jaga flash news

Thursday 8 August 2013

EDGING GOD OUT (கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது!) என்பதன் சுருக்கம் தான் EGO!

ஈகோ இல்லாத மனிதர்களே இல்லை எனலாம்!

நண்பர்களுக்குள் ஈகோ வந்தால் “நட்புக்கு வேட்டு”.

கணவன்-மனைவிக்குள் வந்தால் “வாழ்க்கைக்கே வேட்டு”

இப்படி அனைத்து புனிதமான உறவுகளையும் பட்டியல் இடலாம்!

இதோ இந்த கதையை படியுங்கள் !

ஒரு அரசன். ‘தான்’ என்ற அகங்காரம் நிரம்பியவன். வேட்டைக்குச்சென்ற போது ஒரு துறவியை சந்திக்க நேரிட்டது. கண் மூடித்தியானம் செய்து கொண்டிருந்தார் துறவி. ” நான் பல நாடுகளை வென்றவன் அது இது என்றெலாம் தன்னைப் பற்றிக்கூறிய அரசன் எல்லம் தனக்கிருந்தும் தான் நிம்மதி இல்லாமல் இருப்பதாகக்கூறி தனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் என வினாவினான்.

தியானம் கலைந்த்தால் கண்விழித்த துறவி சற்றே கோபமாக, ” நான் செத்தால்தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்..” என்று சொல்லிவிட்ட்டு மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

“நான் எத்தனை பெரிய அரசன் என்னையே அவமானப் படுத்துகிறாயா..?” என்றபடி கொஞ்சமும் சிந்திக்காமல் துறவியைக் கொல்வதற்காக கத்தியை உருவினான் அரசன். ” அட மூடனே நான் என்றால், என்னைச் சொல்லவில்லை.. ‘நான்’ என்ற இறுமாப்பு செத்தால்தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும் ..” என்று விளக்கினார் துறவி.

EDGING GOD OUT (கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது!) என்பதன் சுருக்கம் தான் EGO! அதாவது நம்மை விட்டு ஆனந்தம் அதாவது ஆண்டவன் வெளியேறும் நிலைதான் ஈகோ.

அது உன்னை அழிப்பது மட்டுமின்றி, உன் சுற்றத்தாரையும் அழித்து விடும்.

தோழர்கள்,பிரியமானவர்கள்,பாசமானவர்கள்,இப்படி உன் மேல் அக்கறை கொண்டுள்ள பலரிடம் இருந்து உன்னை பிரித்து தனித்தீவாக்கி உன்னை நிர்மூலம் செய்து விடும்!

நண்பர்களே! இந்த ஈகோ என்னும் தலைக்கணம் நமக்கு தேவைதானா?

சற்றே சிந்தியுங்கள்!

மனைவியிடம் ஈகோ பார்க்காதீர்கள்:வாழ்வில் விரிசல் ஏற்படும்

எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!.

எனவே அனைத்து விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

அப்புறம் பாருங்கள் உங்கள் வார்த்தைக்கு சரி என்ற பதிலைத் தவிர வேறு எதையும் யோசிக்கமாட்டார் உங்கள் மனைவி. பிறகு தெளிந்த நீரோடை போல வாழ்க்கை தெளிவாக செல்லும். வேலைக்கு செல்லும் தம்பதியர்கள் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் உபயோகமாக செலவழியுங்கள். அந்த நேரத்தில் சீரியஸ் பேச்சுக்கள் வேண்டாமே.

ஏனொனில் இந்த பேச்சு தான் இருவருக்குள்ளும் ஈகோவை வளர்க்கும். அது உங்களின் சந்தோசத்தை பறித்துவிடும். வார விடுமுறை நாட்களை உங்கள் இருவருக்காக மட்டுமே ஒதுக்குங்கள் அந்த நாட்களில் கூட பார்ட்டி நண்பர்கள் வீடு என பொழுதை கழிக்க வேண்டாம்.

நன்றாக இருவரும் சேர்ந்து ஓய்வெடுங்கள். அது அடுத்த வாரத்திற்கான உற்சாகத்தை அளிக்கும். என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள்.

1 comment: