jaga flash news

Wednesday 30 March 2016

பற்றற்று வாழ்வதென்றால், அது எப்படி வாழ்வது?

பற்றற்று வாழ்வதென்றால்,
அது எப்படி வாழ்வது?
பற்றற்ற வாழ்க்கையென்றால்
எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவது என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
இருப்பது போதும்,
வருவது வரட்டும்..
போவது போகட்டும்,
மிஞ்சுவது மிஞ்சட்டும்...
என்று நம் வாழ்வில் எந்தவித சலனங்களுக்கும் ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும் என்பதை தான் நம் இந்து மதம் நமக்கு போதிக்கிறது.
என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்.
பத்து லட்சம் வைத்திருப்பவர் பற்றற்ற வாழ்க்கை கொண்டவரா என்று கேட்டார். ஆமாம். ஆனால் அதில் ஒரு நிபந்தனை. அதில் ஏற்படும் அதிகரிப்பு அவரை மகிழ்ச்சியடைய செய்யகூடாது. அதில் ஏற்படும் குறைவு அவரை கவலையடைய செய்யாதிருக்க வேண்டுமென்றேன். ஆக, செல்வம்
இல்லை என்பதல்ல பற்றற்ற வாழ்க்கை. அந்தச் செல்வம் அவரது உள்ளத்தின் கவலையாக இருக்கக்கூடாது என்பதுதான் பற்றற்ற வாழ்க்கையாகும்.

2 comments:

  1. சுருங்கக்கூறின், பணம் தேவை.பணமே வாழ்க்கையாகாது.

    ReplyDelete
  2. அய்யா! வெ.சாமி அவர்களின் ஆன்மீகத் தகவல் ஒரு தனி அழகு.

    ReplyDelete