48 ரூல் என்றால் என்ன..? அமேசான், பிளிப்கார்ட், ஜெப்டோ, பிளிங்க்கிட் என எந்த தளமாக இருந்தாலும் சரி.. ஒரு பொருளை தேர்வு செய்து Cartல் போட்டுவிடுங்கள் (அத்தியாவசிய பொருட்களை தவிர அல்லது நீங்கள் Adult Money என நினைக்கும் பொருட்கள்) அதை 48 மணிநேரம் அதாவது 2 நாள் பேமெண்ட் செய்யாமல் உங்களுடைய Cartலேயே வைத்திருங்கள்.. 48 மணிநேரம் கழித்து உண்மையிலேயே அந்த பொருள் தேவை என்று உங்களுக்கு தோண்றினால் மட்டும் Buy பட்டனை கிளிக் செய்து பேமெண்ட் நிலைக்கு செல்லுங்க.
இந்த 48 மணிநேர காலம் Cooling off காலத்தில் 80% அது வெறும் தற்காலிக ஆசை என்பது உங்களுக்கே புரியும், இப்படி புரிந்தால் Cart-ஐ கிளியர் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவீர்கள். 20 சதவீதம் மட்டுமே அந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த 48 மணிநேர ரூல்ஸ்-ஐ பாலோ செய்தாலே மாதம் மாதம் பல ஆயிரங்களை நீங்கள் சேமிக்கலாம்.
அமேசான், ப்லிப்கார்டே அடியேனுக்கு பிடிப்பதே இல்லை. ரிமூவ் சய்தாலும்.. மீண்டும் மீண்டும் தொந்தரவு. அழையாமலே வருகிறது அய்யா.
ReplyDelete