jaga flash news

Tuesday 22 March 2016

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!
நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா ?
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் 
கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.
இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.
செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.
தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’.
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான் !!!

1 comment:

  1. அய்யா.. இப்படி செம்பு, செம்புன்னு அறைகூவல் விட்டுகிட்டே இருந்திங்கன்னா, செம்பு விலையை கிடுகிடுன்னு ஏத்திடப் போறாங்க..

    நம் பெற்றோர்கள்,நம்மை வளர்த்த
    தெல்லாம் இப்படிதான். அந்த காலத்தில் ஆஸ்பத்திரி கிடையாது. எல்லா மருத்துவமும், நம் பெற்றோர்கள் வைத்திருந்த செம்பும், பித்தளை பாத்திரத்திலும் தான் அடங்கியிருந்தது.

    இப்போ, மூட்டைகட்டி பரண்ணில் போட்டுவிடுகிறார்கள். அடுத்த பொங்கலுக்கு தான் மூட்டைய கீழே இறக்குவாங்க. இன்னும் ஒரு சிலர், இதன் மதிப்பு தெரியாமல், பழைய கடையில் தள்ளிவிட்டு, அத்தனையும் அலாய் பாத்திரங்களாக, அள்ளிக்கொண்டு, சரவணன்ல வாங்கினேன், திருச்சி கணேஷ்ல வாங்கினேன், அத ஒரு கெளரவமா வேற சொல்லிகிட்டு வாராங்க. காலத்தின் கூறுபாடு. இன்னும் சொல்லப்போனால், நடிகர் கருணாஸ் ஒரு காமெடியில் செய்தமாதிரி, பெரிய சிட்டிக்குள், தன் சொந்த பொருளை கொண்டு செல்வது போல், திருடர்கள் டெம்போ வைத்து, அள்ளி சென்று விடு
    கிறார்கள்.

    எது, எப்படி இருந்தாலும், என்னைப்போல் உள்ளவர்களுக்கு,
    செம்பு, பித்தளையில்லாமல் இருக்க முடியாது. இதையே புழக்கத்திற்கு வைத்து பழகியவர்களால், அதை விட முடியாது. I mean , செம்பின் அருமை தெரிந்தவர்கள், ஆஸ்பத்திரி வாசலை மிதிக்க விரும்பாதவர்கள், சம்பளப் பணத்தில், ஆஸ்பத்திரி செலவு என்று பட்ஜெட் போட விரும்பாதவர்கள், வீட்டில் இருக்கும், அத்தனை, அலுமினியக் குப்பைகளையும் கடையில் போட்டுவிட்டு, மீண்டும், பழைய செம்புக்கே அனைவரும் வந்தால், மருத்துவர்கள், கன்னத்தில் கை வைத்து உட்கார வேண்டிய சூழ்நிலை வந்திடும்ங்கோ. தாளிக்கிற, எண்ணெய் சட்டி, பணியாரக்கல், அரிப்பு, செம்பு, கூஜா, ஜக், டம்ளர் ..
    கும்பா, கரண்டி, வாழி, சம்படம், என்று, அனைத்துமே, பித்தளையிலும் கிடைக்கும், செம்பிலும் கிடைக்கும். வாங்கி பயனடையுங்கள். ஒரு தம்ளர் தண்ணீர் அருந்தினாலும், பயமில்லாமல் அருந்தலாம். ஆனால், குடத்திலோ, பானையிலோ, சுத்தமாக துலக்கி, மூடி வைத்து, அருந்துங்கள்.
    வாழ்க வளமுடன்.
    என்றும் நட்புடன் உங்கள் Jansi Kannan

    ReplyDelete