jaga flash news

Wednesday 18 February 2015

மாவிலை எதற்கு கட்டுகிறோம் தெரியுமா.

வீட்டின் முன் வாசலில் இப்போ எல்லாம் பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது...அதாவது அதை அலங்காரப்பொருளாக தான் மக்கள் நினைக்கிறார்கள்...மாவிலை எதற்கு கட்டுகிறோம் தெரியுமா...மாவிலையை வீட்டின் வாசலில் கட்டும்போது அந்த இடம் குளிர்ச்சி அடைகிறது விசேஷத்தின் போது நம் வீட்டுக்குள் நுழையும் உறவினர்கள்,நண்பர்கள் இதை புத்துணர்ச்சியாக உணர முடியும்...நிறைய பேர் விசேஷத்தில் கூடும்போது காற்று மாசடையும்..அதை சுத்தப்படுத்தும் கிருமி நாசினியாகவும் மாவிலை திகழ்கிறது...அப்புறம் மா இலை குருவின் அம்சம்..குரு பார்க்க கோடி நன்மை அல்லவா...இன்னும் ஒரு காரணம் மாவிலை பசுமையாக வாசலில் கட்டி தொங்க விடும்போது பார்க்க மங்களகரமாகவும்,பசுமையாகவும் இருக்கே..வீடே ஒரு களையா இருக்குமே அதற்காகவும்தான்...!!!

No comments:

Post a Comment