தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்... இடியாப்பம் மாவு செய்யும் சீக்ரட் இதுதான்!
பலரும் தங்கள் வீடுகளில் இடியாப்பம் செய்ய சிரமப்படுகின்றனர். இடியாப்பம் மாவு செய்யும் சீக்ரட்டை உங்களுக்கு சொல்கிறோம். தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன் போதும், இடியாப்பம் அருமையாக செய்யலாம்.
Idiyappam x
இடியாப்பம் மாவு செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
இடியாப்பம் மிகவும் எளிமையான உணவு, குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிற உணவாகவும் உள்ளது. அதே நேரத்தில், ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. இடியாப்பத்துடன் தேங்காய் பால், பாயா என சைட் டிஷ் இருந்தால் செமயாக இருக்கும்.
பலரும் தங்கள் வீடுகளில் இடியாப்பம் செய்ய சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் இடியாப்பம் மாவு செய்யும்முறை கைவரப் பெறாமல் போவதால்தான் இந்த பிரச்னை. அதனால், இடியாப்பம் மாவு செய்யும் சீக்ரட்டை உங்களுக்கு சொல்கிறோம். தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன் போதும், இடியாப்பம் அருமையாக செய்யலாம்.
இடியாப்பம் மாவு செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
1 கிலோ பச்சரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். 4-5 முறை நன்றாகக் கழுவிய பிறகு, 5 மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு, நன்றாகக் காய வையுங்கள். இந்த அரிசியுடன் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து வீட்டில் மிக்ஸியிலோ அல்லது மெஷினிலோ அரைத்துக்கொள்ளலாம். மெஷினில் மாவு அரைத்த பிறகு, மாவை ஆற வையுங்கள். பிறகு, இந்த பச்சரிசி மாவை, மாவு சல்லடையில் சலித்துக்கொள்ளுங்கள். இந்த மாவு அதிகமாக இருந்தால், நீங்கள் ஒரு டப்பாவில் வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் எடுத்து பயன்படுத்தலாம்.
இப்போது இடியாப்பம் செய்வதற்கு 1 கப் மாவு எடுத்துகொள்ளுங்கள். 1 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த 1 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாகக் கொதித்த பிறகு, இறக்கி வைத்துக்கொள்ளுங்கள்.ஒரு பெரிய பாத்திரம் எடுத்துகொள்ளுங்கள்.அந்த பாத்திரத்தில் மாவைக் கொட்டி, கரண்டியால் கிளறிவிடுங்கள். பிறகு, நன்றாகக் கைகளால் பிசைந்துவிடுங்கள். பிறகு, இடியாப்பத் தட்டில், அல்லது இட்லி தட்டில் இடியாப்பத்தை புழிந்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அவித்து எடுத்தால் சூப்பரான இடியாப்பம் தயார். இதனுடன் தேங்காய்ப்பால் அல்லது பாயா சேர்த்துக்கொண்டால் அமிர்தம். உங்கள் வீட்டில் இடியாப்பம் செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment