jaga flash news

Tuesday, 3 November 2020

தாம்பூலப்ரஸ்னம்

தாம்பூலப்ரஸ்னம்.
..............................


தாம்பூலம் என்கிற வெத்திலையை வைத்து சில பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிட்டுமா? கிட்டாதோ? என்பதை தாம்பூலம் மூலம் தாம்பூலப்ரஸ்னம் நடத்தி ஜோதிஷன்மார்கள் தீர்மானத்தத்திற்கு வருவதுண்டு.

தாம்பூலத்தில் லக்ஷிமி தேவியும், மத்யபாகத்தில் சரஸ்வதியும், அடியில் ஜேஷ்டாதேவியும், வலதுபாகத்தில் பார்வதி தேவியும், இடதுபாகத்தில் பூமிதேவியும் , உள்ளே விஷ்ணுவும், வெளியே சந்திரனும், கோணக பாகத்தில் பரமசிவன், பிரம்மாவும், உபரிபாகத்தில் இந்திரனும். சூரியனும், ஸர்வ பாகங்களிலும் காமதேவனும் ஸ்திதிகள் கொண்டுள்ளனர். 

ப்ரஸ்னஜோதிஷன் ஆகிய தெய்வக்ஞன்மார்களிடம் ப்ரஸ்னம்பார்க்கும்போது ஜாதகர்கள் தாம்பூலத்தோடு ஒப்பம் பணமோ, பழமோ, சொர்ணமோ கொடுப்பது உத்தமலக்ஷணத்தை குறிக்கும்

இலக்ஷிமி வாஸினியாகிய தாம்பூலத்தின் முன்பாகத்தை முன் மலர்த்தி வைப்பது ஒரு உத்தமலக்ஷணம் கூடியது தான்.
தாம்பூலத்தின் நெற்றி பாகம் கிழக்கேபாகத்தில் அல்லது வடக்கேபாகத்தில் நீட்டி வைப்பதும் ஒரு உத்தமலக்ஷணம் தான்.

அதற்குமாறாக தெற்கேபாகத்தில், அல்லது மேற்கேபாகத்தில் தாம்பூலத்தை பின்புறமாக வைப்பது அதர்மலக்ஷணம் கூடியது தான்.

ஜோதிஷனிடம்  தாம்பூலம் கொடுப்பவர் அங்கவைல்யங்கன் ( விகலாங்கன், உடல்ஊனம் கொண்டவர்), ஆக இருந்தாலும், அல்லது தாம்பூலம் கொடுக்கும்போது தவறி விழுந்தாலும் அவைகள்  அசுபநிமித்த சகுனங்கள் ஆகும்.

சிவபெருமான் தன்னுடைய கெட்டுதாலி கெட்டிய புருஷத்தியான பார்வதிதேவாயிடம் சொல்கின்றார். அல்லவோ! ப்ரியசகியே, சத்ருக்களுக்கு தாம்பூலம் கொடுக்கும்போது தலைபாகம் நீட்டியும், மித்ரர்களுக்கு தாழ்த்தியும், சேவகன்மார்களுக்கு தலைபாகம் உயர்த்தி பிடித்தும்தான் தாம்பூலம் தானம் கொடுக்கபடவேண்டும், என்கின்றார்.

தாம்பூலப்ரஸ்னம் பார்க்கும் தாம்பூலமானது நன்கு நீண்டதாகவும், புஷ்டியாகவும் இருக்கவேண்டும்.
அதேசமயம் சில தேஸங்களில் தாம்பூலமானது சிறிய வகையிலோ, அல்லது வளைந்த. வகையிலோ வளர்வதால் தாம்பூலப்ரஸ்னம் பார்க்கும் தெய்வக்ஞன்மார்கள், அந்தந்த தேஸத்திற்கு ஏற்றவாறு தாம்பூலத்தின் லக்ஷண ப்ராப்திகளை தீர்மானிக்கவேண்டும். 

தாம்பூலம் வெளுத்தபக்ஷம் என்கிற சுக்லபக்ஷத்தில் விளைந்தது என்றால் நிறம் வெளுத்து இருக்கும், கருத்தபக்ஷத்தில் அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் விளைந்தது என்றால் கருத்த நிறமுடையதாகவும் குறிப்பிடபடுகின்றது.

வெளுத்தபக்ஷம் கூடிய தாம்பூலம் என்றால் தெய்வாம்ஸத்தையும், கருத்தபக்ஷத்து தாம்பூலம் என்றால் பித்ருக்கள் அம்ஸத்தையும் குறிக்கும். 

கருத்தபக்ஷ தாம்பூலத்திற்கு, உஷ்ணம், உவர்ப்பு, கசப்பு, தகன குறைவு, வாய்வு தொல்லை போன்றவைகள் காரகத்துவமாக கொள்ளப்பட்டுள்ளது.

வெளுத்தபக்ஷ தாம்பூலத்திற்கு, தகன சக்தி. மதுர ரசம் , விரகதாபம் போன்றவற்றையும் ப்ராஹ்மணத்துவம் கூடிய லக்ஷணங்கள்.

 கொடுக்கப்பட்டுள்ளது. 

தாம்பூலப்ரஸ்னம் பார்க்கும்போது, அன்றையகோட்சாரத்தையும், துவாதஸபாவங்கள், என்கிற பன்னிரண்டு பாவகக்ஷேத்ரங்களையும் கவனத்தில் கொண்டுதான் கணிதம் செய்யவேண்டும். தாம்பூலமும், கோட்சார கிரகங்களும் ஒரே நூலில் கோர்த்த முத்துமணிமாலைகளாகும்.

தாம்பூலப்ரஸ்னம் பார்க்கும்போது மதியத்திற்கு முன்பாக பார்க்கும்போது முதல்  வெத்திலையிலிருநது, பன்னிரண்டு பாவகம் கணிதம் செய்யவேண்டும்.
அதற்குமாறாக மத்தியானத்திற்கு மேல் தாம்பூலப்ரஸ்னம் பார்க்கும்போது வெத்திலையை திருப்பி அடிபாகத்திலிருந்து பன்னிரண்டு பாவகத்தை கணிக்கவேண்டும். 

துவாதஸபாவங்கள் பார்க்கும்போது அந்தந்த பாவக வெத்திலைக்கு, வாட்டம் முறிவுகள் போன்றவை இருந்தால் ஜாதகருக்கு அந்தந்த பாவகம் பாதிப்புள்ளாகியுள்ளது என்று கூறவேண்டும்.

ஜாதகர் கொடுத்த வெத்திலையை கொண்டு, அவர்கள் எல்லா பலன்களையும் சொல்லவேண்டும்.
இதற்கு,.  அகிலம்,,  வக்தவ்யம் என்று சொல்லப்படுகின்றது.

அ ; சூரியன் ( அஷ்டவர்க்கம்)  பிங்கள நாடி ( தக்ஷிண நாடி)

கி : குஜன் ( கவர்க்கம்)  அக்னி நாடி ( சூஷ்மனா நாடி)

லம் ; சந்திரன் ( யவர்க்கம்)  அக்னி ( வாமநாடி)
தெய்வக்ஞன் தாம்பூலப்ரஸ்னம் பார்க்கும்போது சுவாஸபரீக்ஷணமும் பார்க்கவேண்டும்.

ஜாதகர் ஒரு வெத்திலைய கொண்டுவந்தால் துக்கத்தையும், இரண்டு வெத்திலையை கொண்டுவந்தால் தனலாபம், 
மூன்று வெத்திலையை  கொண்டுவந்தால் காரியதடைகள் குறிக்கும் .
நான்கு அல்லது ஐந்து அதற்கு கூடுதல் கொண்டுவந்தால் சுபபலன்களை குறிக்கும் .

ஜாதகர் கொண்டுவந்த வெத்திலையை,
02 கொண்டு பெருக்கவேண்டும்.
இதை மீண்டும் 05 கொண்டு பெருக்கவேண்டும்., பெருக்கிவந்த எண்ணுடன் 01 கூட்டவேண்டும். கூட்டிவந்த எண்ணிக்கையை 07 எண் கொண்டு வகுக்கவேண்டும்.
மீதி வந்த எண்ண்ணை பாவகமாக கொள்ளவேண்டும்.

உதாகரணத்திற்கு, ஒருவர் கொண்டு வந்த வெத்திலை 08,
இதை இரண்டால் பெருக்கினால் 16 வருமல்லவோ!
இந்த 16 ஐ மீண்டும் 05 கொண்டு பெருக்கவேண்டும்.
80 வருமல்லவோ!
இந்த எண்ணுடன் 01 கூட்டவேண்டும்.
அப்போது 81 வருமல்லவோ!
இந்த 81ஐ. 07 ஆல் வகுக்கவேண்டும்.
11 தடவை வகுபடும்.
11× 07 77.

81- 77 ; 04 மீதி வரும்.

அந்த எண் எந்த காரகத்துவ எண்ணை குறிக்கின்றது என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டும்.

மீதிவரும் எண்ணானது,
01. வந்தால் சூரியன்.
02. வந்தால் சந்திரன்.
03. வந்தால் குஜன்.
04. வந்தால் புதன்.
05.  வந்தால் குரு,
06. வந்தால் சுக்கிரன்.
07. வந்தால் சனிபகவான் .

இப்போதைய கோட்சாரத்தில் எந்த கிரக எண் வந்ததோ அந்த கிரகம் நிற்கின்ற இராசிக்ஷேத்ரம் தாம்பூலப்ரஸ்னம் இலக்னக்ஷேத்ரம் ஆகும்.

தாம்பூலம் கிரகம்  சூரியனாக வந்தால் ஜாதகருக்கு துக்கம்.
சந்திரன் வந்தால் சுகாசுகம்.
குஜன் கலகம். புதன் அல்லது வியாழம் தனலாபம்.
சுக்கிரன் ஸர்வகார்யமும் அனுகூலம்.
சனி மரண சம்பவம், காரியதடைகள்..

தாம்பூல கிரகம் நிற்கின்ற இராசிக்ஷேத்ரத்திலிருந்து பன்னிரண்டு இராசிக்ஷேத்ரத்திற்கும் அங்கங்கே நிற்கின்ற கிரகங்கள் கொண்டு பலம் காணவேண்டும். 

தாம்பூலை : ப்ரஷ்டூததைத்த ரவி பல மவிலாஸ்தஸ்ய வக்தவ்ய மேஹம்,
ப்ராப்யோபர்ய்யஸ்தாத் கணனமிஹ வபூ ;
பூர்வ மனோர்த்தயோ :
ஸுயால் ;

தாம்பூலம் கொண்டு ஜாதகர் கேட்கும் சகலவிதமான கேள்விக்கும் பலாபலன்கள் சொல்லவேண்டும்.
பன்னிரண்டு வெற்றிலையை எண்ணியெடுத்து., அதை துவாதஸபாவங்கள் என கணக்கில்கொண்டு, ஒன்றாம்பாவகம். இரண்டாம்பாவகம் என்றும் அதிலுள்ள கிரகங்கள் ஸ்திதி கொண்டும் பலன்கள் சொல்லவேண்டும்.
மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு முன்னே ஜாதகர் வந்தால் முதல் வெத்திலையை ஒன்றாம்பாவகம் என்றும், பன்னிரண்டு மணிக்கு பிறகு வந்தால் பன்னிரண்டாவது கடைசி வெத்திலையை ஒன்றாம்பாவகம் ஆக பாவித்து பலன்கள் சொல்லவேண்டும். 

ஜாதகர் கொண்டுவரும் வெத்திலை கட்டை விரித்துபார்க்கும்போது, வெத்திலையானது வாடிவதங்காமல், இருந்தால் ஜாதகருக்கு தற்போது சுபிஷ்க்ஷமான ஜீவிதகாலம் நடக்கின்றது என்பதையும், அதேசமயம் வெத்திலை கட்டு பிரிக்கும்போது வெயில் கொண்டு வாடிவதங்கி. கருமை நிறத்தோடுகூடி இருந்தால் ஜாதகர் கடுமையான துரிதங்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றார். என்று அறிந்து கொள்ளலாம்.
எப்போதுமே காலையிலேயே தாம்பூலப்ரஸ்னம் பார்ப்பதுதான் உத்தமம்.
இருபத்திநான்கு வெற்றிலைக்கு மேல் ஜாதகர் கொண்டுவந்தால், ஜாதகர் தற்போது பூர்வீக நாட்டில் ஜீவிக்கவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம் .

காலையில் ஆனாலும், மாலையில் ஆனாலும் தாம்பூலத்தை மலர்த்தி வைத்து உள்ளே தாம்பூலம் லக்ஷணம் நன்கு ஆராயவேண்டும். 
தாம்பூலத்தின் வலதுபாகம் உயர்ந்து காணப்பட்டால், வெற்றிலை சுக்லபக்ஷத்தில் துளிர்த்தது.
அவ்வாறு சுக்லபக்ஷத்தில் துளிர்த்த வெத்திலை நன்றாக எந்த ஓட்டையும், கோடுகளும் இல்லாமல் இருந்தால் ஜாதகருக்கு தீர்க்காயு, ஆரோக்கியம் போன்றவைகள் சுபிக்ஷமாக வருகின்றதை சொல்லலாம்.

இடதுபாகத்தில் உயர்ந்துள்ள வெத்திலையானது கிருஷ்ணபக்ஷத்தில் துளிர்த்தது,
இடதுபாகத்தில் சிறிய நிலையில் இருக்குகையும், அங்கே கோடுகள், ஓட்டைகள், புழுக்கள் போன்றவை இருந்தால்  ஜாதகர் துரிதஜீவிதங்கள் அனுபவித்து வருகின்றார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 

ம்லானீர்க்ஷத்யாத்யு பேதம் ததயுத மபியத் பாவ ஸம்பந்தி பத்ரம்,
தஸ்யா வ்யாதீனீஷ்டம் பவதி சுபமபி ;

அதாவது எந்த பாவத்தின் வெத்திலை வாடியோ? வதங்கியோ!? கீறியோ!? உடைந்தோ? பழுதாகியோ? இருந்திருந்தால் துவாதஸபாவங்களில் அந்த பாவகம் ஜாதகருக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

வெத்திலை வாடியிருந்தால் ஜாதகருக்கு பூர்வபுண்யத்தின் குறைவு, அக்னிபயம்,  குஜன் காரகத்துவமான ரக்தம், ரோகங்கள் போன்றவைகளால் தோஷங்களும். ஸர்ப்பங்கள் கொண்டு துன்பமும், ஸர்ப்பதோஷங்கள், வாஸ்துதோஷங்கள் போன்றவைகள் ஜாதகர்கள் பூர்வபுண்ய தோஷத்தால் ஏற்படும்.
பூர்வே புண்ணியே சுயே தோஷா :

பூர்வபுண்ய ஸ்தானம் என்கின்ற பஞ்சமராசியின் அதாவது ஐந்தாம் வெத்திலை ஓட்டை. கீறல் போன்றவைகள் இருந்தால், ஜாதகருக்கு தனம் காரணமாக சத்ருக்கள் உண்டாகுகையும். அடுத்து ஜீவிக்கும் அயல்வாசிகளால் தொல்லைகளும், ப்ரேததோஷங்கள்,, அவர்கள் குலதெய்வம் மூலக்ஷேத்ரத்தில் அசுத்தியும். தேவ பிம்பங்கள் உடைந்தும், போன்றவைகள் ஏற்பட்டுள்ளது. மேற்சொன்ன காரணங்களால் ஜாதகர் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாககூடும். 

தாம்பூலத்தின் மத்யபாகத்தில் துவாரம் உண்டானால் வனதேவதையையும் , தெற்கேபாகத்தில் துவாரம் ப்ரேததோஷங்கள்,
மேற்கேபாகத்தில் துவாரம்உண்டானால் ஜலத்தில் ஜீவிக்கும் ப்ரேததோஷமும், வடக்குபாகத்தில் தனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் .

இரண்டாம்பாவக வெத்திலையானது கிழக்கேபாகத்தில் திரும்பியிருந்தால், அதனுடைய தலைபாகத்தில் துவாரம் உண்டானால் ,
தாம்பூல க்ரரே நிவஸதி ர்மா ;
தனம் சம்பந்தமாய தோஷங்கள். பாதிப்புள்ளாகியுள்ளது.

தாம்பூலத்தில் ஒன்றாம்பாவ வெத்திலையில் புழு உண்டானால் நாகதோஷம்.
நான்காம் வெத்திலை புழு, ஜாதகர் க்ஷேத்ர வேண்டுதல் வைத்து செய்யாததால் தேவகோபம்..
வெத்திலை நன்கு பழுத்து காணப்பட்டால். ஜாதகர்கள் ஒரு காலத்தில் நன்றாக ஜீவித்து இப்போது கஷ்டப்படுகின்றார்கள் என்று தெரிந்துகொள்ளவும். 

ஸிரியோ புத்திநாஸனம்,ஸிராதோஷா தூ கோத்ராணாம் தோஷம் தத்தல் வினிர்திஸேல் :

எந்த பாவக வெத்திலையானது நரம்பு உடைந்து காணப்பட்டால் அந்த பாவகம் சம்பந்தப்பட்டவர் தேகஆரோக்கியம் நஷ்டப்படும். மந்தமான புத்தியிருக்கும்.
உதாகரணத்திற்கு ஏழாவதுபாவக வெத்திலை நரம்பு உடைந்திருந்தால். ஜாதகர் துணைவர், அல்லது துணைவி ரோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் .


No comments:

Post a Comment