jaga flash news

Thursday 19 November 2020

கிரகப்ரவேஸம்

கிரகப்ரவேஸம்.
.......................



ஒரு குத்துவிளக்கும், காய்ச்சப்போகும், பால் பாத்திரத்தையும், எடுத்துகொண்டு கிரகஸ்தனும், கிரக நாதியும், அவர்கள் நிர்மாணித்த கிரகத்தை, ஒரு சுற்று ப்ரதக்ஷணம் வைத்த பின் தான் கிரகத்தினுள்ளில், புருஷனும், புருஷத்தியும், வலது கால் வைத்து, உள் நுழைதல் வேண்டும் 

கிரகப்ரவேஸம் செய்யும்போது பசும்பால் அடுப்பில் காய்ச்சிய பின்னீடு,   பால் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து, ஒரு டீஸ்பூன் எடுத்து, மூன்று துள்ளி பாலை ட்ஸ்பூன் கொண்டு, எடுத்து, அடுப்பில் ஊற்ற வேண்டும், ஈஸ்வரனை ப்ரார்த்தித்து கொண்டு செய்ய வேண்டும்,,
அது அக்னி தேவனின் அனுக்ரகம் கிட்டும்,

வெள்ளை பசும்பால் சத்குண ரூபியாகும், 

வாஸ்து பூஜா.
..........

நீங்கள் நிர்மாணித்த கிரகம் வாஸ்துபுருஷனின் ஸரீர பாகம் போன்றது,

நீங்கள் கிரகபவனம் நிர்மிக்கும்போது சத்தியத்தில் வாஸ்து பகவானின் ஸரீர பாகத்தில் சில துன்பங்களை, நிர்பந்தந்தின் பேரில்  செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது,
அதற்கு ப்ராயசித்தமாக கிரகபவனத்தில் வாஸ்துபூஜா நிர்பந்தமாக செய்யப்படல் வேண்டும், இது வாஸ்துபுருஷனை  திருப்தி படுத்தும்,

கிரகப்ரவேஸம் முகூர்த்தம் கணிக்கல்,
......................
கிரகப்ரவேஸம் நடத்தும்போது,
சூரியன்,
கர்க்கிடகம்,
கன்னி,
கும்பம் ஆகிய க்ஷேத்ரங்களில் நிற்கும்போது கிரகப்ரவேஸம் செய்தல் தவறானது,

மீதி ஒன்பது மாதங்களும், உத்தமம்,

மேலும் புதியதாக கிரகம் நிர்மாணித்து கிரகப்ரவேஸம் செய்யும்போது, உத்ராயண காலங்களில்,
அதாவது,
மகரம்,
மீனம்,
மேடம்,
இடபம்,
மிதுனம்,
க்ஷேத்ங்களில் கிரகங்கள் ஸ்திதி கொள்ளும்போது கிரகப்ரவேஸம் உத்தமம்,

அதேசமயம் பழைய கிரகபவனம் இடித்து புதிய கிரகபவனம் நிர்மாணிக்கும்போது,
கோட்சாரத்தில், தேவகுருவான, வியாழம் ஸ்திதியும், அஸுர குரு, சுக்கிரன் ஸ்திதியும் கவனித்து தான் கிரகப்ரவேஸம் செய்ய வேண்டும்,
இருவரும் நீச்ச, சத்ரு, க்ஷேத்ங்களில் ஸ்திதி கூடாது, 

புதிய ஸ்தலத்தில் புதியதாக பூமி வாங்கி கிரகபவனம் நிர்மாணித்து., கிரகப்ரவேஸம் செய்வதற்கு பெயர்

அபூர்வ கிரகப்ரவேஸம், என்று அழைக்கப்படும்,

விதேஸ ராஜ்ஜியங்களில், உத்யோகங்கள், செய்து, அல்லது வர்த்தகம் செய்து, பணம் சம்பாதித்து,
சொந்தம் நாட்டில் பூமி வாங்கி கிரக நிர்மாணம் செய்து, கிரகப்ரவேஸம் செய்வது,

ஸபூர்வ. என்கின்ற பெயரில் கருதப்படுகின்றது,

தீ பிடித்தம்,
ஜலப்ரளயம்,
பூமி குலுக்கம், போன்ற காரணங்களால் கிரக நாஸம் சம்பவித்து, அந்த வீட்டை புனராவர்த்தனம் செய்து, கிரகம் புதுக்கி பணிது கிரகப்ரவேஸம் செய்வது,

துரந்த கிரகப்ரவேஸம் என பெயர்,

வாஸ்துபூஜா,
..........
கிரகப்ரவேஸம் நடத்தும் முன்பு, வீட்டிற்கு வெளியே கிழக்கு திக்கு பாகத்தில் வாஸ்து தேவனை பூஜிப்பது வாஸ்துபூஜா,

செம்பு குடத்தில், வெள்ளம் நிறைத்து, அதில் நவதானியங்கள் இட்டு, ஒரு ரூபாய் நாணயம், இட்டு, செம்புகுடத்தின் முகலில்., ஒரு தேங்காய் வைத்து, சிவப்பு துணி கொண்டு மூடி, சிவப்பு நாடா கொண்டு கெட்டி,
அதன்பிறகு வாஸ்துபூஜா செய்வார்கள்
பின்னீடு புருஷன், புருஷத்தி, இருவரும் சேர்ந்து அந்த செம்பு குடத்தை வீட்டினுள்ளில் எடுத்து சென்று, ஹோமகுண்டலம் அருகே வைப்பார்கள்,

வாஸ்து சாந்தி.
................

ஹோமம் கொண்டு புதிய கிரகதோஷம் நீக்க செய்வதுதான் வாஸ்துசாந்தி,
அல்லது கிரகசாந்தி பூஜா என்பார்கள்.

அதிகாலையில் ப்ரம்மமுகூர்த்தம் சமயத்தில் கணபதி ஹோமங்கள்,
ஸத்யநாராயண பூஜா,
லக்ஷிமி பூஜா,
சுதர்ஸன ஹோம பூஜா நிர்ப்பந்தமாக செய்யப்பட வேண்டும்,
இது தோஷங்கள் நீக்கி, நல்ல, நல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகள், உண்டாக்கவும், கிரகம் நிர்மாணிக்கும்போது, ஏற்பட்ட கண்திருஷ்டி பாதிப்பால் கிரகநாதன், நாதத்திக்கு எந்த தோஷ பாதிப்புகளும், உண்டாகாமல் செய்யும்,

புருஷத்தி கர்ப்பிணியாக, இருக்கும்போதும், கிரகநாதன் அல்லது அவருடைய மனைவி, ஆகியவர்களின், மாதா, பிதா, சரணம் அடைந்து, இருந்தால் கிரகப்ரவேஸம் தள்ளி வைக்க வேண்டும்,

ஒரு கிரகப்ரவேஸம் நடக்கும்போது கட்டாயம் கண்திருஷ்டி தோஷங்கள் உண்டாகும்.

அது வெளி மக்களிடமிருந்து, மிக்கவாறும் இருக்காது,
கிரகநாதன் அங்கத்தினர் கண்திருஷ்டி தான் கட்டாய பாதிப்புகளை கொடுக்கும்,

No comments:

Post a Comment