jaga flash news

Saturday, 31 August 2013

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்....

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

நண்பர்களே.. தயவுசெய்து இதனை அனைவருக்கும் பகிருங்கள் !!

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.
 —

Thursday, 15 August 2013

Effects of Rahu in different Houses

Effects of Rahu in different Houses



1st
HOUSE
GOOD
More he spends more he get.  Problems in Govt. service, believe in religion, problems for brother, maternal family. 
BAD
Problems up to 40 years from the things related to Rahu, if in service he may get transfers regularly but will not get promoted.
REMEDIES
NATIVE SHOULD NOT ACCEPT ELECTRONIC ITEMS AS A GIFT AT THE TIME OF MARRIAGE.
2nd
HOUSE
GOOD
Native if not a king but he will enjoy the power like king
BAD
He may face incidents of theft even in day light or may have to go to jail
REMEDIES
HE SHOULD KEEP SOLID BALL MADE OF SILVER IN HIS POCKET.
3rd
HOUSE
GOOD
Native will always be alert and vigilant and fearless by nature
BAD
Native should keep tusk with him, will cause his downfall.  Loans given to brother or relatives will be bad debts
REMEDIES
NATIVE SHOULD KEEP SILVER WITH HIM.
4th
HOUSE
GOOD
Native may be rich but will spend according to his own wishes.  He may get money from in-laws or money/wealth will start increasing from the marriage day
BAD
Rahu does nothing bad in this house unless the person himself turns his rahu bad.
REMEDIES
NATIVE SHOULD PUT SILVER OR SHOULD MAKE COMPLETE HOUSE AND GETS IT REPAIRED OR REPAIR IT COMPLETELY.
5th
HOUSE
GOOD
In this house Rahu helps in all respects
BAD
Child problems, problems in education, mental tension.
REMEDIES
NATIVE SHOULD MARRY HIS WIFE TWICE. HE HOULD KEEP ELEPHANT MADE OF SILVER IN THIS HOUSE.
6th
HOUSE
GOOD
Such a person spends money for pump and show or on useless things but not on things actually needed.
BAD
If quarrels with elder brother or sister, his downfall is sure.
REMEDIES
HE SHOULD PET BLACK DOG.  HE SHOULD KEEP BLACK GLASS IN HIS POCKET.
7th
HOUSE
GOOD
Native is benefited by the Govt. and he will never be in a situation to ask any one for help.
BAD
He should not marry before 21 years of age. Speculation business will ruin him.
REMEDIES
HE SHOULD NOT WEAR BLUE COLOR CLOTHS.
8th
HOUSE
GOOD
Steep up and downs after every  4years
BAD
  If he earns through unfair means, he will loose his own money also.
REMEDIES
HE SHOULD KEEP PLAIN SQUARE PIECE OF SILVER WITH HIM FOR 40 DAYS.
9th
HOUSE
GOOD
 He may be a psychologist  and  dishonesty may cause his downfall
BAD
His son will create problems.
REMEDIES
HE SHOULD NOT PET DOG BUT HE SHOULD FEED DOG WHEN EVER PROBLEM ARISES.
10th
HOUSE
GOOD
Brave, rich, long life, good for business and for father.
BAD
Bad for native and for his mother in respect of health, weak eye sight.
REMEDIES
HE SHOULD DISTRIBUTE FREQUENTLY SWEETS OR COTTON CLOTHS (RED COLORED).
11th
HOUSE
GOOD
Native should live with his father for good health, wealth and for family happiness and after death he should put on gold or yellow thread or sapphire.
BAD
Diseases of ear, genitals, back bone, legs.
REMEDIES
HE SHOULD DONATE REGULARLY AT PLACE OF WORSHIP.
12th
HOUSE
GOOD
Native enjoys night comfort, his in-laws will be rich.
BAD
Wasteful expenditure, he will not get reward for his hard work.
REMEDIES
HE SHOULD TAKE HIS MEALS IN HIS KITCHEN. 

இரவில் சாப்பிட௬டத உணவு,வீட்டில் வளர்௧ககூடாத மரங்கள்



திருமணம்

ஜாதகத்தில் ஏழாமிடமானது களஸ்திர ஸ்தானம், சப்தம ஸ்தானம், இன்ப ஸ்தானம் என்றெல்லாம் கூறப்படும்.

திருமணம் , சூதாட்டம், வழக்கு, சுற்றங்கள் சூழ்தல், வியாபாரம், சன்மானம், சௌக்கியம், அலங்காரம், மனைவியின் அழகு, ஜவுளி வியாபாரம், நட்பு, விவாதங்கள், அன்னிய தேசத்தில் வசித்தல், ஆபரணங்கள்,மனைவியின் சுக துக்கங்கள் அறிவதற்கும் ஏழாமிடம் துணை செய்யும்.

கண்டிட ஏழாம் தான
காரியம் அறிய வேண்டில்
பெண்டிரின் குணமும் அல்லால்
பேசிய காமம் தன்னைக்
கொண்டிடும் செய்தி புத்ரர்
குறிப்பும்யாத் திரையு மாக
வண்டமர் குழலி யாளே!
சுகத்தையும் வகுக்க லாமே!

இறைவனின் திருவிளையாடல்களில், இந்த வாழ்க்கைப் பொருத்தம் மிக முக்கியமான ஒன்று. ஒருவரின் வாழ்க்கை நிம்மதியாக இருப்பதும், நிம்மதி இருந்து தவிப்பதும் தம்பதியரின் கையில் தான் இருக்கின்றது.
மனப் பொருத்தம், வாழ்க்கைப் பிண்ணனி, குடும்பத்தாரது குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், தொழில்கள், இவையெல்லாம் பார்த்து திருமணம் முடிப்போரும் உண்டு.
காதல் கொண்டு வாழ்க்கைத் துணை நலம் தேடுவோருமுண்டு.

புந்தியும் குருவும் ஏழில்
பொருந்திடப் புனிதப் பெண்டிர்
வந்திடும் நல்ல பிள்ளை
வாய்த்திடும்! ஏழில் சுங்கன்
உந்திடப் பாக்யப் பெண்டிர்
உதவியாம்! குளிகன் கேது
சொந்தமாய் ஏழி லாகில்
தூரத்ரீ யோடு வாழ்வான்!

புதன் குரு கூடி ஏழாமிடத்தில் நின்றிருந்தால் உத்தமான மனைவி அமைவாள்.
ஏழாம் வீட்டில் சுக்கிரன் நின்றிருக்க, நல்ல செல்வ வசதியுள்ள குடும்பத்தில் இருந்து பெண் மனைவியாக அமைவாள்.
குளிகனும் கேதுவும் கூடி ஏழாமிடத்தில் இருக்க, இழிவான பெண்ணை இல்லாள் ஆக்கிக் கொள்வான். ( தூரத்ரீ - என்பது தூரத்தில் ஒதுக்கி வைக்கக் கூடிய குணத்தைக் கொண்டவள் எனக் கொள்க)


சரி.....திருமணப் பொருத்தம் பார்ப்பது பற்றியும் ஏழாமிடத்தைக் கொண்டு, அமையும் பெண்ணின் நிலைகளையும் ( நல்ல பெண்மணி, தீய பெண்மணி, தாசியாகுபவள்....என எல்லா விடயங்களையும் வகுத்துக் கொடுத்துள்ள ) பாடல்களையும் பின்னர் பார்ப்போம் .


27 நட்சத்திரங்களின் பட்டியல்:


1.அசுவினி
14.சித்திரை
2.பரணி
15.ஸ்வாதி
3.கிருத்திகை
16.விசாகம்
4.ரோகிணி
17.அனுஷம்
5.மிருகசீரிடம்
18.கேட்டை
6.திருவாதிரை
19.மூலம்
7.புனர்பூசம்
20.பூராடம்
8.பூசம்
21.உத்திராடம்
9.ஆயில்யம்
22.திருவோணம்
10.மகம்
23.அவிட்டம்
11.பூரம்
24.சதயம்
12.உத்திரம்
25.பூரட்டாதி
13.ஹஸ்தம்
26.உத்திரட்டாதி

27.ரேவதி

திருமணப் பொருத்தம் பார்க்க : ஆண் பெண் இருவரின் நட்சத்திரம் 22 வது நட்சத்திரமாக அமைதல் கூடாது.
 
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து 27 வது நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் அமையக் கூடாது.
 
ஆனால், இந்த இரண்டு நட்சத்திரமும் ஒரே ராசியாக அமையுமானால், பொருந்தும். வேறு ராசியாக இருந்தால் பொருந்தாது.
 
உ-ம். பெண்ணின் நட்சத்திரம் பரணி. ஆணின் நட்சத்திரம் அசுவினி.
இரண்டு நட்சத்திரங்களும் மேஷ ராசி. பரணிக்கு அசுவினி 27 வது நட்சத்திரம். என்பதால் பொருந்தும்.
 
உ-ம்: பெண்ணின் நட்சத்திரம் அசுவினி. ஆணின் நட்சத்திரம் ரேவதி.
அசுவினியில் இருந்து ரேவதி 27 வது நட்சத்திரம்.
 
 
ஒன்று மேஷ ராசி. மற்றது மீன ராசி என்பதனால் பொருந்தாது.
 
  1. சித்திரை, வைகாசி, ஆனி, கார்த்திகை, தை, மாசி மாதங்கள் திருமணம் செய்ய ஏற்ற தமிழ் மாதங்கள்.
  2. ஆண், பெண் இருவரின் பிறந்த நட்சத்திரம், திதி, மாதங்களில் திருமணம் செய்ய ஏற்ற காலமல்ல.
  3. ஒரே குடும்பத்தில் மகனுக்கோ, மகளுக்கோ இரண்டு திருமணமும் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகே செய்ய வேண்டும். இந்த விதி தற்பொழுது கடைபிடிப்பதில்லை!
  4. அண்ணன் , தம்பி இருவரும் ஒரே குடும்பத்து அக்கா, தங்கையை திருமணம் செய்தல் கூடாது.
  5. திருமணம் முடிவு செய்த நேரத்தில், அந்த குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்து விட்டால், 31 நாட்கள் கழித்தே திருமணம் செய்ய வேண்டும்.
  6. மிருக சீரிஷம், அஸ்தம், மூலம், அனுஷம், மகம், ரோகிணி, ரேவதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி - இந்த நட்சத்திரங்கள் இருக்கும் காலம் திருமணம் செய்ய ஏற்ற நட்சத்திர தினங்களாகும்.
  7. மேலே குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மணமகன் , மணமகள் இருவருக்கும் இருவரது பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 3 -5 -7 -12 - 14 - 16 - 21 - 25 - வது நட்சத்திர நாளாக வரக் கூடாது. ஏனெனில் தாரா பலமில்லாத நாளாக அமைந்து விடும்.



  • அமாவாசை திதி திருமணம் செய்ய கூடாது.


  1. தேய்பிறையில் பஞ்சமி திதி வரையிலும் , வளர்பிறையிலும் திருமணம் செய்யலாம்.
  2. திங்கட் கிழமை, புதன், வியாழன், வெள்ளி , ஞாயிறு ஆகிய தினங்களில் திருமணம் செய்யலாம்.

  • வேதை நட்சத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது.

        • வேதை நட்சத்திர விபரம்

    • அசுவினி - கேட்டை
    1.  
              • பரணி - அனுஷம்
    • கார்த்திகை - விசாகம்
    • ரோகிணி - சுவாதி
    • புனர்பூசம் - உத்திராடம்
    • பூசம் - பூராடம்
  1. ஆயில்யம் - மூலம்
  2. மகம் - ரேவதி
  3. பூரம் - உத்திரட்டாதி
  4. உத்திரம் - பூரட்டாதி
  5. அஸ்தம் - சதயம்
  6. மிருகசீரிடம் - சித்திரை , அவிட்டம்.
  7. திருவாதிரை - திருவோணம்


பொருத்தமுள்ள நட்சத்திரங்கள்
பூரட்டாதி – அவிட்டம்
புனர்பூசம் – ஆயில்யம்
திருவாதிரை – மூலம்
ரோகிணி – மிருகசீரிடம்
பரணி – ரேவதி
அனுஷம் – கேட்டை
அசுவினி – சதயம்
பூராடம் – திருவோணம்
உத்திரம் – உத்திரட்டாதி
மகம் – பூரம்
கிருத்திகை – பூசம்
ஹஸ்தம் – சுவாதி
சித்திரை - விசாகம்
 
 

Wednesday, 14 August 2013

உங்களுக்காக ஆயுர் வேத அழகு குறிப்புக்கள்!

* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
• ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
• முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
• நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
• கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
• வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
• இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
• கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
• இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
• முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
face2

எள்ளின் மருத்துவக் குணங்கள்!

• படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.
• காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.
• 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
• ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.
• நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும்.
பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் காகற்காய் உணவில் சேர்க்கலாம்.
ellu

ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் முருங்கைக் கீரை பற்றிய குறிப்பு !

* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
* முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது.
* முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
* இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
* முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
* கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
* ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
kerai

Saturday, 10 August 2013

சந்திரன் முக்கியத்துவம்

சந்திரன் முக்கியத்துவம்


கிரகங்களின் வரிசையில் இரண்டாம் இடம் சந்திரன்  

முன்னுரை: சந்திரனின் முக்கியத்துவம்:
ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்களைத் தொடங்கலாம்எந்த கால கட்டங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்து கொள்வதற்கு பல வழி முறைகள் உள்ளன. அந்த வகையில்காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறைசந்திராஷ்டமம்.
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்கினமாகும். இதற்கு அடுத்த நிலையைப் பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோஅந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கின்றோம். அதே நேரத்தில் புதன் இருக்கும் இடைத்தையோகுரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில். இதில் இருந்து சந்திரனின் முக்கியத்து வத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடு கின்றோம். சந்திரன்இருக்கும்  நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்கின்றோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத் தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கின்றோம். சந்திரன் இருக்கும் ராசிப்படித்ஹான் கோச்சார பலன்களைப் பார்க்கின்றோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோவில்களில் அர்ச்சனைவழிபாடுகள் செய்கின்றோம். 
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள்அவயோகங்கள்தடைகள் ஏற்படுகின்றன. அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால்ஏற்படும் தோஷங்களில் "சந்திராஷ்டமம்" ஒன்று.
சந்திராஷ்டமம்: நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால்அதையே சந்திராஷ்டமம் என்கின்றோம். சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்'சந்திராஷ்டம காலம்ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள்மனச்சங்கடங்கள்இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம்குடும்பம்வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த சத்தான அமைப்புக்களும்பாதிப்படைகின்றன.
ஆகையால்இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். மணமகன்மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல்கிரகப் பிரவேஷம்,வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடமாட்டார்கள். குடும்ப  விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால்,சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர் மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஏனென்றால் சந்திரன் மனோகாரகன். மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துக்களிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சந்திரன் ஜெனனஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறுஎட்டு,பன்னிரெண்டாம் (6,8,12) இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம்,ஆட்சிநீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும்சந்திராஷ்டமத்தினால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம்:
சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளைக் கடந்து விடும். இப்படிக் கடக்கும் பொழுது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தைப் பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகின்றது. அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள்நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில்
(1)-இல் இருக்கும்பொழுது: மனம் அலை பாயும்சிந்தனை அதிகரிக்கும்ஞாபக மறதி உண்டாகலாம்.
2- இல் இருக்கும் பொழுது: பணவரவுக்கு வாய்ப்புண்டுபேச்சில் நளினம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.   3- இல் இருக்கும் பொழுது: சமயோசிதமாக செயல்படுதல்சகோதர ஆதரவுஅவசிய செலவுகள்.
4- இல் இருக்கும் பொழுது: பயணங்கள்மனமகிழ்ச்சிஉற்சாகம்தாய் வழி ஆதரவு.
5- இல் இருக்கும் பொழுது: ஆன்மீக பயன்கள்தெய்வபக்திநல்ல எண்ணங்கள்தெளிந்த மனம்தாய் மாமன் ஆதரவு.
6- இல் இருக்கும் பொழுது: கோபதாபங்கள்எரிச்சல்டென்ஷன்வீண் விரயங்கள்மறதிநஷ்டங்கள்.
7- இல் இருக்கும் பொழுது: காதல் நலிந்கங்கள்பயணங்கள்,சுற்றுலாக்கள்குதூகலம்பெண்களால் லாபம்மகிழ்ச்சி.
8- இல் இருக்கும் பொழுது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்றுசொல்லுகின்றோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளுதல்கோவிலுக்கு சென்று வருதல் நல்லது. 9- இல் இருக்கும் பொழுது: காரிய வெற்றிசுபசெய்திஆலய தரிசனம்.
10- இல் இருக்கும் பொழுது: பயணங்கள்நிறை-குறைகள்பணவரவு,அலைச்சல்உடல் உபாதைகள்.
11- இல் இருக்கும் பொழுது: தொட்டது துலங்கும்பொருள்சேர்க்கை,மூத்த சகோதரரால் உதவிமன அமைதிதரும சிந்தனை. 12- இல் இருக்கும் பொழுது: வீண் வியங்கள்டென்ஷன்மறதி,கைப்பொருள் இழப்புஉடல் உபாதைகள்.
உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்து கொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. உங்கள் நட்சச்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே உங்களுக்கு சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும்கவனமாகவும் இருப்பதுநலம் தரும்.

பிறந்த நட்சத்திரம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி
அணுஷம்
பரணி
கேட்டை
கிருத்திகை
மூலம்
ரோகினி
பூராடம்
மிருகசீரிஷம்
உத்திராடம்
திருவாதிரை
திருவோணம்
புனர்பூசம்
அவிட்டம்
பூசம்
சதயம்
ஆயில்யம்
பூரட்டாதி
மகம்
உத்திரட்டாதி
பூரம்
ரேவதி
உத்திரம்
அஸ்வினி
அஸ்தம்
பரணி
சித்திரை
கிருத்திகை
சுவாதி
ரோகினி
விசாகம்
மிருகசீரிஷம்
அணுஷம்
திருவாதிரை
கேட்டை
புனர்பூசம்
மூலம்
பூசம்
பூராடம்
ஆயில்யம்
உத்திராடம்
மகம்
திருவோணம்
பூரம்
அவிட்டம்
உத்திரம்
சதயம்
அஸ்தம்
பூரட்டாதி
சித்திரை
உத்திரட்டாதி
சுவாதி
ரேவதி
விசாகம்