jaga flash news

Tuesday, 17 February 2015

கோத்திரம

கோத்திரம என்பது குடும்பப் பெயர் போன்றதாகும். வர்ணாச்ரம தர்மப்படி அனைத்துப் பிரிவினருக்கும் கோத்திரங்கள் உண்டு. வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால் அவர்களின் பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. பால கோத்திரம், பாரத்வாசக் கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் . 

வேதங்களின் படி ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் சகோதர சகோதரிகளாவர். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது சமயப்படி குற்றமாகும். கோத்திரம் என்ற சொல்லுக்கு பசு-எழுத்தாணி என்று பொருளாகும். அக்காலத்தில் பசுக்கள் ஒரு குடும்பத்தின் விலைமதிக்கமுடியாத சொத்தாக கருதியதால் குடும்பப் பெயர் என்ற சொல்லுக்கு கோத்திரம் என்ற பெயர் வந்ததது.

சகோதரன் என்ற சொல் சக கோத்திரன் என்ற வார்த்தையிலிருந்தும்,சகோதரி என்ற சொல் சக கோத்திரி என்ற வார்த்தையிலிருந்தும் வந்ததாகும்.

No comments:

Post a Comment