சந்த்யா காலம்,
.......................
ஸந்த்யா என்கின்ற சொல் வளரே மகத்துவம் கூடியது.
ஸந்த்யா காலத்தில் ஸத்கர்மங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என சொல்கிறது சனாதான தர்மம்,
ஸந்த்யாதீபம் வைத்து அந்த ஜ்வாலையால் சந்த்யா தேவியை வரவேற்க வேண்டும்,
ஸந்த்யாவில் உஷ ஸந்த்யா,
ஸாயா ஸந்த்யா வேறுபாடு உண்டு,
ஆனாலும் ஸாயா ஸந்த்யாவுக்கு தான் மகத்துவம் கொடுக்கப்படுகின்றது,
ப்ரம்ம தேவனின் மானஸ புத்ரியாகிய ஜென்மம் எடுத்த ஸந்த்யா தான் பின்னாளில் ஸப்த ரிஷிமார்களில் ஒருவரான வஸிஷ்டன் சகதர்மிணி ஆனாள்.
அத்ரி, புலகன், புலஸ்தியன், நாரதன், க்ருது, மரீசி, அங்கிரஸ், வஸிஷ்டன், பூய்க்ரு, தக்ஷன், போன்ற மானஸ புத்ரர்களை சிருஷ்டித்த பிரம்மா, ஒரு சௌந்தரியம் உள்ள மானஸ புத்ரியையும் சிருஷ்டித்தார், அவள்தான் ஸந்த்யா,
எல்லாவருடைய மனசை மயக்க வேண்டும் என்பதற்காக மன்மதன் என்றும், எல்லாவருடைய மனதிலும் காம கிளர்ச்சி உண்டாக்க வேண்டும், என்பதற்காக காமதேவன் எனவும், மன்மதனுக்கு பெயர் சூட்டப்பட்டது, பிதாவு ப்ரம்மனால்,
எல்லாவருடைய மனதிலும் மனோதைரியம் நீக்கி மன ப்ரணய ஸலனம் உண்டாக்கி அதனால் ஸ்த்ரீ, புருஷ லைங்கீக உறவு ஏற்பட்டு ஜீவிகளின் கர்மம் அனுரித்து ஜென்மம் எடுக்க ஜீவிகளுக்கு விரகதாப கிளர்ச்சியை உண்டு பண்ணத்தான் படைக்கும் சிருஷ்டி கர்த்தா பிரம்மன் மன்மதனுக்கு கொடுத்த பணி,
ஒரு தடவை மன்மதனுக்கு ஒரு வக்ர ஆசை தோன்றியது,
இந்த விரகதாப லைங்கீக கிளர்ச்சியை, தன்னுடைய பிதா ப்ரம்மாவுக்கும், சகோதரர்களுக்கும் உண்டு பண்ணினால், என்ன? என்று தோன்றியது,
அதன்படி ப்ரம்மாவிற்கும், அவரது புத்திரர்களுக்கும், ஸரீர சௌந்தரியம் கொண்ட ஸந்த்யா மேல் விபரீதமான, தவறான காதல், விரகதாபம் ஏற்பட்டது,
ஸந்த்யாவிற்கும் விரகதாபம் கொண்டு சகோதரர்களுடன் லைங்கீக உறவு கொள்ள ஆசைப்பட்டாள்,
ஆனால் ப்ரம்மாவின் மற்றொரு மானஸ புத்ரன் தர்மன், பிதாவிற்கும், சகோதரன்மார்களுக்கும், சகோதரி ஸந்த்யாவிற்கும், நடத்தையில் மாற்றங்கள் உண்டாவதை கண்டார்,
இது தவறான செயல், இது காம தேவன் கலகம் தான்!
சகோதரன் மன்மதன் சொந்தம் தந்தையிடமும், சகோதரியிடம் தனது வேலையை காட்ட தொடங்கி விட்டான்,
என்று பயந்துபோய் ஸ்ரீ பரமேஸ்வரனிடம் நடக்கும் சம்பவங்களை கண்ணீரோடு முறையிட்டார்,
அவர் கோபமாக ப்ரம்மாவிடம் சென்று நீர் , செய்வது சரியா? அவள் நீ சிருஷ்டித்த மானஸ புத்ரீ,
உனது மானஸ புத்ரன்மார்களும், புத்ரீ ஸந்த்யாவும் சரியாக இல்லை, சொந்தம் புத்ரியோடு, காம எண்ணம் தோன்றினால் ப்ரம்மாவான உனக்கே ப்ரம்மஹத்தி தோஷம் பீடிக்கும் என்றார் சிவன்,
சத்யம் உணர்ந்து பயந்து வெலவெலத்து போனார் ப்ரம்மாவு, ஸரீரம் முழுக்க வியர்த்து கொட்டியது,
அந்த வியர்வையிலிரூந்து அக்னிஷயத்,,
என்கின்ற பேரோடு கூடிய பித்ருக்கள் உண்டானார்கள்,
மேலும் ஒரு துள்ளி வியர்வை துள்ளியிலிருந்து, ரதி, என்கின்ற சௌந்தரியவதி தோன்றினால், பின்னீடு மன்மதன் அவளை விவாஹம் செய்தான்,
பிறகு கோபம் கொண்டு பரமேஸ்வரன் மன்மதனை நோக்கி, நீ தான் இதற்கெல்லாம் காரணம், என சொல்லி தனது த்ருக் நேத்ரம் கொண்டு மன்மதனை அக்னி சாரம் ஆக்கினார்,
மன்மதனும் கதறினார், நான் ஒரு பாவமும் அறியாதவன், பிதா இட்ட. பலிக்கின்றதா? இல்லையா? என பரிசோதித்தேன்! அடியேனை மன்னியுங்கள்!
என கதறியபடியே சாரமாகி போனார் மன்மதன்,
பின்னீடு சாபவிமோசனம் பெற்று மறுபடியும் ஸரீரம் பெற்றார்,
ஸந்த்யா உண்மை உணர்ந்தால், எனது சகோதரன்மார்களிடமும், பிதாவிடமும் எனக்கு விரகதாபம் ஏற்பட்டதே என நினைந்து அழுது, ப்ராயசித்தமாக அக்னியில், தீ, குளிக்க தீர்மானித்தாள்,
அதற்கு முன் கடும்தவம் புரியவேண்டும் என்பதற்காக
சந்த்ர பாகா என்கின்ற நதி தீரத்தில் தபஸ் மேற்கொள் போனாள்,
தபஸ் செய்யப்போகும் தனது மகளுக்கு சில உபதேசங்கள் சொல்ல சொல்லி தனது மானஸீக புத்ரன் ஆன வசிஷ்டனை ஸந்த்யாவிடம் அனுப்பினார் , ப்ரம்மாவு,
ஆனாலும் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது, மறுபடியும், ஸந்த்யாவின் மேல் ப்ரணயம், வஸிஷ்டன்கு உண்டாகுமோ? என்று, அதனால் வஸிஷ்டனிடம் மாறு ருபம் தரித்து ஸந்த்யா தபஸ் இருக்கும் நதி தீரத்தில், ஒரு யௌவன ப்ரம்மச்சாரியாக மாற்றி அனுப்பி வைத்தார் ப்ரம்மாவு.
அதேபோல் வஸிஷ்டன் என்கின்ற யௌவன யுவன் சந்த்யாவிடம் மனதில் பரமேஸ்வரனை சங்கல்பம் செய்து தியானித்து தபஸ் செய்ய வேண்டும், ஓம் நமச்சிவாயா என்கின்ற பஞ்சாக்ஷைர மந்திரம் உச்சரிக்க வேண்டும், என ப்ரம்மாவு கூறிய உபதேஸங்களை, ஸந்த்யாவிற்கு சொல்லி கொடுத்து புறப்பட்டான்
ஸந்த்யா தபஸ் தொடர்ந்தது வர்ஷங்கள் ஓடியது,
அவளின் தபஸ் மெச்சிய சிவன் அவள் முன்னே பிரதிக்ஷ பட்டார்,
சந்தோஷித்தாள் ஸந்த்யா!
பரமேஸ்வரன் :ஸந்த்யா உனது தபஸ் நான் மெச்சினேன்!
நீ ப்ரம்மாவின் மானசீக புத்ரீ மட்டும் அல்ல! எனக்கும் புத்ரிதான்,!
என்ன வரம் வேண்டும் கேள்?
ஐயனே ஜீவிகள் ஜனனமாகும் போது அவர்கள் மனதில் லைங்கீக எண்ணங்கள் தோன்ற கூடாது!
என்னை விவாஹம் செய்யும் மணவாளன் காமத்தோடு மட்டும் என்னை காணக் கூடாது, நல்ல மித்ரனாகவும் இருக்க வேண்டும்,
ஸந்த்யா நீ தபஸ் செய்ததால் சுத்தீகரிக்கப்பட்டாய்,
நீ கேட்டதுபோல் பாலிகம், கௌமாரம் யௌவனம், வ்ருத்தம், ம்ருத்தம் மூன்று ஸ்திதிகள் ஜீவிகளுக்கு உண்டு,
அதில் கௌமார ப்ராயத்தில் ஆரம்பித்து, வ்ருத்த அவஸ்தா ஜீவிகளுக்கு உண்டாகும்போல் விரக எண்ணங்களை மாற்ற சொல்கிறேன் மன்மதனிடம் சொல்லி, என்றார் பரமன்,
மேலும் ஸந்த்யே நீ தபஸ் இருந்து என்னை கண்டபின்னர் அக்னியில் நின் உயிரை மாய்த்து கொள்வேன், என நான் அறிந்தேன், வேண்டாம் மகளே!
நீ ஒரு காரியம் செய், இந்த சந்த்ரபாகா பர்வத நதி தீரத்தி ஒரத்தில் மேதாத்ரீ என்கின்ற முனி அக்னி யாகம் நடத்துகிறார்,
நீ அந்த அக்னியில் கூடினால், உனது ஸரீரம் அக்னியாகி புதிய சுத்த சௌந்தரியம் உள்ள யுவதி ஸரீரத்தோடு ஜெனிப்பாய், மேலும் நீ விவாஹம் கழிக்கும் புருஷனோடு நீண்ட காலங்கள் ஜீவிப்பாய்,
நீ அக்னியில் குதிக்கும்போது நல்ல மணவாளன் வரவேண்டும்,
என்று ப்ரார்த்தனை செய்!
ஸந்த்யா அக்னி யாகம் நடக்கும் ஆசிரமம் நோக்கி நடந்தாள்,
முனிவர் யாகம் நடத்தி கொண்டிருந்தனர்,
அவள் அக்னியில் இறங்கினாள்,
அக்னியில் நின்றபோது, தனது ஸரீரம் சுட்டெரிக்கும்போது தனக்கு மந்திர உபதேசம் சொல்லி கொடுத்த அந்த ப்ரம்மச்சாரி போல் புருஷன் வரவேண்டும்,
என்று ப்ரார்த்தனை செய்தாள்,
அவள் ஸரீரம் அக்னி தேவனால் சுட்டெரிக்கப்பட்டது,
புது ஸரீரம் வந்தது,
அப்போது அந்த ஸரீரத்தை சூரியபகவான் மூன்று ஸரீரங்கள் ஆக்னினார்,
மேல் பாகம் இரவும்,
நடுபாகம் பகலும்,
கீழ்பாகம் மாலையும் ஆக்கினார்,
சூரியோதயத்திற்கு முன் ப்ரபாத ஸந்த்யா,
சூரியஸ்தமனத்திள்கு பிறகு ஸாய ஸந்த்யா,
மத்யானம் உஷ ஸந்த்யா ஆனாள்,
ஆகவே சாயந்தரம், என்கின்ற ஸந்த்யா வேளையில் வீட்டில் விளக்கு வைத்து ப்ரார்த்தனை செய்தால்ஐஸ்வர்யம் பெருகும்
No comments:
Post a Comment