jaga flash news

Monday 23 November 2020

நான்காம் அதிபதி...

சொத்துக்கள் அதிகமாக சுகம் கெடும்.நான்காம் அதிபதி சுகத்தையும் உங்கள் கல்வியையும் ,உங்கள் வாகனம் மற்றும் அசையா சொத்தையும் குறிக்கும்.

அம்பானி ,டாட்டா எல்லாம் விடுங்க அவர்கள் பூர்வ புண்ணியம் பாக்யம் வலுத்தவர்கள்.அவர்கள் தவிர நம் ஊரில் பெரிய வீடு வாகனம் வைத்திருப்பவர்கள் நிம்மதியாக இல்லை அடிக்கடி டாக்டரை சந்திச்சுட்டே இருக்காங்க .ஏன்

.பொருள் காரகத்துவம் வலுத்தால் உயிர் காரத்துவம் கெடும்.நம் ஊரில்தான் பெரும்பாலும் மனைவி பெயரில் சொத்து எழுதி வெச்சிருவாங்க .காரணம் மனைவி மீது பாசம் மட்டுமில்லை பங்காளி சொத்துக்காக வழக்கு போட முடியாது என்பது மட்டுமில்லை தன்னை காப்பாற்றிக்கொள்ளத்தான்..அந்த மனைவி விரைவில் நோயாளி ஆகி டாக்டருக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்.

கண் திருஷ்டி கொடியது என்றால் நம் பெயரில் இருக்கும் சொத்தும் கொடியது.நிறைய பேர் அஷ்டம சனி ஏழரை சனி நடக்கும் காலத்தில் சொத்தை விற்க சொல்லி இருக்கிறேன்.பாகம் பிரித்து வாரிசுக்கு உயில் எழுதி வெச்சா தப்பிச்சு இன்னும் கொஞ்ச காலம் சுகமா இருக்கலாம்னு சொல்லி இருக்கிறேன்

பலர் நினைப்பது என்னன்னா பசங்க பொண்ணு மேல பாசமா இருப்பாங்க ஆனா சொத்து மேலதான் நம்பிக்கையா இருப்பாங்க சொத்துதான் தனக்கு பாதுகாப்பு சொத்து பணம் இல்லைன்னா பசங்க நம்மை கை விட்டுடுவாங்க துரத்திடுவாங்கன்னு சொத்தை தன் பெயரை விட்டு மாத்தி எழுதி தர மாட்டாங்க.சொத்து அவர்களை நிம்மதியாக வாழ விடுவதில்லை..

சொத்தை நினைத்து பெருமைபட்டுக்கொண்டே காலம் தள்ளுவதே அவர்களுக்கு சுகமாக இருக்கிறது உண்மையான சுகத்தை அனுபவிக்காமல் போய் சேர்ந்து விடுகிறார்கள்.

No comments:

Post a Comment