நாம் தினமும் எத்தனையோ ரெசிபிக்களை சமைத்து சாப்பிடுவோம். ஆனால் காபி, டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. இதில் காபி சிலருக்கு பிடிக்கும் என்றால், இன்னும் சிலருக்கு டீ என்றால் ரொம்ப பிடிக்கும். காபி, டீ போடுவதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்று பலரும் கூறலாம். ஆனால் சில சமயங்களில் அந்த காபி, டீயை தயாரிக்கும் போது செய்யும் சிறு தவறு, அதன் சுவையையே மாற்றி, குடிக்கவே முடியாத அளவில் கெடுத்துவிடும். அதுவும் சிலர் டீ போட்டால், அதைக் குடிக்கவே முடியாது. ஒன்று மிகவும் ஸ்ட்ராங்காக போடுவார்கள் இல்லாவிட்டால் மிகவும் லைட்டாக போடுவார்கள். சரியாக பக்குவத்தில் இன்னும் நிறைய பேருக்கு டீ போடத் தெரியவில்லை என்று தான் கூற வேண்டும். உங்களுக்கும் சரியான பக்குவத்தில் டீ போட தெரியாதா? "மழைக்காலத்தில் இந்த சூப்பர் பானங்களை குடியுங்கள்.. எந்த நோயும் வராது..!" Image Courtesy: Indian Recipes Tamil கீழே சரியான பக்குவத்தில் எப்படி டீ போடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரியான பக்குவத்தில் டீ எப்படி போடுவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: * ஏலக்காய் - 3 * இஞ்சி - 1 சிறிய துண்டு * தண்ணீர் - 3/4 டம்ளர் * சர்க்கரை - 2 டீஸ்பூன் * டீத்தூள் - 1 1/2 டீஸ்பூன் * பால் - 2 டம்ளர் * கிராம்பு - 2 "
செய்முறை:
முதலில் இடிக்கும் உரலில் ஏலக்காயைப் போட்டு தட்டிக் கொள்ள வேண்டும். * பின் அதில் இஞ்சி துண்டை சேர்த்து அதையும் நன்கு தட்டிக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3/4 டம்ளர் நீரை ஊற்றி, அதில் தட்டி வைத்துள்ள ஏலக்காய், இஞ்சியை சேர்த்து, அத்துடன் 2 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். * பின் அதில் 1 1/2 டீஸ்பூன் டீத்தூளை சேர்த்து, நீர் 1/4 டம்ளராக வரும் அளவில் சுண்ட காய்ச்ச வேண்டும். * பிறகு அதில் நீர் அதிகம் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைத்த பாலை 2 டம்ளர் ஊற்றி, நன்கு 2 நிமிடம் கரண்டியால் கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். * இறுதியாக அதில் 2 கிராம்பை சேர்த்து 1 கொதி விட்டு இறக்கி, வடிகட்டி பரிமாறினால், சுவையான மற்றும் பர்ஃபெட்டான டீ தயார்.
No comments:
Post a Comment