jaga flash news

Saturday 28 November 2020

ராகு/கேதுவை எவ்வாறு வசியம் செய்வது...!

ராகு/கேதுவை எவ்வாறு வசியம் செய்வது...!

தலைப்பை பார்த்து நான் மாந்திரீகன் என்று நினைக்கவேண்டாம், ராகு/கேதுவை எப்படி தான் சமாளிப்பது அதாவது வசீகரிப்பது, ஒரு கிரகத்தை எவ்வாறு வசியம் செய்வது மிக சுலபம் அந்த கிரகத்தின் குணாதிசயம்/செயல்பாட்டையும் புரிந்து தெளிந்தால் அதன் போக்கில் போய் அந்த கிரக காரகங்களை எதிர்கொள்ளும் வலிமையை பெறலாம், இந்த பதிவில் ராகு/கேதுவை பற்றி நான் அறிந்ததை பகிர்கிறேன்...!

ராகு நின்ற வீட்டில் ஆசையை பெருக்குவார் அல்லது அந்த வீட்டின் காரகங்களில் ஜாதகரை கர்மம் செய்ய வைப்பார் (நல் கர்மம், தீய கர்மம் அவரவர் ஜாதகம் பொறுத்தது) ராகு நின்ற வீட்டில் ஜாதகருக்கு அவர் முன் ஜென்மத்தில் சேர்த்த கர்மத்தை திருத்தும் வாய்ப்பை தருவார், அதாவது ஒருவருக்கு கர்மம் செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்து அந்த வாய்ப்பை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்று கண்காணிப்பார், நல் கர்மமும் சரி, தீய கர்மமும் சரி ராகு இவ்வாறே சோதிப்பார், உங்கள் முன்னர் உங்கள் ஆசையை/உங்கள் உணர்ச்சியை (அது நல்லதோ/கெட்டதோ) தூண்டும் விதத்தில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பார் அதை நாம் எவ்வாறு கையாள்கிறோமோ அதன் கர்மபலனை கேது குறித்து கொள்வார், ஆகவே ராகுவை எவ்வாறு சமாளிக்க வேண்டும் தெரியுமா ஒரு உதாரணம்: 2ல் ராகு நிற்கும் போது ஜாதகருக்கு நிலையான வருமானம் ஈட்டும் வாய்ப்பை பறித்து அவர் பொய் உரைத்து வருமான வாய்ப்பை பெரும்படி செய்வார், இப்போது ஜாதகர் என்ன செய்ய வேண்டும் உரைக்கும் பொய் சற்று சமாளிக்க கூடியதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும், அவ்வாறு செய்தால் ஜாதகருக்கு அந்த பொய்யால் தீய கர்மம் சேராது அதே நேரத்தில் நல்ல கர்மமும் சேர்க்க இயலாது, ஆனால் தீமை சேராமல் இருப்பதே வெற்றிதானே ஆகவே ராகுவை இவ்வாறு தான் சமாளிக்க வேண்டும், இன்னும் கூறபோனால் சிறு சிறு வீண் பொய் கூறி ஜாதகர் ராகுவை சமநிலை செய்யலாம்...!

கேது நின்ற வீடு முன்வினை பயன் ஒளிந்துள்ள இடம், இந்த வீட்டில் தான் பெரும்பாலான ஜாதகர்கள் சுழன்று கொண்டிருப்பார்கள் நீங்கள் உங்கள் ஜாதகத்தை கையில் எடுத்து பார்த்து ஆராய்ந்தால் இந்த விஷயம் பிடிபடும், கேது தான் நின்ற வீட்டின் காரகங்களில் ஜாதகரை கட்டிபோடுவார், அங்கே தான் நின்ற கர்மபலனை ஜாதகர் உணரவேண்டும் என்பதற்காக கேது அவ்வாறு செயல்படுகிறார், ஆனால் ஜாதகருக்கோ அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தால் போதும் என்றிருக்கும், எப்போதுமே கேது நின்ற வீட்டை உதாசீனம் செய்ய கூடாது, முதலில் கேது என்ன கூற வருகிறார் என்பதை காதுகொடுத்து கேட்க்கவேண்டும் ஏனெனில் அவரிடம் தானே உங்கள் முன்வினை பயன்கள் அனைத்து உள்ளது, பின்ன அவர் தானே அதை எதிர்கொள்ளும் வழியை கூற வேண்டும், இதை காதுகொடுத்து கேட்காமல் செயல்படுவது தவறு, மேலும் கேது நின்ற வீட்டை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும், அவ்வாறு புரிந்து கொண்டால் கேதுவை எதிர்கொள்வது சுலபம், உதாரணமாக கேது 9ல் நின்றால் ஒரு இடத்தில் நிற்காமல் தினமும் குறைந்தது 2 கிலோமீட்டர் நடைபயணம் செய்யுங்கள் (முக்கியமாக இந்த நடைபயணம் எந்த குறிக்கோளும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்), ஆன்மீக வழிபாட்டில் ரகசியம் காக்கவும், எப்போதுமே கேதுவுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பிடிக்காது ஆகவே கேது நின்ற வீட்டின் காரகங்களில் ரகசியம் கடைபிடிக்க கேதுவை எளிதாக எதிர்கொள்ளாலம்...!


No comments:

Post a Comment