jaga flash news

Monday, 23 February 2015

கதவீ,ஸ்திரீ,மிருத,ஸாஷாத் வந்தியை

நான்குவிதமான மலடிகளுக்கான தோஷங்கள்.
முத்துப்பிள்ளை.
இந்த பிரபஞ்சத்தில் பரிணாமத் தோற்றத்தில் தான் உயிரினங்கள் பல்கிப் பெருகியுள்ளன. எல்லா உயிரினங்களிலும் இனக்கவர்ச்சியின் மூலமே, தங்களின் மரபணுக்களைக் ஒவ்வொரு தலைமுறைகளாக, காலங் காலமாக கடத்தி வருகின்றன. இதில் எந்த உயிரினமாக இருந்தாலும், தன் சந்ததிகளை உருவாக்க முடியாதவைகளும் உண்டு. சந்ததிகளை உருவாக்க முடியாத, எந்த உயிரினமும் வீணான உயிரினமாகக் கருதப்படும். அவைகளை, “மலடு” என்று ஒதுக்கப்படுகிறது.
இந்த “மலடை” நான்கு வகையாக, நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவைகளை, “வந்தியை” தோஷம் என்றழைக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------
1) கதவீ வந்தியா :
பெண் குழந்தைகளை மட்டும் எவள் பெற்று எடுக்கிறாளோ, அவள் “ புருஷ வந்தியை” என்றும் அழைக்கப்படுவாள்.
----------------------------------------------------------------------------------------
2) ஸ்திரீ வந்தியை;
எவள் ஆண்குழந்தையை மட்டும் பெறுபவளும், பெண்குழந்தையை பெற முடியாதவளையும், “ஸ்திரீ வந்தியை” என அழைக்கப்படுவாள்.
-----------------------------------------------------------------------------------------
3) , வந்தியை:
எவளுக்கு குழந்தைகள் பிறந்து இறந்து விடுகின்றதோ, அவளுக்கு, “மிருத வந்தியை” என்று பெயர்.
-------------------------------------------------------------------------------------------
4) ஸாஷாத் வந்தியை:
எவளொருத்தி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறாளோ, அவளே, “ஸாஷாத் வந்தியை” என்று அழைக்கப்படுகிறாள்.
வடமொழி நூல்களில் சொல்வது உண்மையான பட்சத்தில், ஆண்பெண் குழந்தைகளைக் கொண்ட தம்பதிகள் மட்டுமே, புத்திர தோஷமற்றவர்கள் என்று ஆகிறது
1). புருஷ வந்தியை எனும் காகவந்தியா தோஷம்:
இலக்கினத்திற்கு எட்டாமிடத்தில் சனியும், சூரியனும் கூடியிருந்தாலும், அல்லது இவர்களின் சொந்த வீடுகளில் கூடியிருந்தாலும்,
இதே அமைப்பில் சந்திரனும், புதனும் கூடினாலும், அவர்களின் வீடுகளில் கூடியிருந்தாலும், ஜாதகர்க்கு ஆண் சந்ததி கிடைக்கவாய்ப்பில்லை. பெண் சந்ததியே உண்டாகும்
 மிருத வந்திய தோஷம்:
ஜாதகத்தில் சுக்கிரன், குருவுடன் செவ்வாய் கூடியிருந்தால், கர்ப்பம் அழியும், அல்லது குழந்தை இறக்கும். இந்த அமைப்புடையவர்க்கு இலக்கினத்திலோ, எட்டாமிடத்திலோ கோள்கள் இருப்பது இந்த கெட்ட நிலையை மாற்றி, நல்ல நிலையை உருவாக்கும்.
மேஷம், விருச்சிகத்தில் செவ்வாயுடன் சுக்கிரன் கூடியிருந்து, இலக்கினத்தில் சந்திரன் இருந்து, பாவர்களால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகரோ, ஜாதகியோ குழந்தைப் பெற்றுக் கொள்ள இயலாதவராக இருப்பார்.
இலக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்து, சனியால் பார்க்கப்பட்டால், கருச்சிதைவு ஏற்படும். இலக்கினத்திற்கு ஏழில் சூரியனும், இராகுவும் கூடியிருந்தாலும், இலக்கினத்திற்கு ஏழில் சூரியன் இருந்து இராகுவின் சாரம் வாங்கியிருந்தாலும், அல்லது இராகு இருந்து சூரியன் சாரம் வாங்கினாலும் கருச்சிதைவோ, குழந்தை பிறந்து இறத்தலோ ஏற்படும்.
குழந்தையைத் தரும் ஐந்தாமதிபதிக்கோ, ஐந்தாமிடத்துக்கோ, சந்திரன், சனி, செவ்வாய் இம்மூன்றுக்கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால், மிருத வந்தியா தோஷம் ஏற்படும். அதாவது கருச்சிதைவு ஏற்படும்.

1 comment:

  1. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் என அழகாகச் சொல்லலாமே. மலடி என்பது, சுத்த தமிழாக இருந்தாலும், இந்த வார்த்தை, பலர் மனதை நோகச் செய்வதாக இருக்கும் அல்லவா !.

    ReplyDelete