jaga flash news

Saturday, 30 November 2024

ராசிகளுக்கு ஏற்ற வாகனங்கள் கலர்



மேஷம் முதல் மீனம் வரை.. ராசிகளுக்கு ஏற்ற வாகனங்கள் கலர்!

மேஷம் முதல் மீனம் வரை.. ராசிகளுக்கு ஏற்ற வாகனங்கள் கலர்!


Rasi Palan for car | 

ஒவ்வொரு கிரகத்திற்கும் வெவ்வேறு நிறம் உள்ளது. எனவே நமது கிரகத்திற்கு ஏற்ற நிறத்தில் 


 ஒவ்வொரு கிரகத்திற்கும் வெவ்வேறு நிறம் உள்ளது. எனவே கிரகங்கள் விரும்பும் வண்ணத்தில் கார் வாங்கினால், மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடரலாம். இது குறித்து ஜோதிட நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.

மேஷம்:   

சிவப்பு நிறம் மேஷ ராசியினருக்கு மிகவும் இணக்கமானது. எனவே சிவப்பு நிற கார் உங்களுக்கு லாபகரமாக இருக்கும். கார் டெக்னாலஜியைப் பொறுத்தவரை எந்த நிறுவனம் வாங்கினாலும் சிவப்பு நிறமே சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரிஷபம்:

 இந்த ராசிக்காரர்களுக்கு பிரகாசமான வெள்ளை நிற கார் நல்லது. அந்த நிறத்தில் கார் வாங்கினால் லாபம் கிடைக்கும் என்றும், பாதுகாப்பு அதிகம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், கார்களை வாங்கும் பலர் வெள்ளை நிறத்தை பசுமையான நிறமாக கருதுகின்றனர்.


மிதுனம்

இந்த ராசிக்காரர்கள் பச்சை நிற கார் வாங்க வேண்டும். நான்கு காலங்களிலும் பசுமையாக இருக்க, வாஸ்துவுடன் கூடிய வீட்டையும் சேர்த்து ராசி குறிப்பிடும் வண்ணம் கொண்ட காரை வாங்குவது நல்லது.


கடகம்

இந்த ராசியை சேர்ந்தவர்கள் குறிப்பாக பால் போன்ற வெள்ளை நிற கார் வாங்குவது நல்லது. இது லாபகரமானது மட்டுமல்ல, மிகவும் வசதியானது.



சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் ராசியின் கிரகங்களைப் பொறுத்து வாகனம் வாங்குவது தவிர்க்க முடியாதது என்பதை உணர வேண்டும். மேலும் கார் சீக்கிரம் கெட்டுவிடாது. சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற கார் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.


கன்னி

வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் தொடர்புடையது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஓட்டுவது அதில் ஒன்று. எனவே கார் வாங்கும் கன்னி ராசியினர் பச்சை நிற காரை வாங்க வேண்டும்.


துலாம்

வாழ்க்கையில் சமநிலையை பராமரிக்க, இந்த ராசிக்காரர்கள் வெள்ளை நிற கார் வாங்க வேண்டும். அதே நிறம் அவர்களுக்கு நல்லது, லாபமும் கூட என்கிறார்கள் நிபுணர்கள். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு கார் பிராண்ட், பட்ஜெட் மற்றும் கலர் ஆகியவையும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிறம் நன்றாக இருக்கும். எனவே இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிற கார் வாங்கினால் அது உங்களுக்கு நன்மை பயக்கும்.


தனுசு

இந்த ராசிக்காரர்கள் மஞ்சள் நிற கார் வாங்க வேண்டும். பயணத்தின் போது விபத்துகள் ஏற்படுவதில்லை. இனிமையான பயணமாக இருக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.


மகரம்

இந்த ராசிக்காரர்களுக்கு கார் வாங்கும் வாய்ப்பு நிச்சயம்  உள்ளது. நீலம் அல்லது கருப்பு கலர் கார் சிறந்தது. கருப்பு நிற கார் எல்லோருக்கும் பிடிக்காது, அப்படி பிடிக்காதவர்கள் நீல கலர் காரை வாங்கினால் சிறப்பு.


கும்பம்

மகர ராசிக்காரர்களைப் போலவே இந்த ராசிக்காரர்களும் நீலம் அல்லது கருப்பு நிற காரை வாங்க வேண்டும். அது அவர்களுக்கு மிகவும் நல்லது.


மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நீல நிற கார் வாங்குவது நல்லது. அறிவியலின் படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் உள்ளது. எனவே நமது அன்றாட வாழ்வில் நமது கிரகங்கள் விரும்பும் வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும். கார் வாங்கும் போது இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

Friday, 29 November 2024

20 வருடங்களில் ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவாக இருக்கும்?பணவீக்கம் என்றால் என்ன?

இன்னும் 20 வருடங்களில் ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவாக இருக்கும்? அதிர்ச்சி அளிக்கும் பணவீக்கம்!
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 500 ரூபாயை வைத்து 1 வருடத்திற்கு முன்பு வாங்கிய பொருட்களில் பாதியை கூட தற்போது வாங்க முடியாது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் தொடர்ச்சியான உயர்வு தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பணத்தின் வாங்கும் சக்தி சீராக குறைந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தப் பதிவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று பார்ப்போம். பணவீக்கம் என்றால் என்ன?: பணவீக்கம் என்பது பணத்தின் வாங்கும் சக்தி குறைவதைக் குறிக்கிறது. அதாவது முன்பு நீங்கள் வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டின் விலை இன்றும் அதே விலையில் இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். உற்பத்தி செலவு, பிற செலவுகள் காரணமாக ஒரு பொருளின் விலை அதிகரித்து பணத்தின் மதிப்பு குறைவதே பணவீக்கம். சிலர் ஓய்வு பெறுவதற்காக ரூ.1 கோடி சேமிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இன்றைய ரூ.1 கோடியின் மதிப்பு பிற்காலத்திலும் அதே போல இருக்கும் என்று கூறி விட முடியாது. பணவீக்கம் தொடர்ந்து 6 சதவீத அதிகரிப்பில் உயர்ந்து வருகிறது. எனவே அடுத்த 20, 30 மற்றும் 50 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு இன்றைய மதிப்பை விட குறைவாக தான் இருக்கும்20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு?: இன்றிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து ரூ.1 கோடி ரூபாய் வெறும் ரூ.31.18 லட்சம் ஆகக் குறையும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு?: இன்றிலிருந்து 30 ஆண்டுகள் கழித்து ரூ.1 கோடி ரூபாயின் மதிப்பு இன்னும் அதிகமாகக் குறையும். அப்போது ரூ.1 கோடியின் வாங்கும் திறன் ரூ.17.41 லட்சம் ஆக மட்டுமே இருக்கும். இந்த தியரி உங்களுக்கு..!! " 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கொடியின் மதிப்பு எவ்வளவு?: இன்றிலிருந்து 50 ஆண்டுகள் கழித்து பணவீக்கத்தின் தாக்கம் என்னும் ஆழமாக மாறி இருக்கும். அதாவது ரூ.1 கோடி வெறும் 5.43 லட்சம் ஆக மட்டுமே இருக்கும். பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் வாங்கும் சக்தியை எவ்வாறு குறைக்கிறது என்பதை இதை வைத்து தெரிந்து கொண்டோம். ரூ.1 கோடி ரூபாயை குவிப்பது பார்ப்பதற்கு என்னவோ நல்ல இலக்காக தோன்றலாம். ஆனால் நீண்ட கால நிதி இலக்குகளுக்காக சேமிக்கும் போது பண வீக்கத்தையும் மனதில் கொண்டு திட்டமிட வேண்டும். 

மேஷம் ராசி குணாதியங்கள்


மேஷம் ராசிக்காரருக்கு மூக்குக்கு மேல கோவம் வருமாமே? அன்புக்கு அடங்கிவிடும் மேஷ ராசியின் பெஸ்ட் குணம்
ரிஸ்க் எடுப்பதையெல்லாம் ரஸ்க் போல சாப்பிடக்கூடியவர்கள் மேஷம் ராசிக்காரர்கள்.. ஆனால், இவர்களுக்கு மூக்குக்கு மேல கோவம் வருமாம்.. அன்பு செலுத்துவதில் இவரை மிஞ்சிட வேறு யாருமே கிடையாது என்று சொல்லக்கூடியவர்கள் மேஷம் ராசியினர்.. அவர்களின் வேறு பொதுப்பண்புகள் என்னென்ன தெரியுமா?

மேஷ ராசிக்காரர்கள், எங்கும் எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள்.. இதற்காக ரிஸ்க் எடுக்கவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சிலசமயம், இந்த ரிஸ்க், இவருக்கே பலவீனமாகிவிடும்.


spirituality
துணிச்சல்: துணிச்சல் நிறைந்தவர்கள் என்பால் எந்த முடிவையும் வேகமாக எடுத்து, செயல்படுவார்கள்.. அதேசமயம் தெளிவான முடிவை எடுக்க தெரியாது.. அப்படியே எடுத்தாலும் அந்த முடிவில் உறுதியாக இருக்க மாட்டார்களாம். எங்கு அநீதி என்றாலும், இவர்களுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்துவிடுவாம். தவறுகளை தட்டிக்கேட்பார்கள்.. இந்த கோபம்தான் மேஷம் ராசியினரின் பலமும் + பலவீனமும்.

தன்னை பற்றியே நினைக்காமல், பொதுநலனிலும் அக்கறை உள்ளவர்கள். அதனால் இவர்களை சுற்றி எப்போதும் நண்பர் கூட்டம் இருக்கும். இவர்களின் முன்கோபத்திலும் நியாயம் உண்டு என்பதை புரிந்து கொள்பவர்கள் மட்டுமே, மேஷ ராசியினரிடம் நெருங்கி பழக முடியும். மேஷ ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் என்பதால், அசுர வளர்ச்சியை விரும்பாமல், நிதானமாக முன்னுக்கு வரவேண்டும் என்று நம்புபவர்கள். எந்நேரமும் சுறுசுறுப்பாகவே இருப்பார்கள்..

துரோகம்: தான் விரும்பும் காரியத்தை முடிப்பதில் அதிக கவனமுடன் இருப்பார்கள். யாராக இருந்தாலும், அவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள்... ஆனால், தனக்கு எதிராக துரோகம் இழைத்துவிட்டால், அவர்களை எந்த காலத்திலும் மன்னிக்கவும் மாட்டார்கள், அவர்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.


மேஷ ராசிகாரர்கள் இயற்கையை ரசிக்கக்கூடியவர்கள்.. மேஷ ராசிகாரர்கள் நகைச்சுவை உணர்வு அதிகம்.. பெண்களை உயர்வாக மதிக்கக்கூடியவர்கள்.. ஆபத்துகளில் பெண்களுக்கு உதவக்கூடியவர்கள்.. மேஷ ராசிக்காரர்களுக்கு மனைவியாக வருபவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.. காரணம், எப்போதுமே மேஷ ராசியினர், தன்னுடைய குடும்பத்தின் நலனில் அக்கறை எடுத்து கொள்வார்கள்.. குடும்பத்தை பற்றியே இவர்களது சிந்தனை இருக்கும்.

சேமிப்பு இருக்காது: கூட்டுக்குடும்பத்தின்மீது அதிக நம்பிக்கை உள்ளவர்கள்.. ஆனால், அதிகமாக சம்பாதித்தாலும் சேமிப்பு பெரிதாக இவர்களிடம் இருக்காது. பூர்வீக சொத்து கிடைத்தாலும் அதை வாங்க மறுத்து விடுவார்களாம்.. வாழ்க்கையில் 28 வயதுக்குமேல் படிப்படியாக முன்னுக்கு வருவார்கள். ஆனால், 45 வயதுக்குமேல்தான் சாதனைகளை செய்வார்கள்.


காவல்துறை, ராணுவம், விளையாட்டு, பொறியியல் துறைகளில் இருப்பார்கள்.. அல்லது இரும்பு தொடர்பான தொழிற்சாலை, செங்கல்சூளை, மண்பாண்டம், சுரங்கத்தொழில், ஆயுதம் தயாரித்து விற்பனை செய்தல், சமையல் கலை, பூமி தொழில், விவசாயம் போன்றவைகளில் ஈடுபடுவார்கள்..

நரம்பு தொந்தரவு: பெரும்பாலும், மேஷ ராசிக்காரர்களை நரம்பு பிரச்சினை பாதிக்கும்.. கீரை வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். தண்ணீரில் கண்டம் உண்டு. வெளிநாடு வெளியூர் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இரக்க சுவாபம் நிறைந்திருப்பதால், மேஷராசிக்காரரை பலரும் ஏமாற்றிவிடக்கூடும்.. அதனால், விழிப்புடன் இருக்க வேண்டுமாம்.

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், சிவப்பு நிறம் தொடர்பான பொருள்களை வைத்து கொள்ளலாம். மலை, மலை சார்ந்த இடங்களில் பணியாற்றக்கூடிய இடங்களாகும்... வணங்க வேண்டிய தெய்வம் முருகன்..

மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்கள் அமைதியானவர்கள்.. ஒழுக்கமானவர்கள்.. மனித நேயம் கொண்டவர்கள்.. இரக்கம், மனித நேயம் உடையவர்கள்.. சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.. தர்மத்திலும் தலை சிறந்தவர்கள்.. மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டுபவர்கள்.. பொறுமையாக முன்னுக்கு வருபவர்கள்.. வாழ்க்கை பற்றிய தனி சித்தாந்தத்தை வகுத்து அதன்படி அறநெறியில் வாழ்பவர்கள்.


பரல்கள் அடிப்படையில் சுய முயற்சியில் முன்னேறுவான்

அதிகபட்ச பரல்கள் லக்னத்தில் இருந்தால் அல்லது லக்னாதிபதியின் வீட்டில் இருந்தால் ஜாதகன் தலைமைப்பண்பு கொண்டவானாக இருப்பான். ஜாதகனுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுய முயற்சியில் ஜாதகன் முன்னேறுவான்.

பரல்கள் அடிப்படையில் பேச்சாளனாக திகழ்வான்

அதிகபட்ச பரல்கள் இரண்டாம் இடத்தில இருந்தால் அல்லது இரண்டாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால்.ஜாதகன் சிறந்த பேச்சாளனாக திகழ்வான்

பரல்கள் அடிப்படையில் நல்ல தைரியசாலியாக இருப்பான்

அதிகபட்ச பரல்கள் மூன்றாம் வீட்டில் அல்லது மூன்றாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் சிறந்த எழுத்தாளனாக திகழ்வான். நல்ல தைரியசாலியாக இருப்பான்

பரல்கள் அடிப்படையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்

அதிகபட்ச பரல்கள் நான்காம் வீட்டில் அல்லது நான்காம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் இளம் வயதிலேயே வீடு வாகனங்கள் அமையும்.ஜாதகன் சுகவான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்

பரல்கள் அடிப்படையில் கலைஞன்

அதிகபட்ச பரல்கள் ஐந்தாம் வீட்டில் அல்லது ஐந்தாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் சிறந்த கலைஞன் ஆகா திகழ்வான்

பரல்கள் அடிப்படையில் கடன் பிரச்சனைகள்

அதிகபட்ச பரல்கள் ஆறாம் வீட்டில் அல்லது ஆறாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் அடிமை தொழில் செய்வான். எதிரிகள் / கடன் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

பரல்கள் அடிப்படையில் மனைவி தயவில் வாழ்க்கை

அதிகபட்ச பரல்கள் ஏழாம் வீட்டில் அல்லது ஏழாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் மனைவி தயவில் வாழ்க்கை நடத்துவான்

பரல்கள் அடிப்படையில் அவமானங்கள்

அதிகபட்ச பரல்கள் எட்டாம் வீட்டில் அல்லது எட்டாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் வாழ்கையில் அவமானங்கள் தொடர்கதையாக இருக்கும்

பரல்கள் அடிப்படையில் பூர்வ புண்ணியம் பெற்றவன்

அதிகபட்ச பரல்கள் ஒன்பதாம் வீட்டில் அல்லது ஒன்பதாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் பெரும் பூர்வ புண்ணியம் பெற்றவன்

பரல்கள் அடிப்படையில் சொந்தமாக தொழில்

அதிகபட்ச பரல்கள் பத்தாம் வீட்டில் அல்லது பத்தாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் சொந்தமாக தொழில் செய்வான். அடிமை தொழில் செய்ய மாட்டான். கௌரவமாக வாழ்க்கை நடத்துவான்

பரல்கள் அடிப்படையில் செலவாளியாக இருப்பான்

அதிகபட்ச பரல்கள் பண்ணிரெண்டாம் வீட்டில் அல்லது பண்ணிரெண்டாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் செலவாளியாக இருப்பான்.

பரல்கள் அடிப்படையில் தலைமைப்பண்பு

அதிகபட்ச பரல்கள் லக்னத்தில் இருந்தால் அல்லது லக்னாதிபதியின் வீட்டில் இருந்தால் ஜாதகன் தலைமைப்பண்பு கொண்டவானாக இருப்பான். ஜாதகனுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுய முயற்சியில் ஜாதகன் முன்னேறுவான்.

பரல்கள் அடிப்படையில் கணவன் மனைவிக்கு அடங்கி நடப்பான்

ஐந்தாம் வீட்டில் உள்ள பரல்கள், ஏழாம் வீட்டின் பரல்களை விட அதிகமாக இருந்தால் ஜாதகன் மனைவிக்கு அடங்கி நடப்பான்

பரல்கள் அடிப்படையில் பூர்வீக சொத்து

இரண்டாம் வீட்டிலும், நாலாம் வீட்டிலும் பரல்கள் குறைவாக இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்காது

பரல்கள் அடிப்படையில் மனைவி கணவனிடம் அடங்கி நடப்பாள்

லக்னதில் உள்ள பரல்களைவிட ஏழாம் வீட்டில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால், மனைவி ஜாதகனுக்கு அடங்கி நடப்பாள்

திருமணம் ,குழந்தை,வேலை பரல்கள் அடிப்படையில்

சர்வாஷ்டக வர்கத்தில் சுக்ரன் நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் ஜாதகருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குரு நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. சனி நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு

அதிர்ஷ்ட திசை பரல்கள் அடிப்படையில்

சர்வாஷ்டக வர்கத்தில் எந்த திசையில் அதிக பரல்கள் உள்ளதோ அந்த திசை அதிர்ஷ்ட திசை ஆகும். அந்த திசையை நோக்கி பயணம் செய்வதும், வீடு, நிலம் வாங்குவதும் நலம் பயக்கும்.

கிழக்கு (மேஷம் + சிம்மம் + தனுசு)
தெற்கு (ரிஷபம் + கன்னி + மகரம்)
மேற்கு (மிதுனம் + துலாம் + கும்பம்
வடக்கு (கடகம் + விருச்சிகம் + மீனம்)
இங்கு கொடுக்கப்பட்டுள்ள திசை ராசிககளை கூட்டி எந்த திசையில் பரல்கள் அதிகமாக வருகின்றதோ அந்த திசையையே அதிர்ஷ்ட திசையாக கொள்ள வேண்டும்.

மேலும் மற்றுமொரு வழியாகவும் அதிர்ஷ்ட திசையைக் காணலாம்.

1-12-11 (பாவங்கள் கிழக்கு திசையை குறிக்கும்)
10-9-8 (பாவங்கள் தெற்கு திசையை குறிக்கும்)
7-6-5 (பாவங்கள் மேற்கு திசையை குறிக்கும்)
4-3-2 (பாவங்கள் வடக்கு திசையை குறிக்கும்)

ஜாதகர் வெளி நாடு செல்லும் பரல்கள்

7-9-12 பாவங்களில் உள்ள பரல்கள் தான் இருப்பதிலேயே குறைவான பரல்களை கொண்டிருக்குமானால் ஜாதகர் வெளி நாடு செல்வார்.

மாத பரல்கள்

லக்னத்தை பிறந்த மாதமாக கணக்கில் கொண்டு, வரிசையாக மாதங்களை எழுதுங்கள். எந்த ராசியில் பரல்கள் அதிகமாக உள்ளதோ அந்த ராசியில் வருகின்ற மாதங்களில் நற்பலன்கள் அதிகமாக நடக்கும்.

இதைபோலவே.தமிழ் மாதத்தையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.

பரல்கள் அடிப்படையில் எந்த வருடதில் அதிக நன்மை உள்ளதாக இருக்கும்

லக்னத்தை பிறந்த வருடமாக பாவித்து கொண்டு அதிலிருந்து வரிசை கிரமமாக வருடங்களை ராசிகளில் எண்ணிக் கொண்டு போகவும். எந்த ராசியில் பரல்கள் அதிகம் உள்ளதோ அங்கு வருகிறனற வருடங்கள் அதிக நன்மை உள்ளதாக இருக்கும்.

பரல்கள் அடிப்படையில் ஜாதகன் மகிழ்ச்சியாக இருதல்

லக்னத்திற்கு 1-4-7-10 ஆம் இடங்களை ஒன்றாக கூட்டவும். இது இளம் வயதைக் குறிக்கும். லக்னத்திற்கு 2-5-8-11 ஆம் இடங்கள் நடு வயதைக் குறிக்கும். லக்னத்திற்கு 3-6-9-12 இடங்கள் முது வயதைக் குறிக்கும். எந்த வயதுக்குரிய பகுதியில் பரல்கள் கூட்டுத்தொகை அதிகமாக இருக்கின்றதோ அக்கால கட்டத்தில் ஜாதகன் மகிழ்ச்சியாக இருப்பான்

பரல்கள் அடிப்படையில் எந்த வயதில் ஜாதகன் சந்தோசமான வாழ்க்கையை அனுபவிப்பான்.

லக்னம் முதல் நாலாம் பாவம் வரையுள்ள பரல்களை கூட்டவும். இது இளம் வயதை குறிக்கும். ஐந்தாம் பாவம் முதல் எட்டாம் பாவம் வரை உள்ள பரல்களை கூட்டவும். இது நடு வயதை குறிக்கும். ஒன்பதாம் பாவம் முதல் பன்னிரெண்டாம் பாவம் வரையில் உள்ள பரல்களை கூட்டவும். இது முது வயதை குறிக்கும். எந்த வயதுக்குரிய பரல்கள் அதிகமாக இருக்கின்றதோ அந்த வயதுகளில் ஜாதகன் சந்தோசமான வாழ்க்கையை அனுபவிப்பான்.

காதகம்,பந்துகம்,சேவகம்,போஷகம் பரல்கள்

லக்னத்திற்கு 1-5-9 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு பந்துகம் என்று பெயர். லக்னத்திற்கு 2-6-10 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு சேவகம் என்று பெயர். லக்னத்திற்கு 3-7-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டுவோம், இதற்கு போஷகம் என்று பெயர். லக்னத்திற்கு 1-4-8-12 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும், இதற்கு காதகம் என்று பெயர். பந்துகம் என்பது உறவுகளை குறிக்கும். சேவகம் என்பது சேவை அல்லது தொழில் நிலையைக் குறிக்கும். போஷகம் என்பது பிறரை ஆதரிப்பதை குறிக்கும். காதகம் என்றால் பீடை என்று பொருள்படும். காதக பரல்களை விட போஷக பரல்கள் அதிகமாக இருந்தால் செல்வ செழிப்பு உண்டாகும். காதக பரல்களை விட போஷக பரல்கள் குறைவாக இருந்தால் தரித்திரம் உண்டாகும். செகவ பரல்களை விட பந்துக பரல்கள் அதிகமாக இருந்தால் சுற்றத்தாரால் நன்மை உண்டாகும். சேவக பரல்களை விட பந்துக பரல்கள் குறைவாக இருந்தால் அரசாங்க வேலை கிடைக்கும்.

எந்தேந்த பாவத்தில் எவ்வளவு பரல்கள் இருந்தால் நல்லது என்று கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பாவம் பரல்கள் (இருந்தால் நல்லது. பாவம் பரல்கள்
1          25
2            22
3            29
4            24
5            25
6            34
7            19
8            24
9            29
10            36
11            54
12            16

அதிகபட்சபரல்கள் உள்ளஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ வாழ்க்கை துணை

எந்த ராசியில் அதிகபட்ச பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்கள் வாழ்க்கை துணையாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

அஸ்ரீசுரம் பரல்கள்

லக்னத்திற்கு 6-8-12 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதறகு அஸ்ரீசுரம் என்று பெயர். இவ்வாறு கூட்டி வந்த தொகை 76 க்கு மேல் இருந்தால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். 76 க்கு குறைவாக இருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

செலவை விட வரவு அதிகமாக இருக்கும் பரல்கள்

லக்னத்திற்கு 1-2-4-9-10-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு ஸ்ரீசுரம் என்று பெயர். இவ்வாறு கூட்டி வந்த தொகை 164 க்கு மேல் இருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

அகம்,புறம் பரல்கள் பலன்

லக்னத்திற்கு 1-4-7-10, 5-9 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். அதற்கு அகம் என்று பெயர்.

லக்னத்திற்கு 2-6-8-12, 3-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும், இதற்கு புறம் என்று பெயர்.

புறப்பரல்களை விட அகப்பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்கையில் எல்லா விதத்திலும் மனதிருப்தி உண்டாகும்.

புறப்பரல்களை விட அகப்பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்கையில் எதிலும் திருப்தி உண்டாகாது.

சனி பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் நிகழாது பரல்கள்,

சந்திரன் நின்ற ராசிக்கு 12-1-2 ஆம்இடங்களில் எதாவது ஒரு இடத்தில் 30க்கு மேல் பரல்கள் இருந்தால் ஏழரை சனி காலத்தில் ஜாதகருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் நிகழாது, நன்மைகளே நடக்கும்.

அதிக வித்தியாசமில்லாமல் சராசரியான பரல்கள்

ஒரு ராசியில் மிக குறைவான பரல்களும், அதற்கு அடுத்த ராசியில் மிக அதிக அளவில் பரல்களும் இருந்தால் வாழ்கையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். 12 ராசிகளில் உள்ள பரல்கள்அதிக வித்தியாசமில்லாமல் சராசரியாக இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் வாழ்கையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் வாழ்க்கை சீராக நகர்ந்து செல்லும்.

நற்பலன்களை கொடுக்கும் பரல்கள்

ஒரு ராசியில் 30 க்கு மேல் பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோட்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலன்களை கொடுக்கும்.

ஒரு ராசியில் 25 முதல் 30 பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோச்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலனையே கொடுக்கும்.

குறைந்த பட்சம் பரல்கள்

ஒரு ராசியில் 25க்கு குறைவாக பரல்கள் இருந்து, அந்த ராசியில் எந்த கிரகம் கோட்சார ரீதியாக சஞ்சரித்தாலும் தீயபலனையே கொடுக்கும்.

ஆயுள் பரல்கள்...

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் சரிசமாக இருந்தால் ஜாதகருக்கு மத்திம ஆயுள்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு அற்ப ஆயுள்.

சர்வாஷ்டவர்க பலன்கள்



சர்வாஷ்டவர்க பலன்கள்
சர்வாஷ்டக வர்கத்தின் மொத்த பரல்கள் 337. இதை 12 ஆல் வகுத்தால் ஒரு ராசிக்கு சராசரியாக 28 பரல்கள் வரும். எனவே ஒரு ராசியில் 28 பரல்களுக்கு மேல் இருபது நல்லது.

ஒரு ராசியில் 30 க்கு மேல் பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோட்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலன்களை கொடுக்கும்.

ஒரு ராசியில் 25 முதல் 30 பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோச்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலனையே கொடுக்கும்.

ஒரு ராசியில் 25க்கு குறைவாக பரல்கள் இருந்து, அந்த ராசியில் எந்த கிரகம் கோட்சார ரீதியாக சஞ்சரித்தாலும் தீயபலனையே கொடுக்கும்.

ஒரு ராசியில் மிக குறைவான பரல்களும், அதற்கு அடுத்த ராசியில் மிக அதிக அளவில் பரல்களும் இருந்தால் வாழ்கையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். 12 ராசிகளில் உள்ள பரல்கள்அதிக வித்தியாசமில்லாமல் சராசரியாக இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் வாழ்கையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் வாழ்க்கை சீராக நகர்ந்து செல்லும்.

சந்திரன் நின்ற ராசிக்கு 12-1-2 ஆம்இடங்களில் எதாவது ஒரு இடத்தில் 30க்கு மேல் பரல்கள் இருந்தால் ஏழரை சனி காலத்தில் ஜாதகருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் நிகழாது, நன்மைகளே நடக்கும்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் சரிசமாக இருந்தால் ஜாதகருக்கு மத்திம ஆயுள்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு அற்ப ஆயுள்.

லக்னத்திற்கு 1-4-7-10, 5-9 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். அதற்கு அகம் என்று பெயர். லக்னத்திற்கு 2-6-8-12, 3-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும், இதற்கு புறம் என்று பெயர். புறப்பரல்களை விட அகப்பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்கையில் எல்லா விதத்திலும் மனதிருப்தி உண்டாகும். புறப்பரல்களை விட அகப்பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்கையில் எதிலும் திருப்தி உண்டாகாது.

லக்னத்திற்கு 1-2-4-9-10-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு ஸ்ரீசுரம் என்று பெயர். இவ்வாறு கூட்டி வந்த தொகை 164 க்கு மேல் இருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும். 164 க்கு குறைவாக இருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

லக்னத்திற்கு 6-8-12 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதறகு அஸ்ரீசுரம் என்று பெயர். இவ்வாறு கூட்டி வந்த தொகை 76 க்கு மேல் இருந்தால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். 76 க்கு குறைவாக இருந்தால் செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

எந்த ராசியில் அதிகபட்ச பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்கள் வாழ்க்கை துணையாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எந்த ராசியில் அதிகபட்ச பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். எந்த ராசியில் குறைந்த பட்ச பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம லக்னமாகவோ கொண்டவர்களுடன் கூட்டு சேரகூடாது.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகங்களை ஒப்பிடும்போது, யாருடைய ஜாதகத்தில், லக்னத்தில் அதிக பட்ச பரல்கள் உள்ளதோ, அவரே அந்த குடும்பத்தை வழி நடத்தி செல்வார்.

தொழில் முறை கூட்டாளிகளின் ஜாதகங்களை ஒப்பிடும் போது யாருடைய ஜாதகத்தில், லக்னத்தில் அதிக பட்ச பரல்கள் உள்ளதோ, அவரே தலைமை ஏற்று அந்த தொழிலை நடத்தி செல்வார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து தொழில் செய்யும் பொழுது, அவர்களில் யாருடைய ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் அதிக பட்ச பரல்கள் இருக்கிறதோ, அவர் பெயரில் தொழில் நடத்துவது நன்மை பயக்கும்.

லக்னத்திற்கு 1-5-9 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு பந்துகம் என்று பெயர். லக்னத்திற்கு 2-6-10 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு சேவகம் என்று பெயர். லக்னத்திற்கு 3-7-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டுவோம், இதற்கு போஷகம் என்று பெயர். லக்னத்திற்கு 1-4-8-12 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும், இதற்கு காதகம் என்று பெயர். பந்துகம் என்பது உறவுகளை குறிக்கும். சேவகம் என்பது சேவை அல்லது தொழில் நிலையைக் குறிக்கும். போஷகம் என்பது பிறரை ஆதரிப்பதை குறிக்கும். காதகம் என்றால் பீடை என்று பொருள்படும். காதக பரல்களை விட போஷக பரல்கள் அதிகமாக இருந்தால் செல்வ செழிப்பு உண்டாகும். காதக பரல்களை விட போஷக பரல்கள் குறைவாக இருந்தால் தரித்திரம் உண்டாகும். செகவ பரல்களை விட பந்துக பரல்கள் அதிகமாக இருந்தால் சுற்றத்தாரால் நன்மை உண்டாகும். சேவக பரல்களை விட பந்துக பரல்கள் குறைவாக இருந்தால் அரசாங்க வேலை கிடைக்கும்.

எந்தேந்த பாவத்தில் எவ்வளவு பரல்கள் இருந்தால் நல்லது என்று கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பாவம் பரல்கள் (இருந்தால் நல்லது)
1 25
2 22
3 29
4 24
5 25
6 34
7 19
8 24
9 29
10 36
11 54
12 16

லக்னம் முதல் நாலாம் பாவம் வரையுள்ள பரல்களை கூட்டவும். இது இளம் வயதை குறிக்கும். ஐந்தாம் பாவம் முதல் எட்டாம் பாவம் வரை உள்ள பரல்களை கூட்டவும். இது நடு வயதை குறிக்கும். ஒன்பதாம் பாவம் முதல் பன்னிரெண்டாம் பாவம் வரையில் உள்ள பரல்களை கூட்டவும். இது முது வயதை குறிக்கும். எந்த வயதுக்குரிய பரல்கள் அதிகமாக இருக்கின்றதோ அந்த வயதுகளில் ஜாதகன் சந்தோசமான வாழ்க்கையை அனுபவிப்பான்.

லக்னத்திற்கு 1-4-7-10 ஆம் இடங்களை ஒன்றாக கூட்டவும். இது இளம் வயதைக் குறிக்கும். லக்னத்திற்கு 2-5-8-11 ஆம் இடங்கள் நடு வயதைக் குறிக்கும். லக்னத்திற்கு 3-6-9-12 இடங்கள் முது வயதைக் குறிக்கும். எந்த வயதுக்குரிய பகுதியில் பரல்கள் கூட்டுத்தொகை அதிகமாக இருக்கின்றதோ அக்கால கட்டத்தில் ஜாதகன் மகிழ்ச்சியாக இருப்பான்.

லக்னத்தை பிறந்த வருடமாக பாவித்து கொண்டு அதிலிருந்து வரிசை கிரமமாக வருடங்களை ராசிகளில் எண்ணிக் கொண்டு போகவும். எந்த ராசியில் பரல்கள் அதிகம் உள்ளதோ அங்கு வருகிறனற வருடங்கள் அதிக நன்மை உள்ளதாக இருக்கும்.

லக்னத்தை பிறந்த மாதமாக கணக்கில் கொண்டு, வரிசையாக மாதங்களை எழுதுங்கள். எந்த ராசியில் பரல்கள் அதிகமாக உள்ளதோ அந்த ராசியில் வருகின்ற மாதங்களில் நற்பலன்கள் அதிகமாக நடக்கும்.

இதைபோலவே.தமிழ் மாதத்தையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.

எந்த ராசியில் அதிக பரல்கள் உள்ளதோ, அந்த ராசியில் சனி, குரு போன்ற கிரகங்கள் வாழ்கையில் முக்கிய நிகழ்வுகள் அல்லது முக்கிய திருப்பங்கள் ஏற்படும்.

தாச-புத்தி நடத்தும் கிரகம் எந்த ராசியில் நிற்கின்றதோ, அந்த ராசியில் 28 பரல்கள் இருந்தால், அந்த கிரகம் சராசரியாக சுப-அசுப பலன்களை கொடுக்கும். 28 பரல்களுக்கு மேல் இருந்தால் சுப பலன்களையே தரும். 28 பரல்களுக்கு கீழ் இருந்தால், அசுப பலன்களையே தரும்.

தாச-புத்தி  நடத்தும் கிரகம் இராசி கட்டடத்தில் பெற்ற பரல்களை விட நவாம்ச கட்டத்தின் ராசியில் உள்ள கட்டடத்தில் உள்ள பரல்களை விட குறைவானதாக இருந்தால் அந்த கிரகம் தனது தசா – புத்தியில் நல்லது செய்யும். அதிகமாக இருந்தால் தீமையை செய்யும்.

7-9-12 பாவங்களில் உள்ள பரல்கள் தான் இருப்பதிலேயே குறைவான பரல்களை கொண்டிருக்குமானால் ஜாதகர் வெளி நாடு செல்வார்.

சர்வாஷ்டக வர்கத்தில் எந்த திசையில் அதிக பரல்கள் உள்ளதோ அந்த திசை அதிர்ஷ்ட திசை ஆகும். அந்த திசையை நோக்கி பயணம் செய்வதும், வீடு, நிலம் வாங்குவதும் நலம் பயக்கும்.

கிழக்கு (மேஷம் + சிம்மம் + தனுசு)
தெற்கு (ரிஷபம் + கன்னி + மகரம்)
மேற்கு (மிதுனம் + துலாம் + கும்பம்
வடக்கு (கடகம் + விருச்சிகம் + மீனம்)
இங்கு கொடுக்கப்பட்டுள்ள திசை ராசிககளை கூட்டி எந்த திசையில் பரல்கள் அதிகமாக வருகின்றதோ அந்த திசையையே அதிர்ஷ்ட திசையாக கொள்ள வேண்டும்.

மேலும் மற்றுமொரு வழியாகவும் அதிர்ஷ்ட திசையைக் காணலாம்.

1-12-11 (பாவங்கள் கிழக்கு திசையை குறிக்கும்)
10-9-8 (பாவங்கள் தெற்கு திசையை குறிக்கும்)
7-6-5 (பாவங்கள் மேற்கு திசையை குறிக்கும்)
4-3-2 (பாவங்கள் வடக்கு திசையை குறிக்கும்)
சர்வாஷ்டக வர்கத்தில் சுக்ரன் நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் ஜாதகருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குரு நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. சனி நின்ற ராசியில் உள்ள பரல்கள் எத்தனையோ அந்த வயதில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

மீன இராசி முதல் மிதுன இராசி வரை இளம் வயதைக் குறிக்கும். கடக இராசி முதல் துலாம் இராசி வரை நடு வயதைக் குறிக்கும். விருச்சிகம் முதல் கும்பம் வரை முது வயதைக் குறிக்கும். எந்த வயதுக்குரிய பரல்கள் அதிகமாக இருக்கின்றதோ அப்பொழுது ஜாதகன் மகிழ்ச்சியாக இருப்பான்.

லக்னதில் உள்ள பரல்களைவிட ஏழாம் வீட்டில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால், மனைவி ஜாதகனுக்கு அடங்கி நடப்பாள்.

நாலாம் வீட்டில் உள்ள பரல்களை விட ஆறாம் வீட்டில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

பதினோராம் வீட்டில் உள்ள பரல்கள், பணிரெண்டாம் வீட்டின் பரல்களை விட அதிகமாக இருந்தால், வரவு அதிகம் செலவு குறைவு

பதினோராம் வீட்டில் உள்ள பரல்கள், பத்தாம் வீட்டின் பரல்களை விட அதிகமாக இருந்தால் உழைபுக்கேற்ப ஊதியம் கிடைக்கும்.

இரண்டாம் வீட்டிலும், நாலாம் வீட்டிலும் பரல்கள் குறைவாக இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்காது.

ஐந்தாம் வீட்டில் உள்ள பரல்கள், ஏழாம் வீட்டின் பரல்களை விட அதிகமாக இருந்தால் ஜாதகன் மனைவிக்கு அடங்கி நடப்பான்.

அதிகபட்ச பரல்கள் லக்னத்தில் இருந்தால் அல்லது லக்னாதிபதியின் வீட்டில் இருந்தால் ஜாதகன் தலைமைப்பண்பு கொண்டவானாக இருப்பான். ஜாதகனுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுய முயற்சியில் ஜாதகன் முன்னேறுவான்.

அதிகபட்ச பரல்கள் இரண்டாம் இடத்தில இருந்தால் அல்லது இரண்டாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால்.ஜாதகன் சிறந்த பேச்சாளனாக திகழ்வான்.

அதிகபட்ச பரல்கள் மூன்றாம் வீட்டில் அல்லது மூன்றாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் சிறந்த எழுத்தாளனாக திகழ்வான். நல்ல தைரியசாலியாக இருப்பான்.

அதிகபட்ச பரல்கள் நான்காம் வீட்டில் அல்லது நான்காம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் இளம் வயதிலேயே வீடு வாகனங்கள் அமையும்.ஜாதகன் சுகவான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்..

அதிகபட்ச பரல்கள் ஐந்தாம் வீட்டில் அல்லது ஐந்தாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் சிறந்த கலைஞன் ஆகா திகழ்வான்.

அதிகபட்ச பரல்கள் ஆறாம் வீட்டில் அல்லது ஆறாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் அடிமை தொழில் செய்வான். எதிரிகள் / கடன் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

அதிகபட்ச பரல்கள் ஏழாம் வீட்டில் அல்லது ஏழாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் மனைவி தயவில் வாழ்க்கை நடத்துவான்.

அதிகபட்ச பரல்கள் எட்டாம் வீட்டில் அல்லது எட்டாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் வாழ்கையில் அவமானங்கள் தொடர்கதையாக இருக்கும்.

அதிகபட்ச பரல்கள் ஒன்பதாம் வீட்டில் அல்லது ஒன்பதாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் பெரும் பூர்வ புண்ணியம் பெற்றவன்.

அதிகபட்ச பரல்கள் பத்தாம் வீட்டில் அல்லது பத்தாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் சொந்தமாக தொழில் செய்வான். அடிமை தொழில் செய்ய மாட்டான். கௌரவமாக வாழ்க்கை நடத்துவான்.

அதிகபட்ச பரல்கள் பதினோன்றாம் வீட்டில் அல்லது பதினோன்றாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

அதிகபட்ச பரல்கள் பண்ணிரெண்டாம் வீட்டில் அல்லது பண்ணிரெண்டாம் வீட்டதிபன் இருக்கும் வீட்டில் இருந்தால் ஜாதகன் செலவாளியாக இருப்பான்.

ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன?

 

ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன?


ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன?
ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன? 
 மூலம் அ சூசை பிரகாசம்  2022-06-15 11:02:34
ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன?
பிறந்த விண்மீனை கொண்டு, ஜாதகரின் ராசிபலன் பார்ப்பதையே ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்று மூன்று வகையாக விண்மீன்களை தொகுத்து கூறுகின்றனர்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, வடமொழிச் சொற்களை ஆருடம் கணிப்பதில் பயன்படுத்துவது ஏனெனில், தமிழர்களாகிய நமக்கு அது தெளிவாக புரிந்து விடக் கூடாது அல்லது நாம் கற்று விடக் கூடாது என்பதன் அடிப்படை நோக்கம் கொண்டே.

தமிழர்களாகிய நாம் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் - ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் தமிழில் என்ன பொருள் படுகிறது என பார்க்கலாம்.

பிறப்பு என்கிற தமிழ் சொல்லுக்கான வடமொழிச்சொல் ஜென்மம். இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரை, இங்கே ஜென்மம் என்பது "முதல் நிலை விண்மீன்" என பொருள்படுகிறது.   தாரா - தாரை என்பதற்கு தமிழில் விண்மீன் என பொருள்.

அணு என்கிற வடமொழி சொல்லிற்கு "அடுத்தது" என தமிழில் பொருள்படுகிறது.  பிறந்த விண்மீனுக்கு அடுத்த நிலையில் உள்ள விண்மீன், "அடுத்த விண்மீன்" என பெயர் சூட்டப்படுகிறது - இதை அணு தாரா என அழைக்கிறார்கள்.

மூன்று என்ற தமிழ் சொல்லுக்கு, திரி என்ற வடமொழி சொல் பயன்படுகிறது.  அப்படியானால் திரிஜென்ம தாரா என்பதற்கு, தமிழில் "மூன்றாம் நிலை விண்மீன்" என பொருள்.

முதல் நிலை விண்மீன், அடுத்த விண்மீன், மூன்றாம் நிலை விண்மீன் ஆகிய 3 நிலைகள் குறித்து கீழே உள்ள பட்டியலின் மூலம் எளிதாக கற்கலாம்.

முதல்நிலை விண்மீன்களை கணிப்பதற்கு, பிறந்த விண்மீனை ஒன்றாம் விண்மீனாக கருதி, ஒன்பதாம் விண்மீன் வரை எண்ணி வந்தால், அவை முதல் நிலை விண்மீன்கள் (ஜென்மம்) குழுவில் இடம் பெறுகின்றன.

10வது விண்மீனில் இருந்து, 18வது விண்மீன் வரை எண்ணி வந்தால், அவை இரண்டாம்நிலை - அடுத்த நிலை விண்மீன்கள் (அணு ஜென்மம்) குழுவில் இடம் பெறுகின்றன.

19வது விண்மீனில் இருந்து 27வது விண்மீன் வரை எண்ணி வந்தால் அவை மூன்றாம் நிலை விண்மீன்கள் (திரி ஜென்மம்) குழுவில் இடம்பெறுகின்றன.

இவ்வாறு விண்மீன்களைப் குழுக்களாக பிரித்து பட்டியலிடும் பொழுது, பிறந்த விண்மீன்,  அடுத்த நிலை மற்றும் மூன்றாம் நிலை விண்மீன்களின் விண்மீன்களையும் ஒன்று என்கிற வரிசை எண்ணில் துவங்கி 9 வரை பட்டியலிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் அசுவினி விண்மீனில் பிறந்திருக்கிறார் என்றால், அதை ஒன்று என்றும், தொடர்ந்து வரிசையாக 2. பரணி 3. கிருத்திகை 4. ரோகிணி 5. மிருகசீரிடம் 6. திருவாதிரை 7. புனர்பூசம் 8. பூசம் 9. ஆயில்யம் என முதல் பட்டியலையும்,  அடுத்த விண்மீன் குழுவிற்கு வரிசையில் முதல் எண் மகம்,  2. பூரம் 3. உத்திரம் 4. அஸ்தம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. கேட்டை என்றும், மூன்றாம் நிலை விண்மீன் குழுவிற்கு வரிசையில் முதல் எண் மூலம், 2. பூராடம், 3. உத்திராடம், 4. திருவோணம், 5. அவிட்டம், 6. சதயம், 7.  பூரட்டாதி, 8. உத்திரட்டாதி, 9. ரேவதி என பட்டியலிட்டு கொண்டால், பலன் கணிப்பதற்கு எளிதாக இருக்கும்.

வரிசை எண் ஒன்றொன்றுக்கும் 3 விண்மீன்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.  இப்படி ஒரே வரிசை எண் கொண்ட விண்மீன்கள் மூன்று மூன்றாக குழு சேர்ந்துள்ளது.  

பட்டியலிலுள்ள வரிசை எண்கள் 1 - 9 ஆகிய நிலையில் உள்ள 6 விண்மீன்களும் நடுநிலையில் பலன்களைத் தருபவை.

பட்டியலிலுள்ள வரிசை எண்கள் 2 - 4 - 6 - 8 ஆகிய நிலையில் உள்ள 12 விண்மீன்களும் சிறப்பான பலன்களைத் தருபவை.

பட்டியலிலுள்ள வரிசை எண்கள் 3 - 5 - 7 ஆகிய நிலையில் உள்ள 9 விண்மீன்களும் நற்பயன்களை தராது.

வரிசை எண்ணின் படி ஒவ்வொரு 3 விண்மீன்களுக்கு என்ன பெயர்? அவை தரும் பலன் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்:

ஒன்றாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் ஜென்ம தாரா அதாவது பிறந்த விண்மீன்களின் வரிசை என பொருள் கொள்கிறது. இவை நற்செயல்கள் புரிவதற்கு ஏற்றவை அல்ல. இவை எவ்வித சிறந்த பலன்களையும் தராது.

இரண்டாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் சம்பத் தாரை எனப்படுகிறது.  அதாவது சொத்து - செழிப்பு - செல்வம் ஆகியவற்றை கணிப்பதற்கு பயன்படும் விண்மீன் குழு.

மூன்றாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் விபத்து தாரை என அழைக்கப்படுகிறது.  அதாவது, தீங்கான பலன்களைத் தரும் விண்மீன் குழு.

நான்காம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் ஷேம தாரை - அதாவது நலம் தரும் விண்மீன் குழு என அழைக்கப்படுகிறது.

ஐந்தாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் பிரத்யகு தாரை என அழைக்கப்படுகிறது.  பிரத்யகு என்கிற வடமொழிச்சொல் இருக்கு, தடங்கல் என பொருள்.  அதாவது இந்த விண்மீன்கள் தடங்கலை தரும்.

ஆறாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் சாதக தாரா - அதாவது ஏற்புடையதான, ஒத்து வரக்கூடியதான பலன்களை தரும் விண்மீன்கள் குழு.

ஏழாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் வத தாரை - அதாவது துன்பங்களை தரும் விண்மீன்கள் குழு என அழைக்கப்படுகிறது.

ஒன்பதாம் எண் வரிசை கொண்ட விண்மீன்கள் பரமை திர தாரை, அதாவது அன்பான, பற்றுள்ள, நட்பை ஏற்படுத்தக்கூடிய விண்மீன் குழு என அழைக்கப்படுகிறது.

இவ்வகையில் உள்ள பெயர்ச்சொல்களிலிருந்து, விண்மீன்கள் எத்தகைய பலன்களை தரும் என்பது குறித்து புரிந்து கொள்ளலாம்.

குறிப்பு:  விண்மீன்களை வரிசைப்படுத்தும் பொழுது அவற்றின் பாதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.



பிறவிகள் ஏழு

புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான்

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

ஒரு ஸ்பூன் பாதம் பிசின்; இவ்வளவு நன்மை இருக்கு!

 ஒரு ஸ்பூன் பாதம் பிசின்; இவ்வளவு நன்மை இருக்கு!
பாதம் பிசின் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு ஏற்படும் பல நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். இதன் மூலம் சருமப் பிரச்சனைகள், முடி உதிர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க முடியும்.
 

Badam pisin

பாதாம் பிசின் என்பதை பெரும்பாலும் குளிர்பானங்களில் கலந்து கொடுக்கும் போது நாம் பார்த்திருப்போம். ஆனால், அவை வெறும் சுவை ஊட்டிகள் என்பதையும் கடந்து, பல மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. 

பாதாம் பிசினை ஒரு ஸ்பூன் எடுத்து, அதனை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் பொலிவான முக அமைப்பு பெற முடியும். மேலும், பாதாம் பிசினை தினசரி சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும். பெண்களுக்கு மாதவிலக்கு சீராக இருக்கவும் பாதாம் பிசின் உதவி செய்கிறது.

பாதாம் பிசின் நமது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இயற்கை லாக்சேட்டிவாக செயல்பட்டு பெரும்பாலான நபர்கள் கோடைகாலத்தில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. அது மட்டுமல்லாமல் அசிடிட்டி மற்றும் வயிற்றில் அல்சர் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருகிறது.

நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பிசின் நமது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை அளிக்கிறது. நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால் உடல் எடையை பராமரிக்க இது சிறந்ததாக அமைகிறது. அதே நேரத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களித்து, ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. 

லெமனேடு, ரோஸ் மில்க் அல்லது பிற புத்துணர்ச்சியூட்டும் பானங்களோடு சேர்த்து பாதாம் பிசினை சாப்பிடலாம். மேலும் மில்க் ஷேக், ஃபலூடா அல்லது தயிர் போன்ற இனிப்பு வகைகளோடு ஊற வைத்த பாதம் பிசினை சேர்த்து சாப்பிடுவது அதன் சுவையை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். ஒருவேளை உங்களுக்கு ஃப்ரூட் சாலட் பிடிக்கும் என்றால் அதில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த பாதாம் பிசின் சேர்த்து சாப்பிடுவது அதன் குளிரூட்டும் விளைவையும் அதிகரிக்கும்.

 


5இல் கேது பகவான்

ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் யாரையும் நம்பமாட்டார்கள். அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

5-ல் ராகு கேது என்ன செய்யும்?

5-ல் ராகு கேது என்ன செய்யும்?

பொதுவாக புத்திர தோஷம் ஏற்பட பெரும்பான்மையான ஜாதகங்களில் ஜனன ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என சொல்லப்படும் புத்திரஸ்தானத்தில் அரவு எனப் பெயர் பெற்ற ராகு கேது அமர்ந்தால் புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் என்று கூறுவர்.

மேலும், அவர்களின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் பாவம், மற்றும் புத்திரகாரகன் என்று சொல்லக்கூடிய குருவும், அவரவர் ஜாதகப்படி 5-க்கு உடையவனும் சம்பந்தப்படுகின்றன.

இவையனைத்தையும் தீர ஆராய்ந்த பின்தான் புத்திர தோஷம் உண்டா? இல்லையா? என்ற முடிவுக்கு வரவேண்டும்

2-ல் ராகு கேது இருப்பதன் நன்மைகள்

2-ல் ராகு கேது இருப்பதன் நன்மைகள்

2-ல் ராகு கேது இருக்கும் ஜாதகதாரர்கள் வாக்குச் சாதுர்யமாக இருப்பார்கள். பொதுவாக மேடைப் பேச்சுகளிலும் பட்டிமன்றங்களிலும் இவர்கள் பேச்சு அனைவராலும் கவரப்படும். விவாதம் செய்தால் இவர்களே இறுதியில் வெற்றி அடைவார்கள். இது போன்ற அமைப்பினைப் பெற்றவர்கள் வாக்குத் தொழில் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். அதாவது வழக்கறிஞர் தொழில் இவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

சமரசம் பேசுவதிலும் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. மத்தியஸ்தர்களாக இவர்கள் நடந்து கொள்ள இந்த 2-ல் உள்ள ராகு உதவிபுரிகிறது. அரசியலில் இருப்பவர்களுக்கும் இவ்வாறு கிரக அமைப்பு இருந்தால் நன்மைகளை தரும்.

Thursday, 28 November 2024

கேது - சனி சேர்க்கை நல்லதா கெட்டதா? மீள்வது எப்படி?


கேது - சனி சேர்க்கை நல்லதா கெட்டதா? மீள்வது எப்படி? 


கேது மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒன்றாக சேர்க்கை பெற்றுள்ளது. 

இந்த சேர்க்கை நல்லதா? கெட்டதா? என்பதைப் பற்றி பார்ப்போம். 

கேது தற்போது இருக்கும் இடம் என்றால் அது தனுசு ராசியில் தான். ராசியில் கேதுவும் சனியும் ஒன்றாக சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த இரண்டு கிரகமும் பொதுவாக  நன்மை செய்யாத கிரகங்களாகும். 

தற்போது அந்த கிரக அமைப்பு தனுசு ராசியில் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கிரக அமைப்பு சம்பந்தப்பட்ட ராசியினருக்கு எந்தமாதிரியான பலனைத்தரும் என்று பார்க்கலாம். 

பொதுவாக கேது சனி சேர்க்கை நன்மை செய்யாத கிரகங்கள். இரண்டு கிரகமும் ராசியில் ஒன்றாக சேர்ந்தால் என்னவாகும் என்றால்? உடல் ஆரோக்கியம் அதிகமாக பாதிக்கப்படும். ஒருவேளை தசாபுத்தி நன்றாக இருந்தால் தப்பிக்கலாம்.

இல்லையெனில், ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் முதல் பெரிய பாதிப்புகள் வரை ஏற்படுத்தும். ஜெனனகால ஜாதகத்தை பொருத்து, அவரவரின் வயதை பொருத்து  நடைபெறுகின்ற தசாபுத்தியை பொருத்து பலனை கொடுக்கும். 

சின்ன பாதிப்பா, பெரிய பாதிப்பா இல்லை 365 நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுமா? அல்லது சிலநாட்கள் மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகுமா? எந்த  அளவுக்கு தீவிர தன்மை இருக்கும் என்பது உங்களின் ஜெனன கால ஜாதகத்தைப் பொருத்து மாறுபடும். 


நோய்களுக்கும் நவக்கிரகங்களுக்கு நிறைய தொடர்புள்ளது. அந்தவகையில், எந்த கிரகம் எந்த இடத்தில் வந்தால் எந்த நோய் ஏற்படும்? நிரந்திரமாக நீடிக்குமா? விரைவில்  சரியாகுமா? இல்லை கூடவே நீடிக்குமா? என்று நோயைப் பற்றி நிறைய விஷயம் உள்ளது. 

ஆனால், சனி கேது சேர்க்கை என்பது நோயை ஏற்படுத்தும் என்பது உறுதி. அவரவர் ஜெனனகால ஜாதகத்தை பொருத்து நோயின் வீரியதன்மை மாறுபடும். பெரும்பாலும்,  இந்த சேர்க்கையானது ஒரு சிலருக்கு தோல் வியாதியை ஏற்படுத்தும். கன்னத்தின் இரண்டு பக்கமும் கருப்பாக பேச்சஸ் வர வாய்ப்புள்ளது. இல்லையென்றால் வெள்ளையாக  திட்டு போன்று உடலில் வெண்நோய் ஏற்பட்டு மறையலாம். தோலில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த கிரகஅமைப்பு. 

சரி, தற்போது கிரகநிலைப்படி தனுசுக்கு 7-ல் ராகு வந்துள்ளது. இது யோகமா? தோஷமா என்றால்? ராகு எப்போதும் யோகம் தரக்கூடிய கிரகம், எனவே, எந்த இடத்தில் ராகு  இருந்தாலும் அது 100 சதவீதம் நன்மையை மட்டும் தான் செய்யும். 

மேலும், 7-ல் ராகு இருந்தால் வாழ்க்கைத்துணைக்கு மிகப்பெரிய யோகத்தைத் தரும். திருமணமான ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும் யோகம்  தரும். கேது தோஷம் என்றால் ராகு யோகம் என்றே கூறுவர். 7-ல் ராகு வந்தால் தம்பதியரின் இல்வாழ்க்கை நன்றாக இருக்கும், வாழ்க்கைக்கு தேவையான சுகபோகத்தை  தரக்கூடியவர் இவர்தான். 

கேது-சனி சேர்க்கையில் இருந்து நம்மை எப்படி காப்பாற்றிக்கொள்வது? 

சனி, கேது என்பது கடுமையான கிரகச் சேர்க்கையாகும். எனவே, இறைவனின் திருவடியை சரணாகதி அடைவது நன்மையைத் தரும். இந்த கிரகச்சேர்க்கை தற்போது தனுசு  ராசியில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கி வரலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்துவரலாம். அப்பரம்  கேதுயாவது, சனியாவது எந்த கிரகமும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. 

பொதுவாக சனிக்கிழமையில் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செய்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும். மேலும், இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் முத்துசாமி  திக்ஷிதர் இயற்றிய திவாகர தனுஜம் என்ற பாடலை பாடலாம். கோளறு பதிகத்தை படித்து வரலாம்.
 


மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படிப் பட்ட பலனை தரும்

மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படிப் பட்ட பலனை தரும்
மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படிப் பட்ட பலனை தரும்

மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படி இருக்கும்
மேஷ லக்னத்திற்கு கேது தசை

மேஷ லக்னத்திற்கு கேது தசை என்பது எந்த மாதிரியான பலனை தரும் என்று பொதுவாக காணலாம்.

ராகு கேது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:

ராகு என்பது முழு இருள் தன்மை. கேது என்பது சூரியன் மறையும் நேரத்தில் இளஞ்சிவப்பு நிறம் தெரியும் அல்லவா! அது போன்ற தன்மை.

ராகுவை கரும்பாம்பு என்றும் கேதுவை செம்பாம்பு என்றும் அழைப்பர். ராகு கேது உருவம் இல்லை, அவை நிழல் கிரகம் என்பதை நினைவில் கொள்க. எனவே ராகு போன்று பெரிய பாவ தன்மையை கேது பெற்று இருப்பதில்லை.

ராகுவை போல கேதுவை பாவ கிரகம் என்று பெரிதாக பார்க்க பட வில்லை. இருந்தாலும் கேது கெடுத்து தான் நல்லது செய்வார். எதிலும் தடையை ஏற்படுத்தி தான் நன்மையை கொடுப்பார்.

கேது என்பவர் ஞான காரகன் என்று அழைக்கப் படுகிறது. அதுற்கு காரணம் பல இன்னல்களை கொடுத்து ஞானத்தை பெற வைப்பார். அதன் பின் நல்ல பலன்களை தருவார்.

சில நேரங்களில் அனைத்தையும் துறந்து வாழ்க்கையே வேண்டாம் என்று துறவற வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பார்.

பொதுவாகவே ராகு கேதுவுக்கு வக்கிரம் கிடையாது. ஆனால் எப்பொழுதுமே அவை இரண்டும் வக்கிர நிலையில் பின்னோக்கி செல்ல கூடிய கிரகங்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேஷ லக்னத்திற்கு கேது தசை:

மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படி இருக்கும்
மேஷ லக்னத்திற்கு கேது தசை

பொதுவாக கேது தசை 7 வருடங்கள் நடக்கும். ராகு கேது மேஷ லக்னத்திற்கு பெரிய நன்மைகளை கொடுப்பதில்லை என்றாலும் கேது குரு அணி கிரகம் என்பதால் ராகுவை விட கொஞ்சம் அதிகமாக நல்ல பலன்களை எதிர்ப் பார்க்கலாம்.

அது மட்டுமில்லாமல் ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் செயல் படுவார் என்ற ஒரு விதி உள்ளது. எனவே மேஷ லக்னத்திற்கு கேது தசை பெரிய கெடுதல்களை செய்யாது.

கேது தசா புத்தியில் சில கேதுவின் காரகத்துவங்கள் நமது வாழ்க்கையில் நடக்கலாம்.

தவறு செய்து விட்டு தானே உணர்ந்து புரிந்துக் கொள்ளும் தன்மை உருவாகும். கேது என்பவர் எல்லாம் எனக்குத் தான் என்ற சுயநல எண்ணம் இல்லாமல் எல்லாம் பொதுவானது என நினைக்க வைப்பவர்.

எதிலும் பற்று இல்லாத நிலை உருவாகும். சில நேரங்களில் ஆன்மீகத்திற்குள் செல்ல வைப்பார். துறவறம் மேற்கொள்ள வைப்பார்.

இயற்கை மூலிகை, ஆயுர்வேத மருத்துவம் போன்ற தொடர்புகளை ஏற்படுத்துவார். 

கேது தான் மிகவும் வலிமை மிகுந்த கிரகம் என்று கூறப்படுகிறது. இந்த காரகத்துவத்துடன் சேர்த்து அவர் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை வைத்து பலன் அமையும்.

பொதுவாக ராகு கேது அவர்கள் நின்ற வீட்டு அதிபதியை போன்றும் பார்வை பெற்ற கிரகங்களை போன்றும் செயல் படுவார்கள்.

வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் குரு அணி கிரகத்தின் வீட்டில் அமர்ந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். கேது உபஜெய ஸ்தானங்களில் இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது.

இருந்தாலும் அந்த வீட்டு அதிபதி யார் எந்த நிலையில் இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். சுப கிரகங்கள் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் அவர்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அதே நேரத்தில் மிகக் குறைந்த பாகையில் இணைந்தால் கிரகணம் அடைந்து இணைந்த கிரகம் வலிமை இழக்கும்.

ஆனால் வலிமை இழந்த கிரகத்தின் பலன்களையும் சேர்த்து கேது தசையில் செய்து விடும். 

அதேபோல பாவ கிரகங்கள் சேர்க்கை அல்லது பார்வை பெற்று விட கூடாது. அப்படி இணைந்தால் பாவ கிரகத்தின் தன்மையை செய்து விடும்.

குடும்ப ஸ்தானம் களத்திர ஸ்தானத்தில் கேது அமரும்போது குடும்பத்தை விட்டு துறவு வாழ்க்கை போக வைக்கலாம். 

கேது நன்றாக இருப்பவனுக்கு கஷ்டத்தையும், கஷ்ட நிலையில் இருப்பவனுக்கு நல்லதையும் செய்ய கூடியவர்.

ராகு இருக்கும் இடத்தை கெடுப்பது போல கேது கெடுப்பதில்லை. கேது இருக்கும் இடத்தை வளர்ப்பார்.

எனவே கேது, ராகுவை போன்று அபாயமான கிரகம் இல்லை. எடுத்துக்காட்டாக குருவுடன் கேது இணைந்தால் கேள யோகம் என்ற கோடீஸ்வர யோகத்தை கொடுப்பார்.

அதுவே குருவுடன் ராகு சேர்ந்தால் அந்த குருவின் பலன்களை கெடுப்பார். அதே போல சுக்கிரன் கூட ராகு இணைந்தால் தாம்பத்திய சுகம் கிடைப்பதில்லை.

அதுவே சுக்கிரன் கூட கேது இணைந்தால் தாம்பத்திய சுகம் முழுமையாக கிடைக்கிறது.

உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளிலும் கேது இருக்க மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படி அமையும் என்பதை பார்க்கலாம்.

மேஷ லக்னத்திற்கு கேது தசை (லக்னத்தில் கேது):

லக்னத்தில் கேது இருப்பது நல்லது தான். ராகு தான் லக்னத்தில் இருக்க கூடாது. கேது இருக்கலாம்.

எனவே கேது பெரிய கெடுதல்கள் தந்து விடாது. சுப கிரகங்கள் தொடர்பு இருந்தால் கூடுதல் நல்ல பலன்கள் உண்டாகும்.

இங்கு செவ்வாயுடன் கேது இணைந்து இருந்தால் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

லக்னாதிபதி பாவ கிரகம் ஆகி லக்னத்தில் கேதுவுடன் இணைந்து இருந்தால் நல்ல பலன்கள் தான் கிடைக்கும். ராகு தான் இருக்க கூடாது.

எடுத்துக் காட்டாக லக்னத்தில் செவ்வாய் இருப்பது ரவுடி போன்ற கோபக் காரன், அதுவே கேது இணைந்தால் போலீஸ் கார கோபக் காரன்.

அப்படியே பலனை மாற்றி விடும். அதுவே கேது, செவ்வாய், சனி போன்றவை சேர்ந்து இருக்க கூடாது.

மேஷ லக்னத்திற்கு கேது தசை (2ம் வீட்டில் கேது):

மேஷ லக்னத்திற்கு 2ம் வீடு சுக்கிரன் வீடு. இங்கு கேது இருப்பது பெரிய கெடுதல்களை தந்து விடாது.

செவ்வாய், சனி தொடர்புகள் இருக்க கூடாது. 2ம் இட தனத்தை வளர்க்க கூடிய ஒரு அமைப்பு தான் உருவாகும். எனவே இங்கு சுப தொடர்பு பெற்று இருப்பது நல்லது.

மேஷ லக்னத்திற்கு கேது தசை (3ம் வீட்டில் கேது):

மேஷ லக்னத்திற்கு 3ம் வீடு புதனின் வீடு. 3, 11ம் இடத்தில் கேது இருப்பது நல்லது என்றாலும் அது செவ்வாய்க்கு ஆகாத புதனின் வீடு என்பதால் சில கெடுதல்களும் உருவாகும்.

புதன் 6ம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் 6ம் இட தீய பலன்களை உருவாக்கும். அதே நேரத்தில் ஒரு சில நல்ல பலன்களும் கிடைக்கலாம்.

இங்கு கேது இருப்பது அப்படியே புதன் தசை போன்று செயல்படும். குரு சுக்கிர தொடர்பு பெற்றால் ஓரளவு நன்மை கிடைக்கும்.

மேஷ லக்னத்திற்கு கேது தசை (4ம் வீட்டில் கேது):

மேஷ லக்னத்திற்கு 4ம் இடத்தில் உள்ள கேது ராகுவை போல கெடுக்காமல் தாயை பாதிப்பார்.

கேந்திர கோணங்களில் ராகு கேது இருப்பது அந்த இடத்தை கெடுக்கும். இருந்தாலும் ராகுவை போல கேது கெடுக்க மாட்டார்.

இங்கு ராகு இருந்தால் அம்மா இல்லாத நிலையும் கேது இருந்து அம்மாவை பிரிந்து வாழும் நிலையும் உருவாகலாம். எனவே ராகு போன்று பெரிய அமைப்பில் கெடுக்க மாட்டார்.

கேது பாவத்துவம் அடைந்தால் கெடுதல் கூடுதலாக இருக்கும். சுப தொடர்பு பெற்றால் நல்ல பலன் கிடைக்கும்.

5ம் வீட்டில் கேது:

இங்கு 5ம் வீடு சூரியன் வீடு. ராகு கேதுவுக்கு சந்திரன், சூரியன் எதிரான கிரகங்கள் என்பதால் அவர்களின் வீட்டில் இருக்கும் போது பெரிய நன்மைகளை எதிர் பார்க்க முடியாது.

5ம் இட புத்திர ஸ்தானத்தை ஓரளவு கெடுக்கும். ராகுவின் அளவுக்கு கெடுக்காது. சுப தொடர்புகள் பெற்றால் ஓரளவு மட்டும் கெடுதல்கள் இருக்கும். 

6ம் வீட்டில் கேது:

மேஷ லக்னத்திற்கு 6ம் வீடு புதனின் வீடு. இங்கு கேது இருக்கவே கூடாது. 6ம் இடத்தின் பலன்களை வளர்ப்பார்.

நோய், எதிரி, கடன் வம்பு வழக்கு போன்ற அமைப்புகளை வளர்ப்பார். புதனை போன்று செயல்படுவார்.

செவ்வாய், சனி தொடர்புகள் இருந்தால் ஓரளவு நல்லது. 6ம் இட பலன்கள் குறையும். சுப கிரகங்கள் தொடர்பு பெற்றால் 6ம் இட பலன்கள் அதிகம் ஆகும். 

7ம் வீட்டில் கேது:

மேஷ லக்னத்திற்கு 7ம் வீடு சுக்கிரன் வீடு. இங்கு கேது இருப்பது மனைவியை கெடுக்க மாட்டார். ஆனால் வேற்று இன பெண்ணை மணமுடிக்க வைப்பார்.

ஆனால் ராகுவை போல மண வாழ்க்கையை கெடுக்க மாட்டார். எனவே இங்கு கேது இருப்பது ஓரளவு நல்ல அமைப்பை தரும்.

8ம் வீட்டில் கேது:

இங்கு 8ம் வீட்டில் செவ்வாயின் வீட்டில் கேது இருப்பது லக்னாதிபதி போன்ற பலனை தரும்.

8இல் ராகு இருப்பது ஆயுளை கெடுக்கும். ஆனால் கேது அந்த அளவுக்கு கெடுக்க மாட்டார்.

குரு சுக்கிர தொடர்பு பெற்றால் நல்ல ஆயுள், நல்ல பலன்களை கண்டிப்பாக தருவார்.

9ம் வீட்டில் கேது:

மேஷ லக்னத்திற்கு 9ம் வீடு குருவின் தனுசு வீடு. இங்கு கேது இருப்பது ஆன்மீக எண்ணங்களை கொடுப்பார்.

பாக்கிய ஸ்தானத்தில் கேது இருப்பது மிகவும் நல்ல அமைப்பு. இங்கு ராகு கேது இருப்பது பற்றற்ற நிலையில் நல்ல பலன்களை தருவார்.

10ம் வீட்டில் கேது:

மேஷ லக்னம் 10ம் வீடு சனியின் வீடு. இங்கு கேது இருப்பது நன்மை தான். சனியின் வீடுகள் கேதுவுக்கு பிடித்த வீடுகள்.

இங்கு சனியுடன் சேர்ந்து இருப்பது சனி தசை நல்ல பலன்களை தரும். கேது தசை கொஞ்சம் கெடுதல் செய்யும்.

சனி செவ்வாய் பார்வை இருக்க கூடாது. சுப கிரகங்கள் தொடர்பு பெற்று இருந்தால் நல்லது.

11ம் வீட்டில் கேது:

மேஷ லக்னத்திற்கு 11ம் வீடு சனியின் கும்பம். இங்கு கேது இருப்பது மிகவும் நல்ல பலன்களை தரும்.

லக்னாதிபதி செவ்வாய் வலு பெற்று இருந்தால் நல்ல மேன்மையான அமைப்பு. எனவே இங்கு இருப்பது நல்லது.

12ம் வீட்டில் கேது:

12ம் வீடு குருவின் மீனம் வீடு. இங்கு கேது இருப்பது நல்லது தான். செவ்வாயின் நண்பர் வீடு. சுபரின் வீடு.

பெரிய கெடு பலன்கள் நடக்காது. சுப தொடர்புகள் பெற்றால் மிகவும் நல்ல பலன்கள் தான் செய்யும்.



கேது தசையில் என்ன கிடைக்கும்


கேது தசையில் மோட்சம் கிடைக்குமா? - எந்த ராசி லக்னத்திற்கு நன்மை - பாதிப்புக்கு பரிகாரங்கள்
ஞானகாரகன் கேது. நவகிரகங்களில் கேது பலம்வாய்ந்த கிரகம். கேது ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.அவரது தசாபுத்தி நடைபெறும் ஏழு ஆண்டுகளில் என்னென்ன பலன் கிடைக்கும் பரிகாரம் செய்ய
கேது பகவான் ஞானகாரகன். கேது ஆன்மீக புத்தியை புகட்டுபவர். கேதுவைப் போல கொடுப்பார் இல்லை என்பார்கள். கேது நிறைய ஞானத்தையும் ஆன்மீக புத்தியையும் புகட்டுபவர். முக்தி வழியை காட்டுபவர். நவகிரகங்களில் கேது கடைசியாக சொல்லப்பட்டாலும். அசுவினி, மகம், மூலம் எனப்படும் முக்கிய நட்சத்திரங்களின் அதிபதியாக திகழ்பவர். இவரது தசாபுத்தி காலம் ஏழு ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளில் என்னென்ன பலன்களை தருவார் படிப்பினைகளை தருவார் என்று பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் கேது பலம் பெற்று குரு, சுக்கிரன், உள்ளிட்ட சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். கேது பலமில்லாத நிலையில் பாதிக்கப்பட்டிருந்தாலோ தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளை ஏற்படுத்துவார்.

செவ்வாய் கேது
கேதுவினால் பலன்கள்
நவகிரகங்களில் கேது செவ்வாய் பகவானைப் போல செயல்படுவார். இவருக்கு செவ்வாய், குரு, சூரியன், சந்திரன் நன்மை செய்யும். ஒருவரின் ஜாதகத்தில் கேது தசை ஆளுமை செய்வது 7 ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளில் ஞானமார்க்கத்தை காட்டி விட்டு சென்று விடுவார். இன்பங்களை அனுபவிக்கத்தருவபர் ராகு. ஆன்மீக நிலையில் உச்ச நிலையை காட்டி விடுபவர் ராகு.


கேதுவின் குணங்கள்
கேது என்ன செய்வார்
சுபத்துவம் பெற்ற சனி, குரு உடன் சேரும் போது ஆன்மீகத்தில் அற்புதத்தை தருவார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் இவர்களெல்லாம் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர். அசுவினி, மகம், மூலம் மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக கேது திசை வரும். கேது செம்பாம்பு என்று சொல்வார்கள். ராகுவைப் போல கேது கெடுதல்களை பெரிதாக செய்ய மாட்டார். கேதுவின் தசை நடந்து கேதுவிற்கு வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்று வலுவாக இருந்தார் கேது நன்மை செய்வார்.


பிடிவாதம்
திடீர் பணவரவு
கேது பகவான் பலம் பெற்று குழந்தை பருவத்தில் கேது திசை நடைபெற்றால் விளையாட்டு தனம், பிடிவாத குணம் போன்றவை இருக்கும். வாலிப பருவத்தில் நடைபெற்றால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும், கல்வியில் சுமாரான நிலையிருக்கும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபாடு, போராடி வாழ்வில் வெற்றி பெறக் கூடிய நிலை ஏற்படும். முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளுக்காக செலவு செய்யும் அமைப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பு எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கை, சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து உயரக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

வாழ்க்கையை புரட்டி போடும்.. இந்த ராசிக்கு யோசிக்காத நாட்கள் வரப்போகுது..
உடல் நல பாதிப்பு
தற்கொலை எண்ணம்
கேது பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் வயிறு கோளாறு, அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள், பெற்றோருக்கு சோதனையை உண்டாக்கும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை தேவையற்ற பழக்க வழக்கங்கள், காதல் என்ற வலையில் சிக்கி சீரழியும் வாய்ப்பு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, ஊர் விட்டு ஊர் சென்று அலைந்து திரியும் சூழ்நிலை, தற்கொலை எண்ணம் போன்றவை உண்டாகும். முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு நெருங்கியவர்களை இழக்கும் நிலை, உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், சமுதாயத்தில் கௌரவ குறைவுகள் உண்டாகும்.

நன்மை செய்யும் லக்னங்கள்
கேதுவினால் மாற்றம்
கேது செவ்வாயை போல செயல்படுவார் என்பதால் மேஷம், விருச்சிகம், கடகம் சிம்மம், தனுசு மீனம் இந்த லக்னகாரர்களுக்கு கேது நன்மை செய்வார். கேது திசை வரும் போது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் கேது கெடுதல் செய்வதில்லை. சுப வீடுகளில் கேது இருக்கும் போது வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் தானே அவராக மாறி நன்மை செய்வார்.

வெளிநாடு யோகம்
கேதுவினால் பலன்
வெளிநாடு யோகம். இடமாற்றம் கேதுவின் காரகத்துவம். கேது தசை மட்டுமல்ல கேது புத்தி, அந்தாரத்தில் கூட சிறு மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்.

வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம் என சிறிய மாற்றங்களை கேது ஏற்படுத்துவார். மனிதனின் ஒரு நாளில் இறுதி படுக்கை அறை தூக்கம். உறக்கத்தையும், தூங்கும் இடத்தையும் கேது குறிப்பார். மரணம் எவ்வாறு நிகழும். மரணத்திற்கு பின் என்ன என்றும் நிர்ணயிக்கிறார் கேது.

எங்கு இருந்தால் என்ன பலன்
ஜாதகத்தில் கேது
கேது திசையோ கேது புத்தியோ நிகழும் போது நன்மை நடைபெறும். ஜாதகத்தில் சுப வீடுகளில் அமர்ந்து நன்மை செய்வார். ஞானிகள் தரிசனம் ஆன்மீக பயணங்களை ஏற்படுத்துவார். ஒருவரின் ஜாதகத்தில் 3,6,10,11 ஆகிய இடங்களில் இருந்தால் நல்ல பலன்களை தருவார். கன்னி, மிதுனம், ரிஷபம், கும்பம், துலாம் ஆகிய லக்ன காரர்களுக்கு சுமாரான பலன்களையே செய்வார்.

பாதிப்புகள் என்ன?
மனக்குழப்பங்கள்
ஜாதகத்தில் 1,5,9 ஆகிய இடங்களில் அமர்ந்து குரு பார்வை கிடைத்தால் சமுதாயத்தில் நல்லதொரு கௌரவம், பல பெரிய மனிதர்களின் தொடர்பு, கோயில் கட்டும் பணிகளில் ஈடுபாடு தெய்வ காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு கொடுக்கும். கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெற்றோ, பாவகிரக சேர்க்கைப் பெற்றோ அமைந்து கேதுதிசை நடைபெறும் காலங்களில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மனகுழப்பங்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க கூடிய நிலை, இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

கணவன் மனைவி பிரச்சினை
ஆரோக்கியத்தில் பிரச்சினை
கேது திசை காலங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கேது திசையில் திருமணம் செய்தால் இல்வாழ்வில் ஈடுபாடு உண்டாகாது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளை கொடுக்கும். 8ஆம் வீட்டில் கேது ஒருவருக்கு அமைந்தால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி என்ன வியாதி என்றே கண்டு பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற குழப்பங்களால் தற்கொலை எண்ணத்தை தூண்டும்

கேது திசையில் கேதுபுக்தி
வெற்றியும் தோல்வியும்
கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர் புகழ், கௌரவம் உயரும் அமைப்பு, ஆலய தரிசனங்கள் ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். அதேபலமில்லாமல் இருந்தால் இல்லற வாழ்க்கையில் பிரச்சினை வரும். கேது திசையில் சுக்கிர புக்தி நடைபெறும் போது, சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் திருமண சுபகாரியங்கள் கை கூடும் அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, லட்சுமி கடாட்சம், உத்தியோகத்தில் உயர்வு, செல்வ சேர்க்கை ஏற்படும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் பணவிரயம், விஷத்தால் பயம் மேலிருந்து கீழே விழும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசத்தால் அவமானம் ஏற்படும் நோய்களும் பாதிக்கும். கேது திசையில் ராகுபுக்தி என்பதால் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய சூழ்நிலை உண்டாகும்.

பரிகாரம் என்ன?
கேது பரிகார தலங்கள்
ஒருவரது ஜாதகத்தில் கேதுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி காலத்திலும் விரதம் இருந்து, கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். கேதுவின் அதி தேவர் விநாயகர். விநாயகரை வழிபடுதல், சதூர்த்தி விரதம் இருத்தல் போன்றவை கேதுவால் உண்டாக கூடிய தீய பலன்களை குறைக்க உதவும் தோஷம் விலகும். ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும். மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறுதோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

திருமண தோஷம் நீங்கும்
பித்ரு தோஷம் விலகும்
தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. நாகை மாவட்டம் பூம்புகார் அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. கேது ஸ்தலமான இக்கோயிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கேது பகவானை வழிபட்டால் குழந்தைப்பேறு, திருமணத் தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ரு தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

கேது தோஷம் போக்கும் முருகன்
முருகனின் அருளால் தோஷம் நீங்கும்
திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் - திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

எமகண்டத்தில் அபிஷேகம்
எமகண்டத்தில் அபிஷேகம்
கேது பகவானுக்கு எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு கேதுவை வணங்க தோஷங்கள் நீங்கும்.


கேது தசை தரும் பலன்கள்

 கேது தசை தரும் பலன்கள் : உங்களுக்கு ஒரு வேலை கேது தசை நடந்தால்? பலன்களை கணிப்பது எப்படி?
கேது தசை தரும் பலன்கள் : உங்களுக்கு ஒரு வேலை கேது தசை நடந்தால்? பலன்களை கணிப்பது எப்படி?


காரணம் புரிந்து கொள்ள முடியாத கேதுவின் தன்மைகளை பற்றி நாம் பலன்களை கணிப்பது என்றும் கடினமான ஒன்றாகும்.
கேது தசை தரும் பலன்கள் : உங்களுக்கு ஒரு வேலை கேது தசை நடந்தால்? பலன்களை கணிப்பது எப்படி?
கேது தசை தரும் பலன்கள்

கேது தசை தரும் பலன்கள் :

உங்களுக்கு ஒரு வேலை கேது தசை நடக்கலாம் அல்லது நடக்க இருக்கலாம் அல்லது நடந்து இருக்கலாம் இப்படி எப்படி இருந்தாலும் நான் தற்போது கூறப்போகின்ற கேது தசையின் 9 புத்திகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது. காரணம் புரிந்து கொள்ள முடியாத கேதுவின் தன்மைகளை பற்றி நாம் பலன்களை கணிப்பது என்றும் கடினமான ஒன்றாகும். இப்படியான சூழ்நிலையில் ஒருவருக்கு கேது தசை ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக் கொண்டால் நாம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் எனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாத அளவிற்கு அவர்களை கண்மூடித்தனமாக எங்கேயோ கொண்டு போய் கொண்டு இருக்கும். இப்படியான சூழ்நிலையில் தான் நான் கூறப்போகின்ற பலன்கள் உங்களுக்கு கை கொடுக்கலாம் வாருங்கள் கேது தசையின் அனைத்து புத்திகளை பற்றிய பலன்களை பார்க்கலாம்.



கேது புத்தி ( 147 நாட்கள் ) :

மனைவியாலும் மக்களாலும் உறவினர்களாலும் பல வகையான தொல்லைகள் ஏற்படும். அதன் காரணமாக மனதில் விரக்தி உண்டாகும். கேது ஒன்பதாம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்தால் விவசாய மூலமாக நிறைய லாபம் கிட்டும். பொன்னும் பொருளும் சேரும். 


சுக்கிர புத்தி ( 420 நாட்கள் ) :

மனைவியின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புத்திர பாக்கியம் கிட்டும். புது வாகனம் வாங்க முடியும். நினைக்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். சுக்கிரன் நீச்சம் பெற்று அமர்ந்தால் அரசாங்க விரோதம் ஏற்படும். தன தானியம் நாசமாகும்.


சூரிய புத்தி ( 126 நாட்கள் ) :

 பொன் பொருள் யாவற்றையும் இழந்து வெளிநாடுகளில் சென்று வாழ நேரிடும். ஓரளவு கையில் பணம் சேரும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் சொந்த நாடு திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். சனி 3 6 அல்லது 10-ஆம் இடத்தில் அமர்ந்தால் நன்மையான பலன்கள் நடைபெறும்.


சந்திர புத்தி ( 210 நாட்கள் ) :

பெண்கள் மூலமாக விவகாரங்களும் பொருளும் விரயம் ஏற்படும். புத்திர புத்திரிகள் வியாதிகளால் பாதிக்கப்படுவார்கள். வாகன விருத்தி ஏற்படும். பொன் பொருள்கள் சேரும். பல கஷ்டங்கள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் நிவர்த்தியாகும்.


செவ்வாய் புத்தி ( 147 நாட்கள் ) :

பல வகையான நஷ்டங்களும் பொருள் விரையமும் உண்டாகும். பெண்கள் மூலமாக சில விரயங்களும் எதிரிகளால் தொல்லைகளும் உண்டாகும். நெருப்பால் ஆபத்து ஏற்படும். செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்தால் பயிர் தொழில் மூலமாக நிறைய லாபம் கிட்டும். வசதியான வாழ்க்கை அமையும். 


ராகு புத்தி ( 378 நாட்கள் ) :

தன் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பல வகையான துன்பங்கள் ஏற்படும். தந்தைக்கு அர்த்தம் உண்டாகும். பொருள் விரயமாகும். சொத்துக்கள் அழிந்து போகும். ராகு சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால், மீசர்களுடைய தொடர்பால் லாபம் கிட்டும் பலவகையான நன்மைகளும் ஏற்படும். 


குரு புத்தி ( 336 நாட்கள் ) :

அரசாங்கம் ஆதரவு கிட்டும். மனைவியால் ஆதாயங்களும் கிட்டும். வருமானம் பெறும். வீடு நிலம் பொன் ஆபரணங்கள் புது வாகனம் போன்றவை சேரும். பல வெற்றிகளை எளிதாக தேடிக் கொள்ள முடியும். குரு பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிப்பு உண்டாகும். நெருப்பால் ஆபத்து ஏற்படும். நண்பர்கள் பகைத்துக் கொள்வார்கள். 


சனி புத்தி ( 399 நாட்கள் ) :

கையில் உள்ள பொருளும் அசையா சொத்துக்களும் விரையம் ஆகும். சொறி சிரங்கு தேமல் போன்றவற்றால் தொல்லை உண்டாகும். மனதில் பலவகையான சந்தோஷங்கள் தலைதூக்கும். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சில வகை தொல்லைகள் ஏற்படும். சனி மூலத்திரிகோணங்களில் அமர்ந்தால் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வருமானம் மெதுவாக பெருகும்.


புதன் புத்தி ( 357 நாட்கள் ) :

போதிய வருமானம் இல்லாததால் தன் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல நேரிடும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆபத்து உண்டாகும் புத்திரர்களால் வீண் செலவு ஏற்படும். எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். புதன் உச்சம் ஆட்சி பெற்று அமர்ந்தால் நன்மையான பலன்கள் நடைபெறும். வாகன யோகம் ஏற்படும்.


மேலே சொன்ன கேது தசைகளின் பலன்கள் அனைத்தும் பொது பலன்களே ஒருவர் ஜாதகத்தில் கேது எந்த வீட்டில் அமர்கிறார் என்பதை பொறுத்து பலன்கள் சற்று மாறுபடலாம். அதேபோல கேது நல்ல வீடுகளில் அமர்ந்து ஜாதகருக்கு நல்ல யோகங்களை கொண்டு வருவதோடு அதிர்ஷ்டகரமான வாழ்க்கையையும் கொண்டுவரும். கேது தசை நடப்பவர்கள் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட சங்கடங்கள் தீரும் வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும்.


கேது திசை காலத்தில் நன்மைகள் ஏற்பட செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்

கொடுப்பதில் ராகுவும் கெடுப்பதில் கேதுவும் சிறந்தவர்” என சிலர் கூறுவதுண்டு. பொருள் சார்ந்த சுக போகங்களை ராகு பகவான் தந்தாலும் அந்த சுகங்களை தடுத்து அவற்றிலெல்லாம் உண்மையான மகிழ்ச்சி இல்லை எனும் ஞானத்தை தரும் ஞானகாரகனாக கேது பகவான் இருக்கிறார். அந்த கேது பகவானின் கேது திசை நடக்கும் காலத்தில் நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் சாயா கிரகமான கேது திசை 7 வருட காலம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் கேது கிரகம் நல்ல நிலையில் இருந்தாலும், அந்த கேது கிரகம் இருக்கும் இடத்தை சுப கிரகங்கள் பார்த்தாலும் கேது கிரகத்தால் அதிகமான பாதகங்கள் ஏற்படாது. மாறாக கேது ஜாதக கட்டத்தில் பாதகமான இடங்களில் இருந்தாலும், பாப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது அக்கிரகங்களின் பார்வைபட்டாலும் பாதக பலன்கள் அதிகம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.

கேது திசை காலத்தில் கேது பகவானால் பாதக பலன்கள் அதிகம் ஏற்படாமல் இருக்க ஸ்ரீகாளஹத்தி, திருப்பாம்புரநாதர் போன்ற கோயில்களுக்கு சென்று கேது பகவானுக்கு சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்கள் கொண்ட வஸ்திரம் சாற்றி, பால், நெய் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் கேது பகவானுக்கு எருக்கம் பூ மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பால் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கேது பகவானை வழிபட வேண்டும்.

கேது திசை நடைபெறும் காலத்தில் உங்களால் இயன்ற போதெல்லாம் உங்கள் சக்திக்கு ஏற்ப அன்னதானம் செய்து வருவது கேது திசை பாதிப்புகளை போக்குவதற்கு சிறந்த பரிகாரமாக இருக்கும். கேது பகவான் மற்றும் அக்கிரகத்தின் அதிதேவதையான சித்திரகுப்தன் மற்றும் விநாயகர் பெருமானுக்கு 27 வெள்ளை கொண்டை கடலைகளை மாலையாக கோர்த்து அணிவித்து வந்தாலும் கேது திசை காலத்தில் பாதகங்கள் நீங்கி நன்மைகள் அதிகம் உண்டாகும்.

வீட்டில் எத்தனை வாசல் வைக்கலாம்? 1 வீடு 3 வாசல்கள் சரியா?


வீட்டில் எத்தனை வாசல் வைக்கலாம்? 1 வீடு 3 வாசல்கள் சரியா? பணம், ஆரோக்கியம் பெருக பெஸ்ட் திசை இதுதான்
 வீடுகள் கட்டும்போது, வாசல்கள், கதவுகளை அமைக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமாம்.. அந்தவகையில், ஒரு வீட்டிற்கு எத்தனை வாசல்கள் அமைக்கலாம்? எத்தனை கதவுகள் அமைக்கலாம்? இந்த எண்ணிக்கைகளைகூட, நம்முடைய முன்னோர்கள் பதிவு செய்துள்ளனர்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீடுகளை கட்டுவதைபோலவே, வாசல்கள் அமைப்பதிலும் அக்கறை எடுத்து கொள்ள வேண்டுமாம்.. வாசல் எந்த இடத்தில் அமைப்பது என்பது முதல், எத்தனை வாசல் வைப்பது வரை கவனிக்க வேண்டும். காரணம், வீட்டில் வாசல் என்பது மகாலட்சுமி உள்ளே வரும் நுழைவு வாயிலாகும்..


spirituality
வாசல்கள்: எனவே, எத்தனை வாசல்கள் இருந்தாலும், தலைவாசலே அந்த வீட்டின் மதிப்பை தீர்மானிக்கிறது.. இந்த தலைவாசல் தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் வைக்கக் கூடாது.. இதனால், குடும்பத்திலுள்ளவர்கள் கடன் பிரச்சனைக்கும், ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் ஆளாவார்களாம்.. சிலசமயம் துர்மரணங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாம்.. ஒருவேளை அப்படி அமைந்திருந்தால், அதற்கான பரிகாரத்தை செய்துவிடலாம்.

ஒருவேளை, முழுக்க முழுக்க தெற்கு திசையில் மட்டுமே வாசல் அமைத்திருந்தால், இதனால் பாதிப்புகள் வராது.. ஆனால், சிறிதளவாவது தென்கிழக்கு அல்லது தென்மேற்கு நோக்கி வாசல் வைத்திருந்தால், பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும் என்கிறார்கள்.

3 வாசல்கள்: இப்போதெல்லாம் வீடுகளில் ஒரு வாசல் மட்டுமே உள்ளது.. பெரும்பாலும், ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம்... காற்று வீட்டிற்குள் வந்து செல்வதற்கேற்றவாறு இந்த 2 வாசல்களும் உதவும்.. இதனால், குடும்ப ஆரோக்கியம் நிலைத்து நிற்கும்.. இப்படி 2 தலைவாசல்கள் வைக்க விரும்பினால், கிழக்கு மற்றும் தெற்கில் அமைப்பது சிறந்த பலன் தரும்.


இந்த பின்புற வாசல் கொண்ட வீட்டில் எப்போதுமே மகிழ்ச்சி தங்குமாம்.. விருந்தினர்கள், நண்பர்கள் என யார் வந்தாலும், பின்புற வாசலில்தான் மகிழ்ச்சியை பரப்புவார்கள்.. எப்போதுமே, அதிகபட்சமாக ஒவ்வொரு வீட்டிற்கும் 3 வாசல்கள் வரை அமைக்கலாம்.. இது எண்ணிக்கைப்படி சரியானது என்றாலும், ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதுதான் முக்கியம்.. இதனை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்களை அமைப்பது நல்லது..

மேற்கு வாசல்: எக்காரணம் கொண்டும், தெற்கு திசையில் வாசல் வைக்காமல் இருப்பதை தவிர்க்கலாம்.. அல்லது வாஸ்து முறைப்படி அமைக்கலாம்.. அல்லது அதை அடைத்துவிடலாம். அதேபோல, தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது என்பார்கள்.. 3 வாசல்களுக்கு மேல் வாசல்களை அமைத்தால், குடும்பத்தில் பொருளாதார பிரச்சனை ஏற்படுமாம்..


ஆனால், சில வீடுகளில் ஜன்னல்களை அமைத்திருக்க மாட்டார்கள்.. அப்படியே ஜன்னல் இருந்தாலும், ஜன்னலுக்கு பின்புறம் வேறு ஏதாவது வீடுகள், கட்டிடங்கள் இருக்கலாம்.. இதனால், வீட்டிற்குள் வெளிச்சம், காற்று வராமல், டஞ்சன் போல இருள் அடைந்து காணப்படும்.. இதுபோன்ற வீட்டிற்கு வாடகைக்கு செல்வதை தவிர்க்கலாம்.

ஜன்னல்கள்: இந்த இருள் சூழ்ந்த வீட்டிற்குள் குடியேறினால், பண பிரச்சனை, குடும்பத்தில் அமைதியின்மை, ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம்.. எனவே, அனைத்து வளமும், செல்வமும், ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுமானால், வாசல், ஜன்னல், கதவுகள் சரியாக அமைய வேண்டும்.

எப்போதுமே ஒரு வீட்டுக்கோ, தொழில் நிறுவனத்துக்கோ அமைக்கப்படும் வாசல்கள் 1, 2, 4, 6, 8.. என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைக்க வேண்டுமாம்.. அதேபோல, கட்டிடத்துக்குள் போடப்படும் அறைகளின் வாசல்களும் மேற்கூறியபடியே அமைக்கப்பட வேண்டும்.

எக்காரணம்கொண்டும், ஒரு கட்டிடத்தின் தலைவாசலை நீச்ச‌த்தில் அமைக்கக் கூடாது, வடக்கு பார்த்த கட்டிடத்துக்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக் கூடாது, கிழக்கு பார்த்த கட்டிடத்துக்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக் கூடாது. மேற்கு பார்த்த கட்டிடத்துக்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.


Aura electromagnetic field

நம் உடலிலிருந்து பரவிச் செல்லும் சொற்ப அளவிலான ஒளியைத்தான் Aura என்கிறார்கள்.

”electromagnetic field” என்று சொல்லப்படும் எம் உடலை நெருங்கிய பிரதேசத்தில், மிகக் குறைந்த அளவிலான மினசாரத்தை எம் உடல் வெளிப்படுத்துகிறது.

புராதன மருத்துவ முறைப்படி, இந்த மின்சக்தி, ஏழு அடுக்குகளுடாக வெளிப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு அடுக்கும் உடல்ரீதியாக, மனோரீதியிலாக,ஆத்மார்த்தரீதியிலாக, உணர்ச்சிகள் வாயிலாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை...நமது உடல் நலத்திற்கு இந்த அடுக்குகள் ஏதோவொரு வழியில் சம்பந்தப்படுகின்றன என்று கருதப்பட்டது.

மன அழுத்தம்,பரபரப்பு, மனஎரிச்சல், பொறுமையற்ற சுபாவம் என்றெல்லாம் நீங்கள் பாதிக்கப்படுவதன் காரணம் எங்களது இந்த aura வலயம் பலவீனமடைவதால்தான்!

நம் உடலில் ஆற்றல் உருவாகும் இடம் எது? அதை (ஆரா) சுத்தப்படுத்த ஐந்து எளிய வழிகள் என்னென்ன?



நம் உடலில் ஆற்றல் உருவாகும் இடம் எது? அதை (ஆரா) சுத்தப்படுத்த ஐந்து எளிய வழிகள் என்னென்ன?
ஆற்றல் புலத்தை சுத்தப்படுத்த ஐந்து எளிய வழிகள் உங்களின் ஆற்றல் புலத்தை எவ்வாறு சுத்தப்படுத்துவது? ஆரா என்றால் என்ன? என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.


நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இருக்குறீர்களா? ஒரு விதமான எரிச்சலை உணர்கிறீர்களா? மற்றும் எல்லா நேரத்திலும் மனதில் ஒரு வலி உணர்வு ஏற்படுகிறதா? அது மட்டுமின்றி, உங்களால் சரியாக தூங்க முடியாமல் போகலாம். மேலும், நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் உடலும் மனமும் நிரந்தரமாக ஒரு சோர்வு நிலையிலேயே இருப்பதாக உங்களுக்கு தோன்றலாம். இது போன்ற அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால், அல்லது இந்த அறிகுறிகள் உங்கள் இடத்தில் இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், உங்கள் ஆற்றல் புலத்தை (ஆரா) சுத்தம் செய்வதற்கான நேரம் இதுவாக இருக்கலாம்.

five simple ways you can cleanse your aura

நம் உடலில் ஆற்றல் உருவாகும் இடம் எது? அதை (ஆரா) சுத்தப்படுத்த ஐந்து எளிய வழிகள் என்னென்ன?





​ஆரா என்றால் என்ன?

உங்கள் ஆரா என்பது உங்கள் உடலைச் சுற்றியுள்ள ஆற்றல் புலம் ஆகும். உணர்ச்சிகள், உடல்நலம், மனநலம் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் ஆகியவற்றைத் தூண்டும் ஆற்றலின் காந்தப்புலமாக இந்த ஆரா செயல்படுகிறது. உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் ஆற்றல்களைப் பரிமாறிக் கொள்ளும்போது உங்களின் ஆரா ஆனது மன அழுத்தத்தை அனுபவிக்கும். அதனால் தான், உங்கள் ஆரா வை நீங்கள் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.



​ஆரா (ஆற்றல் புலம்) பலவீனமாக அல்லது மன அழுத்தமாக இருக்கும் போது என்ன நடக்கும்?
நீங்கள் இருக்கக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்களால், உங்களின் ஆற்றல் புலம் (ஆரா) ஆனது பெரிதும் பாதிக்கப்படுகிறது. உங்களைச் சுற்றியுள்ள நபர்களுடன் நீங்கள் தொடர்ந்து ஆற்றல்களைப் பரிமாறிக்கொள்வதால், தேவையற்ற மன குப்பைகள் காரணமாகவோ அல்லது பிற நபர்களின் எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் அவர்களின் ஆற்றலைத் நீங்கள் தேர்ந்தெடுப்பதன் காரணமாகவோ உங்களின் ஆற்றல் புலம் பலவீனம் அடையலாம். மேலும், இது மிகவும் பொதுவான ஒன்று தான்.

இதன் விளைவாக, நீங்கள் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும், எரிச்சலையும், சோம்பலையும், பொறுமையையும் உணரலாம், மேலும், இந்த உலகத்தை நோக்கி எதிர்மறையான கண்ணோட்டத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பும் இதனால் பாதிக்கப்படும். எனவே, நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இருக்கக்கூடும்.

அதிர்ஷ்டவசமாக, உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் உங்கள் ஆற்றல் புலத்தை சுத்தம் செய்யலாம். இதற்கு ஒரு சிறிய முயற்சி தான் தேவை. உங்கள் ஆரா அல்லது ஆற்றல் புலத்தை நீங்கள் சுத்தப்படுத்தத் தொடங்கியதும், நீங்கள் உணரும் விதத்தில் ஒரு கடுமையான வித்தியாசத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். மேலும், உங்கள் மனதையும் உடலையும் ஓர் அமைதி நிலைக்கு இது திருப்பும். மேலும், வீட்டில் இருந்தபடியே நீங்கள் உங்கள் ஆரா அல்லது ஆற்றல் புலத்தை சுத்தம் செய்வதற்கான ஐந்து வழிகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.




​ஆரா சுத்திகரிப்பு குளியலை எடுத்துக் கொள்ளுங்கள்

​ஆரா சுத்திகரிப்பு குளியலை எடுத்துக் கொள்ளுங்கள்
பொதுவாகவே, நாம் குளித்த முடித்த பிறகு ஒரு நம்பமுடியாத புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் உணர ஒரு காரணம் இருக்கிறது. ஆரா சுத்திகரிப்பு குளியல் என்பது உப்பு, அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் புனித மூலிகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்ற ஒரு சடங்கு குளியல் செயல்முறை ஆகும். இது, உங்கள் ஆற்றல் புலத்தை சுத்தம் செய்வதற்காக பின்பற்றப்படுகிறது.

குளியல் தொட்டியை தண்ணீரால் நிரப்பவும்; பின்பு, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் அல்லது லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் சேர்க்கவும்; மற்றும் ஒரு கப் ஹிமாலயன் கடல் உப்பு சேர்க்கவும். சுத்திகரிப்பு விளைவை அதிகரிக்க நீங்கள் சந்தனம், மற்றும் ரோஜாவை கூட சேர்க்கலாம். குறைந்தபட்சம் ஒரு 10 நிமிடம் வரை இந்த தண்ணீரில் உங்கள் உடலை ஊறவைத்து, அதற்கு பின்னர் நீங்கள் உங்கள் குளியலை தொடங்கலாம். மாற்றாக, நீங்கள் ஷவரில் குளிக்கிறீர்கள் என்றால், உங்கள் உடலில் தண்ணீர் படும்போது, உங்கள் ஆரா சீர்செய்யப்பட்டு குணமடைவதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். இந்த தண்ணீர் உங்கள் உடலில் இருந்து வெளியேறத் தொடங்கும் போது, எதிர்மறை உணர்வுகளும் உங்கள் உடலில் இருந்து வெளியேறுவதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

மேலும், உங்கள் முழு உடலையும் சுத்தம் செய்யும் போது, ஒரு தெய்வீக ஆற்றல் உங்களிடம் இருந்து பாய்வதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும், இந்த மூலிகைகள் மற்றும் பூக்களை தூக்கி எறிவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மீதமுள்ள உப்புநீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.



ஸ்மட்ஜிங்

பழமையான ஆரா சுத்திகரிப்பு நடைமுறைகளில் ஒன்று உலர்ந்த வெள்ளை முனிவர் மூலிகை கொண்டு புகைபிடிப்பது தான். ஸ்மட்ஜிங் என்பது புனித மூலிகைகள் எரிக்கப்பட்டு, அதிலிருந்து வரும் புகையை பயன்படுத்துவதன் மூலம் தான் உங்கள் ஆரா அல்லது ஆற்றல் புலம் சுத்தம் ஆகும். இதைச் செய்ய, நீங்கள் முனிவர் மூலிகை, வறட்சியான தைம் மற்றும் சிடார் உள்ளிட்ட எந்த மூலிகையையும் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்ய, இந்த மூலிகை குச்சியை ஒரு தூபக் குச்சியைப் போல ஏற்றி, உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் மெதுவாக இந்த புகையை காட்டுங்கள்.




​மழையில் நடந்து செல்லுங்கள்
​மழையில் நடந்து செல்லுங்கள்
உங்கள் ஆரா அல்லது ஆற்றல் புலத்தை சுத்தப்படுத்துவதற்கான எளிதான வழிகளில் ஒன்று, மழையில் நடந்து செல்வது தான். மெதுவாக மழை பெய்யும் போது வெளியே சென்று, கண்களை மூடிக்கொண்டு மழைத்துளிகள் உங்களை முழுமையாக நனைப்பதற்கு அனுமதி தாருங்கள். அனைத்து எதிர்மறை உணர்வுகளும் மற்றும் நச்சுத்தன்மையும் மழையுடன் சேர்த்து கழுவப்படுவதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். இதேபோன்ற விளைவுக்காக, நீங்கள் ஒரு ஏரியில் நீந்தவும் செல்லலாம். இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது இந்த செயல்முறையைத் தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது.


​ஆரா சுத்திகரிப்பு உடற்பயிற்சி

​ஆரா சுத்திகரிப்பு உடற்பயிற்சி
இந்த சக்திவாய்ந்த ஆரா சுத்திகரிப்பு உடற்பயிற்சியை செய்ய தொடங்குவதற்கு முன்பு, உங்கள் கைகளை நன்றாக கழுவி உலர வைக்கவும். உங்கள் வீட்டில் உங்களுக்கு பிடித்த ஒரு அமைதியான இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த இடத்தில் அமர்ந்து, உங்கள் ஆராவை காட்சிப்படுத்தி பாருங்கள். கண்களை மூடிக்கொண்டு ,உங்களைச் சுற்றி உள்ள இடத்தை உங்கள் கைகளால் சீராக்க தொடங்குங்கள். உங்கள் தலையின் மேற்புறத்தில் தொடங்கி, கால்விரல்கள் வரை சென்று உங்களைச் சுற்றி உள்ள அனைத்தயும் சீராக்கி சுத்தப்படுத்துங்கள். உங்கள் ஆராவை சுத்தப்படுத்தப்படுவதை நீங்கள் தொடர்ந்து கற்பனை செய்வது மிகவும் முக்கியம். எதிர்மறை ஆற்றலை நீங்கள் சுத்தம் செய்தபின், உங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும்.




​மந்திரங்கள் மற்றும் நேர்மறையான உறுதிமொழி

​மந்திரங்கள் மற்றும் நேர்மறையான உறுதிமொழி
ஆரா சுத்திகரிப்புக்கு, மிகவும் பயனுள்ள முறைகளில் இதுவும் ஒன்றாகும். அமைதியான இடத்தில் உட்கார்ந்து, ஒரு வெள்ளை குமிழ் ஒளியால் நீங்கள் சூழப்பட்டிருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். கண்களை மூடிக்கொண்டு, உங்களுக்கு வசதியான மந்திரங்கள் மற்றும் நேர்மறையான உறுதிமொழிகளை உச்சரிக்கத் தொடங்குங்கள். நீங்கள் உச்சரிக்கக் கூடிய இந்த மந்திரங்கள், உங்கள் உடலில் அதிர்வுறுவதை உணரும் வரை, நீங்கள் இந்த மந்திரத்தை பல முறை உச்சரிக்கவும். உங்கள் ஆரா அல்லது ஆற்றல் புலத்தை வலுப்படுத்த தினமும் இதைச் செய்யுங்கள்.