jaga flash news

Thursday, 8 August 2013

மேனியா (mania)எனப்படுவது ஒரு வகை மன நோய்

மேனியா (mania)எனப்படுவது ஒரு வகை மன நோய் .இந்த நோயின் ஒரு நிலைதான் ஹைப்போ மேனியா(Hypo mania) என்பதும்.சில வேளைகளில் இது டிப்பிரசன் (depression)எனப்படும் மனத் தாழ்வு நோயோடு மாறி மாறி வருவதாக இருக்கலாம்.அப்போது அது Bipolar disorderஎனப்படும்.

டிப்பிரசன்(depression) என்றால் என்ன என்று எல்லோரும் ஓரளவேனும் கேள்விப் பட்டு இருப்பீர்கள். மேனியா (mania)என்பாது அதற்கு எதிரான பல அறிகுறிகளைக் கொண்ட நோயாகும்.

1.இந்த நோய் ஏற்பட்டவர்கள் தங்களைப் பற்றி உயர்வான தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

2.அளவுக்கதிகமாக தொடர்ச்சியாக பேசுவார்கள்.

3.தொடர்ச்சியாக பேசினாலும் திடீர் திடீரென பேசுகின்ற விடயங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.அதனால்அவர்கள் தொடர்ச்சியாக பேசினாலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாத விடயங்களயே பேசுவார்கள்.

4.தன் மீது கொண்ட அளவுக்கதிகமான தன்னம்பிக்கையினால் பல விதமான வேலைகளைத் தொடங்குவார்கள்.ஆனால் எந்த வேலையையும் சரியாக முடிக்காமல் இடையிலே விட்டு விட்டு அடுத்த வேலையைத் தொடங்கி விடுவார்கள்.

இருக்கிற வீட்டை விட நல்ல வீடு வேண்டும் என்று வீட்டை உடைத்து விட்டு கடைசியில் ஒரு வீடுகூட இல்லாமல் இருக்குமளவுக்கு இவர்களின் நடவடிக்கை இருக்கலாம்.

5.செக்ஸில் அளவுக்கதிகமான ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

6.உடுத்துகிற உடைகள் பளீச்சென்று எல்லோருக்கும் தெரிவதாக அணிவார்கள்.

7.அளவுக்கதிகமான அலங்காரம் செய்து கொள்வார்கள்.

8.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முற்பட்டு எந்த வேலையையும் முடிக்க மாட்டார்கள்.

இவர்களின் தொடர்ச்சியாக பேசும் ஆற்றல் காரணமாக அவர்கள் சாத்திரம் சொல்பவர்களாக வெளிக்காட்டப் பட முடியும்.

இந்த நிலையை தகுதியான ஒரு மன நிலை வைத்தியரின் உதவியுடன் சுகமாக்கிக் கொள்வதற்கான மருந்துகள் உள்ளன.
 

No comments:

Post a Comment