jaga flash news

Thursday, 9 May 2013

புத்த பூர்ணிமா

புத்த பூர்ணிமா


                புத்த பூர்ணிமாபுத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பெயர்களில்அழைக்கப்படுகிறதுகபிலவஸ்து என்னும் நாட்டின் மன்னனானசுத்தோதனருக்கும் மகாமயாவுக்கும் மகனாகப் பிறந்தார் சித்தார்த்தர்இவர்பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும்ஒரே மகன் என்பதால் உலகத்துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார்.
                 தனது 29 - வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம்நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்தார்அத்துன்பங்களுக்குஎன்ன காரணம் என்பதைத் தேடி அலைந்தார்இறுதியாக, கயா என்னும்காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்தார்.முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில்ஞானஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார்.அதுமுதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்.
                 பின் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கும் பயணம் சென்று தான்கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார்இறுதியில்கி.மு. 483 ல் தனது 80 - வது வயதில் தனது பிறந்த நாளும்தான் ஞானத்தைஅடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத்துறந்தார்புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்றுசம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது.
                 புத்தபூர்ணிமா அன்று புத்தமதத்தினர் வெள்ளைநிற உடைகளைமட்டுமே அணிவர்அன்று மடாலயங்களிலும்வழிபாட்டிடங்களிலும்,வீடுகளிலும் வழிபாடுகளையும் விழாக்களையும் நடத்தி மகிழ்வர்கீர்எனப்படும் பானம் அன்றைய தினம் அவர்களது உணவில் முக்கிய அங்கமாகஇருக்கும்இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும்உத்திரபிரதேசமாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment