jaga flash news

Tuesday, 17 February 2015

பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவகம்

திருமண பொருத்தம் காணும் பொழுது பெண்களின் ஜாதகத்தில், லக்கினத்தில் இருந்து 8ம் பாவகமான ஆயுள் ஸ்தான அமைப்பிற்கு முக்கியத்துவம் தந்து ஜோதிடர்கள் பொருத்தம் காண்பது உண்டு, பொதுவாக இது குறிப்பிட்ட பெண்ணுக்கு ஆயுள் பாவகமாக வந்த போதிலும், தனது வாழ்க்கை துணையை குறிக்கும் 7ம் பாவகத்திற்க்கு 2ம் பாவகமாக வருவது, ஜாதகியின் கணவனுக்கு குடும்ப ஸ்தான அமைப்பை தெளிவாக தெரிந்துகொள்ள உதவும், அதாவது பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவக வலிமை வைத்து, ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து (7க்கு 2ம் வீடான 8ம் பாவகத்தை ) குடும்ப வாழ்க்கையை எவ்வாறு வாழும் யோகத்தை தரும் என்பதை, ஜாதகியின் ஜாதக அமைப்பில் இருந்தே துல்லியமாக அறிந்துகொள்ள இயலும் என்பதால் பெண்ணின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்திற்க்கு முக்கியத்துவம் தந்து பலன் காண்கின்றனர்.

உதாரணமாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பின், ஜாதகி தனது திருமணதிற்கு பிறகு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது கணவன் அமைப்பில் இருந்து முழு ஆதரவும், அவரின் இனிமையான பேச்சும் ஜாதகிக்கு மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்கும், தனது கணவனுக்கு அதிகபடியான வருமான வாய்ப்பையும், திடீர் அதிர்ஷ்ட யோகங்களையும் ஜாதகியின் 8ம் பாவகம் வாரி வழங்கும், ஜாதகியை திருமணம் செய்ததால் ஜாதகியின் கணவர் சிறந்த யோக வாழ்க்கையை பெறுவார், சில ஆண்கள் திருமணதிற்கு பிறகு அபரிவிதமான வளர்ச்சியை பெறுவதற்கு அவர்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 8ம் பாவகம் வலிமை பெற்று அமைவதே காரணம் அன்பர்களே.

பெண்களின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் வலிமை பெறுவது, ஜாதகிக்கு மட்டுமல்ல, ஜாதகியின் குடும்ப வாழ்க்கைக்கே சிறந்த யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகி திருமணம் நடைபெற்று புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த அந்த கணத்தில் இருந்து ஜாதகியின் யோக வாழ்க்கை ஆரம்பமாகிவிடும், தனது கணவன் இதுவரை சாதாரண தொழில் அல்லது பணியை மேற்கொண்டு இருந்தால், இவரது வருகைக்கு பிறகு அபரிவிதமான வருமான வாய்ப்பை தனது கணவன் பெறுவதும், தொழில் முன்னேற்றங்களை அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவதும் கண்முன்னே தெளிவாக தெரியும், இதுவரை சமுதாயத்தில் சாதாரண மனிதராக இருந்தவருக்கு பல பெரிய மனிதர்களின் அறிமுகமும், பிரபல்யமும் உண்டாகும், ஜாதகரின் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும், பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவின் மூலம் ஜாதகர் 100% விகித வெற்றி வாய்ப்பை பெறுவார் என்பது உறுதி.

தனது கணவன் ஜாதகியை எப்படி நடத்துவார் என்பதும், எப்படி வைத்திருப்பார் என்பதும் ஜாதகியின் ஆயுள் பாவகமான 8ம் பாவகமே நிர்ணயம் செய்யும், உதாரணமாக சில தம்பதியரின் வாழ்க்கையில் பேச்சு என்பது பல விளைவுகளை ஏற்ப்படுத்தும், சிலரது பேச்சை அவர்களது வாழ்க்கை துணை கேட்காமல் நடந்துகொண்டு ஜாதகியின் மனைதை நோகடிப்பது உண்டு, பெண்களின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெரும் பொழுது இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ வாய்ப்பு என்பதே இல்லை, ஜாதகியின் வாழ்க்கை துணை தனது பேச்சின் மூலம் ஜாதகியின் மனம் எப்பொழுதும்  சந்தோஷமாக வைத்திருக்கு தன்மையுடன் காணப்படுவார், பரஸ்பர அன்புடன் ஜாதகியின் வாழ்க்கை துணை விளங்குவார், ஜாதகியின் எண்ணம் மற்றும் மன நிலை அறிந்து நடந்துகொள்ளும் பேராண்மையை தரும், தனது கணவன் தனது வார்த்தைக்கு கட்டுப்படும் தன்மையையும், தனக்கு தரவேண்டிய மதிப்பு மரியாதையை சிறிதும் குறைவின்றி தரும் யோகத்தை தரும், முரண்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கும்,மனம் நோகும் வண்ணம் தேவையற்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவதும், பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவதும் ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பதம்பார்க்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு, ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு, உபய லக்கினத்திற்கு 7ம் வீடு ) சம்பந்தம் பெறுவது 200% விகித இன்னல்களை தனது கணவன் மற்றும் குடும்ப அமைப்பில் இருந்து அனுபவிக்க வைக்கும், திருமணம் நடைபெற்று ஜாதகி காலடி எடுத்து வைத்த அந்த கணத்தில் இருந்து, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து எவ்வளவு இன்னல்களை அனுபவிக்க இயலுமோ அவ்வளவு துன்பங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், இது ஆண் பெண் இருவரின் ஜாதகதிர்க்கும் பொருந்தும் அன்பர்களே! எனவே  ஜாதக பொருத்தம் காணும் பொழுது வரன், வது இருவரின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகமான 8ம் பாவகதிர்க்கு அதி முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதே முற்றிலும் உண்மை.

8ம் பாவகம் அதிர்ஷ்டத்தை தந்தாலும் திடீரெனவே தரும், துரதிர்ஷ்டத்தை தந்தாலும் திடீரெனவே தரும் என்பதாலேயே, திருமணதிற்கு பிறகு சிலரின் முன்னேற்றம் அபரிவிதமாக இருப்பதும், ஆதாலபாதலத்துக்கு செல்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது அன்பர்களே, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் வீடு வலிமை பெறுவது திருமணதிற்கு பிறகு தம்பதியர் வாழும் யோக வாழ்க்கையை குறிப்பிடும், சிலரது ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெற்று அமையும் பொழுது காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும், அவர்களே திருமணதிற்கு பிறகு தோல்வியை சந்திப்பதற்கு அவர்களது ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் வலிமை பெறாத அமைப்பே காரணமாக இருக்கும், மேலும் பல தம்பதியர் விவாகரத்து பெறுவதற்கும் இந்த ஆயுள் பாவகமே காரணமாக அமைந்து விடுகிறது, இந்த பதிவை காணும் அன்பர்கள் திருமணம் செய்யும் முன் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் எப்படிபட்ட நிலையில் உள்ளது, தனது ஜாதகத்தில் ஆயுள் பாவகம் எப்படி பட்ட நிலையில் உள்ளது என்பதை சிறந்த ஜோதிடரை கொண்டு தெளிவு பெற்ற பிறகு, தங்களது திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள்

No comments:

Post a Comment