jaga flash news

Friday, 8 February 2013

மலர்களின் தெய்வீக சக்தி!!!

மலர்களின் தெய்வீக சக்தி!!!

நமது சாஸ்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்கு மலர்களை மிக முக்கியமான அம்சமாக கருதுகிறது. கண்டிப்பாக மலர்களை பூஜையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை மலர்களில் உள்ள மெல்லிய இதழ்கள் நமது பார்வைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் அதனுள் நுணுக்கமான பல சக்திகள் மறைந்து கிடக்கிறது. மிக குறிப்பாக சொல்வது என்றால் மனிதர்களின் எண்ண ஓட்டங்களை கிரகித்து பிரபஞ்ச வெளியில் பரப்பும் சக்தி அதற்கு உண்டு அதாவது நமது பிராத்தனைகளை இறைவனிடத்தில் நேரடியாக சேர்க்கும் ஆற்றல் அக்னிக்கு இடுப்பது போல மலர்களுக்கும் உண்டு.

அந்தவகையில் செவ்வந்தி பூவை கொண்டு பூஜை செய்தால் ஜாதகத்தில் கெட்டு போன குருபகவானின் அருள் பூரணமாக கிடைக்கும் சிவப்பு அரளி பூவை கொண்டு பூஜை செய்பவர்களின் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் விலகி அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும். நீலநிறத்தில் உள்ள சங்கு பூவை கொண்டு பூஜை செய்யும் போது சனி கிரகத்தால் ஏற்படும் தொல்லைகளும் பீடைகளும் விலகும்.

வெண்தாமரை மலர்கொண்டு பூஜிப்பதினால் மன நிம்மதி ஏற்படும், செந்தாமரை மலரை பூஜையில் பயன்படுத்தினால் செல்வம் பெருகும். பொன்னிறமாக உள்ள அரளி பூ திருமண தடையை விலக்கும், ரோஜா மலர் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். பாரிஜாதக மலர் மகாலக்ஷ்மியின் அருளை வாரி வழங்ககும் மல்லிகை மலர் கண் சம்மந்தமான நோய்களை விரைவில் தீர்க்கும் அதை போலவே மஞ்சள் அரளி கடன் சுமையை கண்டிப்பாக குறைக்கும

No comments:

Post a Comment