jaga flash news

Thursday, 18 September 2014

ருத்ராட்சம் அணியும் முறை

ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை




ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்.

பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருட்ராட்சதில் மட்டும்தான்.

ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும்.

ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம்.

No comments:

Post a Comment