jaga flash news

Monday, 25 November 2024

அரிசி வகைகளிலேயே அதிக சத்துக்களை கொண்ட அரிசி எது தெரியுமா?


குதிரைவாலி குவாலிட்டீஸ்.. மூங்கிலரிசி முக்கியத்துவம்.. அருமை ராகி.. ஆரோக்கியம் தரும் சிறுதானியங்கள்

அரிசி வகைகளிலேயே அதிக சத்துக்களை கொண்ட அரிசி எது தெரியுமா? உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடல் எடையை சீராக வைத்து கொள்ள முயல்பவர்களுக்கும் கை கொடுத்து உதவக்கூடிய சிறுதானியங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.


கம்பு, கேப்பை, தினை, சாமை, குதிரைவாலி, போன்ற பல்வேறு சிறுதானியங்களில் அதிகளவில் டயட்ரி நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.. இந்த தானியங்களை உணவில் சேர்த்து கொள்ளும்போது, உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதைத் தடுப்பதுடன், ஜீரண சக்தியையும் முறைப்படுத்துகிறது.

kuthiraivali rice bamboo rice millets

இதனால், இந்த சிறுதானியங்களை சாப்பிடும்போது, நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை ஏற்படாமல் தடுக்கிறது. அந்தவகையில், கேழ்வரகு எடுத்துக்கொண்டால், அதிகமான இரும்புச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் உள்ளன.. இந்த சத்துக்கள் உடல் எடையை குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. ராகி ரொட்டி, கேப்பை கூழ், ராகி தோசை, ராகி களி, என எண்ணற்ற உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

மூங்கில் அரிசி: மூங்கில் அரிசியை பொறுத்தவரை, பச்சை நிறத்தில் வாசனையுடன் இருக்கும்.. ஆனால், இனிப்பாக இருக்கும்.. கோதுமை சுவையுடன் உள்ள இந்த மூங்கிலரிசியில், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் போன்றவை நிறைந்திருக்கும்.

ஊட்டச்சத்து மிக்க இந்த அரிசியில், கொழுப்பு கொஞ்சமும் இருக்காது.. அதாவது, ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் இருக்கிறதாம். எனவே, உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த மூங்கிலரிசி சிறந்த உணவாகும்.

இந்த அரிசி, கெட்ட கொழுப்பின் அளவையும் குறைப்பதுடன், வயிறு நிறைந்த உணர்வையும் இந்த அரிசி ஏற்படுத்துகிறது. மற்ற அரிசிகளை விட இந்த அரிசியில் புரதச்சத்து அதிகமாக உள்ளதுடன், ஆன்டி ஆக்ஸடென்ட்கள், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்றவையும் அடங்கியிருப்பதால், உடல் எடையை குறைப்பவர்கள் தாராளமாக இதை உட்கொள்ளலாம்.


சோளம்: சோளம் மிகச்சிறந்த தானியமாகும்.. சோளத்தில் வெள்ளை சோளம், சிவப்பு சோளம் என பல வகைகள் உண்டு. சோளத்தில் வைட்டமின் B மற்றும் மக்னீசியம், ஃபிளவனாய்டுகள், பீனோலிக் அமிலம், டானின்கள் ஆகிய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன. 100 கிராம் சோளத்திலிருந்து, ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தில் 20 சதவீதத்தை நாம் எளிதாக பெற முடியும். உடலிலுள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து உடல் எடையையும் கட்டுக்குள் வைக்க சோளம் உதவுகிறது.

குதிரைவாலி அரிசியை பொறுத்தவரை, வைட்டமின் A, B, C, D, K, இரும்புச்சத்துக்கள், மெக்னீஷியம், காப்பர் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. அத்துடன், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், B கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் போன்றவையும் அடங்கியிருக்கின்றன. கோதுமையிலிருக்கும் நார்ச்சத்தின் அளவை விட 6 மடங்கு நார்ச்சத்து இந்த குதிரைவாலியில் இருக்கிறது.


குதிரைவாலி: 25 கிராம் குதிரை வாலியில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆனால், கலோரி மிகவும் குறைவாகும். உடலில் நச்சுக்கள், உப்புக்களையும் வெளியேற்றும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்தலாம்.


No comments:

Post a Comment