jaga flash news

Thursday 8 August 2013

மகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

மகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

மகர லக்னததில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரனாவார். 10ம் வீட்டிற்கு  அதிபதியான சுக்கிரபகவானே 5ம் வீட்டிற்கும் அதிபதியாகி, லக்னாதிபதி சனிக்கும் நட்பு கிரகமாக விளங்குவது அற்புதமான அமைப்பாகும்.  10ம் அதிபதி சுக்கிரன் தனக்கு நட்பு கிரகங்களான புதன், சனி சேர்க்கை பெற்று உடன் ராகும் இணைந்து இருந்தால் ஜாதகருக்கு செல்வம், செல்வாக்கு, தொழில் ரீதியாக உயர்வுகள், பெயர், புகழ் போன்ற யாவும் சிறப்பாக அமைந்து சுகவாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும். சனி, புதன், சுக்கிரன் சேர்க்கையோ, சுக்கிரன், புதன் இணைந்து குரு பார்வையோ அமைந்து சுக்கிரன், புதன், சனி போன்றவற்றில் ஏதாவது ஒரு  கிரகத்தின் திசை நடந்தால், ஜாதகர் சொந்தமாக தொழில் செய்து, மிகச் சிறந்த செல்வந்தராக வாழக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையும் கிட்டும். அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு காரகனான சூரியன் மகர லக்னத்திற்கு 10ம் வீடான துலாமில் நீசம் பெறுவதால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசுத் துறையைவிட தனியார் துறைகளிலும், சுய தொழில்களிலும் சம்பாதிக்க கூடிய வாய்ப்பே அதிகமாக இருக்கும். 10ல் சூரியன் நீசம் பெற்றாலும் உடன் சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்து நீசபங்க ராஜயோகம் உண்டானால் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் ஓரளவுக்கு அனுகூலத்தை அடைய முடியும். சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று உடன் சுக்கிரனும் 10ல் இருந்தால் அரசு பணி அமையக்கூடிய வாய்ப்புகள் அமையும். சனி புதன், சுக்கிரன், சேர்க்கை பெற்று 10 ல் அமைந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அபரிமிதமான செல்வ சேர்க்கையினை பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். சந்திரன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் கூட்டுத் தொழில், கலை, இசை போன்றவற்றின் மூலமாக அனுகூலங்கள், சுக்கிரன் சந்திரனுடன், புதனும் குருவும் சேர்க்கை பெற்றால் வெளியூர், வெளிநாடுகள் மூலம் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு, சுக்கிரன, புதன் சேர்க்கைப் பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறை, எழுத்துத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் யோகம், சுக்கிரன் குரு சேர்க்கைப் பெற்றால் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய துறைகளில் உயர்வான அந்தஸ்து அமையும். சுக்கிரன் வலுவாக அமையப் பெற்றால் ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய  வாய்ப்பு உண்டாகும். மகர லக்னத்திற்கு 10ல் மக்கள் செல்வாக்கு காரகனாகிய சனி பகவான் உச்சம் பெறுவதால்  ஒருவரின் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று சூரியனும், செவ்வாயும் பலமாக அமைந்திருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் தேடி வரும்.
சந்திரன், செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் மருத்துவத்துறையில் சாதனை செய்ய முடியும். சந்திரன், ராகு சேர்க்கைப் பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் துறையில் வல்லுனராக முடியும். 10ம் வீட்டில் குரு, புதன் இணைந்திருந்தால் வாக்கல், பேச்சால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, வக்கீல் தொழில் அமையும்.

அதுவே, சுக்கிரன் வலு இழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றியிருந்தால் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, சுக்கிரன், பலமிழந்து செவ்வாய் ராகு, கேது சேர்க்கை பெற்றால் அடிமைத் தொழில் செய்யும் நிலை, சுக்கிரன் பலமிழந்து சனி, செவ்வாய், ராகு, கேது சேர்க்கைப் பெற்றால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பொய் சொல்லக்கூடிய சூழ்நிலையால் தொழிலில் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும். 10ல் பாவிகள் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் பொய் பித்தலாட்டம் செய்து சம்பாதிக்கக்கூடிய அவல நிலை உண்டாகும்.

No comments:

Post a Comment