jaga flash news

Tuesday 17 February 2015

தனது மகன் அல்லது மகள் என்றாலும் கூட, சுபகாரியங்களில் கணவனை இழந்த பெண்களை கலந்துகொள்ள அனுமதிப்பதில்லையே இதற்க்கு என்ன காரணம்? சாஸ்திரம் தான் இப்படி அறிவுறுத்துகிறது என்கிறார்களே இது உண்மையா ?

தனது மகன் அல்லது மகள் என்றாலும் கூட, சுபகாரியங்களில் கணவனை இழந்த பெண்களை கலந்துகொள்ள அனுமதிப்பதில்லையே இதற்க்கு என்ன காரணம்? சாஸ்திரம் தான் இப்படி அறிவுறுத்துகிறது என்கிறார்களே இது உண்மையா ?



எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த சாஸ்திரமும் கணவனை இழந்த பெண்களை சுபகாரிங்களில் கலந்துகொள்ளகூடாது என்று அறிவுறுத்தியதாக தெரியவில்லை சகோதரி அவர்களே ! 

மேலும் பெரியோர்கள் கணவனை இழந்த பெண்கள் சுபகாரியங்களுக்கு தவிர்த்ததிர்க்கு உண்டான உண்மை காரணம், கணவனை இழந்த பெண்கள் சுப காரியங்களில் கலந்துகொள்ளும் பொழுது மனோ ரீதியான சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் என்பதாலும், தனது நிலையை பற்றிய நினைத்து  தாழ்வு மனப்பான்மை ஏற்பட கூடும் என்பதாலும், மற்றவர்கள் சந்தோஷமாக தம்பதியாக கலந்துகொள்ளும் பொழுது தன்னால் இயலவில்லை என்ற மனக்கவலை ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தாலும், சுப காரியங்களில் கணவனை இழந்த பெண்களை கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுருத்தியிருக்க கூடும் .

இதுவே நாளடைவில் பிற்போக்கு தனமான செய்கையாக மாறியிருக்க கூடும், ஆக கணவனை இழந்த பெண்களின் நலன் கருதியே பெரியவர்கள் சுப காரியங்களில் தவிர்த்திருக்க வாய்ப்பு உண்டு, மற்றபடி சாஸ்திரம் சொல்கிறது என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து , இறை அருளுக்கு தெரியாத? உயிர்கள் அனைத்தும் ஒன்று என்று , மனிதனுக்குள் தானே, இத்தனை பிரிவினைகள், வேறுபாடுகள்  இறை நிலைக்கு ஏது வேறுபாடு, தற்பொழுது நடந்துகொண்டு இருக்கும் 21ம் நூற்றாண்டில் இப்படி பட்ட அவலங்கள் இருப்பதை நினைத்து, நாம் அனைவரும் வருந்த வேண்டும் என்பதே உண்மை.

ஆகவே சகோதரி அவர்களே ! தாங்கள் தங்களின் குழந்தைகளின் சுபகாரியங்களில் கலந்துகொள்ள எந்த சாஸ்திரமும் தடை சொல்லவில்லை என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள் , மற்றவர்களை விட நல்ல மனதுடன் தாங்கள் வாழ்த்தும் வாழ்த்துகள் அனைத்தும் தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் , நல்லாசியையும் வாரி வழங்கும் என்பதே உண்மை, ஆக தாங்கள் எவ்விதத்திலும் மனவருத்தம் கொள்ளாமல் தங்களின் குழந்தைகளை ஆசிர்வாதம் செய்யுங்கள் , அவர்கள் வாழையடி வாழையாக செழித்து, 16வகை செல்வமும் பெற்று நீண்ட ஆயுளும், நிறைசெல்வமும், உயர்புகழும்,
மெய்ஞானத்தையும் பெற்று வளமுடன் வாழட்டும்.

1 comment:

  1. தாங்கள் கூறியது, ஒருவகையில் சரியெனப்பட்டாலும், இந்து முறைப்படி, ஒரு சுமங்கலி, பூவும், பொட்டுமாக இருந்துவிட்டு, கணவர் இறந்த பின் அமங்கலியாக காட்சி அளிப்பது, ஒரு நல்ல செயல்கள் செய்யத் துவங்கும்போது, அவர்களுக்கே தானாகவே இது முறையல்ல என மனதளவில் அறிந்து ஒதுங்கிக் கொள்வார்கள். எதிர்பாராமல், அவர்கள் எதிர்கொண்டால், மற்றவர்கள் அவர்களை அசிங்கப்படுத்தாது, செய்யும் செயல் நன்றாகவேயிருக்கும் என நினைத்து சென்று பாருங்கள்,நிச்சயமாகவே, பெரிய ஆசீர்வாதமாக இருக்கும் என்பது தான் உண்மை.

    ReplyDelete