jaga flash news

Saturday 21 November 2020

மகரலக்னம்

#மகரலக்னம் 
சோதிட  காலசக்கர தத்துவத்தின்  10ம் பாவகம்,பஞ்சபூதத்தில் நிலம்.. கர்மகாரகன் சனி பகவானின் ஆட்சி வீடு... கேந்திரம்..

#மகரம் கும்பம் இரண்டுமே சனி பகவானின் ஆட்சி வீடுகள் என்றாலும்  கும்ப லக்னத்திலிருந்து #மகரலக்னம் யோக அமைப்பில் சற்று மேம்பட்டதுதான்!
இதன் காரணங்களை கும்ப லக்னத்தை பற்றிய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்..

எனினும் இங்கே மகரத்திற்கு சனி சுக்கிரன் இருவரும் முழு யோகர்கள் என்பதை நினைவில் கொள்ளுதல் நன்று!

மகர லக்னகாரர்கள் பொதுவாக கடின உழைப்பாளிகள்! வேலை செய்ய மிகுந்த விருப்பம் உடையவர்களும் கூட

எதையும் விவரித்து நீண்டு பேசும் சுபாவம் உண்டு..
ஒரு விசயம் அல்லது சம்பவத்தை குறித்து கேட்டால் திரைக்கதையாக சம்பவங்களை முன்னிறுத்தி பேசிக் கொண்டே போவார்கள்..
இவர்கள் பெரும்பாலும் ஆடம்பரத்தை விரும்புவதில்லை! 
தன்னை முன்னிலை படுத்தி கொள்ள விரும்புவார்கள். கெட்டபெயர் வாங்கிவிட கூடாது என்பதில் முனைப்பாக செயல்படுவார்கள்.

பொதுவாக  இவர்களுக்கு
#சகோதரர்கள் வகையில் ஆதரவோ பெரிய ஈடுபாடு அன்னியோன்யமோ  இராது!

இவர்கள் பிறரின் தவறுகளை புள்ளிவிபரத்துடன் அம்பலபடுத்துவதில் வல்லவர்கள்..

அதேபோல் தன் செயலுக்கு தனக்கென ஒரு நியாயம்  விளக்கம் அளித்து தன் செயல்பாடுகளை சரி என நிறுவுவதில் வல்லவர்கள் 

பொதுவாக 
மகர லக்னகாரர்கள் நேர்மையை  விரும்புவார்கள்
ஓரளவிற்கு பற்றற்ற நிலையை வெளிப்படுத்துவார்கள்..

எந்த ஒரு லக்னமும் முழுமையான அதன் இயல்பு  தன்மையை அடைய அதன் சுப கிரகங்கள் சரியாக அமைந்து இருத்தல் வேண்டும்..

#லக்னாதிபதி சனி..
பொதுவாக சனி தான் பார்க்கும் இடத்தினை நசிக்கசெய்வார் என்பது சோதிட மொழியாயினும் மகரலக்னத்திற்கு அப்படி முழுமையாக எடுக்க இயலாது...

சனி மகரத்திற்கு 5ல் அமர்வது சிறப்பு..ஓரளவிற்கு புத்திர தாமதம் உண்டாக்கினாலும் இது யோக அமைப்பு ஆகும்..

லக்னத்தில் ஆட்சி பெறுவதும் சிறந்த பலன்களையே உண்டு பண்ணும்..
9ம் இடமான கன்னி யில் அமர்வதும் யோக பலன்கள் உண்டு..

2ல் ஆட்சி பெறுவதும் சரிதான்..

7ல் அமர்வது லக்னாதிபதி  திக் பலம் பெற்று லக்னத்தை பார்க்கும் அமைப்பு என்றாலும் ஜாதகர் சற்று அதீத எண்ணம் சிந்தனைகளில்குழம்புவார்..
ஆழ்மன பயம் சமயங்களில்  மனதை கவ்வி கொள்ளும் ! 
இந்த 7ம் பாவக சனி சந்திரனை பார்ப்பது மேலும்
மனகுழப்பத்தை அதிகரிக்கும்..
மோசமான தசா புத்தி களில் ஜாதகர் மிகவும் மன ரீதியாக பாதிக்கபடுவார்..

10ல் உச்சம் பெற்றாலும் உடனடியாக பெரிய யோகம் என எடுத்து கொள்ள இயலாது..
சுமாரான பலன்களே செய்யும்  சுக்கிரன் நிலை முக்கியம்..

6ம் வீடான மிதுனத்தில் சனி அமர்ந்தாலும் இடம் கொடுத்த புதன் 9ம் வீடான கோணத்தில் ஆட்சி பெறுவது  மிக சிறந்த யோக அமைப்பாகும்..

#புதன்..
மகர லக்னத்திற்கு பாக்கியாதிபதி மற்றும் 6க்குடையவர் இவர். 
லக்னத்தில் ,இரண்டில் அமரலாம்..
5ம் வீட்டில் அமர்வதும் நன்று..
9ல் ஆட்சி பெற்றாலும் யோகமே..
சுக்கிரன் வீடான 10ல் அமர்தலும் சுபமே..
லாபஸ்தானமான 11ல் அமர்ந்தாலும் நற்பலன்கள்  உண்டு..
4ல் அமர்ந்தால் கடன் சுமை அழுத்தும்.. தந்தையார் நிலை கடினம்..

#சூரியன்..
அட்டமாதிபதி சூரியன் பொதுவாக  3ல் மறைதல் நலமே!
11ல் போகலாம் நல்ல யோக பலன்கள் உண்டு..
10ல் அமர்தல் ஒரு வகையில் நன்மை உண்டு..
அரசு ஆதாயம் திடீர் யோகம் என்று  எனினும் கடின முயற்சி எப்போதும் வேண்டும்..குடும்பத்தில் அவ்வப்போது சிறிய சலசலப்பும் சச்சரவு வும் வந்து மறையும்..

#சந்திரன் 
மாரகாதிபதி எனினும் மகர லக்னத்திற்கு  ஏழுக்குடையவராகவும் வருகிறார். எனவே சந்திரன் நிலை முக்கியம்..

#லக்னத்தில்சந்திரன் ஜாதகருக்கு அதீத எண்ண அலைகளை உண்டு பண்ணும் என்றாலும் கணவன் மனைவி ஊடல் மிகுந்து இருந்தாலும் பிரிவு ஏற்படாது 

5ல் உச்சம் பெற்றால் முதலில் பெண் குழந்தை உண்டு..
பூர்வீக தொடர்பில் அல்லது  பெற்றோர்கள் ஊரில்  மணம் ஏற்படும் ..
இரண்டில் சந்திரன்  இருப்பின் குடும்பத்தில்  மனைவி ஆதிக்கம் மிகும். பணவரவு விசயத்தில் இருவருக்குமே மன உளைச்சல்..கவலைகள் வாட்டலாம்!

#சுக்கிரன்..
மகரத்திற்கு 5-10க்குடையவர் மற்றும் யோகாதிபதி ஆவார்..
லக்னத்தில் அமர்வது நன்று..
5ல் ஆட்சி பெறுவதும் யோக பலன்கள் உண்டு.. 
10ஆட்சி பெறலாம்..

மகர லக்னகாரர்கள் களுக்கு சுக்கிரன் சுபமாக அமைந்தால் விரைவில் திருமண பந்தத்திற்கு வழிவகை செய்வார்...

#செவ்வாய். 
மகர லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி..
எனினும் 4,11என்கிற சுப வீடுகளுக்கு அதிபதியாகவும் வருகிறார்..
3ல் மறைந்து சுபத்துவம் பெற்றால் செவ்வாய் காரக நன்மைகளை வழங்குவார் (ரியல் எஸ்டேட்..)
எனினும் சொந்த வீடு அமைய தாமதம் ஆகும்..இதர சுபர் நிலையை பொறுத்தே கிடைக்கும்..
செவ்வாய் சனி சேர்க்கை கூடாது..
செவ்வாய் 8ல் போகலாம்.. நன்மை யே..

#குரு 

இயற்கை சுப கிரகமான குரு பகவான் மகர லக்னத்திற்கு 3,12க்குடைய அசுப ஆதிபத்ய அதிபதியாக வருகிறார்..

எங்கிருந்து இவர் தசா நடத்தினாலும் மேற்படி இரு ஆதிபத்ய எதிர்மறை பலன்களையும் செய்வார் தான்..

குரு மகரத்திற்கு எட்டில் மறைவது நன்று..

9ல் நின்றால்  பக்தி உண்டு  கோயில் விசயத்தில் செலவு செய்வார்.. ஓரளவிற்கு சுப பலன்களும் ஏற்படும்..
தந்தையார் சொத்தினை பெறுவதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும்..
நியாயவானாக இருந்து மற்றவர்களிடம் பெயர் வாங்குவார்..

No comments:

Post a Comment