வெள்ளாடு vs செம்மறி ஆடு.. இரண்டில் எதில் டேஸ்ட் அதிகம்! எது உடலுக்கு நல்லது! இது தெரியாம போச்சே
வீக் எண்டில் மட்டன் எடுக்கப் போகும் போது, அது வெள்ளாடா இல்லை செம்மறி ஆடா என்பதை பெரும்பாலும் நாம் கவனிக்க மாட்டோம். இதுவே நாம் செய்யும் தவறு தான். ஏனென்றால் வெள்ளாட்டிற்கும் செம்மறி ஆட்டிற்கும் பல வேறுபாடு இருக்கிறது. அதன் சுவை, சத்து என எல்லாமே மாறும். இது குறித்து விரிவாக நாம் பார்க்கலாம்.
வார இறுதி வந்தாலே நான் வெஜ் சாப்பிட்டே தீருவேன் என்பதே நம்ம ஊரில் எழுதப்படாத விதி. பொதுவாகவே சிக்கன் எடுத்துத் தான் வீக் எண்டில் சாப்பிடுவார்கள்.
மட்டன்: அதேநேரம் சில சமயம் மட்டன் கூட வாங்குவார்கள். சிக்கனை போல இல்லாமல் மட்டன் ரேட் அதிகம் என்பதால் அடிக்கடி மட்டன் சாப்பிட மாட்டோம். இதனால் மட்டன் வாங்கும் போது சில அடிப்படை விஷயங்களைக் கூட கவனிக்க மாட்டோம். அதில் முக்கியமானது அது வெள்ளாடா.. இல்லை செம்மறி ஆடா என்பதை பார்க்க வேண்டும். அட, மட்டன் வாங்க போறோம். அது வெள்ளாடா இருந்தால் என்ன செம்மறி ஆடா இருந்தால் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் டேஸ்ட், கொழுப்பு, சத்து என அனைத்துமே வெள்ளாட்டிற்கும் செம்மறி ஆட்டிற்கும் மாறுபட்டே இருக்கும். எனவே, கவனமாக வாங்க வேண்டும்.
வெள்ளாடு vs செம்மறி ஆடு: பொதுவாகச் செம்மறி ஆடுகளைப் பசுமை நிறைந்த வெளிகளில் விட்டுவிடுவார்கள். அது காலை முதல் அப்படியே ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டு வரும். அதேநேரம் வெள்ளாடுகளுக்கு பொதுவாக நம்ம ஊரில் அதை வளர்ப்போரேத் தீவனம் போடுவார்கள். இதனால் எந்த உணவு, எவ்வளவு தர வேண்டும் என்பது துல்லியமாகக் கண்காணிக்கப்படும்.
சுவை: செம்மறி ஆடு இஷ்டத்திற்குச் சாப்பிடும் என்பதால் பொதுவாக அவை நல்ல கொழு கொழுவென இருக்கும். இதனால் அதன் சுவையும் அதிகமாகவே இருக்கும். செம்மறி ஆட்டில் இருக்கும் கொழுப்பு அப்படியே அதில் உருகி, அதன் டேஸ்ட்டை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும். இதனால் செம்மறி ஆடு சமைக்கும் போது பெரியளவில் மசாலா போடத் தேவைப்படாது. அதேநேரம் வெள்ளாட்டில் சுவை மைல்டாகவே இருக்கும். இதனால் சமைக்கும் போது மசாலா சரியான அளவு போட வேண்டும். இல்லை என்றால் எதிர்பார்த்த சுவை கிடைக்காது.
ஊட்டச்சத்து: சுவை அதிகமாக இருந்தாலும் கூட வெள்ளாடு தான் அதிக சத்துக்களைக் கொண்டதாக இருக்கிறது. வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு என இரண்டையும் 100 கிராம் எடுத்துக் கொண்டால் இரண்டிலும் புரதம் 20 முதல் 25 கிராம் வரை இருக்கும். அதேநேரம் கலோரி வெள்ளாட்டில் 130 மட்டுமே இருக்கும்.. செம்மறி ஆட்டில் அது 300ஆக இருக்கும். வெள்ளாட்டில் ஆட்டில் கொழுப்பு 3 கிராம் மட்டுமே இருக்கும். ஆனால், செம்மறி ஆட்டில் அது 20 கிராம் வரை இருக்கும். கொழுப்பு அதிகளவில் இருப்பதாலேயே செம்மறி ஆடு சுவை அதிகம் கொண்டதாக இருக்கிறது.
இது மட்டுமின்றி செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது வெள்ளாட்டில் கொலஸ்ட்ரால் குறைவு.. செம்மறி ஆட்டில் 97 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் இருக்கும் நிலையில், வெள்ளாட்டில் 57 மில்லி கிராம் மட்டுமே இருக்கிறது. மேலும், அயர்ன் (வெள்ளாடு 2.83 மில்லிகிராம், செம்மறி ஆடு 1.88 மில்லிகிராம்), பொட்டாசியம் (வெள்ளாடு 385 மில்லிகிராம், செம்மறி ஆடு 310 மில்லிகிராம்) வெள்ளாட்டிலேயே அதிகம் இருக்கிறது.
எது நல்லது: அதாவது சுவை என்று வரும் போது செம்மறி ஆட்டை அடித்துக் கொள்ளவே முடியாது. அதேநேரம் உடலுக்கு வெள்ளாடு தான் நல்லது. எனவே, மாதம் ஒரு முறை வாங்கினாலும் வெள்ளாடு தானா என்பதை உறுதி செய்துவிட்டு வாங்குங்கள்.
.
No comments:
Post a Comment