jaga flash news

Sunday 13 March 2016

செரிமான பிரச்சினைக்கு சில தீர்வுகள்

செரிமான பிரச்சினைக்கு சில தீர்வுகள்










வெதுவெதுப்பான தண்ணீர்

 உணவு செரிமானமாவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே வெதுவெதுப்பான தண்ணீரை பருகவும்.அதிலும் குறிப்பாக காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரைப் பருகினால், உடலில் இருக்கும் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, செரிமானத்திற்குத் தேவையான திரவத்தை மட்டும் சுரக்கச் செய்துவிடும். அதன் மூலம் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறும்.எலுமிச்சைப் பழச்சாறுகாலையில் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுவதில் விருப்பம் இல்லை என்றால் அதற்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாற்றை அருந்தலாம்.தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை தவறாமல் அருந்தி வந்தால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவற்றை நீக்கி, அருமையான செரிமானத்திற்கு வழங்கும்.மசாஜ்செரிமானம் தங்கு தடையின்றி நடைபெற ஓய்வாக இருக்கும் போது, வயிற்றுப் பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய் மசாஜ் செரிமானக் கேளாறை நீக்கிவிடும்.நார்ச்சத்துள்ள உணவுகள்நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான செர்ரி, திராட்சை, மிளகு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.கொழுப்புச்சத்துசெரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், கண்டிப்பாக செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். ஆகவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.வேண்டுமெனில் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை குறைவாக சாப்பிட்டு, மற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.வைட்டமின் சி உணவுகள்உணவில் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளான ப்ராக்கோலி, தக்காளி, கிவி பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.மேலும் பழங்கள் மற்றும் காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் அவை மலச்சிக்கலை நீக்கி எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கும்.இறைச்சிஅசைவப் பிரியராக இருந்தால், கொழுப்புச்சத்து அதிகமுள்ள இறைச்சியால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.எனவே கொழுப்புச்சத்து குறைந்த இறைச்சிகள் மற்றும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஆகியவற்றை உண்ணலாம். அது செரிமானக் கோளாறை அதிகம் ஏற்படுத்தாது.உடற்பயிற்சிதினமும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமானப் பிரச்சனைகள் வராது. மேலும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.தயிர்கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத தயிரைத் தினமும் பருகி வருவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.தயிர் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்குகிறது. அதோடு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும் செரிமானப் பிரச்சனைகளையும் நீக்குகிறது.அதிகமான உணவுதேவைக்கு அதிகமான உணவை உட்கொண்டால், அது செரிமானப் பிரச்சனைகளை உருவாக்கும். எனவே அளவாக உண்பது எப்போதும் நன்மையைத் தரும்.

No comments:

Post a Comment