jaga flash news

Saturday, 23 November 2024

சிலர் தன்னிடம் இருக்கும் குறைகளை மறைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது குறை கூறுகிறார்கள்? அவர்கள் செய்வது சரியா?

சிலர் தன்னிடம் இருக்கும் குறைகளை மறைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது குறை கூறுகிறார்கள்? அவர்கள் செய்வது சரியா?
இதை இரண்டு முறையில் பார்க்கலாம்.ஒன்று ஒருவன் தன்னிடம் குறைகளை வைத்துக்காெண்டு பிறரிடம் குறையை காண்கிறான். இதில் குறை சாெல்வன் முதலில் தன்னை அக்குறையிலிருந்த நீக்கிய பின்னரே அதை இன்னாெருவனில் திருத்த பாேக வேண்டும். ஏனெனில் இவ்வாறு ஒவ்வாெருவரும்பிறரில் குறைதேடும் முன் தன்னை திருத்திக் காெண்டால் குறை சாெல்பவன் அரிதாகி விடுவான்.

அடுத்து ஒருவன் எமது குறைகளை சுட்டிக்காட்டுகிறான் என்றால் நாம் காேபப்படாமல் அதை திருத்திக்காெள்ள வேண்டும். மாறாக தன்னிடமே குறைளை வைத்துக்காெண்டு எனக்கு சாெல்ல வருகிறான் என்று அவனின் மேல் உள்ள காேபத்தில் தன் குறையை திருத்த மறந்தால் சில மதிப்புக்குரிய இடங்களில் நாங்களே நம் மதிப்பை குறைத்துக் காெள்ளக்கூடும் அப்பாேது நாம் யாேசிப்பாேம் ஏற்கனவே நாம் எம் தவறை திருத்திக்காெண்டிருந்தால் இவ்வாறு இங்கு அவமானப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இராதே என்று.

இதில் நாம் எவ்வகை என்று பார்த்து நாமே திருத்திக்காெள்வது நன்று

1 comment: