jaga flash news

Saturday, 27 September 2014

ஹால்மார்க் கேள்விகள் சந்தேகங்கள்

தங்கம் பற்றிய சில தகவல்கள் - ஹால்மார்க் கேள்விகள் சந்தேகங்கள்



ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டதால் மட்டும் தரம் உயர்ந்த தங்கம் என நினைக்கக்கூடாது.

தங்கம் எத்தனை கேரட்டில் உள்ளது என்பதை தெரிவிப்பதுதான் ஹால்மார்க் முத்திரை. அதாவது 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) காரட் நகைகளுக்கும் இந்த முத்திரை போடப்படும்.. அதனால், எந்த காரட்டுக்கான ஹால்மார்க் முத்திரை இடப்பட்டிருக்கிறது என்று பார்ப்பது அவசியமாம்.

இதையெல்லாம் தாண்டி, எத்தனை காரட்டுக்கான முத்திரை என்று பார்த்து தங்கம் வாங்கினாலும்...
ஹால்மார்க் சீல் இருக்குமாம். ஆனால் ஹால்மார்க் முத்திரை வைப்பதற்கு அனைத்து நகைகளையும் தனித்தனியாக செக் செய்வதில்லை என்பதால் தரக் குறைவான நகையும் இருக்கலாமாம்.
சரி..கடை சீல் இருப்பதால் அந்தக் கடை, தரக் குறைவுக்கு பொறுப்பு ஏற்குமா என்றால் அதுவும் ஏற்காதாம்.
மொத்தத்தில்..
யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள். [courtesy -Vikatan ]

ஹால்மார்க் வந்தது எப்படி?

தங்கத்தின் மீது ஹால்மார்க் முத்திரை பதிக்கும் வழக்கம் 13 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் தொடங்கியது. பின்னர் அது இங்கிலாந்துக்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற பொற்கொல்லர் அரங்கில் (Goldsmiths' Hall) வழக்கமானது. இந்த பொற்கொல்லர் அரங்கில்தான் தங்கத்தின் சுத்தத்துக்கான பொற்கொல்லர் 'முத்திரை' அந்த காலத்தில் பதிக்கப்பட்டு வந்தது. அந்த Goldsmith's Hall என்ற சொல்லே காலப்போக்கில் மருவி Hallmark என்றாகிவிட்டது.

கேரட்

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.
சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) அலுவலகம் இருக்கிறது.
தங்க நகைகளுக்கு இனி 'ஹால்மார்க் முத்திரை' கட்டாயம்!
நுகர்வோர் நலன் கருதி, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1986 ஆம் ஆண்டின் இந்திய தரச் சட்டத்தில் (Bureau of Indian Standards-BIS) திருத்தம் கொண்டு வர ஒப்புதல் கொடுத்துள்ளது.

http://tamizhviswakarma.blogspot.in/2012/01/blog-post.html

பி.ஐ.எஸ்., முத்திரை : பொதுமக்கள், தரம் குறைவான தங்க, வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.,), "ஹால்மார்க்' முத்திரைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட, " ஹால்மார்க்' மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள், வியாபாரிகள் தரும் தங்கத்தை மதிப்பீடு செய்து, அதன் தரம் குறித்து பதிவு செய்து தருவர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துவாரா நகரில், விசாகா, "ஹால்மார்க்' மையம் உள்ளது. தரமில்லாத நகைகளுக்கும், "ஹால்மார்க்' முத்திரையை பதிப்பது தெரிய வந்ததால், அந்த மையம், முத்திரை பதிக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது.
தடையை மீறியும், அந்த நிறுவனம், "ஹால்மார்க்' முத்திரை பதிக்கும் பணியில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து, நேற்று முன்தினம், இந்திர தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தடையை மீறி, விதிமுறைக்கு மாறாக, வியாபாரிகள் தரும் நகைகளுக்கு, முத்திரையிடுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மையத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்திர தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள மையம் ஒன்றில், நகைகளை பரிசோதனை செய்யாமலேயே, "ஹால்மார்க்' முத்திரை பதிவது கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தகவல் தெரிவிக்கலாம் : இதுகுறித்து, இந்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: "ஹால்மார்க்' முத்திரையிடுவதில் முறைகேடு நடப்பது தெரிந்தால், "துணை இயக்குனர் ஜெனரல் (தெற்கு), இந்திய தர நிர்ணய அமைவனம், தென் பிராந்திய அலுவலகம், நான்காவது குறுக்குத்தெரு, தரமணி, சென்னை -113' என்ற முகவரி தெரிவிக்கலாம்; தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கும் நகைகளின் உண்மயான மதிப்பு குறித்து சரியாக தெரிவதில்லை. நகைகளை வாங்குவோருக்கு, அது 22 காரட்டா, 20 காரட்டா என்பதில் சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
இதைப் பயன்படுத்தி, ஒரு சில கடைகளில் 20 காரட் தங்க நகைகளை 22 காரட் என்று கூறி விற்பனை செய்வதாக புகார் கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை வாங்குவதே சிறந்தது.
÷தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் இந்திய தர நிர்ணய நிறுவனம் (பி.ஐ.எஸ்.) 2000-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தில், ஹால்மார்க் தங்க நகைகளை விற்க விரும்பும் வியாபாரிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
÷இவ்வாறு பதிவுபெற்ற வியாபாரிகள் மட்டுமே ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும்.
5 முத்திரைகள்: ஹால்மார்க் தங்க நகைகளில் பி.ஐ.எஸ் முத்திரை, தங்கத்தின் நேர்த்தி முத்திரை (916), ஹால்மார்க் மையத்தின் முத்திரை, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு, நகை விற்பனையாளரின் முத்திரை என 5 முத்திரைகள் காணப்படும்.
இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடி மூலம் இந்த 5 முத்திரைகள் இருக்கின்றனவா? என்பதை சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு முத்திரை குறைந்தாலும் அது ஹால்மார்க் தங்க நகை என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.
23 காரட், 22 காரட், 21 காரட், 18 காரட், 17 காரட், 14 காரட், 9 காரட் நேர்த்தித் தன்மை கொண்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. மேலும் ஹால்மார்க் நகைகளுக்கு அதன் விலையில் இருந்து கூடுதலாக ரூ. 20 மட்டும் செலுத்த வேண்டும். அதாவது நாம் எத்தனை கிராம் நகை வாங்கினாலும், கட்டணம் ரூ. 20 மட்டுமே. நகை வாங்குவதற்கான ஆதாரமாக வாட் வரி செலுத்தப்பட்டு ரசீது பெற்றிருக்க வேண்டும்.
ஹால்மார்க் தங்கநகையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற மையங்களில் சோதனை செய்து கொள்ளலாம். இதற்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


புகார் தெரிவிக்கலாம்:

ஹால்மார்க் அங்கீகாரம் பெறாத நகைக் கடைகளில், ஹால்மார்க் பெயரில் தங்க நகை விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்.
÷இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-2254 1442, 2254 1216 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எனினும், இவற்றை சோதித்துப் பார்த்து வாங்குவது பலருக்கும் இயலாது என்பதால், தங்கத்தின் விலையைக் கருத்தில் கொண்டு அனைத்து நகை வியாபாரிகளும் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment