jaga flash news

Thursday 8 August 2013

கசக்கும் இனிப்பு வியாதி யாருக்கு வரும்

சர்க்கரை வியாதி

கசக்கும் இனிப்பு வியாதி யாருக்கு வரும்  

     இன்றைய சமுதாயத்தில் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையே மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல்வேறு நோய்கள் இருந்தாலும் சர்க்கரை வியாதி என்ற நோய் மனிதனை மெல்ல மெல்ல சக்தியை இழக்க கூடிய நோயாக விளங்குகிறது. உடலில் எந்த விதமான வலியோ அறிகுறியோ இல்லாமல் உடலில் ஊறுக்குவது தான் சர்க்கரை வியாதியாகும். பலருக்கு  தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதைக் கூட அறியாமல் வாழ்கிறார்கள். சர்க்கரை வியாதி என்பது பரம்பரை வியாதியாகும். மத்திய வயதிலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் சர்க்கரை வியாதி எளிதில் பாதிக்கிறது. உடலில் சோர்வு, எடைக் குறைவு போன்றவை சர்க்கரை வியாதியின் அறிகுறியாகும். மனிதனை அணு அணுவாக பாதிக்கும் இந்த நோய் யாருக்கு உண்டாகிறது.
     
பொதுவாக ஜல ராசிகள் என வர்ணிக்கக் கூடிய கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் 2 அல்லது 3 பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி எளிதில் உண்டாகிறது. ஜென்ம லக்னத்திற்கு 6ம் வீட்டில் 2க்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி உண்டாகிறது. கால புருஷ தத்துவப்படி 7வது ராசியான துலா ராசியில் பாவ கிரகங்கள் வலுவாக அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் சிறு நீரக சம்மந்தப் பட்ட பாதிப்புகள் உண்டாகி அதன் மூலம் சர்க்கரை உண்டாகும்.
     
குறிப்பாக துலா ராசியில் 2க்கும் மேற்பட்ட கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி உண்டாகிறது. நவ கிரகங்களில் செவ்வாய் சூரியன் நெருப்பு கிரகங்கள் ஆகும். இக்கிரகங்கள் ஜல ராசிகளில் அமையப் பெற்றாலும் சூரியன் செவ்வாய் இருவரில் ஒருவர் வலுவாக சந்திரன் சுக்கிரனை பார்த்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது. நவ கிரகங்களில் சந்திரன் சுக்கிரன் ஜல கிரகமாகும். இவ்விருவரும் செவ்வாய் சூரியன் போன்ற பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் பலமிழந்து இருந்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது.

     ஜென்ம லக்னத்திற்கு அதிபதி 6ல் அமைந்தாலும் 8ம் அதிபதி 6ல் அமைந்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது.

     பொதுவாக ஜல ராசிகளில் பாவிகள்  அமையப் பெற்றாலும் ஜல கிரகமான சுக்கிரன் சந்திரன் பலமிழந்தாலும் சர்க்கரை வியாதி ஒரு வரை எளிதில் பாதிக்கிறது.

No comments:

Post a Comment