jaga flash news

Tuesday, 19 November 2024

மகாபாரதக் கதையை நான்கே வரிகளில் இரத்தின சுருக்கமாக அசத்தியிருந்தார் கண்ணதாசன்.



கண்ணதாசனிடம் ஒருவர் சவாலாக ஒரு விஷயத்தை பேசி இருக்கிறார். மிக ரத்தின சுருக்கமாக உங்களால் ஒரு பாட்டுக்குள் மகாபாரத கதையை வைத்துவிட முடியுமா என்று கேட்க. ஏன் முடியாது? என்று அந்த சவாலை ஏற்றுக்கொண்டு நான்கே வரிகளில் மகாபாரத கரையை தன்னுடைய பக்தி பாடல் ஒன்றில் வைத்து அசத்தியிருக்கிறார் கண்ணதாசன்.



விஸ்வநாதன் இசையில், டி,எம் சௌந்தரராஜன் பாடிய

"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" என்கின்ற கிருஷ்ணனை குறித்த பக்தி பாடலில் தான் இந்த மகாபாரத கதையை அவர் வைத்திருக்கிறார். இந்த பாடலுக்கு இடையில்

"பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான்.. அந்த பாரத போர் முடிக்க சங்கை எடுத்தான். பாண்டவர்க்கு உரிமை உள்ள பங்கு கொடுத்தான். நாம் படிப்பதற்கு கீதையயேனும் பாடம் கொடுத்தான்"

என்று மகாபாரதக் கதையை நான்கே வரிகளில் இரத்தின சுருக்கமாக எழுதி பலரையும் அசத்தியிருந்தார் கண்ணதாசன்.


No comments:

Post a Comment