jaga flash news

Thursday 15 August 2013

திருமணம்

ஜாதகத்தில் ஏழாமிடமானது களஸ்திர ஸ்தானம், சப்தம ஸ்தானம், இன்ப ஸ்தானம் என்றெல்லாம் கூறப்படும்.

திருமணம் , சூதாட்டம், வழக்கு, சுற்றங்கள் சூழ்தல், வியாபாரம், சன்மானம், சௌக்கியம், அலங்காரம், மனைவியின் அழகு, ஜவுளி வியாபாரம், நட்பு, விவாதங்கள், அன்னிய தேசத்தில் வசித்தல், ஆபரணங்கள்,மனைவியின் சுக துக்கங்கள் அறிவதற்கும் ஏழாமிடம் துணை செய்யும்.

கண்டிட ஏழாம் தான
காரியம் அறிய வேண்டில்
பெண்டிரின் குணமும் அல்லால்
பேசிய காமம் தன்னைக்
கொண்டிடும் செய்தி புத்ரர்
குறிப்பும்யாத் திரையு மாக
வண்டமர் குழலி யாளே!
சுகத்தையும் வகுக்க லாமே!

இறைவனின் திருவிளையாடல்களில், இந்த வாழ்க்கைப் பொருத்தம் மிக முக்கியமான ஒன்று. ஒருவரின் வாழ்க்கை நிம்மதியாக இருப்பதும், நிம்மதி இருந்து தவிப்பதும் தம்பதியரின் கையில் தான் இருக்கின்றது.
மனப் பொருத்தம், வாழ்க்கைப் பிண்ணனி, குடும்பத்தாரது குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், தொழில்கள், இவையெல்லாம் பார்த்து திருமணம் முடிப்போரும் உண்டு.
காதல் கொண்டு வாழ்க்கைத் துணை நலம் தேடுவோருமுண்டு.

புந்தியும் குருவும் ஏழில்
பொருந்திடப் புனிதப் பெண்டிர்
வந்திடும் நல்ல பிள்ளை
வாய்த்திடும்! ஏழில் சுங்கன்
உந்திடப் பாக்யப் பெண்டிர்
உதவியாம்! குளிகன் கேது
சொந்தமாய் ஏழி லாகில்
தூரத்ரீ யோடு வாழ்வான்!

புதன் குரு கூடி ஏழாமிடத்தில் நின்றிருந்தால் உத்தமான மனைவி அமைவாள்.
ஏழாம் வீட்டில் சுக்கிரன் நின்றிருக்க, நல்ல செல்வ வசதியுள்ள குடும்பத்தில் இருந்து பெண் மனைவியாக அமைவாள்.
குளிகனும் கேதுவும் கூடி ஏழாமிடத்தில் இருக்க, இழிவான பெண்ணை இல்லாள் ஆக்கிக் கொள்வான். ( தூரத்ரீ - என்பது தூரத்தில் ஒதுக்கி வைக்கக் கூடிய குணத்தைக் கொண்டவள் எனக் கொள்க)


சரி.....திருமணப் பொருத்தம் பார்ப்பது பற்றியும் ஏழாமிடத்தைக் கொண்டு, அமையும் பெண்ணின் நிலைகளையும் ( நல்ல பெண்மணி, தீய பெண்மணி, தாசியாகுபவள்....என எல்லா விடயங்களையும் வகுத்துக் கொடுத்துள்ள ) பாடல்களையும் பின்னர் பார்ப்போம் .


27 நட்சத்திரங்களின் பட்டியல்:


1.அசுவினி
14.சித்திரை
2.பரணி
15.ஸ்வாதி
3.கிருத்திகை
16.விசாகம்
4.ரோகிணி
17.அனுஷம்
5.மிருகசீரிடம்
18.கேட்டை
6.திருவாதிரை
19.மூலம்
7.புனர்பூசம்
20.பூராடம்
8.பூசம்
21.உத்திராடம்
9.ஆயில்யம்
22.திருவோணம்
10.மகம்
23.அவிட்டம்
11.பூரம்
24.சதயம்
12.உத்திரம்
25.பூரட்டாதி
13.ஹஸ்தம்
26.உத்திரட்டாதி

27.ரேவதி

திருமணப் பொருத்தம் பார்க்க : ஆண் பெண் இருவரின் நட்சத்திரம் 22 வது நட்சத்திரமாக அமைதல் கூடாது.
 
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து 27 வது நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் அமையக் கூடாது.
 
ஆனால், இந்த இரண்டு நட்சத்திரமும் ஒரே ராசியாக அமையுமானால், பொருந்தும். வேறு ராசியாக இருந்தால் பொருந்தாது.
 
உ-ம். பெண்ணின் நட்சத்திரம் பரணி. ஆணின் நட்சத்திரம் அசுவினி.
இரண்டு நட்சத்திரங்களும் மேஷ ராசி. பரணிக்கு அசுவினி 27 வது நட்சத்திரம். என்பதால் பொருந்தும்.
 
உ-ம்: பெண்ணின் நட்சத்திரம் அசுவினி. ஆணின் நட்சத்திரம் ரேவதி.
அசுவினியில் இருந்து ரேவதி 27 வது நட்சத்திரம்.
 
 
ஒன்று மேஷ ராசி. மற்றது மீன ராசி என்பதனால் பொருந்தாது.
 
  1. சித்திரை, வைகாசி, ஆனி, கார்த்திகை, தை, மாசி மாதங்கள் திருமணம் செய்ய ஏற்ற தமிழ் மாதங்கள்.
  2. ஆண், பெண் இருவரின் பிறந்த நட்சத்திரம், திதி, மாதங்களில் திருமணம் செய்ய ஏற்ற காலமல்ல.
  3. ஒரே குடும்பத்தில் மகனுக்கோ, மகளுக்கோ இரண்டு திருமணமும் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகே செய்ய வேண்டும். இந்த விதி தற்பொழுது கடைபிடிப்பதில்லை!
  4. அண்ணன் , தம்பி இருவரும் ஒரே குடும்பத்து அக்கா, தங்கையை திருமணம் செய்தல் கூடாது.
  5. திருமணம் முடிவு செய்த நேரத்தில், அந்த குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்து விட்டால், 31 நாட்கள் கழித்தே திருமணம் செய்ய வேண்டும்.
  6. மிருக சீரிஷம், அஸ்தம், மூலம், அனுஷம், மகம், ரோகிணி, ரேவதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி - இந்த நட்சத்திரங்கள் இருக்கும் காலம் திருமணம் செய்ய ஏற்ற நட்சத்திர தினங்களாகும்.
  7. மேலே குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மணமகன் , மணமகள் இருவருக்கும் இருவரது பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 3 -5 -7 -12 - 14 - 16 - 21 - 25 - வது நட்சத்திர நாளாக வரக் கூடாது. ஏனெனில் தாரா பலமில்லாத நாளாக அமைந்து விடும்.



  • அமாவாசை திதி திருமணம் செய்ய கூடாது.


  1. தேய்பிறையில் பஞ்சமி திதி வரையிலும் , வளர்பிறையிலும் திருமணம் செய்யலாம்.
  2. திங்கட் கிழமை, புதன், வியாழன், வெள்ளி , ஞாயிறு ஆகிய தினங்களில் திருமணம் செய்யலாம்.

  • வேதை நட்சத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது.

        • வேதை நட்சத்திர விபரம்

    • அசுவினி - கேட்டை
    1.  
              • பரணி - அனுஷம்
    • கார்த்திகை - விசாகம்
    • ரோகிணி - சுவாதி
    • புனர்பூசம் - உத்திராடம்
    • பூசம் - பூராடம்
  1. ஆயில்யம் - மூலம்
  2. மகம் - ரேவதி
  3. பூரம் - உத்திரட்டாதி
  4. உத்திரம் - பூரட்டாதி
  5. அஸ்தம் - சதயம்
  6. மிருகசீரிடம் - சித்திரை , அவிட்டம்.
  7. திருவாதிரை - திருவோணம்


பொருத்தமுள்ள நட்சத்திரங்கள்
பூரட்டாதி – அவிட்டம்
புனர்பூசம் – ஆயில்யம்
திருவாதிரை – மூலம்
ரோகிணி – மிருகசீரிடம்
பரணி – ரேவதி
அனுஷம் – கேட்டை
அசுவினி – சதயம்
பூராடம் – திருவோணம்
உத்திரம் – உத்திரட்டாதி
மகம் – பூரம்
கிருத்திகை – பூசம்
ஹஸ்தம் – சுவாதி
சித்திரை - விசாகம்
 
 

No comments:

Post a Comment