கும்.5 க்கு இணையாக இருந்தால் புத்தர்கள் வழி மேன்மையை கொடுக்கும். 4 க்கு இணையாக இருந்தால் தாய் வழி ஆதாயமும்,9 க்கு இணையாக இருந்தால் தந்தை வழி பூர்வீக ஆதாயத்தையும் கொடுக்கும்.11 ஐ விட 12 ல் பரல்கள் கூடினால் வரவுக்கு ஏற்ப செலவை கொடுக்கும்

12 ல் பரல்கள் 6,8 க்கு இணையாக இருக்கலாம். 20 க்கும் குறைந்தால் இறுதிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை கொடுக்கும். பிறரைச் சார்ந்து வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.தான் சம்பாதித்த

செல்வங்களை இறுதிக்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் இழக்க நேரிடும்

12 பாவகங்களிலும் பரல்கள் சராசரியாக 25 முதல் 30 க்குள் இருப்பது சிறப்பான அமைப்பு


Saturday, 27 June 2026

ஆட்டுக்கறியை ‘மட்டன்’ என சொல்வது ஏன் தெரியுமா?


ஆட்டுக்கறியை ‘மட்டன்’ என சொல்வது ஏன் தெரியுமா? அடடா இவ்வளவு நாள் தெரியாம போச்சே.. சுவாரசியம்

 
 ஆட்டிறைச்சிக்கு எப்படி 'மட்டன்' என்ற பெயர் வந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அதுபற்றி இங்கு பார்க்கலாம்.


ஒரு காலத்தில் ஏதேனும் விசேஷ நாட்களில் மட்டும் வீட்டில் 'மட்டன்', 'சிக்கன்' எடுத்து சமைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது நினைத்த உடன் அசைவ உணவு வாங்கி சாப்பிடுவது கிராமம் முதல் நகரம் வரை வந்துவிட்டது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை என்றால் 'மட்டன்', 'சிக்கன்', 'மீன்' உள்பட பிற அசைவ உணவுகளில் ஒன்று தான் என்ற நிலை பல வீடுகளிலும் வந்துவிட்டது.


mutton goat meat

இப்படி நாம் ருசித்து உண்ணும் இந்த ஆட்டிறைச்சியை 'மட்டன்' என்று அழைப்பது ஏன்? பெயர் காரணத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? என்று சிந்தித்து பார்த்தால் பலரது பதிலும் இல்லை என்பதாக தான் இருக்கும். அப்படியான பதிலை இப்போது மனதில் சொல்லி கொள்ளுங்கள் உங்களுக்கு இந்த செய்தியில் விடையை தருகிறோம்.





'மட்டன்' (Mutton) என்ற சொல் 'மொட்டோன்' (Moton அல்லது Mouton) என்ற பழைய பிரெஞ்சு வார்த்தையில் இருந்து உருவானது. இதற்கு உண்மையில் 'செம்மறி ஆடு' என்று பொருள். அதன்பிறகு தான் இந்த வார்த்தை இங்கிலாந்துக்குள் நுழைந்தது. கி.பி 1066-ல் நார்மானியர்கள் இங்கிலாந்தை கைப்பற்றிய பிறகு ஆங்கிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகமாக கலந்தது. இதனால் 'மட்டன்' என்ற சொல் இங்கிலாந்தில் பயன்பாட்டில் வந்ததோடு அது 'செம்மறி ஆட்டு' இறைச்சியை இன்று வரை குறிக்கிறது.

சரி இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். 'மட்டன்' என்றால் அது செம்மறியாட்டு கறி என்றால் வெள்ளாட்டு கறிக்கு என்ன பெயர்? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளாட்டு இறைச்சிக்கு 'செவோன்' (Chevon) என்று பெயர் உள்ளது. அதேபோல் குட்டி வெள்ளாடு இறைச்சிக்கு 'காப்ரிட்டோ' (Cabrito) என்ற பெயர் உள்ளது. இதுவும் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது தான். ஆனால் இந்த வார்த்தைகள் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. அனைத்து நாடுகளிலும் வெள்ளாட்டு இறைச்சியை 'Goat Meat' என்று சொல்லும் வழக்கம் இருந்ததால் 'செவோன், காப்ரிட்டோ என்ற 2 வார்த்தைகளும் பிரபலம் அடையவில்லை.

அதேவேளையில் 'மட்டன்' என்ற சொல் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு இறைச்சியை குறிக்கும். பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒவ்வொரு ஆட்டுக்கறிக்கும் வெவ்வேறு பொருள் உள்ளது. இந்த நாடுகளில் முதிர்ந்த செம்மறியாட்டின் இறைச்சியை 'மட்டன்' என்பார்கள். இளம் செம்மறியாட்டின் இறைச்சி 'லேம்ப்' (Lamb) என்றும், வெள்ளாட்டு இறைச்சியை 'கோட் மீட்' (Goat meat) என்று அழைப்பார்கள். இதனால் பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 'மட்டன்' என்று கறிக்கடையில் கேட்டால் செம்மறியாட்டின் கறியும், உணவகங்களில் 'மட்டன்' உணவு என்று கேட்டால் செம்மறியாட்டின் இறைச்சி கறியை தான் தருவார்கள்.

அதேவேளையில், ஐரோப்பாவிற்கு வெளியே சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் 'மட்டன்' என்ற சொல் வெள்ளாட்டு இறைச்சியை குறிக்க பயன்படுத்தப்பட்டது. இது அப்படியே ஆங்கிலேயே படையெடுப்பின்போது நம் நாட்டுக்கும் பரவியது. நம் நாட்டில் செம்மறியாடுகளை விட வெள்ளாடு தான் அதிகம் வளர்க்கப்படுகிறது. செம்மறியாட்டை ஒப்பிடும்போது வெள்ளாடு வளர்ப்பது மிகவும் எளிது. அதேபோல் பெரும்பாலான மக்கள் வெள்ளாட்டு இறைச்சியை தான் அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பிட்ட மக்கள் தான் செம்மறியாட்டு இறைச்சியை விரும்பி சுவைக்கிறார்கள். இதனால் ஆங்கிலேயர் காலத்தில் நம் நாட்டில் எளிதாகவும், அதிகமாக கிடைக்கும் வெள்ளாட்டு கறியை குறிக்க 'மட்டன்'என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

இதனால் தான் நம் நாட்டில் மட்டன் கறி, மட்டன் பிரியாணி அல்லது மட்டன் ரோகன் ஜோஷ் போன்ற உணவுகள் பொதுவாக வெள்ளாட்டு கறியை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. அதன்பிறகு காலப்போக்கில் வெள்ளாட்டு கறி மட்டுமின்றி செம்மறியாட்டு கறியையும் குறிக்க 'மட்டன்' பயன்படுத்தப்பட்டது. இதனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் 'மட்டன்' என்று கேட்டால் உடனடியாக அவர்கள் ஆட்டிறைச்சியை தான் தருவார்கள். பெரும்பாலும் இது வெள்ளாட்டு கறியாக இருக்கும். செம்மறியாட்டு கறி வேண்டும் என்றால் அதனை குறிப்பிட்டு வாங்கி கொள்ள ே வண்டுடும். இதனால் நம் நாட்டில் 'மட்டன்' என்ற சொல்லில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் வெளிநாடு செல்லும்போது அதன் வேறுபாடுகளை அறிந்து வைத்து கொள்வது நல்லது.


அநாதை ஒரே துணை!

அநாதை ஒரே துணை!

          விடுமுறையில் வீட்டிற்கு வந்த தன்மகனிடம் தங்களையும் அழைத்துப்போகச் சொல்லிய பெற்றோர்களிடம் நாங்கள் சுற்றுலா சென்று அப்படியே செல்ல இருக்கின்றோம். நீங்கள் அப்புறமாக வாருங்கள் எனக் கூறிச் சென்றுவிட, தங்களின் செல்ல மகள் வீட்டிலாவது சென்று தங்கலாம் எனக் கிளம்பினர். நாட்கள் செல்லச் செல்ல மகளின் பேச்சுகளும், உபசாரங்களும் திசைமாறவே, ஆண் என்ற முறையில் வேலைத்தேட ஆரம்பித்தார். ஒரு கல்யாண உதவி அமைப்பில் பணியாளராக வேலை கிடைக்கவே, அங்கு கிடைக்கும் எல்லா வேலைகளையும் தலைமேற்கொண்டு கிடைக்கும் பணத்தை தன் மகளிடம் கொடுத்துவந்தார். வேலையில்லா நாளில் ஒன்றும் கிடைக்காமலும் இருப்பதுண்டு. அப்படி ஓர்நாள் வேலையின்றி மனம் வருந்தி வீடுசென்றவருக்கு அவரின் மகள், மனைவியிடம் பேசியது கேட்கவே சிறிது தயக்கத்திற்குப்பின் உள்ளே சென்றார். சோர்ந்து படுத்தார்.
           அடுத்தநாள் காலை வேலைதேடிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பலநாட்கள் சென்றும் அவரைப்பற்றிய தகவல் ஏதுமில்லை. ஒரு வருடம் சென்றபின் பக்கத்து ஊரின் ஆசிரமத்திலிருந்து உடன் வரச்சொல்லித் தகவல் வரவே அங்கு சென்ற அந்த அம்மாளுக்கு அவரின் கணவரின் பெயரைச் சொல்லி அவர் இறந்து பலநாட்கள் ஆகிவிட்டன எனக்கூறினர். இங்கு வரும்போது நான் அநாதை எனச் சொல்லித்தான் சேர்ந்தார். தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் ஆசிரம அன்பர்களே காரியங்கள் அனைத்தும் செய்யச் சொல்லி கடிதம் கொடுத்துள்ளார். எனவே அவர் இறந்ததும் அடக்கம் செய்துவிட்டோம். பின்னர் அவர் பெட்டியை திறந்து பார்த்தபோது ஒரு டைரி இருந்தது. அதில் உங்கள் பெயரும் விலாசமும் இருந்தது. ஆகவே உங்களுக்கு தகவல் அனுப்பினோம். இந்தாருங்கள் அந்த டைரி எனக் கொடுத்தனர்.
அன்புள்ள மனைவிக்கு, நான் உன்னை விட்டு ஓடி வந்துவிட்டேன் என நினைக்காதே! அன்று நம் மகள், அம்மா நீ சமையல்வேலை, துணி துவைத்தல் என வீட்டு வேலைகளில் மிகவும் ஒத்தாசையாக இருக்கின்றாய், ஆனால் உங்களிருவருக்கும் சேர்த்து எங்களால் செலவு செய்யமுடியவில்லை, அப்பாவை எங்காவது ஆசிரமத்தில் சேர்ந்துக்க சொல், என்ற வார்த்தைகளைக் கேட்டபின், நீயாவது அங்கு நன்றாக இருப்பாய் என்ற எண்ணத்தில்தான் இப்படி வந்துவிட்டேன். என்னை மண்ணித்துவிடு. நமக்கு மகன், மகள் என்ற ஆதரவு அற்றுப் போய்விட்டது. நமது குலதெய்வம் அங்காளபரமேஸ்வரிதான் உனக்கு துணை. உன்னிடம் ஒர் வேண்டுகோள். இதைப் படித்தப்பின் எனக்காக ஒன்றுசெய். அந்த அம்மையின் வாயிலில் பிச்சை எடுத்தாவது ஜீவி. பிள்ளைகள் வாசலை மிதிக்காதே. என எழுதியதைப் படித்தபின் மனம்பிசைந்தது. அழுகை நிறைந்த கண்கள் குளமாயின.
        கணவரின் விருப்பப்படி அந்த அம்மாள் கோவிலின் வாயிலில் பிச்சை எடுத்து வாழத் தொடங்கினார். ஓர் நாள் அவரது மகன் அந்த கோவிலுக்கு வந்து சென்றபோது காலத்தின் கோலத்தால் சிதைந்து போயிருந்த அந்தமூதாட்டியை அடையாளம் தெரியாமலே, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் அனைவரும் பிச்சையிட்டு சென்றனர். அந்த அம்மனே இறுதிவரை துணை என வாழ்ந்து இறந்தார். அவர் யாருமில்லா அநாதையா!