சர்க்கரை நோயாளி கொய்யாப்பழம் சாப்பிடலாமா? கொய்யா பழத்தில் கொட்டி கிடக்குது ஆரோக்கியம்.. கொய்யாப்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? கொய்யாவை யார் யார் தவிர்க்கலாம்? சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா? கொய்யா பழத்தை இரவில் சாப்பிடலாமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வைட்டமின் C நிறைந்துள்ள கொய்யாப்பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை.. 100 கிராம் கொய்யாவில் சுமார் 300 மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின் C உள்ளதாம்..
ஒரு கொய்யாப்பழத்தில், 112 கலோரிகள், 23 கிராம் கார்போஹைட்ரேட், 9 கிராம் நார்ச்சத்து, 1.6 கொழுப்பு, 4 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளன. அது மட்டுமின்றி, இதில் ஸ்டார்ச் இல்லை. பல ஆய்வுகள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு கொய்யா பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன. இதைத்தவிர, ஃபோலேட், பீட்டா கரோட்டீன் சத்துகளும் உள்ளன.
கொய்யா பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால், குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க செய்கிறது.. வைட்டமின் B6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நோய் தொற்று அபாயங்களையும் குறைக்கக்கூடியவை. அஜீரணத்தை போக்கக்கூடியவை.
கண் கோளாறுகள்: வைட்டமின் A சத்துள்ள கொய்யாப்பழங்கள், கண்களுக்கு மிகவும் நல்லது.. கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதில்லை.. கண்புரை அபாயத்தையும் இந்த பழங்கள் தடுக்கின்றன. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு கொய்யாப்பழங்கள் பெஸ்ட் சாய்ஸ் என்று சொல்லலாம்.. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குவதுடன், பசியையும் கட்டுக்குள் வைக்க செய்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.. அதேபோல, கொலாஜன் உற்பத்தியை கொய்யாப்பழங்கள் ஆதரிக்க செய்வதால், சரும ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. இளம் வயதிலேயே தோலில் ஏற்படும் சரும சுருக்கங்களும் தடுக்கப்படுகின்றன.
நினைவுத்திறன்: வளரும் பிள்ளைகளுக்கு தினம் ஒரு கொய்யாப்பழத்தை கொடுத்து வரலாம்.. காரணம்., மூளையின் செயல்பாடு, நினைவாற்றலை இந்த பழங்கள் மேம்படுத்துகிறதாம்.. ரத்தசோகை உள்ளவர்களுக்கு சிவப்பு கொய்யாப்பழங்கள் அருமருந்தாகும்.
அதேபோல, இரவு நேரத்தில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், கொய்யாப்பழத்தை அதிகமாக சாப்பிட்டாலும் அஜீரண கோளாறுகள் வந்துவிடும்.. அதனால்,வயிறு உப்பசம் உள்ளவர்கள் கொய்யாவை தவிர்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யா மிகச்சிறந்த பழம்.. யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண்மைத் துறையின் தரவுகளின் படி 100 கிராம் கொய்யாப்பழத்தில் 68 கலோரிகளும், 8.92 கிராம் இயற்கை சர்க்கரையும் உள்ளது. கொய்யாப்பழத்தில் சோடியம் அளவு குறைவாகவும், பொட்டாசியம் அளவு அதிகமாகவும் உள்ளதால், நீரிழிவு இருப்பவர்களுக்கு நன்மை செய்யகூடியதுதானாம்.
ஆனால், தினமும் சாப்பிட்டாலோ, அதிகமாக சாப்பிட்டாலோ, ரத்த சர்க்கரை அளவு மாறுபடும். ஏனென்றால், 100 கிராம் கொய்யாவில் 9 கிராம் சர்க்கரை இருக்கிறது.. அதனால், கிளைகெமிக் குறைவாக இருந்தாலும்கூட, கொய்யாவை குறைவான அளவிலேயே சாப்பிட வேண்டுமாம். எனவே, கொய்யாப்பழத்தை விட கொய்யாக்காய்களை சாப்பிடலாம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment